உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலம் பெற்றுள்ள சிறிலங்கா ஆதரவு அணி: – தமிழருக்குப் பின்னடைவு பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தோற்கடிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்காவுக்கு நல்ல செய்தி என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், முன்னைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் ஆதரவு கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களான, லீ ஸ்கொட் மற்றும், நிக் டி பொய்ஸ் ஆகிய இருவரும், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். …
-
- 0 replies
- 467 views
-
-
பிரித்தானியத் தேர்தலில் பிரதமர் கமரனின் வெற்றி: ஓர் கண்ணோட்டம் கரு ஐக்கிய இராச்சியத்தில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாதக் கட்சி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்திருப்பதுடன், அதன் தலைவர் டேவிட் கமரன் மீண்டும் பிரதமராகியிருக்கிறார். பொருளாதாரம் அபிவிருத்தி, தேசிய சுகாதார சேவைகளைத் தரப்படுத்துதல், குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்த அங்கத்துவம் போன்ற மிக முக்கியமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இம்முறைத் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கொள்கை ரீதியாக ஆளும் கூட்டணிக்கட்சிகளுக்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் அற்றதொரு நிலையில் மக்கள் த…
-
- 0 replies
- 340 views
-
-
நேபாளத்தில் 3 புதிய பூமியதிர்ச்சி சம்பவங்கள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளன. அந்நாட்டை கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தாக்கிய பாரிய பூகம்பத்தில் சிக்கி பலியானவர்கள் தொகை 8,019 ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து ஏற்கனவே 150 க்கு மேற்பட்ட பூமியதிர்ச்சிகள் அந்நாட்டை தாக்கியுள்ளன. மேற்படி பூமியதிர்ச்சி சம்பவங்களில் சிக்கி 16,033 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்மண்டு நகரின் கிழக்கே சிந்துபல்சொக் மாவட்டத்தில் 4.2 ரிச்டர் பூமியதிர்ச்சியும் உதயபூர் மாவட்டத்தில் 4 ரிச்டர் பூமியதிர்ச்சியும் சிந்துபல்சொக்கிற்கும் திபெத்துக்குமிடையில் 4,4 ரிச்டர் பூமியதிர்ச்சியும் தாக்கியுள…
-
- 0 replies
- 228 views
-
-
மகாதிரிடம் நஜிப் கூறுகிறார்: நான் உதவினேன், இப்போது நீங்கள் உதவுங்கள் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் தாக்குதல்கள் பற்றி இதுநாள் வரையில் மௌனமாக இருந்த வந்த பிரதமர் நஜிப் முதல் முறையாகத் திருப்பித் தாக்க முனைந்துள்ளார். தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை, பதவி விலகப் போவதில்லை என்று அவர் சூளுரைத்தார். 1987 ஆம் ஆண்டில், மகாதிர் கிட்டத்தட்ட அம்னோ தலைவர் பதவியை இழக்கும் தருவாயில் இருந்த போது தாம் அவருக்கு உறுதியான ஆதரவு அளித்ததைச் சுட்டிக் காட்டிய நஜிப், அவர் இப்போது தமக்கு உதவ வேண்டும் என்றார். மகாதிரால் அதனைச் செய்ய இயலாது என்றால், அவர் கூச்சல் போடக் கூடாது என்று நஜிப் மேலும் கூறினார். 1987 ஆம் ஆண்டில், அவரை ஆதரித்தவர்களில் தாமும் ஒருவர் என்று கூறிய நஜிப், “அ…
-
- 0 replies
- 226 views
-
-
'வரி அறவீடு மற்றும் சமூகநல நிதி அதிகாரங்கள் வேண்டும்' ஸ்காட்லாந்து பிராந்தியத்துக்கு புதிய அதிகாரங்களை கோரி ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சியின் (எஸ்என்பி) தலைவி நிக்கோலா ஸ்டர்ஜன் புதிய அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த வாரம் நடந்த பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் ஸ்காட்லாந்தில் எஸ்என்பி கட்சி பெருவெற்றி பெற்றது. வரி அறவீடு மற்றும் சமூகநல நிதி போன்ற அதிகாரங்களை ஸ்காட்லாந்துக்கு பகிர்ந்தளிப்பதற்கு பிரதமர் டேவிட் கமெரன் முன்னிரிமை அளிக்க வேண்டும் என்று நிக்கோலா ஸ்டர்ஜன் கோரியுள்ளார். டேவிட் கமரெனின் பழமைவாதக் கட்சி (கன்செர்வெட்டிவ்) தனிப் பெரும்பான்மை பலத்துடன் பிரிட்டனில் ஆட்சியமைத்துள்ளது. ஆனால், பிரதமர் கமெரனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பு தெரிவ…
-
- 0 replies
- 253 views
-
-
சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு ; பலர் பலி ; பயங்கரவாதிகள் சதியா என விசாரணை சுவிட்சர்லாந்தில் ஒரு குடியிருப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியானதாக தகவல் வந்துள்ளது. ஆனால் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. சம்ப இடத்தில் பலர் இறந்து கிடப்பதாக மட்டும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. சுவிஸ்சில் ஷூரிச் பகுதியின் வடமேற்கு பகுதியான வியர்லிங்கன் டவுண் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடும் துப்பாக்கி சப்தம் கேட்டது. இதில் பலர் காயமுற்றுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரமும் இன்னும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் போலீசார் முற்றுகையிட்டுள்ளனர் . இந்த சம்பவத்தில் பயங்கரவாதிக…
-
- 0 replies
- 338 views
-
-
'நாடு மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது': பிரதமர் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பர்னில் ஒரு மாதத்துக்குள் இரண்டாவது தடவையாக நடக்க இருந்த பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். வீடொன்றிலிருந்து உள்ளூரில் தயாரிப்பான மூன்று வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வெடிகுண்டுகள் அருகிலுள்ள மைதானமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள 17-வயது இளைஞர் ஒருவர் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஆஸ்திரேலியா மிகவும் மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் டோனி அப்பொட் கூறியிருக்கிறார். கடந்த …
-
- 0 replies
- 292 views
-
-
பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி [ வெள்ளிக்கிழமை, 08 மே 2015, 05:50.53 AM GMT ] [ புதினப்பலகை ] பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சற்று முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவி்ன் படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த, உமா குமரனுக்கு 19,911 வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள 331 முடிவுகளில்,136 இடங்களை தொழிற்கட்சியும், 119 இடங்களை கொ…
-
- 13 replies
- 995 views
-
-
மது போதையில் கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து, மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மேலும், மும்பை விசாரணை நீதிமன்றத்திடம் ரூ.30,000 பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நடிகர் சல்மான் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சல்மான் கானின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ள நிலையில், அவர் விடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2002-ல் இந்தி நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டியதில் ஒருவர் பலியான வழக்கில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை பரப…
-
- 7 replies
- 3k views
-
-
வடக்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் நோர்வே மற்றும் பிலிபைன்ஸ் தூதுவர்கள் இருவர் உட்பட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். குறித்த இராணு ஹெலிகொப்டர், அவசரமாக தரையிறக்க முற்பட்ட போது வெள்ளிக்கிழமை(08) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் தூதுவர்களின் மனைவிகள் இருவர் மற்றும் பாகிஸ்தானின் இராணுவ விமானிகள் இருவரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். சுற்றுலா திட்டமொன்றை ஆரம்பித்து வைப்பதற்காக காஷ்மீர் பிராந்தியத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.tamilmirror.lk/145671#sthash.k1a8pPZ9.dpuf
-
- 1 reply
- 464 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு உணவு மற்றும் வழங்கு பொருட்களை எடுத்துச் சென்ற ஆளற்ற கலன் ஒன்றுடன் ரஷ்ய விண்வெளி பொறியாளர்கள் தொடர்பை இழந்துவிட்டார்கள் . ப்ரோக்ரஸ் என்ற இந்த சரக்குக் கலன் இப்போது மூன்று டன்கள் எடையுள்ள உணவு மற்றும் கருவிகளுடன் கட்டுப்பாடற்ற வகையில் விண்ணில் சுழன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. ரஷ்ய விண்வெளித் திட்ட விஞ்ஞானிகள் இந்த கலனுடன் மீண்டும் தொடர் ஏற்படுத்த இன்று முயல்வார்கள் ஆனால் இந்தக் கலனின் பேட்டரிகள் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் செயலிழந்துவிடக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னர், இந்தக் கலன் கட்டுப்படுத்த முடியாத வகையில் இறங்கி, பூமியின் சூழலுக்குள் விழுந்து விடு. ஆனால் சர்வதேச விண்வெளி நில…
-
- 2 replies
- 549 views
-
-
கார் விபத்து வழக்கு: சிறையிலிருந்து தப்பிய கைதி 56 ஆண்டுக்குப் பின் கைது! அமெரிக்காவில் கார் விபத்து ஒன்றில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தப்பிய கைதி ஒருவரை 56 ஆண்டுகளுக்குப் பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர். ஓஹியோவைச் சேர்ந்தவர் பிராங்க் பிரஷ்வாட்டர்ஸ் (79). இவர் கடந்த 1957-ம் ஆண்டு காரில் சென்றபோது ரோட்டில் நடந்து சென்றவர் மீது மோதினார். அதில் காயமடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பிராங்க் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பிராங்கிற்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட பிராங்க், அங்கிருந்து தப்…
-
- 2 replies
- 406 views
-
-
கனேடிய தேர்தல் செய்தி - ஓக்ரிடஜ்-மார்க்கம் [Oak Ridges and Markham] பிரதேச மக்களிற்கான வாக்களிப்பு பஸ் வசதிகள்: [Thursday 2015-05-07 19:00] தொகுதியில் இன்று இடம்பெறவுள்ள புரோகிரசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தேர்தலில் அங்கத்துவர்கள் வாக்களிப்பதற்கான பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத் தொகுதியில் அங்கத்துவர்களாகப் பதிவு செய்த உறுப்பினர்களில் ஏறக்குறைய 80 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் பகுதியில் வாக்களிப்பு நிலையம் இல்லாமல் மிக நீண்ட தொலைவில் வைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணமாகும். Bus schedule: [1] From Markham Babu Catering (McCowan and Bur Oak): First bus leaves at 2:30 pm 2nd bus leaves at 4:30 p…
-
- 0 replies
- 239 views
-
-
மே 7ம் தேதி இங்கிலாந்து பொதுத் தேர்தல்: - யாருக்கு வெற்றி ! [Tuesday 2015-05-05 20:00] நாளைய மறுநாள், மே 7ம் தேதி, இங்கிலாந்து பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தான் வரும் ஐந்தாண்டுக்கு இங்கிலாந்தை எந்தக் கட்சி ஆட்சி செய்யப்போகிறது என்று தீர்மானிக்கும். இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்திருக்கும் புதிய இளவரசியால் இங்கிலாந்தில் அரசியல் பரபரப்பு கொஞ்சம் தனிந்திருக்கிறது. இருந்தாலும், இந்த முறை எந்தக் கட்சி வெற்றிப் பெறும், என்று இணையங்களில் மக்களிடம் கருத்து கேட்டி கணிக்கப்பட்டு வருகின்றன. அப்படி YouGov என்ற பிரபல இணையம் மேற்கொண்ட கருத்து கணிப்பின் முடிவில் ஒரு அதிர்ச்சி கரமான முடிவு கிடைத்துள்ளது. இங்கிலாந்து தேர்தலில் மொத…
-
- 2 replies
- 757 views
-
-
இலங்கை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை, கனடியப் பராளுமன்றத்தில் பற்றிக் பிரவுண். முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இன்று பற்றிக் பிரவுண். (Patrick Brown) கனடியப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார். மே 2009ல் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான அவர்களின் உறவுகளுடன் கைகோர்த்து நின்றவன் என்ற வகையில் இதனைக் குறிப்பிடுகின்றேன் எனவும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்றும், இலங்கை அரசு இன்னமும் படுபாதகமான மனிதவுரிமை மீறல்கள் குறித்த எந்நதவொரு முன்னேற்த்தையும் அடையவில்லையெனவும், கனடியத் தமிழர்கள் கனடாவின் கலாச்சா…
-
- 1 reply
- 252 views
-
-
குடி வெறியில் கார் ஓடி, பாதையோரம் படுத்திருந்த ஒருவரை கொன்று, இருவரை காயப்படுத்தி அங்கிருந்து ஓடிவிட்ட சல்மான் கான், இன்று, 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பம்பாய் நீதிமன்றில் உடனடியாகவே கைதானார். இது வக்கீலீன் மன்றாட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
-
- 12 replies
- 942 views
-
-
சிங்கப்பூரில் இன்று திறப்பு விழா காணும் இந்திய பண்பாட்டு மையம். இந்திய கலாச்சாரம், வரலாற்றினைச் சிறப்பிக்கும் வகையில் அரிய காட்சிப் பொருட்களைக் கொண்டு சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய பாரம்பரிய மையத்தினை, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் இன்று திறந்து வைக்கிறார். சிங்கப்பூர் அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்திய பாரம்பரிய மையத்தினை, அந்நாட்டின் தேசிய பாரம்பரிய வாரியம் நிர்வகிக்கும். இம்மையமானது, இந்திய சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இந்தியர்களின் பரந்துபட்ட பன்முக வரலாற்றைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ளவும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். சிங்கப்பூரில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் வசிக்கக் கூடிய லிட்டில் இந்தியாவின் இதயப்பகுதியில், புதிதாகக் கட்டப்பட்ட நான்க…
-
- 0 replies
- 188 views
-
-
தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 2014-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலைய விருது கிடைத்துள்ளது. ஜோர்டானில் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற சர்வதேச ஏர்போர்ட் கவுன்சில் ஆசிய/பசிபிக்/ உலக ஆண்டுக் கூட்டத்தில் விமான நிலைய சேவைத் தரம் விருதை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வென்றது. விமான நிலைய சேவை தர அமைப்பின் 300 உறுப்பினர்களின் தர நிலைகளின் படி 5 புள்ளிகளுக்கு டெல்லி விமான நிலையம் 4.90 புள்ளிகள் பெற்றதையடுத்து இந்த விருதை வென்றது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். அதாவது, ஆண்டு ஒன்றிற்கு 2 கோடியே 50 லட்சம் முதல் 4 கோடி பயணிகளை நிர்வகித்த விதம் என்ற வகைமையின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் தர…
-
- 18 replies
- 1k views
-
-
டுபாயில் தண்ணீர் உலகத்துக்குக் கீழே கட்டப் படவுள்ள டென்னிஸ் மைதானம்! டுபாய் நகரம் உலகில் மிக அதிகளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் நகரம் என்பதுடன் அங்குள்ள உலகின் மிக உயரமான பூர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் பால்ம் தீவுகள் என்பவை உலகப் புகழ் பெற்றவை என்பது நீங்கள் அறிந்திருக்கக் கூடும்! அறியாத புதிய தகவல் ஒன்று! அதாவது உலகிலேயே முதன் முறையாக தண்ணீர் உலகத்தின் (water world) கீழ் மீன்களும் கடல் வாழ் உயிரினங்களும் சூழ அதன் கீழே டென்னிஸ் மைதானம் டுபாயில் அமைக்கப் படவுள்ளது. போலிஷ் கட்டடக் கலைஞரான 30 வயதாகும் கொட்டாலா என்பவரது கனவுத் திட்டமாக இது அமையவுள்ளது. எனினும் இதை நிறைவேற்ற பலத்த சவால்கள் உள்ளதாக சில பொறியியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மிக நீண்ட…
-
- 13 replies
- 846 views
-
-
கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார். இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து தனது திறமைகளில் சார்ஜன்ட் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பதிகாரி பதவிகளிற்குத் தரமுயர்த்தப்பட்ட நிசாந்தன் துரையப்பா தற்போது பொலிஸ் அத்தியட்சராக பணிபுரிந்து வருவதோடு, அப் பிரதேசத்திலுள்ள தொண்டார்வ நிறுவனங்களிலும் தன்னை இணைத்துச் செயற்பட்டு உதவி வருகின்றார். கனடாவின் பல பிரதேசங்களிலிரும் பணிபுரியும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கனடிய மனிதவுரிம…
-
- 7 replies
- 547 views
-
-
இலங்கை வம்சாவளி வேட்பாளரை சுடுவேன் என அச்சுறுத்திய பிரித்தானிய சுதந்திர கட்சி வேட்பாளர்! [Wednesday 2015-05-06 08:00] பிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கை வம்சாவளி வேட்பாளரை சுடுவேன் என்று அச்சுறுத்திய, வேட்பாளர், ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான இலங்கை வம்சாவளி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ரொபட் பிலே என்ற இந்த வேட்பாளர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. வடகிழக்கு ஹம்செயார் பகுதியின் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளரான ரணில் ஜெயவர்த்தனவுக்கே இவர் அச்சுறுத்தல் விடுத்துள்…
-
- 4 replies
- 358 views
-
-
தங்க நகைகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ள வெள்ளை உலோகங்களைக் கண்டுபிடிக்க உதவும் எக்ஸ்.ஆர்.எப். கருவி உலக அளவில் இந்தியாவில் தான் தங்கம் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 880 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக அளவில் ஒப்பிடும்போது இது 14 சதவீதம். இந்தியாவில் 2018-ம் ஆண்டுக்குள் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கோடி அளவுக்கு தங்க நகைகளின் வர்த்தகம் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுக் கூறுகின்றனர். தங்கம் மீதான ஆசை, தங்கம் இறக்குமதி, தங்கத்தின் புழக்கம் அதிகம் இருப்பதுபோல, தங்கத்தில் கலப்படமும் இங்கு அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக தங்கத்தில் செம்பு, வெள்ளி உலோகங்கள் கலந்தால் தான், விரும்பிய வடிவத்தில் அதை நகையாக செய்யமுடியும். இன…
-
- 0 replies
- 314 views
-
-
சோமாலியாவுக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டார் ஜோன் கெர்ரி இன்று செவ்வாய்க்கிழமை சோமாலியாவின் தலைநகர் மொகாடிஷுவினை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி திடீரென வந்தடைந்துள்ளார். இதன் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றுக்கு முதலில் பயணித்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளராக கெர்ரி பெயர் பெற்றுள்ளார். மேலும் சோமாலியாவில் இவர் கழிக்கவுள்ள தினங்களில் அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸன் ஷெயிக் மொஹமுட் உட்பட பல உக்கிய சோமாலித் தலைவர்களைச் சந்திக்கவும் உள்ளார். இதற்கு முன் சோமாலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மிக நீண்ட காலமாகக் குறைந்தது 20 வருடங்களாக அதே நேரம் மிகக் குழப்பமான வரலாறே நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெப்ரவரியில் தான் அதிபர் ஒபாமா சோமாலியாவுக…
-
- 0 replies
- 283 views
-
-
24 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்சுடன் கத்தார் ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் தங்களது ராணுவ பலத்தை கணிசமாகப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. கத்தாரும் கூடத்தான். அதே போல சௌதி அரேபியா புதிய வகை ராணுவ தளவாடங்களில் முதலீடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. தற்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ்,கத்தாருக்கு 2018ல் 24 ரஃபேல் போர் விமானங்களை விற்கிறது. வளைகுடா நாடுகள் ஒரு ஆயுதப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன, ஆனால் அது ஒரு “ ஒருவழிப்பாதை” என்று கூறுகிறார், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சிக் கழகம் என்ற ஆய்வு நிறுவனத்தில் ஆயுத மற்றும் ராணுவ செலவின்ங்களைப் பற்றி ஆய்வு செய்யும், பீட்டர் வெஸிமான். வளைகுடா நாடுகளில் அரபுத் தரப்பு ஏராளமான அளவு பணத்தை ஆயுதங்கள் வாங்குவதில…
-
- 0 replies
- 249 views
-
-
மிஸ்டர், மிஸஸ்-க்கு அடுத்து திருநங்கைகளுக்கு எம்.எக்ஸ் லண்டன், மே 5- ஆண்களை மிஸ்டர் என்றும், மிஸஸ் என பெண்களையும் குறிப்பிடுவது போல திருநங்கைகளை குறிக்க இனி எல்லா ஆவணங்களிலும் எம்.எக்ஸ் என எழுத இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கக் கட்டமாக எம்.எக்ஸ் என்ற சொல்லை ஆக்ஸ்போர்டு அதன் அனைத்து புத்தகங்களிலும் சேர்க்க உள்ளது. ஆண்கள், பெண்கள் தவிர திருநங்கைகளை அடைமொழியாக எவ்வாறு குறிப்பது என்ற குழப்பம் நீண்டகாலமாக இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து அதற்கான தீர்வைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, ராயல் மின்னஞ்சல், ஹை ஸ்டீரிட் பேங்க் மற்றும் அரசு அலுவலகங்கள் தங்கள் ஆவணங்களில் திருநங்கைகளை எம்.எக்ஸ் என குறிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. அப்படியே கொஞ்சம் கொ…
-
- 0 replies
- 285 views
-