Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எகிப்து முன்னாள் அதிபருக்கு தூக்கு.... சிறை உடைத்து தப்பிய வழக்கில் அதிரடி தீர்ப்பு. கெய்ரோ: எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, சிறையை உடைத்து தப்பிய வழக்கில் கெய்ரோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மோர்சி மீண்டும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், நாட்டை சீர்படுத்துவதற்கு மோர்சி எடுத்த சில நடவடிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இ…

    • 2 replies
    • 409 views
  2. கூலிங் கிளாஸுடன் மோடிக்கு கை கொடுத்த கலெக்டர்.. நோட்டீஸ் விட்ட சட்டிஸ்கர் அரசு! ராய்ப்பூர்: விதிகளுக்குப் புறம்பாக கூலிங் கிளாஸ் போட்டும், சாதாரண உடை அணிந்தும் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த சட்டிஸ்கர் கலெக்டருக்கு மாநில அரசு நோட்டீஸ் விட்டு எச்சரித்துள்ளது. அந்த கலெக்டரின் பெயர் அமீத் கட்டாரியா. பஸ்தார் மாவட்ட கலெக்டர் ஆவார். பிரதமர் மோடி மே 9ம் தேதி பஸ்தாருக்கு வந்திருந்தார். அவரை முதல்வர் ரமன் சிங், காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அமீத் கட்டாரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். அதிகாரிகளை முதல்வர் ரமன் சிங் அறிமுகப்படுத்தினார். அப்போது கலெக்டர் அமீத் கட்டாரியா, பிரதமருக்கு கை குலுக்கினார். அவரைப் பார்த்த பிரதமர், வாங்க "தப…

  3. ஜானி டெப்பின் நாய்கள் திரும்ப அனுப்பப்பட்டன ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் இரண்டு செல்ல நாய்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் திரும்ப அமெரிக்காவுக்கே அனுப்பிவிட்டார்கள். ஜானி டெப் ஆஸ்திரேலியாவுக்கு தனது சொந்த விமானத்தில் வந்தபோது தன் இரண்டு யார்க்ஷயர் டெர்ரியர் வகை நாய்களையும் கூடக் கொண்டுவந்திருந்தாராம். ஆஸ்திரேலிய விவசாய அமைச்சர் பார்னபி ஜோய்ஸ் இந்த முடிவை தனது டிவிட்டர் தளத்தில் " நாய்கள் போய்விட்டன" என்று ஒற்றைவரிச் செய்தி மூலம் உலகுக்கு அறிவித்தார். வியாழக்கிழமை, ஜானி டெப் அவரது நாய்களை நாட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்வதற்கு 50 மணி நேர காலக் கெடுவை விவசாய அமைச்சர் விதித்தார். ஆஸ்திரேலியாவில் விலங்குகள் கட்டுப்பாட்டு விதிகளுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்று அமைச்சர் கூறி…

  4. ஆந்திராவில் 2400 கிராமங்களை தத்து எடுத்தனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள் வாஷிங்டன், ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘சுமார்ட் கிராமம் - சுமார்ட் உலகம்’ என்ற திட்டத்தின்படி 2400-க்கும் அதிகமான கிராமங்களை தத்துஎடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு எடுத்துஉள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ், சான்ஜோஸ், சிகாகோ, நியூயார்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன், போர்ட்லாந்த் மற்றும் டால்லாஸ் ஆகிய நகரங்களில் உள்ள இந்தியர்களை ஆந்திரபிரதேசம் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். அப்போது ஆந்திராவில் உள்ள கிராமங்களில் முதலீடு செய்ய அவர்களை கேட்டுக் கொண்டார். ‘சுமார்ட் கிராமம் - சுமார்ட் உலகம்’ என்ற திட்ட…

    • 0 replies
    • 305 views
  5. வாத்திகன் பாலத்தீன நாட்டை வாத்திகன் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலத்தீன் ஆகிய இரு நாடுகள் தனியாக இருப்பதே இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்கும் வழி என வாத்திகன் கூறியுள்ளது. இது தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாலத்தீனத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் செயல்பாடுகள் குறித்த விடயங்களும் இடம்பெறும். இம்முடிவு தொடர்பாக இஸ்ரேல் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீனப் பகுதிகள் மீது கடந்த ஆண்டு இஸ்ரேல் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இந்த அங்கீகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்த வாரக் கடைசியில் பாலத்தீன அதிபர் மெஹ்…

  6. மைக்கல் ஷுமாக்கரின் விமானம்,விடுமுறை இல்லத்தை திருமதி கொரினா ஷுமாக்கர் விற்பனை செய்தார் போர்மியூலா வன் போட்டிகளில் 7 தடவைகள் உலக சம்பியனாகி சாதனை படைத்த ஜேர்மனிய வீரர் மைக்கல் ஷுமாக்கருக்கு சொந்தமான விமானமொன்றையும் ஆடம்பர விடுமுறை இல்லமொன்றையும் அவரின் மனைவியான கொரினா ஷுமாக்கர் விற்பனை செய்துள்ளார். இனிமேல் இந்த விமானத்தையும் விடுமுறை இல்லத்தையும் தமது குடும்பத்தினர் பயன்படுத்தப்போவதில்லை என்பதே இத்தீர்மானத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது மூளையில் காயமடைந்த மைக்கல் ஷுமாக்கர் முழுமையாக குணமடைய மாட்டார் என கொரினா ஷுமாக்கர் ஏற்றுக்கொண்டுள்ளதை இத்தீர்மானம் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. 46 வயதான மைக்கல் ஷுமாக்கர், 2013 …

  7. பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 41 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 6 ஆயுதம் தாங்கிய நபர்களே குறித்த பயணிகள் பஸ்ஸை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/05/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B…

    • 1 reply
    • 263 views
  8. விண்வெளியிலிருந்து திரும்பத் தாமதமாகும் என்பது சம்பந்தப்பட்ட வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குப் பொருட்களைக் கொண்டுசென்ற விண்கலம் தோல்வியைச் சந்தித்ததையடுத்து, அங்கிருக்கும் மூன்று விண்வெளி வீரர்களை பூமிக்குக் கொண்டுவருவதை ரஷ்யா தள்ளிப்போட்டிருக்கிறது. இந்த மூன்று வீரர்களும் வியாழக்கிழமையன்று பூமிக்கு வந்துசேர்ந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஜூன் மாதத் துவக்கத்தில் அவர்களை பூமிக்கு அழைத்துவரத் திட்டமிட்டிருப்பதாக விண்வெளித் துறையின் அதிகாரியான விளாதிமிர் சோலோவ்யோவ் தெரிவித்தார். இந்த மூன்று பேருக்குப் பதிலாக வேறு வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் திட்டமும் ஜூலை மாதத்திற்கு ஒத்திப்போட…

    • 0 replies
    • 229 views
  9. அருண் புதூர் ஆசிய அளவில் 40 வயதுக்குட்பட்ட பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை ‘வெல்த் – எக்ஸ்’ நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் இளம் தொழிலதிபர் அருண் புதூர் முதலிடம் பிடித்துள்ளார். ‘செல்பிரேம்’ என்ற மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளரும் தலைவருமான அருண் (37), சென்னையில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்தவர். தற்போது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் இவரது சொத்து மதிப்பு 400 கோடி டாலராக உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25 ஆயிரத்து 580 கோடி ஆகும். அருண் பட்டப்படிப்புக்கு பிறகு 1998-ம் ஆண்டு செல்பிரேம் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப் பிரபல ‘வோர்டு புராஸஸர்’ மென்பொருளை உற்பத்தி செய்கிறது…

    • 1 reply
    • 365 views
  10. இரு விற்பன்னர்களின் மோதலால் முடிவு செய்யப்பட்ட பிரித்தானியத் தேர்தல் தேர்தலைமுடிவு செய்த படம் பொதுவாக தேர்தல் என்றால் கட்சிகளின் கொள்கைகளின் மோதல், தலைவர்களின் திறமைகளின் மோதல் தேர்தல் கூட்டங்களில் செய்யும் பேச்சுக்களின் மோதல் என்பதை நாம் அறிவோம். ஆனால் பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல் பிரித்தானியா மக்களுடன் சம்பந்தமில்லாத இரு விற்பன்னர்களின் மோதலாக அமைந்தது. ஒருவர் பராக் ஒபாமாவை இரு தடவை வெற்றி பெறச் செய்த டேவிட் அக்ஸெல்றொட் மற்றவர் ஒஸ்ரேலியாவில் ஜொன் ஹோவார்டை நான்கு தடவைகள் வெற்றி பெறச் செய்த லிண்டன் குறொஸ்பி. இந்த லிண்டன் குறொஸ்பியே கொன்சர்வேர்டிவ் கட்சியின் பொறிஸ் ஜோன்ஸனை இரண்டு தடவைகள் இலண்டன் மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற வைத்தவர். இ…

    • 7 replies
    • 537 views
  11. நேபாளத்தை மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் தாக்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நேபாளத்தில் மீண்டும் பெரும் பூகம்பம் இந்த புதிய பூகம்பத்தின் அளவு 7.4 புள்ளிகள் என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 30 செக்கன்களுக்கு இது நீடித்துள்ளது. நேபாளத்தில் மீண்டும் பெரும் பூகம்பம் நேபாள தலைநகர் காத்மண்டுவிலும், இந்திய தலைநகர் டில்லியிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடியுள்ளனர். கடந்த மாதம் தாக்கிய பூகம்பம் 7.8 புள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதில் 7000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போதைய பூகம்பம் காத்மாண்டுவுக்கும், எவரெஸ்ட் சிகரத்துக்கும் இடையில் மையம் கொண்டிருந்தது. http://www.bbc.co.uk/tamil/…

  12. பாரிஸ் ரெயில் நிலையத்தில் பீரங்கி குண்டுடன் வந்த பயணியால் பீதி பாரிஸின் கார் த்யு நோர் ரெயில் நிலையம்பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸின் மிகவும் நெரிசல் மிகுந்த ரெயில்வே நிலையமான, கார் த்யூ நோர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் பீரங்கி குண்டுடன் பயணிக்க வந்ததால், அதிகாரிகள் ரெயில் நிலையத்திலிருந்த அனைவரையும் அப்புறப்படுத்த நேரிட்டது. லண்டன் நகருக்கு பயணிக்கச் சென்ற இந்தப் பயணியின் முதுகில் வைத்திருந்த பையில் இந்த பீரங்கி ஷெல் குண்டு காணப்பட்டது. இந்த ஷெல் முதல் அல்லது இரண்டாம் உலகப்போர் காலத்தையது என்று நம்பப்படுவதாக பிரெஞ்சு ரெயில் நிறுவனமான, எஸ்.என்.சி.எப் ( SNCF) நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். ரெயில் நிலையத்திலிருந்து அனைத்து பயணிகளும் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்…

  13. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலம் பெற்றுள்ள சிறிலங்கா ஆதரவு அணி: – தமிழருக்குப் பின்னடைவு பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தோற்கடிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்காவுக்கு நல்ல செய்தி என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், முன்னைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் ஆதரவு கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களான, லீ ஸ்கொட் மற்றும், நிக் டி பொய்ஸ் ஆகிய இருவரும், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். …

  14. பிரித்தானியத் தேர்தலில் பிரதமர் கமரனின் வெற்றி: ஓர் கண்ணோட்டம் கரு ஐக்கிய இராச்சியத்தில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாதக் கட்சி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்திருப்பதுடன், அதன் தலைவர் டேவிட் கமரன் மீண்டும் பிரதமராகியிருக்கிறார். பொருளாதாரம் அபிவிருத்தி, தேசிய சுகாதார சேவைகளைத் தரப்படுத்துதல், குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்த அங்கத்துவம் போன்ற மிக முக்கியமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இம்முறைத் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கொள்கை ரீதியாக ஆளும் கூட்டணிக்கட்சிகளுக்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் அற்றதொரு நிலையில் மக்கள் த…

  15. நேபா­ளத்தில் 3 புதிய பூமி­ய­தி­ர்ச்சி சம்­ப­வங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளன. அந்­நாட்டை கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தாக்­கிய பாரிய பூகம்­பத்தில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 8,019 ஆக உயர்ந்­துள்ள நிலையில், அந்த பூமி­ய­திர்ச்­சியை தொடர்ந்து ஏற்­க­னவே 150 க்கு மேற்­பட்ட பூமி­ய­திர்ச்­சிகள் அந்­நாட்டை தாக்­கி­யுள்­ளன. மேற்­படி பூமி­ய­திர்ச்சி சம்­ப­வங்­களில் சிக்கி 16,033 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.இந்­நி­லையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காத்­மண்டு நகரின் கிழக்கே சிந்­து­பல்சொக் மாவட்­டத்தில் 4.2 ரிச்டர் பூமி­ய­திர்ச்­சியும் உத­யபூர் மாவட்­டத்தில் 4 ரிச்டர் பூமி­ய­திர்ச்­சியும் சிந்­து­பல்­சொக்­கிற்கும் திபெத்துக்குமிடையில் 4,4 ரிச்டர் பூமியதிர்ச்சியும் தாக்கியுள…

    • 0 replies
    • 228 views
  16. மகாதிரிடம் நஜிப் கூறுகிறார்: நான் உதவினேன், இப்போது நீங்கள் உதவுங்கள் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் தாக்குதல்கள் பற்றி இதுநாள் வரையில் மௌனமாக இருந்த வந்த பிரதமர் நஜிப் முதல் முறையாகத் திருப்பித் தாக்க முனைந்துள்ளார். தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை, பதவி விலகப் போவதில்லை என்று அவர் சூளுரைத்தார். 1987 ஆம் ஆண்டில், மகாதிர் கிட்டத்தட்ட அம்னோ தலைவர் பதவியை இழக்கும் தருவாயில் இருந்த போது தாம் அவருக்கு உறுதியான ஆதரவு அளித்ததைச் சுட்டிக் காட்டிய நஜிப், அவர் இப்போது தமக்கு உதவ வேண்டும் என்றார். மகாதிரால் அதனைச் செய்ய இயலாது என்றால், அவர் கூச்சல் போடக் கூடாது என்று நஜிப் மேலும் கூறினார். 1987 ஆம் ஆண்டில், அவரை ஆதரித்தவர்களில் தாமும் ஒருவர் என்று கூறிய நஜிப், “அ…

    • 0 replies
    • 226 views
  17. 'வரி அறவீடு மற்றும் சமூகநல நிதி அதிகாரங்கள் வேண்டும்' ஸ்காட்லாந்து பிராந்தியத்துக்கு புதிய அதிகாரங்களை கோரி ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சியின் (எஸ்என்பி) தலைவி நிக்கோலா ஸ்டர்ஜன் புதிய அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த வாரம் நடந்த பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் ஸ்காட்லாந்தில் எஸ்என்பி கட்சி பெருவெற்றி பெற்றது. வரி அறவீடு மற்றும் சமூகநல நிதி போன்ற அதிகாரங்களை ஸ்காட்லாந்துக்கு பகிர்ந்தளிப்பதற்கு பிரதமர் டேவிட் கமெரன் முன்னிரிமை அளிக்க வேண்டும் என்று நிக்கோலா ஸ்டர்ஜன் கோரியுள்ளார். டேவிட் கமரெனின் பழமைவாதக் கட்சி (கன்செர்வெட்டிவ்) தனிப் பெரும்பான்மை பலத்துடன் பிரிட்டனில் ஆட்சியமைத்துள்ளது. ஆனால், பிரதமர் கமெரனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பு தெரிவ…

    • 0 replies
    • 253 views
  18. சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு ; பலர் பலி ; பயங்கரவாதிகள் சதியா என விசாரணை சுவிட்சர்லாந்தில் ஒரு குடியிருப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியானதாக தகவல் வந்துள்ளது. ஆனால் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. சம்ப இடத்தில் பலர் இறந்து கிடப்பதாக மட்டும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. சுவிஸ்சில் ஷூரிச் பகுதியின் வடமேற்கு பகுதியான வியர்லிங்கன் டவுண் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடும் துப்பாக்கி சப்தம் கேட்டது. இதில் பலர் காயமுற்றுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரமும் இன்னும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் போலீசார் முற்றுகையிட்டுள்ளனர் . இந்த சம்பவத்தில் பயங்கரவாதிக…

  19. 'நாடு மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது': பிரதமர் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பர்னில் ஒரு மாதத்துக்குள் இரண்டாவது தடவையாக நடக்க இருந்த பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். வீடொன்றிலிருந்து உள்ளூரில் தயாரிப்பான மூன்று வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வெடிகுண்டுகள் அருகிலுள்ள மைதானமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள 17-வயது இளைஞர் ஒருவர் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஆஸ்திரேலியா மிகவும் மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் டோனி அப்பொட் கூறியிருக்கிறார். கடந்த …

    • 0 replies
    • 292 views
  20. பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி [ வெள்ளிக்கிழமை, 08 மே 2015, 05:50.53 AM GMT ] [ புதினப்பலகை ] பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சற்று முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவி்ன் படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த, உமா குமரனுக்கு 19,911 வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள 331 முடிவுகளில்,136 இடங்களை தொழிற்கட்சியும், 119 இடங்களை கொ…

    • 13 replies
    • 995 views
  21. மது போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து, மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், மும்பை விசாரணை நீதிமன்றத்திடம் ரூ.30,000 பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் சல்மான் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சல்மான் கானின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், அவர் விடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2002-ல் இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை பரப…

  22. வடக்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் நோர்வே மற்றும் பிலிபைன்ஸ் தூதுவர்கள் இருவர் உட்பட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். குறித்த இராணு ஹெலிகொப்டர், அவசரமாக தரையிறக்க முற்பட்ட போது வெள்ளிக்கிழமை(08) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் தூதுவர்களின் மனைவிகள் இருவர் மற்றும் பாகிஸ்தானின் இராணுவ விமானிகள் இருவரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். சுற்றுலா திட்டமொன்றை ஆரம்பித்து வைப்பதற்காக காஷ்மீர் பிராந்தியத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.tamilmirror.lk/145671#sthash.k1a8pPZ9.dpuf

  23. சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு உணவு மற்றும் வழங்கு பொருட்களை எடுத்துச் சென்ற ஆளற்ற கலன் ஒன்றுடன் ரஷ்ய விண்வெளி பொறியாளர்கள் தொடர்பை இழந்துவிட்டார்கள் . ப்ரோக்ரஸ் என்ற இந்த சரக்குக் கலன் இப்போது மூன்று டன்கள் எடையுள்ள உணவு மற்றும் கருவிகளுடன் கட்டுப்பாடற்ற வகையில் விண்ணில் சுழன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. ரஷ்ய விண்வெளித் திட்ட விஞ்ஞானிகள் இந்த கலனுடன் மீண்டும் தொடர் ஏற்படுத்த இன்று முயல்வார்கள் ஆனால் இந்தக் கலனின் பேட்டரிகள் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் செயலிழந்துவிடக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னர், இந்தக் கலன் கட்டுப்படுத்த முடியாத வகையில் இறங்கி, பூமியின் சூழலுக்குள் விழுந்து விடு. ஆனால் சர்வதேச விண்வெளி நில…

    • 2 replies
    • 549 views
  24. கார் விபத்து வழக்கு: சிறையிலிருந்து தப்பிய கைதி 56 ஆண்டுக்குப் பின் கைது! அமெரிக்காவில் கார் விபத்து ஒன்றில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தப்பிய கைதி ஒருவரை 56 ஆண்டுகளுக்குப் பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர். ஓஹியோவைச் சேர்ந்தவர் பிராங்க் பிரஷ்வாட்டர்ஸ் (79). இவர் கடந்த 1957-ம் ஆண்டு காரில் சென்றபோது ரோட்டில் நடந்து சென்றவர் மீது மோதினார். அதில் காயமடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பிராங்க் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பிராங்கிற்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட பிராங்க், அங்கிருந்து தப்…

  25. கனேடிய தேர்தல் செய்தி - ஓக்ரிடஜ்-மார்க்கம் [Oak Ridges and Markham] பிரதேச மக்களிற்கான வாக்களிப்பு பஸ் வசதிகள்: [Thursday 2015-05-07 19:00] தொகுதியில் இன்று இடம்பெறவுள்ள புரோகிரசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தேர்தலில் அங்கத்துவர்கள் வாக்களிப்பதற்கான பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத் தொகுதியில் அங்கத்துவர்களாகப் பதிவு செய்த உறுப்பினர்களில் ஏறக்குறைய 80 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் பகுதியில் வாக்களிப்பு நிலையம் இல்லாமல் மிக நீண்ட தொலைவில் வைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணமாகும். Bus schedule: [1] From Markham Babu Catering (McCowan and Bur Oak): First bus leaves at 2:30 pm 2nd bus leaves at 4:30 p…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.