Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜேர்மனி- நெதர்லாந்தில் கடுமையான பனிப்பெழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும் சில நீண்டதூர இடங்களுக்கு ரயில் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேர்மனியில், மைனஸ் 7 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவாகும் என்றும் பனிப்புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெர்லின், ஹனோவர் உள்பட பல்வேறு இடங்களுக்கு மறு உத்தரவு வரும்வரை ரயில்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நெதர்லாந்தில் 9ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான அளவு பனி…

  2. [ வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012, 02:33.29 பி.ப GMT ] ஜேர்மனிக்கு இனிமேல் எண்ணெய் வழங்குவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது. இத்தகவலை அல் அலாம் என்ற அரபு மொழி என்ற ஊடகம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜேர்மனியோடு பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. அதே போன்று ஸ்பெயின் மற்றும் கிரீஸ் நாடுகளுக்கும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி விட்டது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சுமார் நூறு நிறுவனங்களோடு தனக்குள்ள வர்த்தகத்தை ஈரான் முறித்துக் கொண்டுள்ளது, ஆனால் எந்தெந்த நிறுவனங்களுடன் வர்த்தக …

    • 3 replies
    • 1.2k views
  3. ஜேர்மனிய அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளை! ஜேர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் விலைமதிப்பற்ற பழங்கால நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சக்சொனி மாகாணத்தின் தலைநகர் ட்ரஸ்டனில் ‘கிரீன் வோல்ற்’ என்ற அருங்காட்சியகம் செயற்பட்டு வருகின்றது. அங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து …

  4. ஜேர்மனி நாட்டில், ‘’பெஜிடா’’ என்ற பெயரில் வளர்ந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு எதிராக ஜேர்மனியின் ஜூதர்களுக்கான மத்திய கவுன்ஸிலின் தலைவர் பேசியுள்ளார். ஜேர்மனிய இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு யூத தலைவர் கண்டனம் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் ஒட்டுமொத்தமாக அந்த மதத்தையே இழிவுபடுத்த பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜேர்மனிய பத்திரிகை ஒன்றுக்கான செவ்வியில், ஜோசப் ஜூஸ்டர் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதற்கான பெஜிடாவின் திட்டங்கள் குறித்து ஜேர்மனியில் உள்ள றோமன் கத்தோலிக்க திருச்சபையும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அந்த இயக்கம் தோன்றிய இடமான ட்ரெஸ்டனில் திங்களன்று நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில் பல்லாயிரக் கணக்கானோர…

  5. ஜேர்மனிய குடியுரிமை சட்டத்தில் மாற்றம்! ஜேர்மனிய குடியுரிமை சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜேர்மனிய நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்தில் மூன்று சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளில் சேரும் இரட்டைக் குடியுரிமை கொண்டோரின் குடியுரிமை பறிக்கப்படும். எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் சேரும் இரட்டைக் குடியுரிமை கொண்டோர் தங்கள் ஜேர்மன் குடியுரிமையை இழக்க நேரிடலாம். இந்த விதி இரட்டைக் குடியுரிமை கொண்ட வயது வந்தோருக்கு மட்டுமே, இதனால் சிறுவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். பலதார மணம் புரிவோருக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்கப்ப…

  6. ஜேர்மனிய திரையரங்கில் சுட்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை மேற்கு ஜேர்மனியில் ஒரு சினிமா திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய திரையரங்கில் துப்பாக்கிதாரியை சுற்றிவளைத்த போலிஸார் பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில் அந்த நபர் ஒரு வேட்டையாவது சுட்டதாக ஜேர்மனிய ஊடகங்கள் கூறின. 20 பேராவது காயமடைந்ததாக முன்னர் கூறப்பட்டதை போலிஸார் மறுத்துள்ளனர். அந்த நபர் ஆட்களை பணயமாக பிடித்து வைத்திருந்ததாக நம்பிய போலிஸார் அங்கு வேகமாக நுழைந்ததாக உள்துறை அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160623_germantattack

  7. ஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்! ஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு அனுப்பிய ஒருவரை அந்நாட்டு சட்ட வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அவர், பன்டெஸ்ரக்கின் கட்டத்தின் மின்சார உபகரணங்களைப் பராமரிப்பதற்காக அனுமதியளிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதுடன் தனது பணியின்போது குறித்த கட்டடத்தின் திட்டங்களுடன் கூடிய கோப்புகளைப் பெற்றிருந்தார் என அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கக்கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சட்ட வல்லுனர்களின் …

  8. ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் கால­மானார் ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் தனது 82 ஆவது வயதில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கால­மானார். அந்­நாட்டில் அர­சியல் மற்றும் சமூக சீர்­தி­ருத்­த­மொன்றை வலி­யு­றுத்­தி­யதன் மூலம் அவர் அங்­குள்ள மக்­களின் மனதில் நீங்­காத இடத்தைப் பிடித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் 1994 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1999 ஆம் ஆண்டு வரை அந்­நாட்டின் வைப­வ ­ரீ­தி­யான, அதே­ச­மயம் செல்வாக்குமிக்க ஜனாதிபதி பதவியை வகித்தார். http://www.virakesari.lk/article/15334

  9. ஜேர்மனியிடமிருந்து... முக்கிய இறக்குமதிக்கு தடை விதித்தது சீனா! ஜேர்மனியில் இருந்து மற்றும் பன்றி தொடர்பான பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்த தடையை சீனாவின் சுங்க நிறுவனம் மற்றும் அதன் விவசாய அமைச்சகம் ஆகியன இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளன. கடந்த வாரம் காட்டுப் பன்றியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதை ஐரோப்பிய நாடான ஜேர்மனி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக சீனா குறிப்பிட்டுள்ளது. கொடிய பன்றி நோய்க்கு எதிராக போராட வேண்டியுள்ள நிலையில், சீனாவுக்கான மூன்றாவது பெரிய பன்றி இறைச்சி வழங்குநரான ஜேர்மனியிமிருந்து பன்றி குறித்த இறக்குமதியை சீனா தடை செய்துள்ளது. இந்தத் தடை யை ஏ…

  10. Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 04:49 PM ஜேர்மனியின் கடற்பரப்பில் இரண்டுசரக்குகப்பல்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன. ஜேர்மனியின் வடக்குகிழக்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரிட்டன் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த வெரிட்டி என்ற கப்பல்பஹாமாவை சேர்ந்த பொலைசி என்ற கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரிட்டி கப்பல் மூழ்கியுள்ளது அதன் ஏழு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என ஜேர்மன் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆறுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/167667

  11. ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதி துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்:- ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமுற்றோரில் பொலிஸார் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தரப்பினர் அவருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் மீது அங்கிருந்த பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் படுகாயம் அடைந்த …

  12. ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் தெரிவு ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier ) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புச் சபையால் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சமூக ஜனநாயகவாதியான இவர், ஜேர்மனியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்க முன்பு ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வால்ட்டருக்கு ஆதரவாக 931 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நி…

  13. ஜேர்மனியின் மியூனிக் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை [ Friday,1 January 2016, 05:59:33 ] ஜேர்மனின் மியூனிக் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அந்த நாட்டுப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் மக்களை ஜேர்மன் பொலிஸார் கோரியுள்ளனர். நகரின் இரண்டு பிரதான புகையிரத நிலையங்களில் ஐ.எஸ் ஆயுததாரிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரதான புகையிரத நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், குறித்த நிலையங்களில் புகையிரம் தரிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத…

  14. ஜேர்மனியின் முன்னணி விமான நிறுவனமான லுஃப்தான்சா 22,000பேரை ஆட்குறைப்பு செய்கிறது! கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் விமான பயணத்தின் சரிவை சமாளிக்க போராடுவதால் ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக, ஜேர்மனியின் முன்னணி விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) தெரிவித்துள்ளது. இதற்மைய நிறுவனத்தில் பணிபுரியும் 22,000பேரை பணியிலிருந்து நீக்குவதற்கு லுஃப்தான்சா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 50 சதவீதமானோர் ஜேர்மனியில் உள்ளவர்கள் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நெருக்கடிக்குப் பிறகு சுமார் 100இற்கும் குறைவான விமானங்களே சேவையில் ஈடுபடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லுஃப்தான்சா குழுமத்தில் முடிந்தவரை பல வேலைகளைப் பாதுகாக்க வழி வகுப்பதே இதன் நோக்கம் என நிறு…

    • 1 reply
    • 462 views
  15. ஜேர்மனியியில்(பிராங்பேட்டில்) இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிராங்க்பேர்ட் நகரில் இரண்டாம் உலகப் போரில் போடப்பட்ட குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சக்தி வாய்ந்த குண்டு புதைந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் காணப்படுவதனால் அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது புளொக்பஸ்ரர் என ஜெர்மனி அதிகாரிகளால் பெயரிடப்பட அந்த…

  16. ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்திலுள்ள யூத வழிபாட்டு தலத்தில் திடீர் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளதோடு அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய பொருட்களை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நடவடிக்கை இந்நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அயடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பின்னர் தப்பியோடிய மர்மநபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளதோடு, ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்…

  17. ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு: 45,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம் 1.8 தொன் எடையுள்ள இந்த குண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும். ரைன் நதியில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் கடந்தவாரம் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மழைவீழ்ச்சியின்மையால் அந்நதியின் நீர்மட்டம் குறைவடைந்தத்தை தொடர்ந்து இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் குண்டு 2 கிலோமீற்றர் சுற்றுளவிற்குள் வசிக்கும் மக்களை அனைவரையும் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர். இரு வைத்தியசாலைகள், 7 மருத்துவ சிகிச்சை நிலையங்கள், ஒரு சிறைச்சாலை ஆகியவற்றிலுள்ளவர்களும் வெளியேற்றப்படுக…

    • 4 replies
    • 945 views
  18. ஜேர்மனியில் 2 வயது குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை! [Tuesday 2017-10-24 18:00] ஜேர்மனியில் நபர் ஒருவர் தனது 2 வயது குழந்தையை தாயாரின் கண்முன்னே கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தை அடுத்து மாயமான குறித்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.hamburg மாகாணத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில்இருந்து நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் குழந்தையின் நிலை கண்டு கடும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.குழந்தை கொல்லப்பட்டு கிடந்த அறையின் ஒரு பகுதியில் இருந்து …

    • 0 replies
    • 557 views
  19. ஜேர்மனியில் 380 அடி உயரமான பல்கலைக்கழக கட்டிடம் தகர்ப்பு மேற்கு ஜேர்மனியில் பிராங்பூட்டிலுள்ள 380 அடி உயரமான பழைய பல்கலைக்கழக கட்டிடமொன்று கட்டுப்பாட்டின் கீழ் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகள் பழைமையான மேற்படி 50,000 தொன் நிறையுடைய அபி கோபுர கட்டிடத்தில் 32 ஆவது மாடியில் 1500 துளைகள் இடப்பட்டு அவற்றினுள் 950கிலோ கிராம் நிறையுடைய வெடிபொருட்கள் உட்செலுத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இது வெடி வைத்து தகர்க்கப்பட்ட ஜரோப்பாவிலேயே மிகவும் உயரமான கட்டிடமாக விளங்குகிறது. அந்தக் கட்டிடம் வெடி வைக்கப்பட்டு 10 செக்கன்களில் தரைமட்டமாகியது. மேற்படி கட்டிடத்தின் தகர்ப்பின்போது அருகிலுள்ள கட்டிடங்களுக்கு சேதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு அந்தக் கட்டிடத்…

  20. ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்! ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ற்பாலியாவின் (North Rhine-Westphalia) பிரதமரான லாசெட்டுக்கு ஆதரவாக கட்சியின் ஆயிரத்து ஒரு பிரதிநிதிகளில் 521 பேர் வாக்களித்துள்ளனர். இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக்…

  21. ஜேர்மனியில் அடைக்கலம் புகுந்தோருக்கும் ஜேர்மனியருக்கும் இடையே மோதல் ஜேர்மனியின் கிழக்குப்பகுதியில் உள்ள போற்சென்; நகரத்தில் புகலிடம் கோரிய வெளிநாட்டவர்களுக்கும் நகரவாசிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கு எதிரான குரோத மனப்பான்மையின் வெளிப்பாடாக நகரவாசிகள் புகலிடம் கோரியிருப்பவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிதீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த 80க்கும் அதிகமானவர்கள் 20க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை தாக்கியதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பதிலுக்கு தாக்கயதையடுத்து கலவரம் நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. மோதலில் ஈடுபட்ட அதி வலதுசாரி அமைப்பினர் புகலிடக்…

  22. . ஜேர்மனியில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள நாடாளுமன்ற கீழ்சபை கட்டிடத்திற்கு வெளியே அந்நாட்டின் எதிர்கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் அதிகரித்து வரும் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.…

  23. ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளங்கள் உட்பட பல பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் நோர்த்ரைன் வெஸ்டபலியா பகுதிகளில் விசேட காவல்துறையினரால் இவர்கள் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். தஜிக்கிஸ்தானை சேர்ந்த நால்வரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தலைவர் என கருதப்படும் நபர் சிறையில் உள்ளார் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் 2019 இல் ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்டனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர்களிற்கு ஜேர்மனியில் சிறிய குழுவொன்றை உருவாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர். அவர்கள் முதலில் தஜிக்கிஸ்தானில் தாக்குதலை…

    • 0 replies
    • 318 views
  24. ஜேர்மனியில் அரசியல் நெருக்கடிக்கு வாய்ப்பு புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள், ஜேர்மனியில் நேற்று (20) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தன்னுடைய அரசியல் எதிர்காலத்துக்கான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜேர்மனியில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படக்கூடும். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மன், அடுத்த சில வாரங்களுக்கு - சில வேளைகளில் மாதங்களுக்கு - அதிகாரமற்ற அரசாங்கம் போன்று செயற்பட வேண்டியுள்ளது. எனவே, முக்கியம…

  25. ஜேர்மனியில் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது By SETHU 07 DEC, 2022 | 02:14 PM ஜேர்மனியில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு சதி செய்தனர் என்ற சந்தேகத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலதுசாரி குழுவொன்றையும், முன்னாள் இராணுவ அங்கத்தவர்களும், ஜேர்மனிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இவர்கள் திட்டமிட்டனர் எனக் கூறப்படுகிறது. 13 ஆம் ஹெய்ன்றிக் இளவரசர் (Prince Heinrich XIII) எனக் கூறப்படும் 71 வயதான ஒரு நபர் இக்குழுவின் திட்டத்தில் முக்கிய நபராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.