Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கேமரூன் நாட்டின் படுகொலைகள் இலங்கையில் இறுதிப்போர் காலத்தில், நிர்வாணமாக, தமிழர்களை, புலிகளாக சித்தரித்து, கண்களை கட்டி ராணுவம் சுட்டு கொலை செய்த காட்சிகளை பார்த்தோம். அதேபோல கேமரூன் நாட்டில், ஒரு நிகழ்வு. ஒரு பெண், ஜிகாதி என கைதாகிறார். அவரை அடித்து இழுத்து செல்கிறது ராணுவம். அந்த பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு ஓடி செல்கிறார் அவரது சிறிய மகள். கொலைக்களத்துக்கு வந்ததும், அந்த பெண்ணின் கண்கள் கறுப்புத்துணியால் கட்டப் படுகின்றன. சிறுமியின் கண்களும் அவ்வாறே கட்டப்படுகின்றன. அதுமட்டுமல்ல. அந்த பெண்ணின் முதுகில், அவரது கைக்குழந்தை ஒன்று துணியால் கட்டிய நிலையில் இருக்கிறது. பின்னர் ராணுவத்தினை சேர்ந்த ஒருவர், துப்பாக்கியினை தூக்கி மேலே வெடிவைத்து, பி…

    • 0 replies
    • 834 views
  2. பிரெக்ஸிற்றுக்கு பின்னரும் பிரித்தானியாவில் வாழ 750000 ஐரோப்பியர்கள் விண்ணப்பித்துள்ளனர்: ஜாவிட் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறிய பின்னரும் பிரித்தானியாவில் வாழ்வதற்காக 750,000 க்கும் மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த மக்கள் விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த மக்கள் எமது நண்பர்கள் எனவும் அவர்கள் இந்த நாட்டுக்காக நிறைய பங்களிப்பு செய்கிறார்கள் எனவும் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். மேலும் பிரெக்ஸிற்றின் விளைவு எதுவாக இருந்தாலும் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் பிரெக்ஸிற்றின் பின்னரும் இங்கேயே வாழ்வதற்கே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரெக்ஸி…

  3. சிரியாவில் குண்டு வீச்சு:20 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பு மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில், ஒன்பது குழந்தைகள் உள்பட, 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வீச்சுல், அங்குள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளது. . சிரியாவில் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக, ஹயாத் தாஹிர் அல்ஷாம் என்ற பிரிவினைவாத அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதத்தில் இருந்து இந்த அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளில் அரசுப் படைகளும் அதற்கு உதவும் ரஷ்ய படைகளும் தாக்குதலை நடத்தி வருகின்றன. விமானம் மூலம் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவ…

  4. மீண்டும் பதவியேற்றார் ஸ்கொட் மோரிசன் அவுஸ்திரேலியப் பிரதமராக ஸ்கொட் மோரிசன் மீண்டும் இன்று பிரதமராக பதவியேற்றார். அவுஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்கொட் மோரிசன் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அத்துடன் உதவிப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மேக் (Michael McCormack) க்கும் அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து லிபரல் கட்சி உறுப்பினர்கள், ஸ்கொட் மோரிசனை மீண்டும் பிரதமராக தெரிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/570…

  5. வாழ்வதற்கே இலஞ்சம் கொடுக்கும் மக்கள் வடகொரிய பொதுமக்கள் நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்கு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பொதுமக்களை பல்வேறு வழிகளில் அச்சுறுத்தி லஞ்சம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சுயதொழில்களில் ஈடுபடுகின்ற மக்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கை வெறுமனே அரசியல் நோக்கில் போலியாக தயாரிக்கப்பட்டது என வடகொரியா அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/57049

  6. நெடுஞ்­சா­லையில் தரை­யி­றக்­கப்­பட்ட தாய்­வா­ன் போர் விமா­னங்கள் தாய்­வா­னிய போர் விமா­னங்கள் பயிற்சி நட­வ­டிக்­கையின் அங்­க­மாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நெடுஞ்­சா­லை­யொன்றில் தரை­யி­றக்­கப்­பட்­டன. மேற்­படி நெடுஞ்­சா­லை­யா­னது வழ­மை­யாக போக்­கு­வ­ரத்து நெரிசல் மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. அந்­நாட்டின் இரா­ணுவ ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்தும் முக­மாக இடம்­பெற்ற பயிற்சி நட­வ­டிக்­கையின் அங்க­மாக தாய்­வா­னிய விமானத் தளங்கள் மீது சீனாவால் தாக்­கு­த­ல்கள் மேற்­கொள்­ளப்­பட்டால் எவ்வாறு எதிர்­கொள்­வது என்­பதை எடுத்­துக்­காட்டும் வகையில் போர் விமா­னங்­களை நெடுஞ்­சா­லையில் தரை­யி­றக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. மேற்…

  7. “ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது அரசியல் தற்கொலையாக அமையும் ” பிரித்­தா­னிய பழை­மை­வாதக் கட்சி ஐரோப் பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து எது­வித உடன்­ப­டிக்­கை­யு­மின்றி வெளி­யே­று­வ­தற்­கான செயற்­பாட்டை முன்­னெ­டுக்க முயற்­சிக்­கு­மானால் அது அந்தக் கட்­சிக்கு அர­சியல் தற்­கொ­லை­யொன்­றா­கவே அமையும் என அந்தக் கட்­சியின் பிர­தமர் பத­விக்­கான வேட்­பா­ளரும் வெளிநாட்டு செய­லா­ள­ரு­மான ஜெரேமி ஹன்ட் எச்­ச­ரித்­துள்ளார். தெரேஸா மே பிர­தமர் பத­வியை விட்டு வில­கி­ய­தை­ய­டு­த்து அவ­ரது பதவி நிலைக்கு போட்­டி­யிடும் 10 வேட்­பா­ளர்­களில் ஜெரேமி ஹன்ட்டும் ஒரு­வ­ராவார். பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வதைத் தவிர்ப்­பதைவிடவும் எது­வித உடன்­ப­டிக்­க…

  8. சிறைகளில் கைதிகள் மோதல்- 40 பேர் பலி பிரேஷிலில் 4 சிறைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 40 கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாயஸ்சில் உள்ள 4 சிறைகளில் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. அதில் ஒரு சிறையில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற சிறைகளில் 25 பேர் உயிழந்துள்னர். ஆக மொத்தம் 40 கைதிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு துப்பாக்கிகள் அல்லது கத்திகளை பயன்படுத்தவில்லை. சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகிலேயே அதி…

  9. ஆப்கானில் கடந்த வருடம் 192 பாடசாலைகள் மீது தாக்குதல் - யுனிசெவ் ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது என தெரிவித்துள்ள யுனிசெவ் இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மாணவர்களிற்கு உரிய கல்வியை உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2017 இல் பாடசாலைகள் மீது 68 தாக்குதல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள யுனிசெவ் 2018 இல் 192 பாடசாலைகள் தாக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கல்வி தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது என தெரிவித்துள்ள யுனிசெவ் பாடசாலைகள் மீதான இந்த அர்த்தமற்ற தாக்குதல்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கொல்லப்படுதல், காயமடைதல் கடத்தப்படுதல் மற்றும் கல்வி…

  10. கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி ; 200 க்கும் மேற்பட்டோர் மாயம்! கொங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் உள்ள மிகப்பெரிய ஏரியில் சென்ற படகொன்றே இவ்வாறு கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 183 பேர் மாத்திரம் பயணிக்க கூடியதான படகில் 300 க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அளவுக்கு அதிகமாக சரக்குகளையும் ஏற்றிச் சென்றமையினால் பராம் தாங்க முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் படகில் பயணித்த பெண்கள்…

  11. மார்ச் 29 இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டிய கடமையை செய்யாததால்.. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்துள்.. பிரிட்டன் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தலை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் தனது கூட்டமைப்பு நாடுகளுக்குப் பணப்பட்டுவாடா செய்கிறது. உண்மையில்.. இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் அப்படி என்னத்தைத்தான் வெட்டிக் கிழிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரிட்டனின்.. பிரதான கட்சிகளான.. பழமைவாதக் கட்சியும் (கென்சவேட்டிவ்) மற்றும் தொழிற்கட்சியும் (லேபர்) 2016 மக்களின் தெரிவான பிரக்சிட் டை அமுல்படுத்தாமல் சடுகுடு ஆடி வந்த நிலையில்.. மீண்டும்.. பிரிட்டன்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான புதிய கால எல்லை 31 ஒக்டோ…

    • 7 replies
    • 1.8k views
  12. கூலிப்படையை அனுப்பி கொலை செய்வதற்கு சமனானதே கருக்கலைப்பு – பாப்பரசர் ஃபிரான்சிஸ் ஒரு பெண்ணின் கருவில் உள்ள சிசுவை அழிப்பது கூலிப்படையை அனுப்பி கொலை செய்வதற்கு சமனானது என்று பாப்பரசர் பிரான்சிஸ் கவலை வௌியிட்டுள்ளார். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்பை தடை செய்யும் சட்டம் அண்மையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பெண்ணுரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், வொஷிங்டன் நகரில் வத்திக்கான சார்பில் கருக்கலைப்புக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. இதில் பாப்பரசர் ஃபிரான்சிஸ் பங்கேற்றிருந்தார் அங்கு உரையாற்றிய அவர், “கருக்கலைப்பு வ…

  13. நேபாளத்தில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் – நால்வர் உயிரிழப்பு! நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த குண்டுத்தாக்குதல்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தலைநகர் காத்மண்டுவில் அடுத்தடுத்து மூன்று குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதல் 2 தாக்குதல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. மூன்றாவது சம்பவம் சில மணி நேர இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவங்கள் குறித்த விசாரணை தொடரும் வேளையில், சட்டவிரோதக் கம்யூனிஸ்ட் குழு அதற்குக் காரணமாயிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, குண்டுத்தாக்குதல்களை அடுத்து நேபாளத்தின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்ப…

  14. உலகின் அதிவேக ரயில் சோதனை வெற்றி! உலகின் அதிவேக ரயில் சேவையை தனது தலையாய குறிக்கோளாக வைத்துள்ள ஜப்பான், மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனை ஓட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜப்பான் பரிசோதித்துள்ளது. அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மைபாரா மற்றும் கியோட்டோ நகரங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த ரயில் சோதனை மூலம் மணிக்கு 360 கிலோமீட்டர் வேகம் என்ற இலக்கை அடைய முடிந்ததாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ரயில், வரும் ஜூலை மாதத்தில் இருந்து டோக்கியோ முதல் ஒசாகா வரையான வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு துறைகளிலும் மாற்றங…

  15. ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் இறுதி நாள் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 உறுப்பு நாடுகளில் 7 இடங்களில் ஏற்கனவே வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மிகுதி 21 இடங்களுக்கான தேர்தல் 4 ஆவது மற்றும் இறுதி நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த தேர்தலில் 400 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே நெதர்லாந்து, பிரித்தானியா, அயர்லாந்து, செக் குடியரசு, லாட்வியா, மால்டா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இடங்களில் தேர்தல் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மிகுதி இடங்களுக்கான வாக்குப்பதிவு அனைத்தும் முடிவடைந்து இறுதி முடிவுகள் இன்று (ஞாய…

  16. ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது May 25, 2019 ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இடம்பெற்ற இந்த கைதுச் சம்பவத்தில் யோகா பயிற்றுநரும் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிற்சியாளர் வகுப்புகள் நடத்த அனுமதி பெறவில்லை எனவும், இன்ஸ்ரகிராமில் தம் யோகா வகுப்புகள் குறித்து விளம்பரம் செய்ததாகவும் உள்ளூர் நீதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் முறையற்று நடந்துகொண்டதாகவும், முறையற்ற ஆடைகளை அணிந்திருந்ததாகவும் குறித்த …

    • 1 reply
    • 937 views
  17. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினருக்க…

    • 19 replies
    • 1.6k views
  18. பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே பிரிட்டன் பிரதமர் திரேசா மே தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் திரேசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆளும் பழமைவாத கட்சி உறுப்பினர்களே திரேசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில அமைச்ச…

  19. ஐரோப்பிய வாக்காளர்களுக்கு பிரித்தானியாவில் வாக்களிக்க அனுமதி மறுப்பு! பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் இன்று இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பிரித்தானிய வாக்குப்பதிவு நிலையங்களில் அனுமதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஐரோப்பிய வாக்காளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வாக்குப்பதிவு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில் அனுமதி மறுக்கப்பட்ட வாக்காளர்கள் தமது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். http://athavannews.com/ஐரோப்பிய-வாக்காளர்களுக்/

    • 4 replies
    • 1.3k views
  20. படத்தின் காப்புரிமை AFP பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - காரணம் தெரியாமல் திணறும் அரசு பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக பிப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். குழப்பமடைந்த மருத்துவர் இம்ரான் ஆர்பானி குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில் அனைவருக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது. ஏ…

    • 2 replies
    • 900 views
  21. தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார் தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர். இதனிடையே, அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவைத் தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன்…

  22. ஹுவாவேயின் நிறுவனர் ரென் சங்ஃபே, அமெரிக்கா தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார். சீன அரசு ஊடகத்திடம் பேசிய அவர், சமீபத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பேசிய அவர், எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது என்று தெரிவித்தார். கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா. அந்த நிறுவனத்தை தடை செய்யு…

  23. இரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்துகின்றது சிரியா- அமெரிக்கா கடும் எச்சரிக்கை சிரிய அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றது என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதியானால் அமெரிக்காவும் அதன் சகாக்களும் உடனடி நடவடிக்கைகளை எடுக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அரச படையினர் குளோரின் தாக்குதலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர். அசாத் அரசாங்கம் மீண்டும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றது என்பதற்கான துரதிஸ்டவசமான அறிகுறிகள் தென்படுகின்றன என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓர்கட்டஸ் தெரிவித்துள்ளார். மே 19 ம் திகதி இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற…

  24. மென்பொருளின் கோளாறே விபத்துக்களுக்கு காரணம் – ஒப்புக்கொண்டது போயிங்! போயிங் 737 MAX ரக விமானங்களுக்கான பாவனை மென்பொருளின் வடிவமைப்பில் கோளாறு இருந்ததை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க குறித்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த பாவனை மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், பாவனை மென்பொருள் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கும் கூடுதல் விவரங்களை போயிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதேவேளை, தொடர்ச்சியாக இடம்பெற்ற விமான விபத்துக்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் போயிங் 737 MAX ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மென்பொருளில…

    • 5 replies
    • 816 views
  25. இங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் சிறுவர்களுக்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவான சிறுவர்கள் உளநலம் பாதிக்கப்பட்டநிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சமூகத்திலும் பாடசாலைச் சூழலிலும் சிறுவர்களுக்கான ஆதரவு சரியாக வழங்கப்படாமையே, இந்தநிலைமைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்ட 250 சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.