Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் – ஜேர்மனி கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட சமூக இடைவெளி விதி நடைமுறைகள் ஜூன் 29 ஆம் ஆம் திகதிவரை தொடரும் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளி விதிகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1இலட்சத்து…

  2. ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 2ஆவது அலை தாக்கும் என எச்சரிக்கை உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால், 2ஆவது அலை தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாத்துக்கொள்ள முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை உலக நாடுகள் அமுல்படுத்தி வந்தன. அத்தோடு, முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி சுத்தப்படுத்துதல் என பல கட்டுப்பாட்டு வழிகளை கையாண்டும் க…

  3. உலகமே கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் போருக்குத் தயார் நிலையில் இருக்கும்படி தனது இராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார். உலகம் முழுவதும் மூன்றரை இலட்சம் பேரை பலி கொண்டுள்ள கொரோனா வைரசுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான சொற்போர் வலுத்துள்ளது. இன்னொரு புறம் இந்திய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்திருப்பதால் இந்தியாவும் படைப்பலத்தை அதிகரித்து வருகிறது. இதனால் லடாக் எல்லைக் கோடு அருகே கடந்த 22 நாட்களாக பதற்றநிலை நீடித்து வருகிறது. சீனப்படைகளும் இதுவரை பின்வாங்குவதாக தெரியவில்லை. கொரோனா வைரசால் உலகமே ஆடிப்போயிருக்கும் நிலையிலும் படைகளை த…

  4. டிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள்': ஜோ பிடன் கடும் தாக்கு வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டிரம்ப், வடிகட்டிய முட்டாள்,'' என, முன்னாள் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆக வாய்ப்புள்ள, ஜோ பிடன், கடுமையாக தாக்கியுள்ளார். நேற்று முன்தினம், அமெரிக்காவில், போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஜோ பிடன், தன் மனைவியுடன், போர் வீரர்களின் நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கறுப்பு கண்ணாடியும், கறுப்பு முக கவசமும் அணிந்திருந்தார். அந்த தோற்றம், அவரை சுலபமாக அடையாளம் காண முடியாதபடி இருந்தது. இந்தப் படத்தை 'டுவிட்டரில்' வெளியிட்ட ஒரு பத்திரிகை நிருபர், 'இந்த படத்தைப் பார்த்த பின், பொது இடத்தில், டிரம்ப் ஏன…

  5. அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இடைமறித்த ரஷிய ஜெட் விமானங்கள் கிழக்கு மத்தியதரைக் கடலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரண்டு ரஷிய ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. மே 26, 2020 அன்று, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி -8 ஏ ஆளில்லா விமானம் கிழக்கு மத்தியதரைக் கடலில் சர்வதேச கடல் வழியாக பறந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு ரஷிய சு -35 விமானம் 65 நிமிடங்கள் அமெரிக்க விமானத்தை இடைமறித்து முறைகேடான முறையில் தடுத்து நிறுத்தியது. ரஷிய விமானிகள் பி -8 ஏவின் இரு பக்கத்திலும் ஒரே நேரத்தில் நெருக்கமான நிலையில் பறந்ததால், இந்த இடைமறிப்பு பாதுகாப்பற்றது மற்றும் தொழில்சார்ந்ததல்ல என்று தீர்மானிக்கப்பட்டது என்று அமெரிக்க…

  6. தவறான தரவுகள்: கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை குறைத்தது ஸ்பெயின்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடிகள் உள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை சுகாதார அமைச்சகம் சரிசெய்துள்ளது. பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் தரவைச் சரிபார்த்த போது, சில உயிரிழப்புகள் இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மற்றவர்கள் கொரோனா வைரஸின் விளைவாக உயிரிழக்க வில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை கிட்டத்தட்ட 2,000 பேர் கீழ்நோக்கி திருத்தியுள்ளது. முன்னதாக 28 ஆயிரத்திற்கும் அதிகமாக இரு…

  7. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,604,697 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில், 348,237 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் தாக்கம் உலகளவில் சற்றுக் குறைந்துள்ளதால், பல்வேறு நாடுகளும் ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. சில நாடுகள் ஊரடங்கை தளர்த்த திட்டமிட்ட…

  8. வெளியே வரும் மூடி வைக்கப்பட்ட துபாய் அரச தலைவரின் முறைகேடுகள். பெண்ணுரிமை பேசிக்கொண்டே, பெண்களை வதைக்கும் கொடுமை 😟 வெளியே தெரியும் சுபீட்ச்சத்துக்கு பின்னால் உள்ள அவலம் 🥺

    • 0 replies
    • 585 views
  9. அமெரிக்கா கருத்து கூறுவது முட்டாள்தனமானது : இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் சீனா ஆவேசம் சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் சிலபல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது, இந்தியா அத்துமீறி தங்கள் பகுதியில் நுழைவதாக சீனா கூறிய குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்தது. இந்திய எல்லைக்குள் சீனா நுழைவதாக இதற்கு முன்பாக இந்தியத் தரப்பினர் குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தியதில் பதற்றம் குறைந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் இது தொடர்பாகக் கூறும்போது, “எல்லையில் உள்ள சுமுகமாக நிலையை சீனா பதற்றமான சூழலாக மாற்றுகிறது. அண்டை நா…

    • 1 reply
    • 1.1k views
  10. ஒரு நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவிய அழகு ராணி தட்டம்மை வெடிப்பிற்கு எதிரான பசிபிக் தீவின் போராட்டத்திற்கு உதவிய அழகு ராணி கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவினார். பதிவு: மே 26, 2020 16:39 PM சமோவா உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் வரை கொரோனா நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஆனால் சமோவா என்ற குட்டி நாடு கொரோனாவே இல்லாத நாடாக உள்ளது. இதற்கு காரணம் ஒரு அழகி தான் என கூறப்படுகிறது. அந்த அழகியின் பெயர் ஃபோனோ (ஃபோனோய்பாஃபோ மெக்ஃபார்லேண்ட்-சீமானு) மிஸ். சமோவா அழகி போட்டியில் பட்டம் வென்று உள்ளார். ஃபோனோ அழகிப்பட்டம் பெற்ற நேரத்தில், அவரது நாட்டின் மொத்த மக்கள் தொகையான 200,000 பேரில் 6,000 பேருக்கு மணல்வாரி அல்லது மண்ணன் என…

  11. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரித்து உள்ளது. பதிவு: மே 26, 2020 17:00 PM டோக்கியோ இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணியக்கூடாது, ஏனெனில் அது அவர்கள் சுவாசிப்பதை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்துள்ளது. முக கவசம் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன, இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது, முக கவசம் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள…

  12. அமெரிக்காவில் ராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ராணுவ வீரர் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். பதிவு: மே 26, 2020 09:13 AM சிகாகோ, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைவரும் வீடுகளில் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதனுட…

  13. குளாேரோகுயின் மருந்து சோதனையை இடை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம் மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் இடைநிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை குளோரோகுயின் மருந்தை வைத்து அதிக சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் சோதனை செய்யப்படுகிறது. ‘இந்த முடிவுகளுக்கான புள்ளி விவரங்களை உலக சுகாதார நிறுவனத்தின் டேட்டா பாதுகாப்பு சோதனை மையம் சோதனை செய்து வருகிறது. அந்த முடிவுகள் வந்த பின் குளோரோகுயின் குறித்து அறிவிப்போம். அதுவரை குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக க…

  14. பாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது Bharati May 22, 2020 பாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது2020-05-22T16:31:27+00:00உலகம், உள்ளூர் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்த கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தான் விமான சேவைக்குச் சொந்தமான பாகிஸ்தான் எயர் லைன்ஸ் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக ஏஜென்ஸிச் செய்திகள் தெரிவிக்கின்றன. கராச்சி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்து நொருங்கி விபத்தில் சிக்கிய இந்த விமானத்தில் 107 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். விமானம் விபத்து…

  15. மாகாண ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப் மக்கள் வழிபாட்டிற்காக, தேவாலயங்களை திறக்க மறுக்கும் மாகாண ஆளுநர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது. 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு, மாகாண அரசுகளை ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “பல மாகாணங்கள், மதுபான விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறந்து…

    • 1 reply
    • 437 views
  16. அதிநவீன லேசர் ஆயுதம்.. நடுக்கடலில் நடந்த சீக்ரெட் சோதனை வெற்றி.. ஆட்டத்திற்கு தயாராகும் அமெரிக்கா.! நியூயார்க்: அமெரிக்கா கடற்படை அதிநவீன லேசர் ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளது. அதிகரித்து வரும் போர் அச்சத்துக்கு இடையே இந்த சோதனையை அமெரிக்கா செய்துள்ளது.அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக டிரேட் வார் நடத்திக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் கொரோனாவின் தோற்றம் குறித்தும் அமெரிக்கா, சீனாவுடன் மோதி வருகிறது.அதேபோல் தென் சீன கடல் எல்லையில் இரண்டு நாடுகளும் மிக மோசமாக சண்டை போட தயார் ஆகி வருகிறது. இதனால் இது எப்போது வேண்டுமானாலும் முழு போராக வெடிக்கும் அபாய…

    • 1 reply
    • 645 views
  17. "செகண்ட் வேவ்" வந்தாலும் சரி.. நாட்டை இனியும் லாக்டவுனில் போட்டு மூட மாட்டேன்.. டிரம்ப் பிடிவாதம்.! நியூயார்க்: மூடி போட்டு மூடுவதற்காக ஒரு நாடு இல்லை.. இப்படி நிரந்தரமாக பூட்டி போடுவதும் ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது கிடையாது.. அதனால் வைரஸ் பாதிப்பில் 2வது அலை வந்தாலும் சரி, 3வது அலை வந்தாலும் சரி முடக்கம் என்பதே கிடையாது என்று அதிபர் டிரம்ப் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக கூறியுள்ளார்.. இந்த பரபரப்பு பேச்சு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுக்க வைரஸின் பிடியில் சிக்கி கொண்டுள்ளது.. இந்த கொரோனா பாதிப்பில் லீடிங்கில் உள்ளது அமெரிக்காதான்.. உயிரிழப்பிலும் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.வைரஸ் பரவலை தடுக்க லாக்டவுன் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்…

  18. கனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா? ரொரன்ரோவிலிருந்து குரு அரவிந்தன் ரஸ்யா நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கின்றது. தொடக்க காலத்தில் ரஸ்யா கொரோனா தொற்றே தங்கள் நாட்டில் இல்லை என்று மகிழ்வடைந்தது. ஆனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக இப்போது அங்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கிவிட்டது. சராசரி பத்தாயிரம் பேர்வரை தினமும் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். எல்லா நாடுகளையும் பின் தள்ளி இப்போது இரண்டாவது இடத்தில் ரஸ்யா நிற்கின்றது. முதலாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் பிரேஸில் நாடும் இருக்கின்றன. சுகாதாரப்பணி புரிபவர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்களை அணிந்து கவனமாக செயற்பட்டாலும் ரஸ்யாவின் ரூலா என்ற இடத்து மருத்துவ மனையில் பணிபுரிந்த 20 வ…

  19. பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்.. 61,000 புதிய தொற்றுக்கள் பதிவாகி.. மொத்த கொவிட்-19 மரணம்.. மே 8 வரை 40,000 ஆயிரத்தை எட்டி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்.. பிபிசி இச்செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்து வருகிறது. Coronavirus death toll passes 40,000 in the UK https://www.telegraph.co.uk/news/2020/05/19/coronavirus-death-toll-passes-40000-uk/ More than 60,000 new Covid-19 infections are happening a week in England, according to official figures. https://www.standard.co.uk/news/health/coronavirus-statistics-england-infections-a4446976.html

  20. கரோனா விவகாரம்: சட்ட நடவடிக்கையை ஏற்கமாட்டோம்; பதிலடி கடுமையாக இருக்கும்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதற்கு சீனாதான் காரணம் எனக் குற்றம்சாட்டி, எங்கள் மீது அமெரிக்கா தொடுக்கும் சட்ட நடவடிக்கையை ஏற்க முடியாது. அவ்வாறு சட்டம் ஏதும் அமெரிக்கா கொண்டுவந்தால் எங்களின் பதிலடி கடுமையாக இருக்கும் என அமெரி்க்காவை சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரின் விலங்குகள் சந்தையிலிருந்து உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவியது என்று சீனா கூறிவருகிறது. ஆனால், கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, கரோனா வைரஸைக் கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை, உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட…

  21. அதிபர் டிரம்மை பொருட்படுத்த தேவையில்லை - ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.! 30 நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் விழித்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால்,அதில் இருந்து அமெரிக்கா நிரந்தரமாக விலகி விடும் என்ற அதிபர் டிரம்பின் மிரட்டலை இதர உறுப்பு நாடுகள் நிராகரித்துள்ளன. கொரோனா பரவல் துவங்கியதை மறைத்து சீனாவுக்கு சாதமாக இருப்பதாகவும், கொரானோ தடுப்பு நடவடிக்கைகளில் பலவீனமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி, உலக சுகாதார நிறுவனத்திற்கான அமெரிக்க நிதியை சென்ற மாதம் நிறுத்தி வைத்தபின், இந்த மிரட்டலை அவர் விடுத்தார். இந்த நிலையில் ஜெனீவாவில் நடந்த வருடாந்திர கூட்டத்தில், கொரோனாவை உலக சுகாதார நிறுவனம் கையாண்ட விதம் குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான ஆய்வை நடத்த உறுப்பு நாடுகள…

  22. கொரோனா பயத்தில் நாடுகள் முடங்கி இருக்கும் போது, அலையலையாக, டிங்கி பிளாஸ்டிக் தோணிகளில் ஆங்கிலக்கால்வாயினை கடந்து அகதிகள் வருவது பெரும் தலையிடியாக மாறியுள்ளது. உறுதி அளித்தபடி இல்லாமல், பிரான்ஸ் நாடு, இவர்களை தடுக்க எவ்வித நடவைடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரித்தானியா கவலை தெரிவித்து, இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பது முக்கியத்துவம் பெரும் என அறிவித்துள்ளது. நேற்று இரவு மட்டும் 66 பேர், 6 படகுகளில் வந்து உள்ளனர். முன்தினம் 64 பேர் வந்துள்ளனர்.

  23. ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை தோல்வி "ஊசி போடப்பட்ட குரங்குகள் அனைத்துக்கும் கொரோனா" லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்களை கொரோனாவிலிருந்து காக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சந்தேகம் எழக் காரணம், ஆய்வகத்தில் சோதனைக்காக தடுப்பூசி போடப்பட்ட ஆறு ரீசஸ் குரங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுதான். இந்த தடுப்பூசி தற்போது முதல் மனித மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த சோதனையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஹசெல்டின் என்பவர் கூறும்போது தடுப்பூசி போடப்பட்ட ஆறு குரங்குகளையும் சோதித்தபோது, தடுப்பூசி போடப்படாத மூன்று குரங்குகளின் மூக்க…

    • 4 replies
    • 1.2k views
  24. உகான் நகரில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புதல் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது. பதிவு: மே 21, 2020 08:41 AM பெய்ஜிங் சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா குடும்பத்தைச் சார்ந்த கோவிட் 19 வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது எனினும், உகானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் கவனக்குறைவால் கொரோனா உலகிற்குப் பரவியது என்ற செய்திகளும் அடிபட்டன. அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் மா…

    • 2 replies
    • 946 views
  25. சிங்கப்பூரில் முதன்முறையாக சூம் வீடியோ மூலம் மரணதண்டனை விதிப்பு May 21, 2020 சிங்கப்பூரில் முதன்முறையாக சூம் வீடியோ மூலம் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த 2011-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த 37 வயதான புனிதன் கணேசன். ஏன்பவர் ஹெரோயின் போதை பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். சிங்கப்பூரில் அளவில் போதை பொருள கடத்தலுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டங்கள் இங்கு கடுமையான உள்ளன. அந்தவகையில் புனிதன் கணேசன் மீதான வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மூடப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.