உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
கியூபா... கம்யூனிசம்... காஸ்ட்ரோவுக்குப் பிறகு!? சிறுவர்களுக்கான மாய மந்திரக் கதைகளில் வரும் உயரமான ராட்சதர்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஃபிடல் காஸ்ட்ரோவும். ஆறரை அடி உயரம், கையில் சுருட்டு, இடுப்பில் துப்பாக்கி, புரட்சிக்காரர்களுக்கே உரிய கரும்பச்சை உடை. எங்கிருந்தாலும் யாராலும் எளிதில் கண்டுபிடித்து விடக்கூடிய இந்த உருவத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வளவோ முறை முயன்றும் பிடிக்க முடியவில்லை. தனியொரு மனிதனை கொல்ல கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் என 638 முறை இவர்மீது கொலைத் திட்டம் தீட்டினார்கள். அத்தனை முறையும் அவர்களிடமிருந்து தப்பித்த காஸ்ட்ரோவை தன் 90-வது வயதில் இயற்கை தழுவிக் கொண்டது. அதுவும் அவர் முன்பே அறிந்து விட்டிருந்த மரணம் …
-
- 3 replies
- 706 views
-
-
2020 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய நிகழ்வுகள் SayanolipavanDecember 24, 2020 2020 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறவுள்ளது. இந்நிலையில், இவ்வாண்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவ்வாறு உலகில் இவ்வாண்டில் தாக்கம் செலுத்திய நிகழ்வுகளைப் பார்ப்போம். ஜனவரி ஜனவரி 2: அவுஸ்திரேலியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய காட்டுத்தீயால் இலட்சக்கணக்கான வன உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த காட்டுத்தீயால் அவுஸ்திரேலியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜனவரி 3: அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலின் உச்சபட்சமாக ஈரானின் புரட்சிப்படைத் தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். ஜனவரி…
-
- 0 replies
- 753 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல் சந்தேக நபரான அனீஸ் அம்ரியை தேடி ஜெர்மனி போலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். * ரஷ்யாவில் விஷ குளியல் எண்ணெயை குடிக்கும் போதை அங்கு அறுபது பேரை பலிகொண்டிருக்கிறது. உடனடி நடவடிக்கைக்கு அதிபர் பூட்டின் உத்தரவு. * ஒரு நடைமுறை பிரச்சினைக்கு தீர்வுகண்ட விஞ்ஞானி. சதுரத்துளையிடும் கருவியை கண்டுபிடித்த எரித்திரிய அகதி.
-
- 0 replies
- 277 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-6
-
- 14 replies
- 897 views
-
-
ஜெனீவா கூட்டத் தொடர் இம்முறை இணைய வழியாகவே நடைபெறும் – பல நாடுகள் எதிர்ப்பு 2 Views ஜெனீவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணைய வழியாகவே நடைபெறும் எனத் தெரியவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் கொழும்பிலிருந்து இணைய வழியாக உரையாற்றுவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் தற்போது பெருமளவுக்கு பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பெரும்பாலான நிகழ்வுகளை இணைய வழியாக…
-
- 1 reply
- 387 views
-
-
கடந்த 2ஆம் தேதியன்று சிங்கப்பூரில் இருந்து டொரண்டோவிற்கு வந்து கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20 மீட்டர் வரை நிலைகுலைந்து கீழ்நோக்கி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில விநாடிகள் மட்டுமே நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் அனைவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். காலை சிற்றுண்டிகளை பயணிகள் அனைவரும் கையில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததால், அவர் கையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டியது. விமான நிலைகுலைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சில விநாடிகள் மட்டுமே நிகழ்ந்தாலும் நிலைகுலைந்த நிகழ்ச்சியை மொபைல் போனில் படம் பிடித்த சிலர், அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். http:/…
-
- 0 replies
- 313 views
-
-
Print this ஹசன் ருஹானி ஈரானின் புதிய ஜனாதிபதியானார் ஈரான் ஜனாதிபதி தேர்தல் நிறைவடை நிலையில், ஈரானின் மறுசீரமைப்பு கட்சியின் வேட்பாளர் ஹசன் ருஹானி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமையன்று நடந்த தேர்தலில் ஹசன் ருஹானி ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பதிவான வாக்குகளில் 51 சதவீதத்துக்கும் சற்று கூடுதலான வாக்குகளை ருஹானி பெறுவதாக இந்த எண்ணிக்கை அமைந்துள்ளது இம்முறை அதிபர் தேர்தலில் அதிகமான அளவில் மக்கள் திரண்டு வாக்களித்தனர் என்றும் ஓட்டுப்போட பதிவுசெய்திருந்த மக்களில் 71 சதவீதமானோர் வாக்களித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது. இரண்டாவது இடத்தில் வந்த தெஹ்ரான் நகர மேயர்…
-
- 0 replies
- 657 views
-
-
மாதவிடாய் சோதனைக்காக 70 மாணவிகளை நிர்வாணப்படுத்திய கொடுமை உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி பகுதியில் உறைவிடப் பள்ளி ஒன்றில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்ததும், மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் சிங், சந்திரஜித் யாதவ்வின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விடுதி கண்காணிப்பாளர் சுரேகா தோமரை இடைநீக்கம் செய்தார். மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதிலும், சில ஆசிரியர்களின் சதியினால் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக சுரேகா தோமர் கூறுகிறார். இந்த மாதம் 29 ஆம் த…
-
- 3 replies
- 3k views
-
-
மாஸ்கோ: சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன. ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்களை சிரியா படுகொலை செய்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக யுத்தம் நடத்த முனைப்பு காட்டுகின்றன. இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யாவும் ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் மத்திய தரைக்கடலை சுற்றிய பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய போர்க் கப்பல்களை …
-
- 4 replies
- 895 views
-
-
பிரிட்டிஸ் எயாவேய்ஸ் விமான நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான சேவையின் கணிணி கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய தடை காரணமாக இந்த தற்காலிக சேவை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலமையை கருத்தில் கொண்டு கட்விக், மற்றும் ஹீத்ரோ விமான நிலையங்களுக்கு பயணிகள் சமூகமளிக்க வேண்டாம் என நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை கணிணி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்திற்கு சைபர் தாக்குதல் காரணமா என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தொடர்புபட்ட அதிகாரிகள் அதற்கான ஆதாரங்கள்…
-
- 1 reply
- 529 views
-
-
பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வேலைகளை இழக்கச்செய்யும் நியாயமற்ற ஒப்பந்தம் என்று கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒரு புதிய உடன்படிக்கையை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த அல்லது மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் ஒப்புக்கொள்ளும் என்று வெள்ளை மாளிகளியில் பேசியபோது டிரம்ப் தெரிவித்தார். '' அர்த்தமுள்ள கடமைகளை உலகின் முன்னணி மாசுபாட்டாளர்கள் மீது சுமத்த முடியாதுபோது…
-
- 4 replies
- 748 views
-
-
பிரான்சின் பரிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் சுடப்பட்டுள்ளார். பிரான்சின் பரிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். பிரபல நோர்த் டாம் தேவாலயத்திற்கு முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிராந்தியத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மீது தாக்குதலாளி சுத்தியலால் தாக்கி உள்ளதோடு, தொடர்ந்தும் காவல் அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார். தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி சிறு காயங்களுக்கு இலக்காகி உள்ளாகிய நிலையில் நிலமையை கட்டுப்பாட்டுள் கொண்டு வருவதற்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் அவர் காயங்களுடன் உயிருடன் இருப்பதாகவும் காவல் துறை தெரிவித…
-
- 0 replies
- 406 views
-
-
இலங்கை இப்போது வன்முறை இல்லாத தேசமாக உருவாகியுள்ளது என மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார். சென்னையில் இந்துஸ்தான் வர்த்தக சபையின் 67ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: இந்தியா தனது பக்கத்து நாடுகள் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளது. இந்தியாவை விட சிறிய நாடுகளிடம் நட்புறவையும், வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இப்போது இலங்கை வன்முறை இல்லாத தேசமாக உருவாகியுள்ளது. மேலும் அங்கு வடக்கு மாகாண தேர்தல் நடைபெற்று ஜனநாயகரீதியிலான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு தனது ஜனநாயக நிலைப்பாட்டை உலகுக்கு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சேது சமுத்திரத் திட்டம், வர்த்தக நோக்கில் செயல்பட…
-
- 2 replies
- 453 views
-
-
லண்டன்: உலகில் 30 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளனர் என்று கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது. வாக் ப்ரீ பவுன்டேஷன் 162 நாடுகளில் கொத்தடிமைகளாக உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் உலகம் முழுவதும் 29.8 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. எந்தெந்த நாடுகளில் கொத்தடிமைத்தனம் அதிகம் என்று பார்ப்போம். உலக அளவில் 29.8 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக இருந்தாலும் அதில் பாதி பேர் இந்தியாவில் தான் உள்ளார்களாம். அதாவது இந்தியாவில் 14 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம். சீனாவில் 3 மில்லியன் பேர் கொத்தடிமைகளாக உள்ளார்களாம்.உலக கொத்தடிமைகளில் 76 சதவீதம் பேர் இந்தியா, சீனா, பாகிஸ்தான், நைஜீரியா,…
-
- 1 reply
- 512 views
-
-
முதல் சந்திப்பு: ட்ரம்பும் புதினும் கை குலுக்கி மகிழ்ச்சிப் பரிமாற்றம் G20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துக் கை குலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். விரைவில் இருவரும் தனியாக சந்தித்து இருநாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ள நிலையில், இன்று இருவருக்கும் இடையில் நிகழ்ந்த இந்த முதல் சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் G20 மாநாடு இன்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர…
-
- 1 reply
- 520 views
-
-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் லஷ்கர் இ தொய்பா தளபதியாக இருப்பவன் ஜாவித் பலூசி. இவனது நடவடிக்கைகளையும், தொலைபேசி பேச்சுக்களையும் கடந்த சில மாதங்களாக மத்திய உளவுத்துறையினர் கண்காணித்து வந்தனர். டெல்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசத்தில் உள்ள சிலருடன் ஜாவித் பலூசி அடிக்கடி பேசுவதை உளவுத் துறையினர் கண்டு பிடித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட வேட்டையில் அரியானாவில் உள்ள மேலட் பகுதியில் கடந்த வாரம் முகம்மது ஷாகித் என்ற முக்கிய தீவிரவாதி பிடிபட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட போது, டெல்லியில் முக்கிய அரசியல்வாதிகளை கடத்தி செல்ல லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இந்த கடத்தல் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி ம…
-
- 2 replies
- 420 views
-
-
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் "மணி நேரம்" நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும். கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், டெல்லி ஆட்சியாளர்கள் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்களாகவே கூறிக் கொண்டு, டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் கட்டி…
-
- 0 replies
- 402 views
-
-
வரும் மக்களவைத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளை தேசியக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து, பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது. இதேபோல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள உயர்மட்டக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ஷிண்டே இன்று சோலாப்பூரில் மராட்டி பத்திரிகை ஆசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது:- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அவர் எனது அரசியல் குரு. அவரால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும். அதேபோல் சரத…
-
- 0 replies
- 366 views
-
-
உக்ரைனிலிருந்து தப்பி வரும் அகதிகளை... பிரித்தானியாவுக்குள் வர, அனுமதிக்க புதிய திட்டம்? உக்ரைனில் மோதலில் இருந்து தப்பி வரும் அகதிகளை பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்க புதிய திட்டத்தை அமைக்க விரும்புவதாக பிரித்தானிய உட்துறை அமைச்சர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார். தி சன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில், ‘நான் இப்போது ஒரு மனிதாபிமான பாதையை உருவாக்குவதற்கான சட்ட விருப்பங்களை ஆராய்ந்து வருகிறேன். இதன் பொருள், உக்ரைனில் உள்ள மோதலில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவுடன் தொடர்பு இல்லாத எவருக்கும் இந்த நாட்டிற்கு வர உரிமை உண்டு’ என கூறினார். பிரித்தானியா ஏற்கனவே நாட்டில் குடும்பம் அல்லது விருப்பமுள்ள ஆதரவாளர்களுக்கு விசா திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால…
-
- 0 replies
- 226 views
-
-
தமிழர் நாட்டில் ஜனநாயக பயங்காரவாதம் கட்சித் தலைவர்களை முதலாளிகளாகவும் முதலாளிகளைக் கட்சித் தலைவர்களாகவும் மாற்றியதுதான் இருபதாம் நூற்றாண்டு சனநாயகத்தின் இறுதிக்கால சாதனை. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக அரசியல்வாதிகள் அரம்பர்களாகவும் (ரவுடிகளாகவும்) அரம்பர்கள் அரசியல்வாதிகளாகவும் மாறினார்கள். இவற்றின் தாக்கத்தால் தங்கள் வாக்குச் சீட்டை ஏலம் விடும் தரகர்களாக வாக்காளர்களில் பலர் மாறினர். தேர்தல் கட்சிகளிடையே கருத்து மோதலுக்கு மாறாகக் கருவி மோதல் வளர்ந்தது. பணக்குவியலும் அரம்பர் கும்பலும் உள்ள கட்சி மட்டுமே தேர்தலில் கருதத்தக்க போட்டியாளராக நிற்க முடியும் என்ற நிலை உண்டானது. தமிழ் நாட்டில் இவ்வாறான அரசியல் இழிவுகளைக் கொணர்ந்த கட்சிகள் தி.மு.க.வும் அ.இ.அ.தி.…
-
- 0 replies
- 518 views
-
-
டூத் பேஸ்ட் குண்டுகள் மூலம் விமானங்களை தகர்க்க சதி! – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை. [Thursday, 2014-02-06 17:34:59] குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக ரஷ்யா செல்லும் விமானங்களைத் தகர்க்க வெடிபொருள் துகள்கள் கொண்ட டூத் பேஸ்ட்களை தீவிரவாதிகள் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாட்டு விமானங்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெடிக்கும் தன்மை கொண்ட இந்த டூத் பேஸ்ட் ட்யூப்கள் மூலம் விபத்துக்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=103071&category=WorldNews&language=tamil
-
- 4 replies
- 826 views
-
-
சரணடையும்... உக்ரைன் இராணுவ வீரர்களின், உயிருக்கு உத்திரவாதம் – ரஷ்யா சில மணி நேரத்தில் சரணடையும் உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை விட்டுச் சென்றால்.அசோவ்ஸ்டல் ஸ்டீல்வேர்க்ஸின் கோட்டையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் ஜெனிவா போர்க் கைதிகள் தொடர்பான உடன்படிக்கையின்படி நடத்தப்படுவார்கள் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தத்தின் விவரங்களை உக்ரேனியர்களுக்கு ரஷ்யப் படைகள் ஒரே இரவில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒளிபரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் உக்ரேனிய …
-
- 0 replies
- 227 views
-
-
இந்திய சமுத்திரத்தில் மிதந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்கள் இல்லை! [sunday, 2014-03-30 11:32:21] மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 8 விமானங்கள் 6 கப்பல்கள் தேடுதல் வேட்டைய…
-
- 0 replies
- 376 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பூஜ்டிமோனுக்கு ஐரோப்பிய பிடிவாரண்ட் ஸ்பெயின் நீதிபதி ஒருவர், பெல்ஜியத்தில் உள்ள கேட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் அவரின் நான்கு கூட்டாளிகளை கைது செய்வதற்காக ஐரோப்பிய பிடிவாரண்ட உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை, இந்த ஐந்து பேரும் மேட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மற்ற ஒன்பது பிராந்திய தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது புரட்சி, தேசத்துரோகம், பொதுமக்களின் பணத்தை கேட்டலன் சுதந்திரம் பெறுவதற்காக தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக…
-
- 0 replies
- 400 views
-
-
அமெரிக்கா - வடகொரியா மோதல்: 3-ம் உலகப்போர் மூள 51% வாய்ப்புள்ளது - அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் கருத்து கொரிய தீபகற்ப கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்கள். - படம்: ஏஎப்பி அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் போக்கு நீடிப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொர…
-
- 0 replies
- 534 views
-