உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26638 topics in this forum
-
2008 ஒலிம்பிக் போட்டிக்கு முன் பெய்ஜிங்கிலிருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்ற சீன அரசு திட்டம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2008 இல் நடைபெறவுள்ளன. அதற்கு முன் அந்த நகரத்திலிருந்து பிச்சைக்காரர்களையும் வீதியோர வியாபாரிகளையும் வெளியேற்றிவிட சீன அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. பிச்சைக்காரர்கள் வீதியோரக் கடைக்காரர்கள் வீதிகளில் நின்றுகொண்டு விளம்பர பிரசுரங்களை விநியோகிப்பவர்கள் ஆகியோரை வெளியேற்றி, பெய்ஜிங் நகரத்துக்குப் புதுப் பொலிவூட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கிவிட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பெய்ஜிங்கில் வாழும் ஆதரவற்ற முதியோர், உடல் ஊனமுற்றோர், அநாதைச் சிறார்கள் உள்ளிட்டோரைக் கண்டு பிடித்து, அரசு நடத்தும் இலவச …
-
- 0 replies
- 611 views
-
-
ஆசிய விளையாட்டு போட்டிக்கு இடையூறு ஏற்படுத்திய 77 குற்றவாளிகள் சுட்டுக்கொலை ஆசிய விளையாட்டு போட்டியில் இடையூறு ஏற்படுத்துவார்கள் என கருதி இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகளை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள பலம்பாங் ஆகிய நகரங்களில் இன்று ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின்றன. குறித்த போட்டிகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெரவுள்ளது.. 2 வாரங்கள் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 17 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். போட்டியை காண ஏராளமான ரசிகர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளனர். இதனால் அங்…
-
- 0 replies
- 294 views
-
-
டெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். டெஸ்லாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் மின்சார கார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி நிறுவனமான கலாஷ்னிகோவ் பழங்கால கார்களை ஒத்த வடிவமைப்பை கொண்ட மின்சார…
-
- 0 replies
- 379 views
-
-
இணையத் தளங்களைத் தணிக்கை செய்யும் கடும்போக்கு ஆட்சியாளர் தகவல் புரட்சியில், இணையத் தளங்கள் அண்மைக் காலங்களின் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. ஆனால் அடக்குமுறை ஆட்சியாளர்களின் நாடுகளில் இவை ஆட்சிக்கு எதிரான நிலைமைகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக தணிக்கைக்கும் மற்றும் தடைக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இத்தகைய நாடுகளில் இவை எவ்வாறு தணிக்கை செய்யப்படுகின்றன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பன போன்ற விடயங்கள் இன்று உலகெங்கும் பெரிதாக அலசப்படுகின்றன. வடகொரியா, சீனா, இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உட்பட, குறைந்தது கண்டத்துக்கு ஒரு நாடாவது இவ்வாறு இணையத்தை தணிக்கை செய்வதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் தகவல் தளங்களில், தகவல்களைச் சேர்த்ததற்கா…
-
- 1 reply
- 875 views
-
-
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி பிரச்சார பயணம் சென்னையைச் சேர்ந்த அமைப்பான தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி பிரசாரப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இலங்கை போரில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததற்காகவும், பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் படுகொலை செய்ததற்காகவும், மருத்துவமனைகள் மீதும் பள்ளிக்கூடங்கள் மீதும் தொடர்ச்சியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்காகவும், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகள் மூலம் தமிழர்களை கொன்று குவித்ததற்காகவும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி இந்த பிரச்சார பயணத்தை ஏற்பா…
-
- 1 reply
- 428 views
-
-
காதலிக்கு சம்பளத்தை அதிகரித்ததால் சர்ச்சை [15 - April - 2007] காதலிக்கு 31 ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் சம்பளத்தை உயர்த்தி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் உலக வங்கித் தலைவர் உல்போவிட்ச். ஈராக்கிற்கு எதிரான போரின் போது, அமெரிக்க இராணுவ கொள்கைகளை வகுத்ததில் முக்கிய பங்காற்றியவர் பால் உல்போவிட்ச். அப்போது, பென்டகனில் துணைத் தலைவராக இருந்தார். `ஈராக்கிற்கு எதிராக புஷ்ஷுக்கு விவகாரமான யோசனைகளை வழங்கியது இவரே' என கடும் விமர்சனங்கள் அப்போது எழுந்தன. விமர்சனங்களுக்கு மத்தியில், 2005 இல் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மனைவியை பிரிந்து வாழும் உல்போவிட்ஸுக்கு தற்போது வயது 63. உலக வங்கி தலைவர் பொறுப்பை ஏற்ற நேரத்தில் ஷாஹா ரிஸா என்ற 53 வயது பெண்மணியுடன…
-
- 6 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 கருப்பினத்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளோரிடர் ஜெக்சன்வெலி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், இரு ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1346921
-
- 1 reply
- 612 views
-
-
வாஷிங்டன், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலம் மறைமுக தாக்குதல்கள் நடத்திவருகிறது. எல்லையில் நடத்தப்படும் பெரிய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மிகப்பெரிய ராணுவ தாக்குதல் எடுக்கப்பட்டால் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ஆணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு வல்லூநர்கள் அந்நாட்டு செனட் சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் வலிமையான அரசு மற்றும் 26/11 போன்று மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற இந்திய மக்களின் அழுத்தம், இரு நாடுகள் இடையிலான உறவுகள் ஓரு அணுஆயுத போருக்கான ஆபத்தை அதிகரிக்கலாம், குறிப்பாக பாகிஸ்தானிடம் இருந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையை பெரிய பேரழிவு அமெரிக்கா, இஸ…
-
- 0 replies
- 169 views
-
-
பட மூலாதாரம்,ALAMY/CANADIAN PRESS படக்குறிப்பு, யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடா நாடாளுமன்றத்திற்கு வந்த போது யாரோஸ்லாவ் ஹன்கா (வலது) அவையில் கௌரவிக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிஃப் மற்றும் மேக்ஸ் மாட்சா பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைக்காகப் போர் புரிந்த யுக்ரேனைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகு அழைப்பு விடுக்கப்பட்டது "கடும் சங்கடத்தை" ஏற்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். யுக்ரேன் அதிபர் வெள்ளிக்கிழமையன்று கனடாவுக்கு வந்த போது, நாடாளுமன்ற பொது அவையில் (ஹவுஸ் ஆ…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
இந்தியா அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தத்தில் 90 சதவிகித முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், தற்போதுள்ள வேறுபாடுகளை களைய இரு நாடுகளும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட ஓரிரு வாரங்களில் தாம் டெல்லி செல்ல இருப்பதாகவும், அப்போது, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள ஹெரிடேஜ் பவுண்டேஷனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பர்ன்ஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக க…
-
- 0 replies
- 639 views
-
-
ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அல் கொய்தா அமைப்பினர் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் புகழ்பெற்ற கேரள கோயில்களான குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மற்றும் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்தவர்கள் தாங்கள் அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் இந்தக் கடிதம் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் குருவாயூர் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் கிடைத்தவுடன் குருவாயூர் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்து…
-
- 1 reply
- 532 views
-
-
கணவரின் காதல்.. திருமணத்தன்றே தாலியைக் கழற்றி வீசிய பெண் கல்யாணம் செய்து கொண்ட பின்னர் தனது கணவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அந்தப் பெண்ணை அவர் கர்ப்பிணியாக்கியதும் தெரிய வந்ததால் தாலியைக் கழற்றி வீசி விட்டுச் சென்ற சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை அருகே உள்ள திருநீர்மலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். கூலி வேலை பார்த்து வந்த அவருக்கும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த கனகவல்லி என்ற பெண்ணுக்கும், நேற்று காலை திருநீர்மலை கோவிலில் கல்யாணம் நடந்தது. கல்யாணம் ஆன சில நிமிடங்களில் லட்சுமி என்ற பெண் போலீஸ் புடை சூழ அங்கு வந்தார். இதனால் கல்யாண சந்தோஷத்தில் இருந்த இரு வீட்டாருக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. போலீஸாருடன் வ…
-
- 6 replies
- 1.8k views
-
-
திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை, அதன் 6வது ரகசிய அறையிலிருந்தவற்றில் பலமுறை திருவிதாங்கூர் மன்னர் உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கடத்தி சென்றுள்ளார் என்று கேரள முதல்வர் முதல்வர் அச்சுதானந்தன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார். மொத்தம் உள்ள 6 அறைகளில் 5 அறைகளைத் திறந்து பார்த்து விட்டனர். அவற்றில் பதுங்கிக் கிடந்த பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. இந்த நிலையில் 6வது அறையைத் திறக்க மட்டும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து தேவ பிரஸ்னம் பார்க்க மன்னர் மார்த்தாண்ட வர்மா உத்தரவிட்டார். அப்போது இந்த அறையைத் திறந்தால், திறப்பவரின் வம்சமே அழிந்து போய் விடும் என ஜோதிடர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில் 6வது அறையில் இருந்த பொக்க…
-
- 0 replies
- 615 views
-
-
காசா மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன என அமெரிக்க தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் அடியில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த ஹமாஸ் அங்கிருந்தே இஸ்ரேலின் மீது தாக்குதல்களை திட்டமிட்டது என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மருத்துவமனையின் கீழ் உள்ள சுரங்கங்களில் இருந்து செயற்படுகின்றது என இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளமை இதுவே முதல்தடவை. எனினும் ஹமாஸ் இதனை நிராகரித்துள்ளது. அமெரிக்காவிடம் பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புலனாய்வு தகவல்கள் உள்ளன…
-
- 27 replies
- 2.1k views
- 1 follower
-
-
வங்களாவிரிகுடாவில் அமெரிக்கா உட்பட 4 நாடுகள் கடற்படை பயிற்சி வீரகேசரி இணையம் வங்காள விரிகுடாவில் அமெரிக்கா , ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் இன்று பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். 27 கப்பல்களும் படகுகளும் இப் பயிற்சியில் பயன்படுத்தப்படவுள்ளன. இக் கடற்படைபயிற்சிகள் மிக பெரிய அளவில் முன்னெடுக்கப்படுவதுடன், நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்தி படை பலத்தை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்படுகிறது.வங்காள விரிகுடாவில் இடம் பெறும் இப்பயிற்சிகள் இந்தியாவின் கிழக்கு பகுதியிலிருந்டு ஆரம்பித்து அந்தமான் மற்றும் இந்தோனேஷியா வரை இஅடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 5 replies
- 1.3k views
-
-
Published By: RAJEEBAN 15 MAR, 2024 | 10:42 AM மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகு dinghy நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளனர். 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பின் படகுகள் இவர்களை காப்பாற்றியுள்ளன. லிபியாவின் ஜாவியா கடற்கரையிலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும் பலநாட்களின் பின் மீட்கப்பட்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். படகு பயணத்தை ஆரம்பித்து மூன்று நாட்களின் பின்னர் அதன் இயந்திரம் பழுதடைந்ததாகவும் இதனால் தாங்கள் நடுக்கடலில் தத்தளித்ததாகவும் உயிருடன் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை தரும் வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து: சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை தருவோருக்கு சிறை புதிதாக கொண்டுவரப்படும் குடிவரவு சட்டமூலம் ஒன்றின் அடிப்படையில், இங்கிலாந்தில் உள்ள வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் உரிமையை இழக்கும் பட்சத்தில் அவர்களை வீட்டில் இருந்து வெளியேற்ற முடியும். வாடகைக்கு குடியிருப்போரின் அரசியல் தங்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் இடத்து, சில நேரங்களில் நீதிமன்றங்களின் உத்தரவின்றியே அவர்களுடைய வாடகைக்கான ஒப்பந்தத்தை வீட்டு உரிமையாளர் ரத்துச் செய்யவும் முடியும். வாடகை ஒப்பந்தங்களை செய்துகொள்வ…
-
- 1 reply
- 490 views
-
-
சுவிற்சர்லாந்து நாட்டு பிரஜையொருவர் அந்நாட்டில் நடாத்தப்படும் தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார். சுவிற்சர்லாந்து நாட்டில் பொருளியல் வணிகத்துறையில் முதுகலைமானி நிலையினை நிறைவு செய்துள்ள உறோயர், பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தமிழ் கற்றுவருகின்றார். வளர்நிலை ஒன்றில்(ஆண்டு ஒன்றில்) கற்கும் இவரை சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படி பாடசாலை அதிபர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி விரும்பி விண்ணப்பித்து பரீட்சையில் தோற்றி நூறு புள்ளிக்கு நிகரான ஆறு புள்ளி பெற்றுள்ளார். மேலும் இவர் எழுத்து, பேசுதல், கேட்டுவிளங்குதல், வாசிப்பு நிலைகளிலும் மிகச்சிறப்பான தகமை …
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
பாலஸ்தீனம் : தம்மை ஆளும் திறன் அவர்களுக்கு உள்ளதா? அமெரிக்க அதிபரின் மருமகனும் மத்திய கிழக்கிற்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆலோசகரும் பிறப்பால் யூதருமான கூச்னர் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு முக்கிய கேள்வி முன்வைக்கப்பட்ட்து. அதற்கு கூறிய பதிலில், பாலஸ்தீனத்துக்கு தன்னை தானே ஆளும் உரிமை உள்ளது ஆனால், அவர்களுக்கு அந்த திறமை இருக்கின்றதா? என்ற ஐயப்பாட்டை முன்வைத்தார். மேலும் கூறுகையில், பாலஸ்தீனத்தில் சமத்துவமான நீதித்துறை, பத்திரிகை சுதந்திரம், தனி மனித சுதந்திரம், மத சகிப்புத்தன்மை இல்லாமை போன்ற காரணங்களை முன்வைத்தார். https://www.aljazeera.com/news/2019/06/kushner-palestinians-capable-governing-190603051426199.html
-
- 2 replies
- 968 views
- 1 follower
-
-
புத்த துறவிகள் மீது சீனா துப்பாக்கிச் சூடு சீன அரசை கண்டித்து போராட்டம் நடத்திய புத்த துறவிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவில் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. விடுதலை கோரி திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும், திபெத்துக்கு முழு சுதந்திரம் வழங்க சீனாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சீன அரசின் அடக்குமுறையை கண்டித்து சீனாவில் புத்த துறவிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புத்த துறவிகள் சிலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிசுவான் மாகாணத்தில் …
-
- 2 replies
- 733 views
-
-
ஆப்கன் மருத்துவமனை மீதான தாக்குதல் தவறுதலானது: அமெரிக்க ராணுவம் ஆப்கானுக்கான அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல். | படம்: ப்ளூம்பெர்க் ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டுஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல், தவறுதலாக நேர்ந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்கமாட்டோம்" என்றும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரை தாலிபான்கள் கடந்த திங்கள்கிழமை கைப…
-
- 2 replies
- 760 views
-
-
நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா; பிரான்ஸ் மக்களிடம் கேட்ட முஸ்லிம் இளைஞர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கட்டிப் பிடித்து கண்ணீர் சிந்திய காட்சி அனைவரையும் நெகிழ்வூட்டக்கூடியதாக உள்ளது. இறுதியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் அந்த இளைஞர் பேசும் போது, ´நான் ஒரு இஸ்லாமியன்…
-
- 1 reply
- 682 views
-
-
ஆபிரிக்காவில் யானைகள் விற்பதற்கு தடை விதிப்பு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வன உயிரியல் பூங்காக்களுக்கு யானைகள் விற்கப்படுவதை தடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அழிந்துவரும் உயிரினங்களின் விற்பனையை தடுக்க ‘சி.ஐ.டி.இ.எஸ்’ என்ற சர்வதேச அமைப்பு இயங்கி வருகின்றது. இந்த நிலையில் ‘சி.ஐ.டி.இ.எஸ்’ உறுப்பு நாடுகளின் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகளில் 87 நாடுகள் ஆதரவாகவும், 29 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகிக்கொண்டது. எனினும் பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மூலம் ஆப்பிரிக்க…
-
- 0 replies
- 347 views
-
-
இந்தியர்களின் அதிருப்தியை சம்பாதித்த அமைச்சர் சாமிவேலு சொந்த தொகுதியில் (Sungai Siput) எதிர் கட்சியான நீதிக்கட்சியின் (Parti Keadilan Rakyat) Dr. ஜெயகுமாரிடம் தோல்வி கண்டார். அமைச்சர் சாமிவேலு 30 வருடங்களாக இத்தொகுதியில் உறுப்பினராகவும், அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தவர். http://www.channelnewsasia.com/stories/sou.../333757/1/.html அதே போல் சில சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட பினாங் (Penang) மாநிலத்திலும் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழக்கலாம் என கருதப்படுகின்றது ...! http://www.channelnewsasia.com/stories/sou.../333764/1/.html
-
- 6 replies
- 2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெற்றிகரமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறுவதற்கு முன்பு பல முறை அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் முடிவுகள் தெரிவித்துள்ளன. புதிய மரபணு ஆராய்ச்சி, நவீன மனிதர்கள் உயிர் வாழ நியாண்டர்தால் மனிதர்கள் முக்கியமான பங்கு வகித்தனர் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய பிறகு ஆரம்பகால ஐரோப்பிய மக்களே உலகில் ஆதிக்கம் செலுத்தும் மனித இனமாக நீண்ட காலத்திற்கு கருதப்பட்டது. ஆனால் நியாண்டர்தாலுட…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-