உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
ஜோ பைடனின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பரிந்துரை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தமது துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸை பெயரிட்டுள்ளார். துணை ஜனாதிபதி பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள முதலாவது கறுப்பினத்தவரும் ஆசிய வம்சாவளி அமெரிக்கரும் இவராவார். இந்தியா ஜமேக்கா வம்சாவளியைச் சேர்ந்த இவர் கலிபோர்னிய செனட்டர் என்பதுடன், கலிபோர்னியாவின் முன்னாள் சட்ட மா அதிபருமாவார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்காகப் போட்டியிட்ட கமலா ஹரிஸ், துணை ஜனாதிபதி பதவிக்கான முதன்னிலை வேட்பாளராக இருப்பாரென கருதப்பட்டது. ஜோர்ஜ் புளொய்ட் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க பொலிஸில் சீர்திருத்த…
-
- 0 replies
- 572 views
-
-
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் செவ்வாயன்று செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். இன அநீதி குறித்த சமூக அமைதியின்மை பல மாதங்களாக அமெரிக்காவை உலுக்கியதால், பிடென் ஒரு கறுப்பினப் பெண்ணை தனது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். இந் நிலையிலேயே 55 வயது செனட் சபை உறுப்பினரான கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி …
-
- 16 replies
- 2.4k views
-
-
ரஷ்யா ‘முதல்’ கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது – ஜனாதிபதி புடின் உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். மேலும் மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும் தனது மகளுக்கும் குறித்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இணைந்து உருவாக்கியுள்ளது. இன்று காலை, உலகில் முதல் முறையாக, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனிடையே ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் உள்பட சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் 11 பேர் மீது அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தது. இந்த நிலையில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார த…
-
- 0 replies
- 538 views
-
-
வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு – ட்ரம்ப் வெளியேற்றம் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டதால் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக வெளியேறியுள்ளார். வெள்ளை மாளிகை அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியிள் அதிகாரபூர்வ இல்லம் என்பதால் இந்த மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்த நிலையில், வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் நடமாடியள்ளார். இதனையடுத்து, இரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்…
-
- 0 replies
- 342 views
-
-
COVID-19 இன் உடனடி விளைவுகள் அனைவருக்கும் தெரியும், நீண்டகால தாக்கங்களை நீங்கள் அறிவீர்களா அல்லது கற்பனை செய்தீர்களா? நாம் அனைவரும் ஒரு அசாதாரண அவசரநிலைக்கு நடுவே இருக்கிறோம், கோவிட் -19 பேரழிவு உலகெங்கும் பொங்கி வருவதால் எதிர்காலத்தைப் பார்ப்பது கடினம். இது அடர்த்தியான மூடுபனி சூழலில் ஒரு பெரிபாட்டெடிக் ட்ரட்ஜிங் ( peripatetic trudging ) இயக்கத்திற்கு ஒத்ததாகும். இந்த தொற்றுநோய் நாம் வாழும், விளையாடும், ரசிக்கும் மற்றும் படிக்கும் முறையை மாற்றிவிடும் என்று சில நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒரு மாற்றத்தக்க மாற்றம் மனிதகுலத்தை வெறித்துப் பார்க்கிறது. அவர்கள் சொல்வது சரிதான், ஆனால் மாற்றம் எந்த வகையில் நம்மை சதுப்பு நிலமாக்கும்? இந்த நேரத்தை நம் வாழ்நாள் முழுவதும…
-
- 0 replies
- 424 views
-
-
https://www.theguardian.com/commentisfree/2020/aug/06/sanctions-china-politics-us-showdown Think 'sanctions' will trouble China? Then you're stuck in the politics of the past Ai Weiwei The complex history of how China and the US once embraced each other should inform how the current showdown is tackled ‘Covid-19 has become a political issue for its two major political parties to tussle over, but the real crisis is that the western system itself has been challenged.’ Photograph: Andy Wong/AP …
-
- 0 replies
- 685 views
-
-
கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதியின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை கொல்ல இளவரசர் திட்டமா? கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொல்ல திட்டமிட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரி என்பவரை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. ‘என்னை கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கனடாவிற்கு ஒரு கொலை கும்பலை அனுப்பினார்’ என சாத் அல் ஜாப்ரி குற்றம்சாட்டியுள்ளார். ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் வாயிலாக சந்தேக…
-
- 0 replies
- 462 views
-
-
நாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்? ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரணைக்கு உட்பட்ட 82 வயதான ஜுவான் கார்லோஸ், எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து ஸ்பெயினின் ஊடகங்கள் பல ஊகங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது ஜுவான் கார்லோஸ் திங்களன்று அபுதாபிக்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாக ஏபிசி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜுவான் கார்லோஸ் திங்களன்று ஸ்பெயினிலிருந்து வெளியேறுவதற்கான தனது முடிவை திடீரென அறிவித்ததிலிருந்து, அவர் இருக்கும் இடம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த விமானம் பரிஸிலிருந்து அபுதாபிக்கு செல்லும் …
-
- 0 replies
- 425 views
-
-
4 ஆகஸ்ட் 2020, 16:53 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன. 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை. இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. கொலை வழக்கு 2005ஆம் ஆண்டு முன்னாள் ப…
-
- 25 replies
- 2.6k views
-
-
சிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்குகிறதா வடகொரியா? ஐ.நா சந்தேகம்! வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் போர்க்கப்பல்களுக்கு பொருந்தும் வகையில் சிறிதாக்கப்பட்ட (miniaturised) அணு சாதனங்களை உருவாக்கியிருக்கலாம் எனவும் ஐ.நா சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஐ.நா. பொருளாதாரத் தடைகளை கண்காணிக்கும் சுயாதீன வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இந்த தகவலை தெரிவிக்கின்றது. வட கொரியாவின் கடைசி ஆறு அணுசக்தி சோதனைகள், சிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்க உதவியிருக்கலாம் எனவும் சில நாடுகள் நம்புகின்றன. இந்த அறிக்கையினை, 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்புக் குழு, வட கொரியா பொருளாதாரத்…
-
- 0 replies
- 593 views
-
-
சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்! சிரியாவின் இராணுவ இலக்குகளை குறிவைத்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள இராணுவ சாவடிகளில் சேதாரம் ஏற்பட்டதாக கூறிய சிரியாவின் அரசு ஊடகம், எந்தவிதமான சேதம் என்று குறிப்பிடவில்லை. இந்த தாக்குதல், குண்டு வைக்கும் முயற்சிக்கான பதிலடி இது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன. முன்னதாக, கோலன் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் குண்டு வைக்க முயன்ற நால்வரை கொன்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல…
-
- 0 replies
- 706 views
-
-
அரசுப் பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய டிரம்ப் உத்தரவு.. இந்தியர்களுக்கு சிக்கல்.. வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் அமெரிக்கர்களை மட்டுமே எடுக்க வேண்டும், எச்1பி விசா வைத்துள்ளோரை எடுக்கக் கூடாது என அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பான உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்து அதில் கையெழுத்திட்டுள்ளேன். மிக எளிய விதியின் கீழ் செயல்படும் வகையில் போடப்பட்ட இந்த உத்தரவின்படி, ஒப்பந்த பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அமெரிக்கர்களுக்கு மட்டுமே …
-
- 1 reply
- 780 views
-
-
அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்காவிடின் டிக் டொக் செயலி தடை செய்யப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை டிக் டொக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிக் டொக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக் டொக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ…
-
- 4 replies
- 908 views
-
-
ஆப்கானில் தீவிரவாதிகள் மேற்கொண்ட சிறை உடைப்பு தாக்குதலில் 24பேர் உயிரிழப்பு! கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலையில் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 21 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த. 43பேர் காயமடைந்தனர் என்று ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அட்டாவுல்லா குகியானி தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிறைச்சாலை நுழைவாயிலில் கார் குண்டு வெடித்ததன் மூலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கிய தாக்குதல், திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. ஒரே இரவி…
-
- 0 replies
- 431 views
-
-
உலகின் இளம் பிரதமர் சன்னா மரினுக்கு திடீர் திருமணம்! உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின், அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்துள்ளார். 34வயதான சன்னா மரின், மார்கஸ் ரெய்கோனனை உத்தியோகபூர்வ பிரதமரின் இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் ட்வீட் செய்துள்ளது. 16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு, இரண்டரை வயது மகள் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, தம்பதியரின் குடும்ப நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியான தம்பதியரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மரின், தான் விரும்ப…
-
- 0 replies
- 619 views
-
-
பிரித்தானிய உணவகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி! அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொவிட்-19 முடக்கநிலைக்கு பிறகு உணவகங்களில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. 72,000க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள் முதல் புதன்கிழமை வரை சாப்பிடக்கூடிய உணவு மற்றும் பானங்களுக்கு இந்த அரைவிலை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. இதில் ஒருவருக்கு தள்ளுபடியாக 10 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆல்கஹால் பொருந்தாது. ஆனால், விமர்சகர்கள் ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமனைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தில் இதனை விமர்சித்துள்ளனர். முடக்கநிலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் பப்களுக்கான வருகைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 544 views
-
-
மகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட றோயல் மின்ட் அட்வைஸரி குழு ஆலோசித்து வருகிறது என பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும் காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும்பாடுபட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் மின் அஞ்சல் ஒன்றினை வெளியிட்டுள்ள திறைசேரி, “காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயத்தை ஆர்.எம்.ஏ.ச…
-
- 0 replies
- 401 views
-
-
அமெரிக்காவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - ஈரான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டவை என்று ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் மிருகத்தனமான பொருளாதாரத் தடைகள் நமது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றின் நோக்கம் பிராந்தியத்தில் நமது செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதும் நமது ஏவுகணை மற்றும் அணுசக்தி திறன்களை நிறுத்துவதும் ஆகும் எனினும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தம் மூலம் தனது இலக்குகளை அடைய வேண்டும் என்ற அமெரிக்க கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஈரான் தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையோ அல்லது அணுசக்தி திட்டங்…
-
- 0 replies
- 469 views
-
-
கொரோனாவிலிருந்து விடுபட்டாலும் ; தொடரும் வேதனை விஞ்ஞானிகள் எச்சரிக்கை கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் பத்தில் ஒருவர் வாசனை அல்லது சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழப்பதாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்தது. தற்போது, மான்செஸ்டர் அறிவியலாளர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு கேட்கும் திறனிலும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றிலிருந்து கண்டறிந்துள்ளார்கள்.அந்த ஆய்வில், வைதன்ஷாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயது வந்த 121 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட எட்டு வாரங்களுக்குப் பிறகு அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அவர்களிடம், அவர்களது காது…
-
- 0 replies
- 673 views
-
-
சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்துக்கு இழப்பீடு வழங்கத் தயார் - ஈரான் ஜனவரி மாதம் உக்ரேனிய விமானத்தை சுட்டு வீழ்த்தியமைக்கு இழப்பீடு வழங்க தெஹ்ரான் ஒப்புக் கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மொசவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த அனர்த்தத்திற்கு தெஹ்ரான் பொறுப்புணர்வை ஏற்றுக்கொண்டுள்ளதை மீண்டும் நினைவுபடுத்திய அவர், விமானத்தில் பயணித்த பல பயணிகள் ஈரானியர்கள் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் இதற்கு இழப்பீடு வழங்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும் இதற்கு சில கால அவகாசம் தேவையென்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 03 ஆம் திகதி அதிகாலை பாக்தாத் அருகே அமெரிக்க வான்வழித் தாக்குதலில் சக்திவாய்ந்த இஸ்லாமிய புர…
-
- 0 replies
- 587 views
-
-
ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்? – ட்ரம்ப் கேள்வி ஜேர்மனியிலிருந்து 11,000 அமெரிக்கப் படையினரை மீளப் பெறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஆண்டொன்றுக்கு எரிசக்தி தொடர்பாக ரஷ்யாவுக்கு பில்லியன் டொலர்கள் கணக்கில் அள்ளிக்கொடுக்கிறது ஜேர்மனி. ஆனால் நாம் ஜேர்மனியை ரஷ்யாவிடமிருந்து காக்க வேண்டும் இல்லையா! இதெல்லாம் என்ன? நேட்டோவுக்கு 2% கட்டணம் செலுத்துவதில்கூட ஜேர்மனி ஒரு குற்றவாளியாக நடந்துகொள்கிறது. எனவேதான் ஜேர்மனியிலிருந்து படைகளை மீளப் பெறுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். …
-
- 1 reply
- 701 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம்: ட்ரம்ப் திடீர் யோசனை வாஷிங்டன் கரோனா சூழலில் அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க முடியும் வரை அதிபர் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் 2-வது முறையாக அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக்கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் கரோனா வைரஸ் பரவும் காலத்தையும் பொருட்படுத்தாமல் காணொலி வாயிலாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். …
-
- 0 replies
- 435 views
-
-
ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரி கேள்வி போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. பதிவு: ஜூலை 30, 2020 11:54 AM வாஷிங்டன் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது அப்போது சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத…
-
- 0 replies
- 558 views
-
-
பிரேஸிலில் நாளொன்றுக்கான அதிகபட்ச கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவானது! அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பிரேஸிலில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் 70ஆயிரத்து 869பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 554பேர் உயிரிழந்துள்ளனர். பிரேஸிலில் கொவிட்-19 தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை 25இலட்சத்து 55ஆயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 90ஆயிரத்து 188…
-
- 0 replies
- 512 views
-