Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைன் மீது 1300 ட்ரோன் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா; போர், தொடங்கிய இடத்துக்கே திரும்பும்! - உக்ரைன் ஜனாதிபதி 22 Dec, 2025 | 11:39 AM கடந்த வாரம் உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 1300 ட்ரோன் தாக்குதல்கள், 1200 வான்வழிக் குண்டுத் தாக்குதல்கள், 9 ஏவுகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் உக்ரைனின் ஒடேசா பகுதியும் நாட்டின் தெற்குப் பிராந்தியங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர பல்வேறு துறைகளில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்யாவின் பயங்கரவாதத் தாக்குதல்களை பல்வேறு மட்…

  2. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் Published By: Digital Desk 3 01 Jan, 2026 | 01:56 PM 2026 ஆம் ஆண்டில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய பிரான்ஸ் இரண்டாவது முறையாக முயற்சிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன. இளம் வயதினர் கல்வி கற்கும் பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு ஏற்கனவே கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எப்போதும் கட்டாயமாக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கம் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு டிஜிட்டல் பயன்பாடு வயது தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தது. இந்த சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்தத…

  3. இந்தியாவுக்கு வென்றிலேற்றர்கள் இலவசமாக வழங்கப்படும் - டிரம்ப்.! இந்தியாவுக்கு வென்றிலேற்றர்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு இந்திய பிரதமர் மோடி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார், கொரோனா போரில் இந்தியாவுடன் இணைந்து செயல்படப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் , இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நமது உலகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம் என மோடி பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில் உலக அளவில் 46 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய் தொற்று ஆளாகியுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது . …

  4. 200 ஆண்டுகளில் 4 கோடி பேர் போர்களில் கொல்லப்பட்டுள்ளனர் --------------------------------------------------------------------------------------------------------------- உலகை உலுக்கிய போர்களில் ஒன்றாக அறியப்படும் சோம் போரின் நூறாவது நினைவு நாள் இன்று ஐரோப்பாவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த போரில் மொத்தம் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்தனர். கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகில் நடந்த போர்களில் மொத்தம் நான்கு கோடி பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வரைபடம் 1817 முதல் 2007 ஆம் ஆண்டுவரை உலக அளவில் நாடுகளுக்கு இடையில் நடந்த போர்கள் அல்லது நாடுகளுக்குள்ளேயே நடந்த உள்நாட்டுப்போர்களில் கொல்லப்பட்டவர்களின் தேசிய அடையாளங்களை காட்டுகிறது. இதில் இர…

  5. பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ஒரு பெண் பிரித்தானியாவானது 26 வருடங்களுக்குப் பின்னர் பெண் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வுள்ளது. அந்நாட்டு பழைமைவாத கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட பிந்திய வாக்கெடுப்பில் இறுதி இரு வேட்பாளர்களாக பெண் வேட்பாளர்களான உள்துறைச் செயலாளர் தெரேஸா மேயும் சக்தி வள அமைச்சர் அன்ட்றியா லீட்ஸம்மும் தெரிவாகியுள்ளார். மூன்றாவது போட்டி வேட்பாளரான நீதி செயலாளர் மைக்கேல் கோவ் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் தெரேஸா மே 199 வாக்குகளைப் பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதேசமயம் அன்ட்றியா லீட்ஸம் 84 வாக்குகளையும் மைக்கேல் க…

  6. அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா, மும்பாயில் நடைபெற்றதையொத்த பயங்கரவாத நடவடிக்கைகளை எதுவித தயவு தாட்சண்யமின்றி வேரோடு களைய விரும்புவதாக தெரிவித்தார். "சிகாகோ ட்ரிப்யூன்' இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். "நாங்கள் மும்பாயில் கண்ட பயங்கரவாத தீவிரவாதத்தை தயவு தாட்சண்யமின்றி வேரறுப்போம் என்ற செய்தியை நான் அனுப்பிவைக்க விரும்புகிறேன்'' எனத் தெரிவித்த ஒபாமா, இஸ்லாமிய நாடொன்றின் தலை நகருக்குச் சென்று இது தொடர்பான பிரதான உரையொன்றை ஆற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறினார். எனினும், எந்த நாட்டில் மேற்படி உரையை ஆற்ற அவர் திட்டமிட்டுள்ளார் என்பது தொடர்பில் விவரம் எதனையும் அவர் வெளியிடவில்லை. இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படுமாயின் அந்நாட்ட…

  7. தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப் பார்க்க முடிவதைப் பார்த்து வாயில் சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார். 51 வயதான அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனில் முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக் கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர் இவர்தான். பிரிட்டனில் லீட்ஸ் மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் இவரது பழைய கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர் வழங்கியிருந்த கையொன்று அவருக்குப் பொருத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வலது கைக்…

    • 0 replies
    • 434 views
  8. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள, அபுதாபியில், நேற்று நடந்த சாலை விபத்தில், ஆசியாவை சேர்ந்த, 22 பேர் பலியாயினர். 24 பேர் காயமடைந்துள்ளனர். அபுதாபியில் உள்ள, அல்-அய்ன் நகரில், நேற்று காலை, துப்புரவு செய்யும் நிறுவனத்திலிருந்து, 46 ஊழியர்கள், பஸ் மூலம் சென்றனர். அப்போது, எதிரே வந்த பெரிய மணல் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில், பஸ்சில் பயணித்த, 22 பேர் பலியாயினர். 24 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள், தவாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.லாரி மோதி கீழே கொட்டிய மணலில், பலர் புதைந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, அபுதாபி போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%…

    • 0 replies
    • 515 views
  9. மொரிஷியஸ் தீவுக்கு அருகில் 40 டொல்பின்கள் உயிரிழப்பு சிதைவடைந்த ஜப்பானிய கப்பலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவானது கடல் நீரை மாசுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக கிழக்கு ஆபிரிக்காவின் மொரிஷியஸ் தீவுக்கு அருகில் குறைந்தது 40 டொல்பின்கள் உயிரிழந்து கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஜூலை முதல் கடலில் எண்ணெய் கசிந்து வரும் ஜப்பானிய கப்பல் குறித்து விசாரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதேநேரம் குறித்த கப்பலும் திங்கட்கிழமை அகற்றப்பட்டது. சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது. …

  10. இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது – தனது நூலில் ஒபாமா சொல்வதன் அரசியல் என்ன? கார்த்திகேசு குமாரதாஸன் “இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. “1945 இல் ஐ. நா. சாசனத்தை வாசித்தேன். அதன் நோக்கங்கள் எனது தாயின் லட்சியங்களோடு பொருந்திப்போவதைக் கண்டு வியந்தேன்.ஆனால் ஐ. நா. எப்போதும் அந்த உயரிய நோக்கங்களுடன் செயற்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை…” – என்று ஒபாமா எழுதியுள்ளார். …

  11. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மேற்பார்வை ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்துவரும் (Audit Coordinator) 34 வயதுடைய அரோரா அகான்ஷா, ஐ.நா. சபையின் செயலாளர் நாயகப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தற்போதய செயலாளர் நாயகமான அன்ரோணியோ குத்தெரெஸின் பதவிக்காலம் இந்த வருட் இறுதியில் முடிவடைகிறது. ஜனவரி 2022 இல் ஆரம்பவிருக்கும் புதிய பதவிக் காலத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் அரோரா அகன்ஷா முதலாவது ஆளாகத் தன் அறிவிப்பைச் செய்திருக்கிறார். தற்போதைய செயலாளர் நாயகமான குத்தேரெஸ் தான் இரண்டாவது தவணையிலும் தொடர்ந்தும் பணியாற்ற விரும்புவதாக சென்ற வாரம் அறிவித்திருந்தார். போட்டியிடும் தனது எண்ணம் குறித்து தனது கருத்துக்களை காணொளி மூலம் அகன்ஷா வெளிய…

  12. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு டுவிட்டர் அதிருப்தி அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கு சமூக வலைதளமான டுவிட்டர் அதிருப்தியை தெரிவித்துள்ளது. வாஷிங்டன்; அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்தார். உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அம…

  13. பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவை தங்கள் கட்சியில் வந்து சேருமாறு ஐக்கிய ஜனதாதளம் அழைப்பு விடுத்துள்ளது. பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரை புகழ்ந்து பேசினார். இதையடுத்து சத்ருகன் சின்ஹா மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தெரிவித்தது. மேலும் அவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தது. இந்நிலையில் ஐக்கிய ஜனதாதளத்தின் கதவுகள் சத்ருகன் சின்ஹாவுக்காக எப்பொழுதும் திறந்திருக்கும் என்று நிதிஷ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். சத்ருகன் ஐக்கிய ஜனதாதளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம். அவ்வாறு வந்தால் அ…

  14. வெளிநாட்டு உளவாளிகள் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசு வழங்கும் சீனா சீன அரசாங்கம் வெளிநாட்டு உளவாளிகள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசில்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிலை கொண்டு உளவுத் தகவல்களை திரட்டி வரும் வெளிநாட்டுப் பிரஜைகள் பற்றிய தகவல்களை வழங்கும் சீனப் பிரஜைகளுக்கே இவ்வாறு பெருந்தொகை பணப் பரிசு வழங்கப்பட உள்ளது. பெய்ஜிங் வாழ் மக்கள் தகவல்களை வழங்குவதன் மூலம் 500,000 யுவான் வரையில் சன்மானம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு உளவாளிகளுக்கு எதிராக நாட்டின் அனைத்து மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. http://globaltamilnews.ne…

  15. இன்றைய (28/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மறக்கப்பட்ட உயிர்காக்கும் மருந்தொன்று ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் புத்துயிர் பெறுகிறது; இதனால் பேறுகால மரணங்களை குறைக்குமென மருத்துவர்கள் நம்பிக்கை. * வடதுருவத்தில் நேட்டோ மற்றும் ரஷ்ய இராணுவ குவிப்பு இன்னொரு பனிப்போரின் தொடக்கமா? ரஷ்யாவின் ஆர்க்டிக் படைப்பிரிவு குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * ஐம்பது வயதுக்கு பிறகும் நடனம் ஆடலாம்; அது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு.

  16. தூனிசியாவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 43 பேர் பலி, 84 பேர் மீட்பு வட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே இரவில் 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் பங்களாதேஷில் இருந்து 120 க்கும் மேற்பட்ட குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு லிபியாவின் கடலோர நகரமான ஜுவாராவிலிருந்து வெள்ளிக்கிழமை மத்தியதரைக் கடலைக் வாயிலாக இத்தாலி நோக்கி புறப்பட்ட படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மெ…

  17. பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு!19 பேர் வரை உயிரிழப்பு!50 பேர் வரையில் காயம்!தீவிரவாதத் தாக்குதலென காவற்துறை தெரிவிப்பு! Manchester Arena blast: 19 dead and about 50 hurt. BBC.

    • 9 replies
    • 1.1k views
  18. டுனிஸ்: வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும், உடல் ரீதியாக உற்சாகம் ஏற்படுத்தவும் துனிஷியாவிலிருந்து பெருமளவில் பெண்கள் சிரியாவுக்கு போவதால் துனிஷிய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நாட்டின் மகளிர் நலத்துறை வகுத்துள்ளதாம். செக்ஸ் ஜிஹாத் என்று இது வர்ணிக்கப்படுகிறது. போராளிகளுக்கு இன்பம் இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோல துனிஷிய பெண்களை சிரியாவுக்குள் அனுப்பி அங்குள்ள போராளிகளுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்த முயல்வோர் கட…

  19. மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல விஷ மோதிரம்: சௌதியின் பட்டத்து இளவரசர் மீது குற்றச்சாட்டு! மறைந்த மன்னர் அப்துல்லாவைக் கொல்ல சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் விஷ மோதிரத்தை பயன்படுத்த பரிந்துரைத்தார் என அந்நாட்டின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி சாத் அல் ஜாப்ரி கூறியுள்ளார். தற்போது கனடாவில் வசித்து வரும் சாத் அல் ஜாப்ரி, சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த 60 நிமிட நேர்காணலில் இதுகுறித்து பல அதிர்ச்சி தரும் விடயங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இதன்போது அவர் கூறுகையில், ‘தனது தந்தையை மன்னராக்குவதற்காக அவ்வாறு செய்ய விரும்புவதாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது உறவினரிடம் கூறினார். அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக அப்போது ஆளும் குடும்பத்திற்குள் பதற்றம் ஏ…

  20. அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களைக் காட்டும் விடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணைய தளத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜாரவா இனத்தவர் மற்றும் பிற பழங்குடியினரின் ஆட்சேபத்துக்குரிய வீடியா படங்கள் விவகாரத்தை தேசிய பழங்குடியினர் ஆணையம் (என்சிஎஸ்டி) தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்றுள்ளது. உலகில் அழியும் நிலையில் உள்ள பழங்குடி இனங்களில் ஒன்று ஜாரவா. வெளி உலகத் தொடர்பு இல்லாமல் இன்னும் எஞ்சியிருக்கும் கடைசி இந்திய ஆதிவாசி இனங்களில் இதுவும் ஒன்று. விடியோ பகிர்வு இணைய தளமான யூ டியூபில் உள்ள 20 விடியோக்கள் ஜாரவாக்களை பாதுகாக்க உதவும் சட்ட விதிகளை மீறுவதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜாரவா இனத்தவர் மற்றும் பிற பழங்குடியினரின் ஆட்சேப…

  21. உச்சிமாநாட்டில் பங்குபற்றவில்லை: சீனா மற்றும் ரஷ்யா தலைவர்கள் மீது பைடன் தாக்கு..! கிளாஸ்கோவில் இடம்பெறும் காலநிலை உச்சிமாநாட்டிற்கு சமூகமளிக்காத சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டில் சீனா கலந்துகொள்ளாதமை பெரும் தவறு என குறிப்பிட்ட ஜோ பைடன், பற்றியெரியும் வனப்பகுதி குறித்து ரஷ்ய ஜனாதிபதி மௌனமாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். சீனா, ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா உட்பட ஏனைய நாடுகள் இதுவரையான பேச்சுவார்த்தைகளில் ஆற்றிய பங்கு குறித்து வினவிய போதே அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். காலநிலை உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்ளவில்லை. …

  22. பீஜிங்கின் ஆக்கிரமிப்பால் தாய்வானுடன் உறவுகளைப் பேணுவதற்கு தள்ளப்படும் ஐரோப்பா! பீஜிங்கின் ஆக்கிரமிப்பு காரணமாக ஐரோப்பா தாய்வானை நெருங்கச் செய்துள்ளது என்று ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்புக் குழுவின் தலைவரான ரஃபேல் க்ளக்ஸ்மேன், பிரெஞ்சு செய்தித்தாளான லிபரேஷன்க்கு அளித்த செவ்வியின்போது, தாய்வானுக்கு வலுவான ஐரோப்பிய ஆதரவைக் கோரியதாக தாய்வான் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானுடன் ஈடுபாட்டுடனான ஒத்துழைப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தை ஐரோப்பாவிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஏற்றுக்கொண்டுள்ளன என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும் நோக்கம் கொண்டதாக உள்ளது என ரஃபேல் க்ளக்ஸ்மேன க…

  23. கோப்பன்ஹேகன் நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்வதற்காக 100 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் 15 000 மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. http://en.cop15.dk/greetings/send http://en.cop15.dk/about+cop15/contact முத்தமிழ்வேந்தன் சென்னை

  24. பில்கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் அமேசானின் ஜெஃப் பெஸாஸ் ஜெஃப் பெஸாஸ் - படம் | வி.சுதர்சன் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரியான ஜெஃப் பெஸாஸ், பில்கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். இதனை ப்ளூம்பர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று அமேசான் பங்குகள் 1.6% உயர்வாகத் தொடங்கியது இதனால் பெஸாஸ் சொத்தில் 1.4 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க பில்கேட்சைப் பின்னுக்குத் தள்ளினார். கடந்த மே, 2013 முதல் ப்ளூம்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் வகித்து…

  25. பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு! January 4, 2022 பிரான்ஸில் 1980 களில் அறிவியல் புனைகதைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த தொலைக்காட்சி நட்சத்திரங்களான இரட்டைச் சகோதரர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் கிலக்காகி அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றனர். போக்டனோஃப் (Bogdanoff) சகோதரர்கள் என அழைக்கப்பட்ட இகோர்(Igor) மற்றும் கிறிச்க்கா (Grichka) இருவரும் ரஷ்யாவை பூர்வீகமாகக்கொண்டவர்கள். பிரான்ஸில்1949 இல் பிறந்தவர்கள். 72 வயதான இருவரும் வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நிலையில் பாரிஸ் பொம்பிடு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் சேர்க்கப்பட்டு ஆறு நாள்கள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.