உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27029 topics in this forum
-
ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் புறப்பட்ட கிம்யொங் உன் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் ரயில் மூலமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ட்ரம்ப் மற்றும் கிம்யொங் உன் இருவரும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அதன்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் உன் உறுதி அளித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதற்…
-
- 2 replies
- 518 views
-
-
அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாரக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ஊடகவியாளர்களை இன்று (வியாழக்கிழமை) சந்தித்து கருத்து தெரிவித்த போதே, அமெரிக்காவுடனான ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை என கூறினார். இதே நேரத்தில் ரஷ்யாவை குறி வைத்து அணு ஆயுத ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்த அமெரிக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார். ஏவுகணைகளை ஏவி மொஸ்கோவை தாக்கும் வகையில் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவும் தயாராக இருக்கின்றது என கூறினார். அமெரிக்காவுக்கு அருகில், சர்வதேச கடல்பரப்பில் ரஷ…
-
- 0 replies
- 759 views
-
-
IS தீவிரவாதிகளினால், மூளைச்சலவை செய்யப்பட்டு, நன்கு படிக்கக் கூடிய 15 வயது மாணவி சிரியாவுக்கு, ஓடிப் போனார். அங்கே ஒரு ஜிகாதியை மணந்து கொண்ட அவர் 2 பிள்ளைகளுக்கு தாயானார். பிறந்த இரண்டு குழந்தைகளும் தகுந்த மருத்துவ வசதி இன்றி இறந்து விட்டதால், இனி பிறக்க இருக்கும் பிள்ளையை சிறந்த மருத்துவ வசதி கொண்ட பிரிட்டனுக்கு வந்து பெற்றுக் கொள்ள விரும்புகிறார். இந்நிலையில் மூன்றாவது பிள்ளைக்கு தாயாக உள்ள நிலையில், IS படைகள் தமது பகுதிகளை இழந்து கொண்டிருக்கும் நிலையில் மிக குறுகிய பகுதியில் சிரிய படைகளினால் சுத்தி வளைக்கப் பட்டு உள்ள நிலையில், அவரது கணவர், சிரிய படைகளிடம் சரணடைந்து விட்டார். இந்த 19 வயது பெண், பிறக்க இருக்கும் குழந்தைக்கு மருத்துவ வசதி வேண்டியும், தான…
-
- 29 replies
- 3k views
-
-
அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்! பயங்கரவாதத்தினால் இந்தியா, இஸ்ரேல் மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு நாங்கள் (இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறோம். அந்த வகையில், தீவிரவாதம் – பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி முழுமையாக உதவ தயராக உள்ளோம் என அறிவித்துள்ளது இஸ்ரேல். ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்…
-
- 5 replies
- 1.2k views
-
-
கனடாவில் தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பலி February 20, 2019 கனடாவின் மொண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். வீட்டிலுள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்க்பபட்டுள்ளது. தீயணைப்பு படையினர் சென்று தீணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் . ஒரு ஆணும், பெண்ணும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே கு…
-
- 1 reply
- 515 views
-
-
படத்தின் காப்புரிமை RAJESH ASNANI-BBC ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதியான ஷாக்கருல்லா, உடன் இருந்த சக சிறைக் கைதிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக காவல்துறை கூறுகிறது. ஜெய்பூர் மூத்த காவல் அதிகாரி லக்ஸ்மன் கௌடு சிறைக்கு வெளியில் கூடிய பத்திரிகையாளர்களிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். …
-
- 1 reply
- 728 views
-
-
உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார் உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான Karl Lagerfeld தனது 85வது வயதில் இன்று(செவ்வாய்கிழமை) காலமானார். ஜேர்மன் நாட்டைப் பிறப்பிடமாக கொண்ட அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Chanel & Fendi நிறுவனத்தில் உற்பத்தி இயக்குநராக இருந்த இவர் இறக்கும்வரை தனது ஆடை வடிமைப்பில் கைதேர்ந்து விளங்கினார். அதிக விருதுகளை வாங்கியுள்ள இவர் இறுதியாக பரிஸில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://athavannews.com/உலக-புகழ்பெற்ற-ஜேர்மனிய/
-
- 0 replies
- 508 views
-
-
உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ என்ற கூகுள் தேடலின் போது பாகிஸ்தான் தேசிய கொடி ’உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ என்ற கூகுள் தேடலின் போது பாகிஸ்தான் தேசிய கொடி தென்படுவது போன்று மாற்றப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில இந்தியர்களால் மாற்றப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. …
-
- 1 reply
- 726 views
-
-
சுவிஸ் அரசின் வித்தியாசமான அறிவிப்பு மின்னணு வாக்களிப்பு அமைப்பிலுள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்கும் இணையத்திருடர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இணையத்திருடர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, இணையத்தில் பதிவு செய்து கொண்டு, சுவிஸ் மின்னணு வாக்களிப்பு அமைப்புக்குள் நுழைய முயற்சி செய்யலாம். ஃபெடரல் அரசாங்கம் காகித முறை வாக்கெடுப்பிலிருந்து மின்னணு முறைக்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்காக 250,000 சுவிஸ் ஃப்ராங்குகள் முதலீடு செய்யவுள்ளது. ஒரு இணையத்திருடரால், தான் கண்டுபிடிக்கப்படாமலே மின்னணு வாக்கெடுப்பு அமைப்பிற்குள் நுழைய முடிந்தால், அவர்களுக்கு 50,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை பரிசாக வழங்கப்படும் என…
-
- 4 replies
- 950 views
-
-
தொழிலாளர் கட்சியில் இருந்து 7 எம்.பி.க்கள் விலகல் பிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பிரெக்சிட் விவகாரம் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்தே இவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அத்துடன் இவர்கள் இனி அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதுடன், தொழிலாளர் கட்சி மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தங்களுடன் இணையும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, தொழிலாளர் கட்சியில் இர…
-
- 0 replies
- 493 views
-
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லை முறுகல்: சவுதி பாகிஸ்தானுக்கு உதவி பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு நெருக்கமான நாடு எனவும், பாகிஸ்தானுடன் தமது உறவு தொடரும் எனவும் சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற முஹம்மது பின் சல்மான், ஜனாதிபதியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய ‘நிஷான் இ பாகிஸ்தான்’ விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கெளரவித்துள்ளார். இந்த சந்திப்பின் பின…
-
- 0 replies
- 485 views
-
-
ட்ரம்பை பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதித்திணைக்களத்தின் உயரதிகாரிகள் கலந்தாலோசித்துள்ளனர். இவற்றினடிப்படையில், டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு, செனட்சபையின் நீதிக்குழுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அந்தப் பதவிக்குத் தகுதியற்றவராகக் காணப்படும் பட்சத்தில், அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதனை அரசியலமைப்பின் உறுப்புரைகள் அனுமதிப்பதாக, 2017 ஆம் ஆண்டில் அந்நாட்டு துணை சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்ரைன் தெரிவித்ததாக, அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இடைக்காலத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்…
-
- 0 replies
- 459 views
-
-
பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்! பாகிஸ்தான் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அகமது தார் என்ற தீவிரவாதி மேற்கொண்ட, தற்கொலைத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானிலும் அரங்கேறியுள்ளதாக ‘தி பலுசிஸ்தான் போஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவ தொடரணியை இலக்கு வைத்தே இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா…
-
- 0 replies
- 549 views
-
-
2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு சவுதி அரேபியாவில் சிறைகளிலுள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தான் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய சவுதி இளவரசர் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளார். சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் பாகிஸ்தான் விஜயத்தையடுத்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார். இதன்போது, சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி இளவரசரிடம் அவர் விடுத்தார். அத்துடன் ஏழைத் தொழிலாளர்களாக சவுதிக்கு சென்ற இவர்களின் குடும்பத்தினர் சிறைக…
-
- 0 replies
- 406 views
-
-
-
- 0 replies
- 474 views
-
-
ஹேக்கர்கள் கைவரிசை : பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது. இந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெ…
-
- 0 replies
- 440 views
-
-
ஈரானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 27 பேர் பலி February 14, 2019 ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அருகேயுள்ள சிஸ்டான் பலூசிஸ்தான் மாகாணத்தில் படையினர் சென்ற போக்குவரத்து பேருந்தினை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலுக்கு, சன்னி இஸ்லாமிய போராளிக்குழு மற்றும் ஜெய்ஸ் அல் அட்ல் ஆகியன பொறுப்பேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/113140/
-
- 1 reply
- 607 views
-
-
பெங்களூர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு வீட்டிற்கு சென்ற 24 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எச்.ஏ.எல் பகுதியில் வசிக்கும் அப்பெண்ணின் பேஸ்புக் நண்பனான ஆரிப் இன் பிளாட்டில் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.பேஸ்புக் நண்பர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான ஆரிப் மற்றும் எம்.பி.ஏ படித்து வரும் அப்பெண், ஆரிப் இன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் ஆரிப் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.பிறந்த நாள் கொண்டாட்டம்: ஆரிப், ஆதித்யா மற்றும் அப் பெண் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறந்தால் கொண்டாட்டத்தில் கள…
-
- 44 replies
- 3.2k views
-
-
பாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்! ரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம வயது இளைஞரை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதாக வெளிவந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டு, ஜூலை மாதம், மக்கேரிக் தமது பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிக்கொண்டார். இதன் பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம், அவர் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டதாகத் தெரிய வந்தது.பாலியல் குற்றங்களுக்காகப் பதவி விலகிய முதல் மதகுரு அவர் என்று தெரிவி…
-
- 0 replies
- 352 views
-
-
கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சிறுமியின் பாடசாலை அருகே அமைந்துள்ள பூங்கா ஒன்றில் கூடிய அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பலரும் சிறுமியை நினைவு கூர்ந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அன்று மாலை குழந்தை மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண…
-
- 0 replies
- 573 views
-
-
பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு! தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை மறந்து, பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணைந்து ஆதரவை வழங்குமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்த 317 உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே இவ்விடயத்தை கூறியுள்ளார். அத்தோடு, பிரெக்ஸிற்றை கையாளும் விதம் தொடர்பாக வரலாறு தம்மை பற்றி தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரெக்ஸிற் மூலோபாயங்கள் தொடர்பான கணிசமான வாக்குகளை பெற்றுக்கொள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி தவறியுள்ளது. இந்நிலையில், பிரதமர் இக்கடிதத்தை எழுதியுள்ளார். அத்தோடு, அடுத்த வாரம் தாம் பிரசல்ஸ் பயணிக்கவுள்ளதாகவும் ஐரோப்பிய ஆணையக தலைவர் ஜீன் க்ளூட் ஜூங்கரை…
-
- 0 replies
- 320 views
-
-
ட்ரம்புடனான சந்திப்பு – 25 ஆம் திகதி வியட்நாமிற்கு கிம் ஜோங் உன் விஜயம்! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் எதிர்வரும் 25ஆம் திகதி வியட்நாமில் தரையிறங்குவார் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரண்டாம் உச்சநிலை சந்திப்பை நடத்தவே அவர் வியட்நாம் செல்லவிருக்கின்றார். இரு நாட்டுத் தலைவர்களும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வியட்நாமில் சந்தித்து பேசவுள்ளனர். இரு தலைவர்களுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் வரலாற்று முதல் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் வட கொரியத் தலைவர் கிம், ஹனொய்யில் தரையிறங்கியவுடன், வியட்நாமிய அதிகாரிகளைச் சந்திப்பார் என நம்பப்படுகிறது. அதன்பின்னர் அவர் வியட்நாமிய …
-
- 0 replies
- 267 views
-
-
சீதனம் – குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக, அவுஸ்ரேலிய சட்டத்தில் உள்ளடக்க பரிந்துரை.. February 15, 2019 அவுஸ்ரேலியாவில் சீதனம் வாங்குவதை குடும்ப வன்முறையின் ஒரு பகுதியாக சட்டத்தில் உள்ளடக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட செனட் குழு, அரசிடம் இதனைப் பரிந்துரைத்துள்ளது. அவுஸ்ரேலியாவில் சீதனம் கொடுப்பது – வாங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் குறிப்பிட்ட செனட் குழுவினர் ( Senate Standing Committee on Legal and Constitutional Affairs) அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இறுதி அறிக்கையிலேயே இந்த யோசனை பிரேரிக்கப்பட்டிருக்கிறது…
-
- 1 reply
- 616 views
-
-
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை…. February 16, 2019 அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசரநிலையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம் பிறப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் இந்த சுவர் எழுப்பும் திட்டத்துக்கு ட்ரம்ப் கேட்கும் தொகைக்கும் குறைவாக நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினர் சம்மதித்ததனால், பொறுமை இழந்த ட்ரம்ப் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலே நிதிபெறுவதற்காக அவசர நிலையை அறிவித்துள்ளார். இந்தநிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கு இருக்கும் அரசியலமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என மனித உரிமை ஆர்வலர்…
-
- 0 replies
- 817 views
-
-
வருடாந்தம் ஆயுத மோதல்களாலும் அதன் தாக்கத்தினாலும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன : February 15, 2019 உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் ஆயுத மோதல்கள் மற்றும் அதன் தாக்கத்தினாலும் பசி பட்டினியாலும் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் குழந்தைகளைக் காப்போம் என்னும் தொனிப் பொருளுடன் இயங்கிவரும் சேவ் தி சில்ட்ரன்ஸ் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடிய…
-
- 0 replies
- 401 views
-