உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
பேராசிரியர் கல்புர்கி படுகொலை! 30 ஆகஸ்ட் 2015 கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி இன்று காலை ஒன்பது மணியளவில் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இடதுசாரி சிந்தனையாளராகவும், பகுத்தறிவுவாதியாகவும் அறியப்பட்ட பேராசிரியர் கல்புர்கி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980 களில் பேராசிரியர் கல்புர்கி எழுதிய நூல் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. லிங்காயத் சாதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த நூல் திரும்பப் பெறப்பட்டது. அதன்பிறகும் எதிர்ப்பு தொடர்ந்ததால் ' இனிமேல் லிங்காயத் இலக்கியம் குறித்தோ, பசவரின் தத்துவம் குறித்தோ எதுவும் எழுதமாட்டேன்' …
-
- 0 replies
- 1.4k views
-
-
Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 04:24 PM (ஆர்.சேதுராமன்) அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான, இரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கை அந்நாட்டு நீதிபதி ஒருவர் நேற்று தள்ளுபடி செய்தார். ஜனாதிபதி பதவிக்காலத்தின் பின்னர், அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்கள் பலவற்றை முறையற்ற வகையில் கையாண்டார் என்பது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மீது 40 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்கில் தான் நிரபராதி என ட்ரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்த விசேட விசாரணை அதிகாரி ஜெக் ஸ்மித்தின் நியமனமும், இவ்வி…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
எரித்திரியாவில் இருந்து மக்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? எரித்திரியா நாட்டு சிறுமி | படம்: ஏ.பி. உள்நாட்டு போரின் உக்கிரத்தால் இருக்க இடமில்லாமல், வாழ வழியில்லாமல் இராக், சிரியா அகதிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புகலிடம் தேடி ஐரோப்பாவுக்கும் வேறு சில இடங்களுக்கும் அலைந்து திரிகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எரித்திரியா எனும் நாட்டில் இருந்தும் மக்கள் கும்பல் கும்பலாக வெளியேறி வருகின்றனர். அங்கேயும் ஏதோ உள்நாட்டுக் கலவரமோ என நினைக்க வேண்டாம். அப்புறம் ஏன் வெளியேறுகிறார்கள் எனக் கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பின்னணி.. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது. எரித்திரியா. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 மில்லியன். உலகில் உள்ள வறுமையான நாடுகள…
-
- 2 replies
- 1.8k views
-
-
மார்ட்டின் லூதர் தொடர்பில் ஹிலாரி கூறிய கருத்து இனவாதத்தை தூண்டுவதாக ஒபாமாவின் தரப்பு விமர்சனம்' [15 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னணியில் விளங்கும் செனட்டர்களான ஹிலாரி கிளின்டனுக்கும் பராக் ஒபாமாவுக்குமிடையில் ஹிலாரி கூறிய கருத்தொன்றினால் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மாட்டின் லூதர் கிங்கின் சமத்துவத்திற்கான கனவு 1964 இல் சிவில் உரிமைகளுக்கான சட்டத்தில் ஜனாதிபதி லின்டொன் ஜோன்சன் கைச்சாத்திட்ட போதே நிஜமானதாக ஹிலாரி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறிய கருத்து அங்கு அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. ஹிலாரியின் இக் கருத்து…
-
- 0 replies
- 1k views
-
-
மலேசியாவில் வேலை வாய்ப்பை பெற்றுள்ள 2 இலட்சம் வெளிநாட்டவர் அடுத்த ஆண்டில் திருப்பி அனுப்பப்படுவர்? [22 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களில் 2 இலட்சம் பேரை அந்நாட்டு அரசாங்கம் அடுத்தாண்டளவில் திருப்பியனுப்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மலேசிய அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 இலட்சம் தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர். கட்டுமானத் தொழில், ஹோட்டல்கள் மற்றும் தோட்டங்களில் அவர்கள் வேலை செய்க…
-
- 0 replies
- 846 views
-
-
தென் சூடனுக்காக கைதான ஜோர்ஜ் க்ளூனி பிரபல அமெரிக்க திரைப்பட நடிகரான ஜோர்ஜ் க்ளூனி இன்று அமெரிக்காவின் தலைநகரான வாசிங்கடனில் தென் சூடான் மக்களுக்காக சூடான் நாட்டின் தூதுவராலயத்திற்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கைதானார். அங்கு பாலியல் வன்புணர்வும் உணவும் ஆயுதங்களாக பாவிக்கப்படுவதாக கூறி அதை தடுக்க தனது அரசை கோரி செய்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை கடக்கவேண்டாம் எனக்கூறிய எல்லையை தாண்டியபொழுது கைதானார். இவருடன் இவரின் ஊடகவியலாளர் தந்தையும் ஒரு ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கைதானார்கள். http://www.cbc.ca/ne...st-clooney.html
-
- 3 replies
- 733 views
-
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீடு அவசியம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரி உள்ளார். காஷ்மீர் பிரச்சனை இந்த பிராந்திய சிக்கலாக உருவெடுக்கலாம் என்ற…
-
- 1 reply
- 687 views
- 1 follower
-
-
சிங்கப்பூர் விமானத்தை தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான ஹெராயின் பறிமுதல் 2/7/2008 8:28:36 PM வீரகேசரி நாளேடு - கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தை நள்ளிரவில் மீண்டும் கோவையில் தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான மதிப்புள்ள ஹெரோயினை அதிகாரிகள் கைப்பற்றினர். கோவையில் இருந்து முன்தினம் நள்ளிரவு சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் எயார் வேய்ஸ் விமானத்தில் கோடிக் கணக்கான மதிப்புய்ய போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் விமானம் புறப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் கோவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருமண விருந்தில் குண்டுத்தாக்குதல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற திருமண விருந்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதுடன், 182 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது. ஆரம்பத்தில் குறித்த தாக்குதல் குண்டுத்தாக்குதல் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்பது கண்டறிப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பேற்க தலிபான் பயங்கரவாதிகள் மறுப்பு தெரிவித…
-
- 0 replies
- 351 views
-
-
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டு அங்குள்ள புகுஷிமா அணுசக்தி நிலையத்துக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அந்த அணுசக்தி நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணுக்கழிவுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது இந்த அணுக்கழிவுகள் மெல்ல மெல்ல நகர்ந்து ஜப்பானில் இருந்து 2,574 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அமெரிக்காவின் சென்பிரான்சிஸ்கோ நகர கடற்கரையோர பகுதிக்கு சென்று உள்ளது. இதனால் அமெரிக்கா மிகவும் கவலை அடைந்துள்ளது. ஏனெனில் இந்த அணுக்கழிவு பொருட்களில் சிறிதளவு கதிரியக்கத் தன்மை இன்னும் இருப்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இது அமெரிக்க கடற்பரப்புடன் கலப்பதால் கடல் நீர் மாசுபடுவத…
-
- 1 reply
- 1.3k views
-
-
மும்பை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று 66.85 காசுகளாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 44 காசுகள் வரை சரிந்து 67.30-ஆக உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந்தேதி இந்திய ரூபாய் 67.63-ஆக சரிந்து காணப்பட்டது. பிறகு, அதற்கு மறுநாள் அதாவது செப்டம்பர் 4-ந்தேதி வர்த்தகத்தினிடையே 68.62 காசுகள் வரையும் சரிந்திருந்தது. http://www.dailythanthi.com/News/India/2016/01/14201120/Rupee-tumbles-by-44-paise-to-more-than-2year-low-at.vpf
-
- 0 replies
- 476 views
-
-
நியூஸிலாந்தில் ஒரே இரவில் பல தேவாலயங்களுக்கு தீ வைப்பு! நியூசிலாந்தில் ஒரே இரவில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் தீ வைப்புத் தாக்குதலில் குறைந்தது ஏழு தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு தேவாலயங்கள் மிதமான சேதத்தை சந்தித்ததாக நியூஸிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், மேலும் மூன்று தேவாலயக் கட்டிடங்கள் விசமிகளால் தாக்கப்பட்டுள்ளன. எனினும் அவை தீப்பிடிக்கவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வைரராபா பகுதி முழுவதும் உள்ள மீட்பு குழுவினர் சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி மாலை 04:30 மணிக்கு தீயை அணைத்துள்ளனர். எபிபானியின் ஆங்கிலிகன் தேவாலயம், செயின்ட் பாட்ரிக் கத்தோலிக்க தேவாலயம் …
-
- 0 replies
- 220 views
-
-
Published By: RAJEEBAN 03 MAR, 2025 | 11:01 AM காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதை ஐநாவும் ஏழு அராபிய நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன. காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல்தடைவிதித்துள்ளது. ஹமாஸ் உணவுப்பொருட்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை திருடி அவற்றை விற்பனை செய்து தன்னை நிதிரீதியாக பலப்படுத்துகின்றது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்தத்தை நீடிப்பதற்கான அமெரிக்காவின் யோசனையை நிராகரித்துள்ளது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும் இஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்தினை மலினமான பயமுறுத்தும் நடவடிக்கை என தெரிவித்துள்ள ஹமாஸ் பேச்சாளர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சதி என தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
9/11 தாக்குதல் சூத்திரதாரி குவான்டனாமோவில் அவதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டங்கள் மீது, 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரியொருவர், குவான்டனாமோ தடுப்பு முகாமில் அவதியுறுவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. முஸ்தபா அல்-ஹவ்சவி என்ற குறித்த நபர், செப்டெம்பர் 11 தாக்குதல்களை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும், சித்திரவதைகளின் காரணமாக, பாரிய உடல்நலப் பிரச்சினையை அவர் எதிர்கொண்டுவருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடித…
-
- 0 replies
- 581 views
-
-
பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 இந்திய இராணுவத்தினர் பலி தாக்குதலுக்கு இலக்கான பேருந்து இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாத பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இந்திய இராணுவத்தினரில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகருக்கு வடக்கே இருக்கின்ற நர்பல் பகுதியில் துருப்புகளை ஏற்றி சென்ற பேருந்து குண்டு வெடிப்பில் சிக்கிய இச்சம்பவத்தில் மேலும் இருபத்து மூன்று பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த பிரிவினரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. சர்ச்சைக்குரிய காஷ்மீர் ப…
-
- 15 replies
- 1.7k views
-
-
[size=4]எரிபொருளுக்காக ஈரான் சார்ந்திருப்பதை, இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள மிட் ரோமினி வேணடுகோள் விடுத்துள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தம்பா கன்வென்சன் மையததில், மிட் ரோம்னி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, [/size] [size=4]கச்சா எண்ணெய்க்காக ஈரான் நாட்டை, இந்தியா சார்ந்திருப்பது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியா, ஈரான் நாட்டை சார்ந்திருப்பதை பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும். [/size] [size=4]ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா எப்…
-
- 0 replies
- 858 views
-
-
விழுப்புரம்: "தன்மானத்திலே பிறந்து; வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். என்றைக்கும் தன்மானத்தை இழக்க மாட்டேன். இத்தோடு நிறுத்திக்கொளுங்கள். தம்பிமார்களை தட்டிவிட்டால், பிரச்னை எங்கேயோ போய்விடும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில், நேற்று இரவு நடந்த முப்பெரும் விழாவில் அவர் பேசியதாவது: கருணாநிதி தன்மானம் இல்லாதவர் என பேசியதாக பத்திரிகைகளில் பார்த்தேன். தன்மானம் என்றால் அளந்து, பிரித்து தருவார்களா... கடையில் கிடைக்குமா... தெரியாமல் பேசக்கூடாது. பெரியார், அண்ணாதுரையிடம் நட்போடு பழகி, வளர்ச்சியடைய எனது தன்மானமே காரணமாக அமைந்தது. இது குறித்து ஒரே வரியில் பதில் கூற வேண்டுமென்றால், மானமுள்ள சுயமரியாதை கொண்டவன் நான். எனது மகன் ஸ்டாலின் கூட …
-
- 7 replies
- 1.1k views
-
-
வைரஸ் எதிரொலி- இத்தாலியின் பல சிறைகளில் வன்முறை – விடுதலை செய்யுமாறு கைதிகள் ஆர்ப்பாட்டம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்hக இத்தாலி அறிவித்தள்ள நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகளிற்கு வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அவர்களை பார்வையிடுபவர்களிற்கு அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை தொடர்ந்தே சிறைச்சாலைகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. மொடெனா என்ற பகுதியில் உள்ள சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மெத்தைகளிற்கு தீ மூட்டியதுடன்,சிறைச்சாலையின் மருந்தகத்திற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்துகளை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதில் ஆறுபேர் உயிரிழந்துள்ள…
-
- 0 replies
- 243 views
-
-
அமெரிக்காவில் 50 மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்: 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவின், 50 மாகாணங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8700ஆக உயர்ந்துள்ளதுடன், 150இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றினால் முதல் உயிரிழப்பு பதிவானது. ஒரு மாதத்துக்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 100ஐத் எட்டியுள்ளது. நியூயோர்க் மற்றும் வொஷிங்டன் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், பாடசாலை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 178 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - மத்திய தரைக்கடலில் விபத்துக்குள்ளான எகிப்திய விமானத்தின் இடிபாடுகளும் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. - பாலியல் வன்செயல்களுக்கு எதிராக போராடும் மெக்ஸிகோ நாட்டுப் பெண்கள். - நீரில் மூழ்கிய இரு எகிப்திய நகரங்களின் இடிபாடுகள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில்.
-
- 0 replies
- 543 views
-
-
உலகளாவிய ரீதியில் உள்ள மிகப்பெரிய சவால் - இது தான்! பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வளர்ந்த நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் ஒன்றிணைந்து ஜி-7 என்றதொரு அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டின் ஜி-7 மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள இசே-ஷிமா நகரில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுவரும் இந்த மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அகதிகள் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தென் சீனக்கடலில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கு…
-
- 1 reply
- 387 views
-
-
இயல்பு நிலைக்கு திரும்பியது சீனாவின் வூகான் நகரம் கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் நகரில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் அடைபட்டு கிடந்த மக்கள் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல அப்பகுதி கொரோனாவில் இருந்து விடுபடுகிறது. இதன் பலனாக வூகானில் இருந்து ஹூபேய் மாகாணத்திற்குள்ளாக ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. முதல் ரயில் இன்று(புதன்கிழமை) காலை புறப்பட்டுச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் 276 பயணிகள் பயணித்தனர். இதே போன்று நெடுஞ்சாலைகளும…
-
- 3 replies
- 593 views
-
-
நாளை நியூயோர்க்கில் நடைபெறவிருந்த உலகப் புகழ்பெற்ற நியூயோர்க் மரதன் ஓட்டப்போட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக நகர மேயர் மைக்கல் புளும்பேர்க் அறிவித்துள்ளார். [size=2][size=4]பெரும் புயல் வீசி நகரமே சுடுகாடாக கிடக்க மரதன் ஓட்டம் தேவையில்லையென்று பலர் தெரிவித்திருந்தனர்.[/size][/size] [size=2][size=4]இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் மரதன் ஓடுவோர் மீது தக்காளிகளாலும், கழிவுப் பொருட்களாலும் எறிவோம் என்று கூறினார்கள்.[/size][/size] [size=2][size=4]மேலும் சிலர் நியூயோர்க் மரதன் நடைபெற்றால் சகல போலீசாரும் மரதன் ஓட்டப்பணியை நெறிப்படுத்துவதில் ஈடுபடுத்தப்படுவார்கள், இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போலீசாரின் சேவை கிடைக்காது என்று தெரிவித்தார்கள்.[/size][/size] [siz…
-
- 1 reply
- 422 views
-
-
தமிழ்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான தினத்தந்தி இன்று தந்தி டிவி என்ற 24 மணிநேர செய்தி சனலை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. என்டிடிவி தொலைக்காட்சியும் ஹிந்து ஆங்கில நாளிதழும் இணைந்து என்டிடிவியும் - ஹிந்து செய்தி சனலை நடத்தி வந்தன. அந்த சனலை வாங்கிய தினந்தந்தி நிறுவனம் இன்று முதல் தந்தி டிவி என புதிய பெயருடன் களமிறங்கியுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * இயல்புநிலைக்கு திரும்பியது துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம்; ஆனால் ஐஎஸ் அமைப்பிடமிருந்து மகனை மீட்க துருக்கிக்கு சென்ற தந்தையோ சடலமாக துனிஷியா திரும்பினார். * உலகை உலுக்கிய சோம் போரின் நூற்றாண்டு நினைவுநாள் ஐரோப்பா நெடுக அனுஷ்டிக்கப்பட்டது; அதில் பிரிட்டனின் தோல்விக்கான காரணத்தை ஆராய்கிறது பிபிசி. * லண்டனில் சொத்துவாங்க கடன் தருவதை இடைநிறுத்தியது சிங்கப்பூர் வங்கி; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியும் பிரிட்டன் பொருளாதாரம் மோசமாவதன் இன்னொரு அடையாளமா?
-
- 0 replies
- 423 views
-