உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26711 topics in this forum
-
சிரியாவில் நேற்று வான்வழி தாக்குதலில் உணவுக்காக கியூவில் நின்றிருந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சாலைகளின் நடுவில் உட்கார்ந்து அலறிய வீடியோ காட்சி வெளியானதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. சிரியாவில் நேற்று, வான்வழியே குண்டுமழை பொழிந்து சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரட் உணவுகளை வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 200 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களது உடல்கள் சாலைகளின் நடுவே, ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. இந்த சம்பவத்தின் வீடி…
-
- 1 reply
- 523 views
-
-
சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/b3a54ecc0915f9347c3f53fa31d161fe_XL-720x450.jpg கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக Save the Children தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆசியர்களிடம் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பை முன்னிறுத்தி, இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக பல குழந்தைகள் தங்கள் பாடசாலை படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனார். …
-
- 0 replies
- 346 views
-
-
சிரியாவில் பிரிட்டிஷ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமா என்று கோருகின்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது. ஐஎஸ்-ஐ பிரிட்டனுக்கு ஓர் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள பிரதமர் டேவிட் கேமரன், இராக்கைப் போல சிரியாவிலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டுவருகின்றார். https://www.facebook.com/bbctamil/videos/vb.186742265162/10153127385760163/?type=2&theater
-
- 8 replies
- 1.1k views
-
-
சிரியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு அதன் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என அமெரிக்காவும், ரஷியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.சிரியா நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்களும், மக்கள் ஆதரவு புரட்சிப்படையினரும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் உள்ளன. அதிபர் பஷர் அல் ஆசாத் பதவியை விட்டு இறங்குவதுதான் இந்த பிரச்சனைக்கு முடிவாக அமையும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது,ஆனால், இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டியவர்கள் சிரியா நாட்டு மக்கள்தான் என்பது ரஷியாவின் நிலைப்பாடாக …
-
- 0 replies
- 328 views
-
-
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் பலியானதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்கு ஈரான் தவிர 30 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்நோக்கியிருக்கும் இப்பேச்சுவார்த்தை நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிபர் ஆசாத்தின் படைகளும், கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கிளர்ச்சியாளர்களிடமும் பிரிவினை ஏற்பட்டு அவர்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த மோதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 85 பொதுமக்கள் உள்பட சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமான பொதுமக்கள் உயிருக்குப் பயந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். …
-
- 0 replies
- 479 views
-
-
சிரியாவில் போர் தொடரும்: அதிபர் ஆசாத், கிளர்ச்சியாளர்கள் பிடிவாதத்தால் சிக்கல் சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல் படுத்தப்படும் என்று அமெரிக் காவும் ரஷ்யாவும் கூட்டாக அறிவித்துள்ளன. ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று அதிபர் ஆசாத்தும், அதிபர் பதவி விலகும்வரை போரிடுவோம் என்று கிளர்ச்சியாளர்களும் அறிவித் திருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகி உள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் அதிபர் ஆசாத் படைகள், மிதவாத எதிர்க்கட்சி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சண்டை நிறுத்தம் அமல் செய்யப்படும் என்று அமெரிக் காவும் ரஷ்யாவும் அறிவித்துள் ளன. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா வும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கு அமெ…
-
- 0 replies
- 328 views
-
-
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து சிரியா குறித்து ஆலோசிக்க லண்டனிற்கு சென்று கொண்டிருகிறார். சனிக்கிழமையன்று ஸ்விட்சர்லாந்தில் ரஷியா மற்றும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு உறுதியான ஒப்பந்தத்திற்கும் உடன்படாத சிரியாவின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் கெர்ரி நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கெர்ரியின் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் புதிய யோசனைகள் ஆலோசிக்கப்பட்டன என்றும், சிரியாவில் அமைதி நிலவுவதற்கான வெவ்வேறு அணுகுமுறைகளுக்கு அது வழிவகுக்கும் என தான் நம்புவதாக கெர்ரி தெரிவித்துள்ளார். ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரஃப், ஆலோச…
-
- 0 replies
- 212 views
-
-
சிரியாவில் போர் நிறுத்தம் மீறல்: கிளர்ச்சியாளர்கள் - அரசுப் படைகள் பரஸ்பர குற்றச்சாட்டு சிரியாவில் போர் நிறுத்தத்தை அரசுப் படைகள் மீறியதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், சிரிய அரசுப் படையோ கிளர்ச்சியாளர்கள் தரப்புதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மக்கள் வரும் பாதையில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை கொண்டு வந்ததன் விளைவாக ரஷ்ய அதிபர் புதின் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி தினமும் 5 மணி நேர போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ரஷ்யா தரப்பில்…
-
- 0 replies
- 177 views
-
-
மாஸ்கோ: சிரியாவின் வடமேற்குப் பகுதிகளில், துருக்கி ஆதரவு பெற்ற சிரியா புரட்சி படைக்கும், சிரியா அரசுக்கும் இட்லிப் பகுதியில் சண்டை நடந்து வருகிறது. இதனால், அங்குள்ள ஐந்து லட்சம் மக்கள், சிரியா - துருக்கி எல்லையில், அடைக்கலம் புகுந்து வருகின்றனர். புரட்சிப் படையை ஒடுக்க, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள், ரஷ்யாவின் உதவியுடன் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் புரட்சியாளர்கள் மீது, சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில், துருக்கி ராணுவ வீரர்கள், 33 பேர் கொல்லப்பட்டனர். இதனால், துருக்கி - சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் கொல…
-
- 0 replies
- 401 views
-
-
சிரியாவில் ஆசாத்தின் ஆட்சிக்கெதிராக போராடும் போராளிகளுக்கு அமெரிக்கா உற்பட பல மேற்கு நாடுகள் ஆதரவளித்து வருவது தெரிந்ததே. கடந்த இரு வருடங்களாக நடைபெற்றுவரும் இந்தப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இரு தரப்பினராலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிரிய ராணுவத்தால் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள், சிரிய ராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கிறது, போர்க்குற்றங்களில் ஈடுபடுகிறதென்று கூறிக்கொண்டு அமெரிக்கா பெரிய அளவில் போராளிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வழங்கிவருகிறது. ஆனால் தற்போது வெளியாகிவரும் செய்திகளின்படி, அமெரிக்க உதவிவரும் போராளி அமைப்புக்களும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை…
-
- 4 replies
- 685 views
-
-
சிரியாவில் மகப்பேற்று வைத்தியசாலை மீது விமான குண்டுத்தாக்குதல் 2016-07-29 21:36:20 சிரியாவில் சேவ் த சில்ரன் அமைப்பின் உதவியுடன் நடத்தப்படும் மகப்பேற்று வைத்தியசாலையொன்றின் மீது விமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என தாக சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை என அவ்வமைப்பு கூறியுள்ளது. நோயாளிகளின் உறவினர்களே கொல்லப்பட்டுள்ளனர் இந்த வைத்தியசாலையை நிர்வகிக்கும் சிரியா ரீலிவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இத்லிப் மாகாணத்திலுள்ள இந்த வை…
-
- 0 replies
- 224 views
-
-
சிரியாவில் மனித உரிமை மீறல்: ஐநா கருத்து சிரியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதல்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்த எண்ணிக்கை 40 லட்சம் ஆக உயர வாய்ப்பு இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 70 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஐ.நா. அவை தற்போது உதவி செய்து வருவதாகவும், மேலும் பல தொண்டு நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே சிரியாவின் பொருளாதார நிலை த…
-
- 3 replies
- 355 views
-
-
சிரியாவில் மீண்டும் இரசாயன ஆயுத தாக்குதல்.... நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி.? சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள கூட்டாவின் டுமாநகரின் மீது இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணியாளர்களும் மருத்துவ பணியாளர்களும் இதனை உறுதி செய்துள்ளதுடன் இதனை உறுதிப்படுத்தும் படங்களை வெளியிட்டுள்ளனர். பல அமைப்புகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சிக்காரர்களின் கூட்டா ஊடக நிலையம் 75 பேர் மூச்சுதிணறி இறந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. ஹெலிக்கொப்டரில…
-
- 1 reply
- 473 views
-
-
வீரகேசரி இணையம் 11/15/2011 8:20:37 PM சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் பதவி விலக வேண்டுமென ஜோர்தானின் மன்னர் வலியுறுத்தியதையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 90 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஜோர்தானிய எல்லைக்குரிய சிரிய நகரான கிரிபெட் கஸலெஹ்ஹில் படையினருக்கும் இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 20 படை வீரர்கள் உட்பட 50 பேர் வரை பலியாகியுள்ளனர். அஸாத் பதவி விலக வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுத்த …
-
- 0 replies
- 393 views
-
-
சிரியாவில் முக்கிய நகரை கைப்பற்ற அமெரிக்காவின் உதவியை நாடும் துருக்கி வட கிழக்கு சிரியாவில் உள்ள ஒரு முக்கிய நகரிலிருந்து ஐ.எஸ் போராளிகளை விரட்டும் போரில் அமெரிக்க தலைமையிலான கூட்டணி படையினரின் வான்வழி ஆதரவு வேண்டி துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. கோப்புப்படம் அத்தைகைய ஆதரவை இடைநிறுத்துவது என்பது கூட்டணிக்கு ஏற்புடையதல்ல என்று துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்துவனின் பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார். பல வாரங்களாக, துருக்கி ராணுவத்தின் ஆதரவோடு போராளிகள் சண்டையிட்டு ஐ.எஸ் குழுவிடமிருந்து அல்-பாப் நகரை கைப்பற்றினார்கள். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குமுன், சிரியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் தொட…
-
- 0 replies
- 403 views
-
-
சிரியாவில் மோதலில் 55 பேர் பலி…. August 11, 2019 சிரியாவில் அரச படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது சிரியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கெதிராக அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றனஇந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹாமா, அலெப்போ மற்றும் லடாகியா மாகாணங்களில் செயல்பட்டு வரும் போராளி குழுக்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது இந்த மோதலில் படைவீரர்க…
-
- 0 replies
- 595 views
-
-
சிரியாவில் மோதல் – 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. அரசுப் படைகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்துவரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது. சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று அரசு படைகள் திடீரென நுழைந்தன. பின்னர் கண்ணில் பட்ட ஆசாத்தின் ஆதரவாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு…
-
- 3 replies
- 543 views
- 1 follower
-
-
சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுலிலுள்ள பகுதிகளில் 135 பேர் பலி [ Sunday,6 March 2016, 06:19:58 ] சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு வாரகாலத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்திவரும் இடங்கள் உள்ளிட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்படாத இடங்களில் 552 பேர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரியா அமைதி பேச்சுவார்த்தைகள் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் சற்று முரண்பாடுகளுடன் இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவுக்கான தூதுவர் ஸ்டீபன் தே மிஸ்துரா தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 372 views
-
-
சிரியாவில் யுத்தம் ; உலக மக்களை கண்கலங்க வைத்த 30 நாள் குழந்தை (வீடியோ இணைப்பு) சிரியாவில் பிறந்து 30 நாட்களேயான குழந்தையை இடிபாடுகளுக்கிடையே சிக்கியநிலையில் அக்குழந்தையினை மீட்ட மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிரியாவில் கடந்த வியாழன் அன்று ரஷ்ய கூட்டுபடையினர் நடத்திய வான்வழி தாக்குதலால் பொதுமக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாயினர்.இத்தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி ஜார்ஜனஸ் நகருக்கு அருகே உள்ள இத்லிப் கிராமம். இப்பகுதியில் இடிபாடுகளுக்கு இடையே உள்ளவர்களை மீட்பு படையினர் மீட்டு வந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தை ஒன்று சிக்குண்டு இ…
-
- 0 replies
- 541 views
-
-
Published By: SETHU 26 JUN, 2023 | 09:15 AM சிரியாவில் ரஷ்யா நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என யுத்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரு சிறார்கள் உட்பட 9 பொதுமக்களும் அடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இட்லிப் பிராந்தியத்திலுள்ள ஜஸ்ர் அல் சுகுர் நகரிலுள்ள சந்தையொன்றில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவ்வருடம் சிரியாவில் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையானோர் கொல்லப்பட்ட ரஷ்ய தாக்குதல் இதுவாகும் என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தேல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் நடத்தி…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
சிரியாவில் ரஷ்ய தூதரம் மீது தாக்குதல் நடந்ததால் பதற்றம் ரஷ்ய தூதரகம் வெளியே ஆசாத் மற்றும் புடினுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த பேரணி. |கோப்புப் படம்: ஏஎப்பி. தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது 2 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. சிரியாவில் அமைந்துள்ள ரஷிய தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியிலிருந்து ராக்கெட்டுகள் வந்ததால் சம்பவத்துக்கு அவர்களின் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு அளித்தார். தொடர்ந்து ஐ.…
-
- 0 replies
- 528 views
-
-
சிரியாவில் ரஷ்ய யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது சிரியாவுக்கு மேலே வைத்து ரஷ்யாவின் சுக்கோய் 24 ரக போர் விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவுடனான எல்லையின் அருகே தமது வான் பரப்புக்குள் அந்த ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததால், தமது எஃப் 16 ரக விமானங்கள் இரண்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கிய இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். சுடுவதற்கு முன் ஐந்து நிமிட நேரத்தில் பத்து தடவை அந்த விமானத்தை தாம் எச்சரித்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்ய விமானம் துருக்கிய வான் பரப்பில் நுழைந்ததாகக் கூறப்படுவதை மாஸ்கோ மறுக்கிறது. தமது விமானம் இன்னொரு விமானத்திலிருந்து சுடப்படவில்லை, தரையிலிருந்துதான் சுடப்பட்…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிரியாவில் ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 43 பேர் பலி [ Monday,21 December 2015, 05:41:50 ] சிரியாவின் இட்லிப் நகரில் ரஷ்ய விமானம் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 43 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்கள் அதிகம் வாழும் பகுதியிலேயே இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தைகள், வீடுகள் அலுவலக கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளிலேயே விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையினால் பல உடல்கள் கட்டிடங்களுக்குள் சிக்குண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு ஆதரவாகவும் அங்குள்ள ஐ.எஸ் ஆயுத்தாரிகளுக்கு எதிராகவும் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் ரஷ்யா விமானத் தாக்குதல்களை…
-
- 1 reply
- 580 views
-
-
சிரியாவில் ரஸ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என ஐநா குற்றம்சாட்டியுள்ளது. சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐநா குழுவொன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிரியாவில் ரஸ்யாயுத்தகுற்றங்களை இழைத்துள்ளது என ஐநா குற்றம்சாட்டுவது இது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு மருத்துவநிலையங்கள் போன்றவற்றின் மீதான சிரிய அரசபடைகளின் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது. ரஸ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டன என்பதற்கான …
-
- 0 replies
- 543 views
-
-
சிரியாவில் வான் தாக்குதலுக்குத் தயாராகிறது அமெரிக்கா! [Wednesday 2014-08-27 14:00] சிரியாவிலுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக, அங்கு ஆளில்லா உளவு விமானங்களை பறக்கச் செய்வதற்கான ஆயத்த வேலைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் வெளியான செய்தியில்,ஈராக்கிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தனது தாக்குதலை சிரியாவிலுள்ள ஐ.எஸ். நிலைகளுக்கும் விரிவுபடுத்த ஆயத்தமாகி வருகிறது.இதற்காக, சிரியா வான்பகுதிக்கு ஆளில்லா உளவு விமானங்களை அனுப்பி, அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். நிலைகள் குறித்த விவரங்களைச்…
-
- 0 replies
- 484 views
-