Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு சீனா தடை போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இயக்க கூடாது என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போயிங் மற்றும் அமெரிக்காவின் எப்.ஏ.ஏவிடம் பேசி, பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது சீனா விமான போக்குவரத்து அமைச்சகம். மறுபுறம் இதுதொடர்பாக போயிங் நிறுவனம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்கள…

  2. ஜப்பான் கப்பலை, திமிங்கிலம் தாக்கியது: 100 பேர் காயம் ஜப்பானில் திமிங்கிலம் ஒன்று கப்பலைத் தாக்கியதில், குறைந்தது 100 பயணிகள் காயமடைந்துள்ளனர். நிகாடா துறையில் இருந்து சடோ தீவிற்கு கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமிங்கலம் மோதியதில் 15 சென்றி மீற்றர் நீளத்திற்கு கப்பல் நடுப்பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கப்பலை இயக்கியவர்கள் தெரிவிக்கின்றனர். நிபுணர்கள் இந்த சம்பவத்தை ஆராய்ந்து இது திமிங்கிலத்தால் ஏற்பட்ட பாதிப்பு என உறுதிப்படுத்தியுள்ளனர். கப்பலில் பயணித்த பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் இருந்த கப்பல் பணியாளர்களும் பயணிகளும் இந்த சம்பவத்தில…

  3. 157 பேருடன் சென்ற விமானம் விபத்து! கென்யா நோக்கி புற்பட்டு சென்ற எத்தியோப்பியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. போயிங் 737 ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து நைரோபி நோக்கி பயணித்த இந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமான பணியாளர்களும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எத்தியோப்பிய நேரப்படி இன்று காலை 8.44 அளவில் புறப்பட்ட விமானம் தலைநகரில் இருந்து புறப்பட்ட 6 நிமிடங்களில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் எத்தியோப்பிய பிரதமர் அப…

  4. கத்திக்குத்தின் எதிரொலி – விற்பனையை நிறுத்தியது அஸ்டா! சமையலறையில் பயன்படுத்தப்படும் சிறிய கத்திகளின் விற்பனையை இடைநிறுத்துவதாக அஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தாக்குதலில் 17 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்திருந்தார். குறித்த கத்திக்குத்து தாக்குதல் பிரித்தானியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையிலேயே சமையலறையில் பயன்படுத்தப்படும் சிறிய கத்திகளின் விற்பனையை இடைநிறுத்துவதாக அஸ்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பிரித்தானியாவில் …

  5. படத்தின் காப்புரிமை AFP Image caption வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் வட கொரியாவின் தலைநகருக்கு அருகிலுள்ள ராக்கெட் ஏவுத்தளத்திலிருந்து ராக்கெட் அல்லது ஏவுகணை செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள சானும்தொங் என்ற அந்த இடத்தில்தான் வட கொரியா தனது பெரும்பாலான ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவின் சோஹே பகுதியிலுள்ள அந்நாட்டின் முக்கிய ராக்கெட் ஏவுத்தளம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த…

  6. படத்தின் காப்புரிமை PA பிரிட்டனில் இருந்து ஐஎஸ் குழுவில் சேர சென்ற ஷமிமா பேகமின் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவில் சேர்வதற்காக 2015-ஆம் ஆண்டு கிழக்கு லண்டனை விட்டு கிளம்பிய மூன்று பள்ளி மாணவிகளில் ஒருவர் ஷமிமா பேகம். அவர் சமீபத்தில் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் பிரிட்டன் குடியுரிமையை ரத்து செய்தார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் சயித் ஜாவித். …

  7. அமெரிக்கா மீது ஹூவாய் வழக்குப் பதிவு சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஹூவாய் நிறுவனம், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. இதனால் ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார். மேலும் ஹூவாய் நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை விதித்தது. இந்த நிலையில், தங்கள் நிறுவனத…

  8. இந்த ஆண்டு 2 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு March 7, 2019 ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 2 பேருக்கு வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. சுவீடிஷ் இலக்கிய பேரவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகைப்பட கலைஞரான ஜீன் கிளாட் அர்னால்ட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதனையடுத்து அவரது மனைவியான கவிஞர் கத்தரினாவும் பல முக்கிய உறுப்பினர்களும் பேரவையிலிருந்து வெளியேறியிருந்தனர். இந்த பிரச்சினைகளால் 2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.…

    • 1 reply
    • 1k views
  9. புல்வாமா தாக்குதல் : பாகிஸ்தானியர்களின் வீசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா! புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கான வீசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென உலகநாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையிலேயே அமெரிக்காவிற்கு வீசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது. இதன்படி அமெரிக்காவிற்குப் பயணம்செய்யும் பாகிஸ்தானியர்களின் வீசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வீசா கால அளவை தற்பொழுது 3 மாதமாக மட்டுப்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த ச…

  10. தப்பியோட முயன்ற 400 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது சிரியாவில் தப்பியோட முயன்ற 400 ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாட்டு படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் அரசு படையினருக்கும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011 ஆம் ஆண்டு மோதல் எழுந்தது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளும் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் பாகவுஜ் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களின் கட்டுக்குள் இருக்கும் கடைசி பகுதி இதுவாகும். இதனையடுத்து சமீப வாரங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் உறவி…

  11. மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்திய பிபிசி March 5, 2019 பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக கடந்த மாதம் 24-ம் திகதிக்குப் பின்னர் பிபிசி வானொலி அமெரிக்க பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்தியுள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொப் பாடல் உலகின் மன்னராக திகழ்ந்த் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமாகியிருந்தார். இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனின் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ரொப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர் தாம் சிறுவர்களாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சன் பலமுறை தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர். இதுதொடர்பாக ‘லீவிங் நெவர்ல…

  12. டயானாவின் ஓவியங்கள் அழிப்பு – விசாரணைகள் ஆரம்பம்! பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் Pont de l’Alma பாலத்தில் வரையப்பட்டிருந்த இளவரசி டயானாவின் ஓவியங்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானிய இளவரசி டயானா Pont de l’Alma சுரங்கப்பாதைக்குள் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நினைவாக குறித்த சுரங்கத்தின் தூண்களில் டயானாவின் ஓவியம் வரையப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது குறித்த ஓவியங்கள் வெள்ளைநிற வர்ணம் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை அழிக்குமாறு எந்த அறிவுத்தலும் பரிஸ் நகரசபையால் வழங்ககப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்…

  13. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த நேரிடும்! – பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை பாகிஸ்தானில் செயற்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகள் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல நடவடிக்கை எடுக்கப்போவதாக பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சோலிமணி (Qasem Soleimani) ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “பாகிஸ்தான் அனைத்து அயல் நாடுகளுக்கும் தீவிரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் அயல் நாடுகளை அழிக்கும் அளவுக்கு பலம்வாய்ந்த அணுகுண்டை வைத்திருக்கின்றது. அதேநேரம், உங்கள் மண்ணில் செயற்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகளை அழிக்க முடியவில்லையே.. ஏன்…

  14. அலபாமா சூறாவளி: லீ வட்டாரத்தில் மீண்டும் தொடங்கிய மீட்பு பணிகள், 23 பேர் பலி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSCOTT FILLMER அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சூறைக் காற்றுகள் தாக்கியதில் குழந்தைகள் உள்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடங்கள், சாலைகள் பலத்த சேதமடைந்…

  15. படத்தின் காப்புரிமை Getty Images Image caption அல் - அசாரின் இமாம் ஷேக் அகமத் அல்- தயீப் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையோடு வாழும் வகையில் பலதார மணம் புரிவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என எகிப்தின் உயர் இஸ்லாமிய அமைப்பான அல்-அசாரின் இமாம் தெரிவித்துள்ளார். சன்னி இஸ்லாமியர்களின் உயர் தலைமையிலுள்ள ஷேக் அகமத் அல்-தயீப் இது குறித்து பேசுகையில், ''குரான் பற்றிய சரியான புரிதலின்மை காரணமாகவே பலதார மணம் புரியும் பழக்கம் வந்திருக்கிறது'' என்றார். தொலைக்காட்சியில் வார நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்த…

  16. 'ஜமால் உடல் எரிக்கப்பட்டுவிட்டது' Published : 04 Mar 2019 17:55 IST Updated : 04 Mar 2019 17:55 IST ஜமால் கஷோக்ஜி - Getty Images ஜமால் கஷோகி உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ''மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் அல்- ஜசிராவின் விசாரணையில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் துருக்கியில் உள்ள சவுதி தூதரக அதிகாரி வீட்டில் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இறுதியில் உண்மை கண்டறியப்பட…

  17. தூக்கு மேடை வரை மூன்று முறை சென்று உயிர் பிழைத்தவரின் வியப்பளிக்கும் கதை மேரி குட்ஹர்ட்பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மலாவி நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பைசன் காவ்லா மூன்று முறை ஏறத்தாழ தூக்கில்கு போடப்படும் நிலைக்கு போனார். ஆனால் ஒவ்வொரு முறையும் பைசன் காவ்லாவின் முறை வரும் …

  18. இந்தியா தங்களை முட்டாளாக நினைத்துக் கொண்டிருக்கின்றது – ட்ரம்ப் குற்றச்சாட்டு! வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா தங்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ட்ரம்ப் இதனைத் கூறினார். அதில் தொடர்ந்தும் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியாவை உச்சபட்ச வரி விதிக்கும் நாடு என்று குறிப்பிட்டார். அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் 100 விகிதம் வரி விதிக்கப்படுவதாகவும், ஆனால் அந்நாட்டு இருசக்கர வாகனங்களுக்கு இங்கு வரி ஏதும் விதிக்கப்படுவதில்லை என்றும் கூறினார். அதேநேரம் இந்தியா வரி விதிப்பது போன்ற…

  19. நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது : 50 பேர் மாயம் தெற்கு நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு நைஜீரியாவின் நெம்பே மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த போது குறித்த இடத்தில் கடமையாற்றிய 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் எண்ணெய் களஞ்சியசாலையை கொண்டு நடாத்தும் நிறுவனம் இந்த விபத்து தொடர்பாக இதுவரையில் எந்த விடயத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. …

  20. ஆப்கானிஸ்தான் இராணுவ தளம் மீது தலிபான்கள் தாக்குதல்: 23 படையினர் உயிரிழப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றான ஹெல்மெண்ட் மீது நேற்று மற்றும் நேற்று முன்தினம் தலீபான் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 23 படையினர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 48 மணித்தியாலங்களில் தலிபான் போராளிகள் நடத்திய 3 வது தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நட…

  21. ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை சவூதி அரேபியா ரத்து செய்தது… March 2, 2019 அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் அல்கைதா இயக்கத்தின் தலைவரான பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். இதனையடுத்து பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அ…

  22. தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் முழுமையாக நீக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் கேட்கவில்லை, ஒரு பகுதியளவு தடைகளை நீக்கும்படியே கேட்டதாக வட கொரியா கூறியுள்ளது. வியட்நாமில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து பேசிய வட கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யொங் ஹோ, "நாங்கள் முழுத்தடைகளை நீக்குமாறு கோரிக்கை வைக்கவில்லை. பிரதான அணுஆயுத தளத்தை முடக்கியதற்கு பதிலாக ஒரு பகுதி தடைகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டோம்" என்ற…

  23. ஒசாமாவின் மகனை காட்டிக்கொடுத்தால் சன்மானம்: அமெரிக்கா அறிவிப்பு ஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களை வெளியிடுவோருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ஹம்சா பின் லேடன் கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். அல்-கொய்தா அமைப்பின் முக்கிய தலைவ…

  24. எகிப்து தலைநகரில் கோர விபத்து – அமைச்சர் பதவி விலகல்! எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை அடுத்து போக்குவரத்து அமைச்சர் ஹிஷாம் அரஃபாத் ராஜினாமா செய்துள்ளார். ரயில் எஞ்சின் தடுப்பொன்றில் மோதியதில் இன்று (புதன்கிழமை) குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, ரயில் நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவத்துடன், தீ பரவியுள்ளது. குறித்த அனர்த்தத்தில் 50 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் மீட்கப்பட்ட பல உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேர் சிகிச்சைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக சுகாதார …

  25. தென்னாப்பிரிக்காவில் பொதுத்தேர்தல் அறிவிப்பு! தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி சிரில் ரமபோசா அறிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை முடிவுற்ற பிறகு, ஜனநாயகப்பூர்வமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற கீழ் சபையில் (தேசிய சபை) பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவ்வகையில் மே 8 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தேசிய சபை கலைக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், மே 8 ஆம் திகத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.