Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அர்மீனியா உடனான மோதலில் 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அசர்பைஜான் அறிவிப்பு! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/12/929816-azerbeijan-war-new-720x450.jpg அர்மீனியா உடனான நாகோர்னோ-கராபாக் பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான மோதலில், 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அசர்பைஜான் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், 103 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியவில்லை எனவும், 100-க்கும் மேற்பட்ட வீரகள் காணவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேசத்திற்கான போரில் ஆர்மீனியாவிற்கு எதிராக, தங்களது வீரர்கள் தைரியத்தையும், வீரத்தையும் வெளிக்காட்டியதாக அசர்பைஜன் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த மோதல…

    • 0 replies
    • 843 views
  2. இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பாருங்கள் இந்தியா தெரியும்: ராகுலுக்கு அமித்ஷா அறிவுரை ராய்ப்பூர்: இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியும் என்று ராகுல்காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ராமன்சிங் தலைமையிலான பாஜக அரசின் 13-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, அம்மாநில தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: பிரதம்ர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக என்ன செய்திருக்கிறது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார்.…

  3. இந்தியாவுடன் நீண்ட கால ராணுவ ஒத்துழைப்பு கொள்வதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது நிலைப்பாட்டை அதிபர் ஓபாமா அரசு மறு ஆய்வு செய்து வரும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான நீண்ட கால ராணுவ கூட்டை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிராந்திய அளவிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் இந்தியாவின் திறன்களை மேம்படுத்த அமெரிக்கா ஆதரவு தரும். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2013-14-ம் ஆண்டுக்கு பாதுகாப்பு பட்ஜெட் திட்டங்கள் குறித்த அறிக்கையை பென்டகன் சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராணுவ ஒத்துழைப்பு எங்கு தேவையோ அங்கெல்…

  4. ஜனாதிபதி தேர்தலில் 94 வயதில் போட்டியிடப்போகும் ஆபிரிக்க தலைவர் (லோகேஸ்வரன்) சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் 94 வயது பூர்த்தியை அடையும் இவர் 2018 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் திருத்தத்தில் அவர் மேலும் ஒருமுறைதான் தலைவராக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆபிரிக்க பிராந்தியத்தில் சுதந்திரமடைந்த காலம் தொட்டு ஒரு நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வரும் ஜனாதிபதி இவராவார் …

  5. ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை BharatiDecember 29, 2020 ஏற்கனவே பரவியுள்ள வைரஸ் திரிபடைவதை தடுக்கமுடியாது – மருத்துவத் துறை எச்சரிக்கை2020-12-29T07:05:50+05:30Breaking news, மருத்துவம் FacebookTwitterMore நாட்டுக்குள் திரிபடைந்த வைரஸ் நுழைவதை தடுப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நாட்டுக்குள் ஏற்கனவே பரவியுள்ள வைரஸ்கள் திரிபடைவதை நம்மால் தடுக்க முடியாது. இப்படித் தெரிவித்திருக்கிறார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலர் மருத்துவர் ஹரித அலுத்கே. ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்த அவர், “எந்தவொரு நாட்டிலும் உள்ள வைரஸும் மாற்றம் அடை…

  6. கடந்த வாரம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 பேர் வரை பலியாகியிருந்தனர். இதனை அடுத்து உடனடியாக சிறு சிறு அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை சற்று சக்தி வாய்ந்த மிதமான நிலநடுக்கம் ஒன்று ஆப்கானிஸ்தானின் மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலும் ஏன் இந்தியாவின் நியூடெல்லி வரை கூட உணரப்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் கழகமான USGS இன் கணிப்புப் படி 5.7 ரிக்டர் ஸ்கேலுடைய இந்தப் பூகம்பம் நிலத்துக்கடியில் 65Km ஆழத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள முக்கிய நகரான ஜலாலாபாத்திற்கு வடமேற்கே 25Km தொலைவில் மையம் கொண்டு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனின…

  7. 29 ஏப்ரல் 2013 எட்டாம் வகுப்பு மாணவிகளை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், மேனிலை பள்ளி ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத். இவர், தன் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை கடந்த, 11ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்தார். மாணவிகள் நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறப் போவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு விஷம் கொடுத்தார். விஷம் அருந்திய நிலையில், வீட்டிற்கு திரும்பிய மாணவிகள், அங்கு மயங்கி விழுந்ததை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இருந்தும், சிகிச்சை பலனின்றி, இரு மாணவிகள் இறந்தனர். இறப்பதற்கு முன், மாணவிகளில் ஒருவர், நடந்த விவரங்க…

  8. வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.இந்த நிலையில் தடையை மீறி நேற்று மீண்டும் வட கொரிய…

    • 0 replies
    • 451 views
  9. பூட்டானில் ஆட்சியைப் பிடித்தது எதிர்க்கட்சி! பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 47 தொகுதிகளில் அக்கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியில் அமர்கிறது. இப்போதைய ஆளுங்கட்சியான துருக் பியூன்சம் ஷோக்பாவால் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பூட்டான் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இத்தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. பூட்டானில் மொத்தம் 3.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 850 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 10,000 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தியா சார்பில் 4,130 மின்னணு வாக்குப் பதிவு …

  10. கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஆவதை சுட்டிக் காட்டி தூக்கு தண்டனைய குறைக்கக் கோரும் மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட தனி அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுபுகின்றனர். அந்த மனு நிராகரிக்கப்பட்ட பின்னர் தாமதமாக முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதை சுட்டிக்காட்டி தூக்கை குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது. அப்படியான வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக தலைமை நீதிபதி சதாசிவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இதுபோன்ற விஷயங்களில் 2 அல்லது 3 நீதிபதிகளைக் கொண்ட சிறிய பெஞ்சுகள் முரண்பாடான தீர…

  11. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பர்மாவில் ஆங் சான் சூசியின் கட்சி ஆட்சிக்கு வந்து ஓராண்டாகும் நிலையில் அது மியான்மாரில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது? * சிரியாவில் போர் தொடங்கி ஏழாண்டு ஆகும் நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஹோம்ஸ் நகருக்கு சென்ற பிபிசி அங்கு முன்னர் சந்தித்த சிறுமையை மீண்டும் சந்திதது. * சிறார்களிடம் மன அழுத்தம் அதிகரிக்கும் சூழலில் தியானம் எப்படி பெரிய வர்த்தகமாக வளர்ந்துள்ளது என ஆராய்கிறது பிபிசி

  12. பாகிஸ்தானின் புதிய அதிபராக இந்தியாவில் பிறந்த மம்நூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தானின் 12வது அதிபராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானின் 12 வது அதிபரைத் தேர்ர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நவாப் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த 73 வயதான மம்நூன் ஹூசைன் கலந்து கொண்டார். மம்நூனுக்கும், பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் வேட்பாளர் முன்னாள் நீதிபதி வாஜிஹுதீன் அகமது ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. வெற்றி பெற 263 வாக்குகளே போதுமானது என்ற நிலையில், ஹுசேன் 277 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எனவே, வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி மம்நூன் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற…

  13. குரங்குகளுடன் வனப்பகுதியில் வாழ்ந்துவந்த ஒரு சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர். குரங்குகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் குழந்தை சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச வனப்பகுதியில் சுமார் எட்டு முதல் பத்து வயது கொண்ட ஒரு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த சிறுமி பேசவில்லை என்றும் குரங்கு போல சைகை செய்துகொண்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். http://thuliyam.com/?p=64080 Young girl found living with monkeys in northern India http://www.telegraph.co.uk/news/2017/04/06/young-girl-found-living-monkeys-northern-india/

  14. துருக்கி நாட்டில் அரசியல் சாசன திருத்தம்: இன்று பொது வாக்கெடுப்பு துருக்கி அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தை திருத்துவதற்காக இன்று பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அங்காரா: துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதை பொதுமக்கள் உதவியுடன் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் முறியடித்தார். அதைத் தொடர்ந்து 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோரும் அதில் அடங்குவர். ராணுவ புரட்சியை தொடர்ந்து துருக்கி அரசியல் சாசனத்தில் அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும…

  15. இந்தோனேசியா: இந்தோனேசியாவில் தனிம்பார் தீவில் உள்ள சாம்லேகியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திபெத்திலும் நிலநடுக்கம் இதேபோல் திபெத்தின் எல்லைப்பகுதியான ஜேகாங் மற்றும் மர்காம் பகுதியிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டெர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின பொதுமக்கள் வீடுகளை விட்டு அச்சத்துடன் வெளியேறியதாக தகவல்கள…

  16. கோலாலம்பூர்: மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி "மெட்ராஸ் கஃபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் நேற்று மலேசிய உள்துறை அமைச்சகம், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் ஆகியவற்றுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தொலைநகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, மெட்ராஸ் கஃபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது. ராஜபக்சே உதவியுடன் வெளிவரும் இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஆகவே …

  17. இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் அரபிக்கடல் வழியாக இலங்கையை வந்தடைந்து, அங்கிருந்து பரந்து விரிந்த தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 2009 க்கு முன்னர் தமிழக கியூ பிராஞ்ச் அதிகாரிகளும் தமிழக காங்கிரஸ் காரர்களும் தமிழக மீனவர்களை விடுதலைப்புலிகளே தாக்குவதாகவும் அவர்களால் தமிழகத்துக்கு ஆபத்து என்று கதை விட்டபோது அதை மறுத்து 2007 ம் ஆண்டு நான் எழுதி பதிவிட்ட கட்டுரை இது. இப்போதுள்ள சூழலில் சிறீலங்காவின்…

  18. காதலால் நேர்ந்த அசம்பாவிதம்; அமெரிக்கவாழ் இந்தியக் குடும்பம் சிதறியது அமெரிக்கவாழ் இந்தியர் ஒருவரும் அவரது மனைவியும் அவர்களது மகளின் முன்னாள் காதலனால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நரேன் பிரபு சிலிக்கன் வெலி பகுதியில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரி. அவரும் அவரது குடும்பமும் சென் ஜோஸ் நகரில் வாழ்ந்து வந்தனர். இவர்களது மகள் வேறொரு மானிலத்தில் வாழ்ந்து வருகிறார். நரேனின் மகளுக்கும் மிர்ஸா டட்லிக் (24) என்ற இளைஞனுக்கும் இடையில் காதல் முளைத்தது. எனினும், கடந்த வருடம் இந்தக் காதல் பிரிவில் முடிந்தது. இதனால் கோபம் கொண்ட மிர்ஸா, நரேனின் மகளைப் பழிவாங்க நினைத்…

    • 0 replies
    • 494 views
  19. நூற்று ஐம்பது நாடுகளில் கணினிகளை பாதித்த கடந்த வார இணையத் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருந்திருக்கலாம் என்று சில கணினி பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள். கடந்த காலங்களில் வடகொரியா மீது குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கணினி புரோகிராம்கள் இந்த தாக்குதலிலும் சம்பந்தப்பட்டிருப்பது சாத்தியத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. BBC

  20. அப்துல் குவாதர் மொல்லா வங்கதேசத்தில் போர்க் குற்றங்கள் புரிந்ததற்காக இஸ்லாமிய அரசியல்வாதிக்கு உச்சநீதிமன்றம் மரணதண்டனை விதித்ததை எதிர்த்து எதிர்கட்சியான ஜமாதி இ இஸ்லாமி கட்சி நடத்தும் நாடுதழுவிய பந்த் காரணமாக பரவலான வன்முறைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. நாடுதழுவிய அளவில் பல்வேறு நகரங்களில் தொடர்ச்சியான வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்த வன்முறைகளில் இதுவரை ஒருவர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தின் தெற்குப்பிராந்தியத்தில் ஆர்பாட்டக்காரர்கள் வீசிய கல் ஒன்று தலையில் பட்டதில் இவர் உயிரிழந்திருக்கிறார். வேறொரு இடத்தில் நூற்றுக்கணக்கான ஜமாதி கட்சியைச் சேர்ந்த ஆர்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி வாகனங்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டபோது அவர்களை…

  21. மெல்போர்ன் போராட்டம்: மூன்றாவது நாளாக தொடரும் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடுவதற்கு எதிராக விக்டோரியா மாநிலத்தில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நோக்கம் சண்டைபோடுவது மட்டுமே என மாநிலத்தின் முதல்வரான டானியல் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் இடம்பெறும் வன்முறை போராட்டங்களுக்குப் பின்னர் கட்டுமான தளங்களை அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் மூடியுள்ளது. https://athavannews.com/2021/1240625

  22. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பெரிய புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகிவருகிறார்கள். ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை பைலின் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகிறார்கள். இந்தப் புயலின்போது, மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவப்படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1999ல் ஒதிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்…

  23. அவுஸ்த்திரேலியாவை உலுக்கிய இரு தமிழர்களின் வங்கிக் காசட்டை மோசடி இலங்கையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்து மற்றும் கணடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டு சர்வதேச அளவில் வங்கிக் கடனட்டை மோசடிகள் பலவற்றில் ஈடுபட்டு வந்த இரு தமிழர்களை அவுஸ்த்திரேலியப் போலிசார் அண்மையில் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளங்கோவன் கணேஷமூர்த்தி மற்றும் கணடாவைச் சேர்ந்த 31 வயதுடைய ருக்ஷாந் செல்வராஜா ஆகிய இருவருமே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களாவர். மேற்கு அவுஸ்த்திரேலிய மாநிலமான பேர்த்திலுள்ள சுமார் 20 இற்கும் மேற்பட்ட மக்டொனால்ட் உணவு விடுதிகளில் "டிரைவ் இன்" பகுதியால் உள்நுழைந்து பணியாளர் வேறு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் தறுணத்தைப் பார்த…

  24. பிரபல ஹொலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூவிஸ் காலமானார் ஹொலிவுட் திரையுலகில் அசைக்கமுடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஜெர்ரி லூவிஸ் தனது 91 ஆவது வயதில் லாஸ் வேகாஸில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஜெர்ரி லூவிஸ் ஹொலிவுட் உலகில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகராக மட்டுமல்லாது கதாசிரியராகவும் விளங்கிய ஜெர்ரி லூவிஸ், சக நடிகர் டீன் மார்டினுடன் இணைந்து காமெடி தொடர்களை நடத்தியுள்ளார். ஜெர்ரி லூவிஸ் நடத்திய காமெடி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவையாகும், த நாட்டி புரபெஸ்ஸர், த பெல் பாய் உள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.