Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைனுக்கான உதவி சட்டமூலத்தை நிறைவேற்றும் நடவடிக்கை நிறுத்தம்! உக்ரைனுக்கான உதவி சட்டமூலத்தை நிறைவேற்றும் நடவடிக்கையை செனட் குடியரசுக் கட்சியினர் தடுத்துள்ளனர். 110 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் தொகையில், உக்ரைனுக்கான 61 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அத்துடன் இஸ்ரேலுக்கான நிதி மற்றும் காசாவுக்கான உதவி ஆகியவை அடங்கும். குடியரசுக் கட்சியினர், உக்ரைனுக்கான எந்தவொரு உதவியும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் புகலிட சீர்திருத்தங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதனிடையே, உக்ரைனுக்கான அமெரிக்க நிதி விரைவில் தீர்ந்துவிடும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. 60 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், சட்டமூலத்தை முன்னெடு…

  2. உக்ரைனுக்கு அமெரிக்கா போர் டாங்கிகளை அனுப்பியதற்கு வடகொரியா கண்டனம் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உதவும் வகையில் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவை வடகொரியா கண்டித்துள்ளது. மொஸ்கோவை அழிக்க வடிவமைக்கப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாக வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனுக்கு இராணுவ தளவாட வசதிகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா போர் நிலைமையை அதிகரிப்பது குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலையும் சவாலையும் முன்வைத்து, சூழ்நிலையை மேலும் மோசமாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கிம் யோ ஜொங்கின் இந்த கருத்துக்கள…

  3. உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை! உக்ரைனில் கிழக்கு பகுதியில் உக்ரைன் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கூலிப்படை நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. இந்த மூன்று பேரும் கூலிப்படையினர் என்றும், போர்க் கைதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என…

    • 31 replies
    • 2.2k views
  4. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது. ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் பிற உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.போர் முடிவில்லாமல் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என சர்வதேச அளவில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குறிப்பாக பிரான்ஸ், ஜெர்ம…

    • 16 replies
    • 1.2k views
  5. உக்ரைனுக்கு ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து... வழங்குவோம்: ஜோ பைடன் அறிவிப்பு! ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க, உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து தலைநகர் கீவ் மீது உக்கிர தாக்குதலை தொடுத்து வருகின்ற நிலையில், ஜோ பைடனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பைடன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், உக்ரைனியர்களை திறந்த கரங்களுடன் வரவேற்பதாக பதிவிட்டுள்ளார். முன்னதாக, 13.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஓர் அவசர ஆணையில் ஜோ பைடன் கடந்த வார இறுதியில் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப…

  6. உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு உக்ரைன் மீது ரஷியா தனது முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரைனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதால் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போலந்து விவசாயிகள் குற்றம்சாட்டி போராடத் தொடங்கியதில் இருந்து பி…

  7. உக்ரைனுக்கு எதிரான போரில்... ரஷ்யா 25வீத படைகளை, இழந்துள்ளது -அமெரிக்கா தகவல் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவின் நிலை குறித்து அமெரிக்கா சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 25வீத படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பலம் குறைந்து வருகிறதென்றும் இந்த சமயத்தில் உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை அனுப்பிவைப்போம் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. அதேசமயம் உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, இன்றைக்குள் உக்ரைன் படைகள் சரணடையாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277646

  8. உக்ரைனுக்கு எதிரான போர்... நீடிக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம்; சந்தேகம் கிளப்பிய நிபுணர்கள் உக்ரைனுக்கு எதிராக ரஷியா போரிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதே சீனாவின் விருப்பம் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது தினத்தந்தி பீஜிங், உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷியா நீண்டகால எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனினும், உக்ரைன் தனது முயற்சியை நிறுத்தவில்லை. இது ரஷியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற சூழலில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தது. போரின் விளைவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, விலைவாசி அதிகரிப்பு, உணவு பொருட்கள் பற்றாக்குறை ஆகியவை சர்வதேச அளவில் எதிரொலித்தது. இதனால், வளர…

    • 5 replies
    • 710 views
  9. உக்ரைனுக்கு எதிரான... இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு! உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தீர்ப்பை உக்ரைன் வரவேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும் எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவின் தாக்குதல்கள் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1272225

  10. உக்ரைனுக்கு கவச கேரியர்கள்- பேட்ரியாட் ஏவுகணை பேட்டரிகளை அனுப்பும் ஜேர்மனி! கவசப் பணியாளர்கள் கேரியர்கள் மற்றும் பேட்ரியாட் ஏவுகணை பேட்டரிகளை உக்ரைனுக்கு வழங்கும் என்று ஜேர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நேற்று (வியாழக்கிழமை) கலந்துரையாடியதற்கு பிறகு வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியானது. ‘டிசம்பர் பிற்பகுதியில், அமெரிக்கா உக்ரைனுக்கு ஒரு பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை பேட்டரியை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தது. உக்ரைனுக்கு கூடுதல் தேசபக்த வான் பாதுகாப்பு பேட்டரியை வழங்குவதில் ஜேர்மனி அமெரிக்காவுடன் இணையும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அ…

  11. உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி: அமெரிக்கா அறிவிப்பு! உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. இந்த இராணுவ பொதியில், ஹிமார்ஸ் ரொக்கெட் லொஞ்சர்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் கீழ் மொத்தம் 18.3 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1305003

  12. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின்(Donald trump) பதவியேற்பதற்கு முன்னதாக, உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை பாதுகாப்பு உதவியாக வழங்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நம்பிக்கையுடன், ஜோ பைடன்(Joe Biden) ஜனவரி மாதம் பதவி விலகுவதற்கு முன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பிலும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் கீழ் ஜனாதிபதி உக்ரைன் வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்திற்கான ஆதரவின் எதிர்காலம் தொடர்பிலும் கடந்த காலங்களில் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். …

  13. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் டென்மார்க் KaviFeb 27, 2023 06:39AM உக்ரைனுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக டென்மார்க் ராணுவ மந்திரி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெல…

  14. உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் உறுதி! ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உறுதியளித்த ஆயுதங்களில் ஏவுகணைகள் மற்றும் ரேடார்களும் அடங்கும். முன்னதாக அமெரிக்காவும் இதேபோன்ற உறுதிமொழியை வழங்கியது. ஜேர்மனியில் இருந்து ஒரு உயர் தொழில்நுட்ப அமைப்பு ஏற்கனவே உக்ரைனில் உள்ளது. 50 நாடுகளைச் சேர்ந்த உக்ரைனின் நட்பு நாடுகள் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் சந்திக்கும் போது இந்த உறுதிமொழிகளை வழங்கின. திங்கள் மற்றும் செவ்வா…

    • 4 replies
    • 641 views
  15. உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத உதவி -அமெரிக்கா அறிவிப்பு -சி.எல்.சிசில்- உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனிய இராணுவத்துக்கு உதவுவதற்கான இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ரொக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுத…

  16. உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்கா! தீவிரமடையும் போர் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 40…

  17. உக்ரைனுக்கு ரஷ்யப் படைகளை அனுப்ப அதிபர் புடினுக்கு அனுமதி வழங்கியது நாடாளுமன்றம்! [sunday, 2014-03-02 17:55:59] உக்ரைனுக்கு ரஷ்ய படை களை அனுப்புவதற்கு அதிபர் புடினுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்த பிரிந்து தனி நாடான உக்ரைனில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாகவும் இருதரப்பினர் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ரஷ்ய ராணுவ படைகளை அனுப்புவதற்கு ரஷ்ய நாடாளுமன்ற …

  18. உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்புவது குறித்து ஒபாமா அவசர ஆலோசனை! [Monday, 2014-03-03 20:25:17] ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்புவது குறித்து ஓபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக 3 மாதமாக கடும் போராட்டம் நடந்தது. அதன் பின்னர் அவர் பதவி விலகி ரஷியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்.தற்போது அங்கு இடைக்கால அரசு பதவி வகிக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அதிபர் யனுகோவிச்சுக்கு ஆதரவாக ரஷியா களம் இறங்கியுள்ளது.உக்ரைனின் கிரீமியா சுயாட்சி பிரதேசத்தில் 2 விமான நிலையங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை ரஷியா ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. அங்கு ரஷிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மேலும், உக்ரை…

  19. உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்கும் உதவிகளை நிறுத்தியது ஏன்? வெளியானது அதிர்ச்சி தகவல் உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்கும் உதவிகளை நிறுத்தியது ஏன் என, இதுவரை புரியாத புதிராக இருந்துவந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. புதிதாக வெளியான அமெரிக்க அரசாங்கத்தின் மின்னஞ்சல் ஒன்றின் மூலம் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிதி வோலோடிமிர் சேலன்ஸ்கி ஆகிய இருவருக்கும் இடையில் இடம்பெற்ற 91 நிமிடங்கள் உரையாடலுக்கு பின்னரே இந்த உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது உறுதிப்பட்டுள்ளப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 25ஆம் திகதி, சேலன்ஸ்கி மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் இடையேயான 91 நிமிட கலந்துரையாடலுக்கு பிறகு வெள்ளை மா…

  20. உக்ரைனுக்கு, மனிதாபிமான... உதவி வழங்குவதில், குறிப்பிடத்தக்க சவால் – பெரிய பிரித்தானியா. ரஷ்ய துருப்புக்களால் உக்ரைனின் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் மனிதாபிமான உதவிகளை வழங்கும் செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் வடக்கு பிராந்தியத்தில் இருந்து வெளியேறியபோது பாலங்களை குண்டுகள் வைத்து அழித்ததாகவும், கண்ணிவெடிகளை புதைத்தாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 285,000 மக்கள் வசிக்கும் நகரத்தில் காணப்படும் ஒரேயொரு ஆற்றின் குறுக்குவழி பாலத்தையும் ரஷ்ய துருப்புக்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கின் பல பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குபவர்கள் குறிப்பிடத்தக்க சவாலை எதிர் கொண்டுள்ளதாக ப…

  21. உக்ரைனுக்கு, 2023ஆம் ஆண்டும்... குறைந்தபட்சம் "2.3 பில்லியன் பவுண்டுகள்" ஆதரவு வழங்க பிரித்தானியா திட்டம்! உக்ரைனுக்கு 2023ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஆதரவு தொகை, இந்த ஆண்டு ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கு பிரித்தானியா வழங்கிய 2.3 பில்லியன் பவுண்டுகள் உடன் ஒத்துப்போகும் அல்லது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூயோர்க் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதமர் லிஸ் ட்ரஸ், அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது, உக்ரைனுக்கு தொடர்ச்சியான மற்றும் கணிசமான இராணுவ உதவி பற்றிய செய்தியை வழங்குவார…

  22. உக்ரைனுக்கு, ஆயுதம் வழங்கினால்... புதிய இலக்குகள், குறிவைக்கப்படும்: புடின் எச்சரிக்கை! உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 100 நாட்களைத் கடந்து நடந்துக்கொண்டிருக்கும் உக்ரைன்- ரஷ்யப் போர், தற்போது தீவிரமடைந்துள்ளது. ரஷ்யப் படைகள், உக்ரைன் படைகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருவதால் உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை கோரியுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறுகையில், ‘உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கத்திய நாடுகள் …

  23. உக்ரைனுக்கு.. 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள், பாதுகாப்பு உதவியை வழங்கும் அமெரிக்கா! உக்ரைனுக்கு கூடுதல் 270 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பாதுகாப்பு உதவியை, அமெரிக்கா அனுப்பும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதில், நடுத்தர தூர ரொக்கெட் அமைப்புகள் மற்றும் தந்திரோபாய ஆளில்லா விமானங்கள் உள்ளடங்கும். நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியான இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தால் உக்ரைனுக்கு அளிக்கப்பட்ட மொத்த அமெரிக்க பாதுகாப்பு உதவியை 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கொண்டு வருகின்றது. மேலும், மே மாதம் காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனுக்கான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவியாக 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக செலுத்தப்படுகிறது…

  24. உக்ரைனுக்கு... 100 மில்லியன் பவுண்டுகள், மதிப்புள்ள ஆயுதங்களை.. வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு! ரயில் நிலையத்தில் அகதிகள் மீது மனசாட்சியற்ற குண்டுவீச்சுக்கு பிறகு, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 800 டேங் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ உபகரணங்களை பிரித்தானியா அனுப்பும் என்று பிரதமர் உறுதியளித்தார். கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர். இந்த த…

  25. உக்ரைனுக்கு... 74 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி! ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் கிட்டத்தட்ட $100m (£74m) உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகம் அறிவித்துள்ளது. உக்ரைனிய நலன், ஓய்வூதியம் மற்றும் பொதுத்துறை சம்பளம் வழங்குவதற்கு இந்த நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 290 மில்லியன் டொலர்களுக்கு கூடுதலாக பணம் செலுத்துவதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிதி உலக வங்கியின் பல நன்கொடையாளர் அறக்கட்டளை மூலம் விநியோகிக்கப்படும். https://athavannews.com/2022/1270743

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.