உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
கொரோனா வைரஸ் மருந்தினை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பிரிட்டனில் இன்று ஆரம்பமாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட்டில் இரு தொண்டர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் 800 பேரிற்கு பரிசோதனை மருந்துகளை வழங்கவுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வகையான மருந்துகளை இரு குழுக்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கவுள்ளதாகவும் ஒரு குழுவினரிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கவுள்ளதாகவும் மற்றைய குழுவினரிற்கு மூளைக்காய்ச்சல் வருவதை தடுக்கும் ஆனால் கொரோனா வைரசினை தடுக்காத மருந்தொன்றினை வழங்கவுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொண்டர்களிற்கு எந்த மருந்து வழங்கப்படுகின்றது என்பது தெரியாத விதத்திலேயே இந்த பரிசோதனைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன…
-
- 0 replies
- 305 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி Report us Tamilini 2 hours ago பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக செயற்பட்ட 74 வயதான வைத்தியர் அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்பவரே உயிரிழந்துள்ளார். வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட அவர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சிய…
-
- 2 replies
- 562 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு! சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் 23 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 23 ஆயிரத்து 214 பேருக்கு கொரோனா வைரஸின் தொற்று ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 25 நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு உணரப்பட்டுள்ளது. அத்துடன், ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்சில் இருவரும் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தாய்லாந்தில் 25 ஆகவும் சிங்கப்பூரில் 24 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் அந்த வைரஸ்…
-
- 2 replies
- 765 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கம் – அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 23000 ஐ கடந்தது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மிக மோசமான மற்றும் இந்த வாரம் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் உச்சத்தை எட்டக்கூடும் என அதிகாரிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா, வேறு எந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 587,155 பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட குறிப்பாக 8.4 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நியூயோர்க்கில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது…
-
- 7 replies
- 520 views
-
-
உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதியில்- மன்னிப்புக் கோரினார் ஈக்வடோர் துணை ஜனாதிபதி ஈக்வடோரில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் குயாகுவிலின் தெருக்களில் போடப்பட்ட சம்பவம் தொடர்பாக துணை ஜனாதிபதி ஓட்டோ சோனென்ஹோல்ஸ்னர் மன்னிப்புக் கோரியுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் வீதிகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் குறைந்தது 150 சடலங்களை எடுத்திருந்தபோதும் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தார்களா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இவ்வாறு உயிரிழந்த சுமார் 150 இற்கும் மேற்பட்டவர்களின் உடல் வீதியில் போடப்பட்டியிருந்தமை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விடயம் தொடர்பாக கர…
-
- 0 replies
- 349 views
-
-
ஜேம்ஸ் கல்லஹர் பிபிசி உடல்நல மற்றும் அறிவியல் செய்தியாளர் கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இது மேலும் பரவும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இப்போது வரை கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான மருந்து ஏதும் தயாராகவில்லை. ஆனால் இந்த நிலை எப்போது மாறும்? கொரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது வரும்? ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக்கிவிட்டனர். அதை விலங்குகள் மேல் பரிசோதிக்கவும் தொடங்கிவிட்டார்கள். அது வெற்றி பெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவது தொடங்கும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குள் ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கிவிட்டாலும் அதன் பிறகு அதை பெருமளவில் தயாரிக்கும் பெரிய பணி இருக்…
-
- 0 replies
- 568 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டது! உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தொட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தொடர்பான விடயங்களை மதிப்பிட்டுவரும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. உலகளவில், உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2.88 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையை காண்பிக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் சுமார் 813,000பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தொற்றால்-உய-2/
-
- 0 replies
- 281 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் பிறந்து 30 மணி நேரமே ஆன குழந்தைக்கு பாதிப்பு Getty Images சித்தரிக்கும் படம் சீனாவில் பிறந்து 30 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உண்டாகியுள்ளவர்களில் மிகவும் இளம் வயது இந்தக் குழந்தைக்குத்தான். கொரோனா வைரஸ் பரவலின் மூலமாக இருக்கும் வுஹான் நகரில் பிப்ரவரி 2ஆம் தேதி இந்தக் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு முன்னர் இந்தக் குழந்தையின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா எவ்வாறு பரவியது என்பது இதுவரை தெரியவில்லை. புதன்கிழமை இந்தக் குழந்தை 3.25 கிலோ எடை இருந்ததாகவும், …
-
- 0 replies
- 442 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றினால் 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிப்பு! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவை மட்டுமல்ல உலகையே அச்சுறுத்தி வருகிறது. நோயின் கோரத் தாக்கம் காரணமாக, உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ள நிலையில், தற்போது 35 இற்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியுள்ளது. சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில், மிகவும் இரகசியம் காக்கு…
-
- 0 replies
- 308 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து, ஆய்வு செய்ய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு! கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து ஆய்வுசெய்ய சர்வதேச நிபுணர் குழு அடுத்த மாதம் சீனா செல்லவிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா தீநுண்மி எந்த உயிரினத்தில் தோன்றி, அது மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியது என்பது குறித்த ஆய்வுகளை சர்வதேச நிபுணர் குழு சீனாவில் மேற்கொள்ளவிருக்கிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம்- வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது. முன்னதாக உண்மைகளைக் கண்டறிய 10 நிபுணர்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு கடந்த ஜூல…
-
- 0 replies
- 357 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது என்றும் தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். விஞ்ஞானி மைக்கேல் லெவிட் லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,21,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 1,51,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்று…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொரோனா வைரஸ் தொற்று - வட கொரியாவில் என்ன நடக்கிறது?
-
- 0 replies
- 782 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று – 3 ஆயிரத்தை அண்மிக்கும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை கொவைட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 2,870 போ் சீன வைத்தியசாலைகளில் உயிரிழந்தவா்கள் ஆவா். ஏற்கெனவே ஈரான், தென் கொரியா, ஜப்பான், தாய்வான், பிலிப்பைன்ஸ், ஹொங்கொங், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த 122 பேரையும் சோ்த்து, கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 87,651 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உருவான சீனாவில், அந்த வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 573 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகார…
-
- 1 reply
- 467 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரிப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொவைட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 105 போ் உயிரிழந்தனா். இதனையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,765ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 2,048 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 70,548க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. எனினும் சீனாவில் ‘கொவைட…
-
- 0 replies
- 334 views
-
-
ஓவன் ஆமோஸ் பிபிசி 25 ஆகஸ்ட் 2020, 04:06 GMT உலகில் உள்ள 10 நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காணப்படுகிறது. இதுவரை ஒருவர் கூட கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படாத அந்த பத்து நாடுகள் எவை? தற்போது அவை என்ன செய்து கொண்டிருக்கின்றன? உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான பலாவ், அந்த பத்து நாடுகளில் ஒன்று. 1982ஆம் ஆண்டுதான் அங்கு முதன் முதலில் உணவு விடுதியே திறக்கப்பட்டது. அதன் பெயர் பலாவ் ஹோட்டல். அப்போது முதல் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள அந்த மிகச் சிறிய நாட்டில் சுற்றுலா துறை அதிவேகமாக வளரத் தொடங்கியது. 2019ஆம் ஆண்டில் பலாவுக்கு 90,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயண…
-
- 0 replies
- 597 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் -இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது. பதிவு: ஜூன் 13, 2020 15:47 PM வாஷிங்டன் நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 4.24 லட்சத்தை கடந்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 33 லட்சத்து 36 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நி…
-
- 0 replies
- 385 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: சீனாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் - இந்திய வம்சாவளி பெண் தலைவர் தொடங்கினார் னாவில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. ஆனால் இது தொடர்பாக எச்சரித்தவர்களை சீன கம்யூனிஸ்டு அரசு கைது செய்தது, உண்மை தகவல்களை வெளியிடாமல் மறைத்தது, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியதுதான் கொரோனா வைரஸ் தொற்று என்பதை தொடக்கத்தில் மறைத்து விட்டது என்று சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அது மட்டுமல்ல, இந்த வைரஸ், உகான் பரிசோதனைக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கிய ஒன்றுதான் என்பது சீனா மீதான அமெரிக்காவின் சமீபத்திய பரபரப்பு குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், அங்க…
-
- 2 replies
- 482 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்வு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 108பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 1861இனால் அதிகரித்து மொத்மாக 10,995ஆக உயரந்துள்ளது. இதற்கிடையில், பிரான்ஸ் மக்களில் பலர் நிலைமையின் ஆபத்தை உணராமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அதிருப்தி கொண்டுள்ளார். உள்ளிருப்பு உத்தரவை மீறிப் பலர் வீதிகளிலும், கடற்கரையிலும், பூங்காவிலும் திரிவதாகவும், இது நிலைமையின் தீவிரத…
-
- 0 replies
- 237 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்: ஜேர்மனி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஐரோப்பிய நாடான ஜேர்மனியும் தனது பெயரை இணைத்துக் கொண்டுள்ளது. இதற்கமைய, ஜேர்மனிய மருந்து நிறுவனமான பயோ என்டெக் தன்னார்வலர்களுக்கு புதிய கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என சுகாதார அமைச்சர் ஜென…
-
- 0 replies
- 360 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது. ஆம், ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பனிக்காலம் முடிந்து இப்போதுதான் கோடைக்காலம் தலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த நாட்டின் தலைநகரில் மக்கள் எப்போதும் போல் கோடைக்காலத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். மரியாட்டர்கெட் பகுதியிலுள்ள தோர் சிலையின் அருகே மக்கள் குடும்பத்துடன் ஐஸ்கிரீமை சுவைத்துகொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் சாலையெங்கும் ’ஹாப்பி-ஹவரில்’ கடைகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளில் வேண்டியதை விரும்பி வாங்கிகொண்டிக்கிறார்கள். ஸ்வீடன் தலைநகரில் கடைகளும், இரவுநேர வீடுகளும் இன…
-
- 0 replies
- 775 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: சீனா தகவல் உலகையே அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சீனத் தேசிய சுகாதார அணையம் தெரிவித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரு நாட்களாகக் குறைந்துள்ளதனை, சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி குவோ யன் ஹொங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஹூபெய் மாநிலத்தில் வூஹான் நகரைத் தவிர பிற நகரங்களுக்கும் சீனாவின் 16 மாநிலங்களுக்கும் இடையே ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியிலான உதவி முறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹூபெய் மாநில நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை ஆற்றல் வலுப்படுத்தப்படும்’ என கூற…
-
- 1 reply
- 613 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3039ஆக உயர்வு! கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3039ஆக உயர்ந்துள்ளதாக சீனா சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,071ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 58 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள ஈரானில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில், கிட்டத்தட்ட 90,000பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்ப…
-
- 5 replies
- 612 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் எளிமையான முறையில் பிறந்த நாளை கொண்டாடிய மகாராணி கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஆண்டுதோறும் ட்ரூப்பிங் தி கலர் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டதால் நேற்று (சனிக்கிழமை) இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார். மகாராணியின் பிறந்தநாள் விழா பிரித்தானிய அரச குடும்பத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழாவாகும். குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் சூழ ஆடம்பரமான முறையில் இராணுவ வீரர்களின் அணிவகுப்பில் நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணத்தால் எளிமையான முறையில் சம்பிரதாயத்துக்காக நேற்று இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு 195…
-
- 0 replies
- 363 views
-
-
கொரோனா வைரஸ் நவம்பர் மாதமே அடையாளங் காணப்பட்டுவிட்டதா? சீனாவை சீண்டும் அமெரிக்கா by : Anojkiyan கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இல்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிற நிலையில், தற்போது கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்க கூடுமென அமெரிக்கா கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாயகமாக திகழும் சீனா, வேண்டுமென்ற வைரஸினை பரப்பிவிட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இதனை தொடர்ந்து ஏற்க மறுக்கும் சீனா, அமெரிக்கா தான் இதற்கு காரணம் என பதிலளித்து வருகின்றது. இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மீண்டும் சீனாவை விமர்சித்துள்ள…
-
- 1 reply
- 509 views
-
-
கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் எங்களுடனேயே இருக்கப்போகிறது;எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும். பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்த சில நாடுகள் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஆபிரிக்காவிலும், அமெரிக்காவிலும் சிக்கலான போக்குகள் உள்ளன. பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், ஆபிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐ…
-
- 0 replies
- 280 views
-