உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி! மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய 25% வரிகள் செவ்வாய்க்கிழமை (04) முதல் அமலுக்கு வந்தன. அத்தோடு சீனப் பொருட்களுக்கான வரிகளை 20% ஆக இரட்டிப்பாக்கி, அமெரிக்காவின் முதல் மூன்று வர்த்தக பங்காளிகளுடன் புதிய வர்த்தக மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. அமெரிக்க வருடாந்திர இருவழி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட $2.2 டிரில்லியன் உயர்த்தக்கூடிய இந்த வரி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு EST (0501 GMT) மணிக்கு நடைமுறைக்கு வந்தது. இந்த வரி விதிப்புக்கு பின்னர், அமெரிக்காவிற்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை சீனா, கனடா மற்றும் மெக்சிகோ அறிவித்துள்ளன. மார…
-
-
- 9 replies
- 535 views
- 1 follower
-
-
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்யாவிட்டால் குண்டு வீசுவோம் – ட்ரம்ப் எச்சரிக்கை! ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக வொஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால், குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (30) ஈரானை அச்சுறுத்தினார். கடந்த வாரம் வொஷிங்டனுடனான நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் நிராகரித்ததிலிருந்து ட்ரம்ப் முதல் முறையாகப் பேசியபோது, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் பேசி வருவதாக அவர் NBC செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஆனால் அது குறித்து விரிவாக எதுவும் கூறவில்லை. புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுமாறு தெஹ்ரானை வலியுறுத்தி ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு ஓமன் மூலம் ஈரான் பதில் அனுப்பியது. அ…
-
- 3 replies
- 337 views
- 1 follower
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்;5 பேர் காயமடைந்தனர். புதூர் பாண்டியபுரத்தில் உள்ள இந்து பாரத் என்ற தனியார் அனல் மின்நிலையத்தில், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீப்பிடித்த நிலையில்,அது ஆலைக்குள் பரவியது. இதில் 4 பேர் பலியாகினர்;5 பேர் காயமடைந்தனர்.மேலும் பலர் உள்ளே சிக்கி இருப்பதாகவும்,அவர்களை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Vikatan NEws
-
- 3 replies
- 559 views
-
-
'எச்சரிக்கையை உதாசீனம் செய்தது பெல்ஜியம்' பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களில், விமான நிலையத்தில் தாக்குதல்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் சகோதரர்களில் ஒருவர் தொடர்பாக, தங்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை, பெல்ஜியம் உதாசீனம் செய்ததாக, துருக்கி அறிவித்துள்ளது. குறித்த சந்தேகநபரைத் தடுத்து வைத்து, அவரை நாட்டிலிருந்து வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ள துருக்கி, அவர் ஒரு 'வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளி" என்ற எச்சரிக்கையையே விடுத்ததாகத் தெரிவித்துள்ளது. ப்ரஸல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் முதலாவது தாக்குதல், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு தற்கொலைத் தாக்குதலே மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதை ம…
-
- 0 replies
- 519 views
-
-
துருக்கியில் 17 ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! துருக்கியின் வடக்கு சினாய் மாகாணத்தின் அல் அரிஷ் நகர் அல் அபேய்டெட் பகுதியில், 17 பயங்கரவாதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று (புதன்கிழமை) படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின் போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தேடுதலின் போது, இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்ததாகவும் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி இராணுவ சோதனைச் சாவடி மீது தாக்குதல்…
-
- 0 replies
- 331 views
-
-
-
- 34 replies
- 16.6k views
-
-
மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 55ஆக உள்ளது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வரை மலேசியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 25க்கும் குறைவாகவே இருந்தது. இதையடுத்து பிப்ரவரி 26ஆம் தேதி வரை, 11 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இதனால் மலேசிய அரசும் மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், திடீரென கடந்த சில தினங்களாக அங்கு கிருமித் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது. ஒரு நபரிடம் இருந்து பலருக்கு பரவிய கிருமித் தொற்று கடந்த செவ்வாய்க்கிழமை ஏழு பேருக்கும், புதன்கிழமை 14 பேருக்கும், வியாழக்கிழமை 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதை மலேசிய சுகாதார அம…
-
- 0 replies
- 813 views
-
-
ஆறாயிரம் உயிர்களை காவுகொண்ட கொரோனா: உலகநாடுகள் அதிர்ச்சி! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,400ஆக அதிகரித்துள்ளது. ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டின்படி இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டாலும், உலக சுகாதார அமைப்பு இந்த எண்ணிக்கையினை கண்காணித்து வருகிறது. அத்துடன், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 153,000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3,400பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 65இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில்…
-
- 0 replies
- 304 views
-
-
ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கு: ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் மியன்மாருக்கு எதிராக காம்பியா கடும் வாதம் Published By: Digital Desk 3 13 Jan, 2026 | 11:18 AM மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட "இனப்படுகொலை கொள்கைகள்" மூலம் அந்த இனத்தையே அழிக்க மியன்மார் முயன்றதாக காம்பியா நாடு ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியா, கடந்த 2019ஆம் ஆண்டு மியன்மாருக்கு எதிராகத் தொடர்ந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணைகள் திங்கட்கிழமை(12) நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ஆரம்பமானது. மியன்மார் இராணுவம் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அழிக்க முயன்றதாக காம்பியாவின் வெளிவிகார அமைச்…
-
- 1 reply
- 156 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் புதிய அதிபர் - ஒபாமா இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா புதன்கிழமை, நவம்பர் 5, 2008 சிகாகோ: தனது சொந்த ஊரான சிகாகோவில் கிராண்ட் பார்க் மைதானத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உணர்ச்சிகரமான உரை: நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் இந்த நாட்டுக்கு ஆற்றிய கடமைகளை இந்த நேரத்தில் எளிதாக புறம்தள்ளிவிட முடியாது. எனக்கு சரியான போட்டி தந்தாலும் என்னுடன் தனிப்பட்ட முறையில் அன்பையும்…
-
- 16 replies
- 2.4k views
-
-
மாலே: மாலத்தீவுகளில் ரூ. 2,772 கோடி செலவில் இந்தியாவின் ஜிஎம்ஆர் நிறுவனம் அமைக்க இருந்த விமான நிலையத் திட்டத்தை அந்த நாடு திடீரென ரத்து செய்துவிட்டது. இது இந்தியாவுக்கு எதிரான முடிவாகக் கருதப்படுகிறது. மாலத்தீவுகள் நாட்டின் தலைநகரான மாலேவில் உள்ள அப்துல் நசீர் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஜிஎம்ஆர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. மாலத்தீவுகளில் ஆட்சியில் இருந்த அதிபர் நசீத் காலத்தில் இந்தப் பணி ஜிஎம்ஆருக்கு ஒதுக்கப்பட்டது. டெல்லி, ஹைதராபாத்தில் மாபெரும் விமான நிலையங்களை இந்த நிறுவனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், மாலத்தீவுகளில் அதிபர் முகம்மத் வகீத் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்…
-
- 1 reply
- 934 views
-
-
முடிவிற்கு வந்தது ரஷ்யா - துருக்கி சர்ச்சை கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையில் கிளம்பிய இராஜதந்திர சர்ச்சைக்கு பிறகு, ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா பயணிகள் விமானம், துருக்கியின் சுற்றுலா தலமான ஆன்தலியா சென்றடைந்தது. ரஷ்ய அதிபர் புடின் மற்றும் துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்துவான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, ரஷ்யாவில் இருந்து துருக்கிக்கான சுற்றுலா நடவடிக்கைளுக்கு தடை விதிக்கப்பட்டது. துருக்கி அதிபர் ரசிப் தேய்ப் எர்துவன் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளதாக மாஸ்கோ கூறியதற்கு பிறகு, கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புடின் அந்த தடையை நீக…
-
- 0 replies
- 351 views
-
-
ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிப்பு அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மினியாபொலிஸ் காவல்துறையை முற்றிலும் கலைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினியாபொலிஸ் நகரில் செயற்பட்டு வரும் குறித்த காவல்துறையை முற்றிலும் கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம் என மினியாபொலிஸ் நகரின் சபை தலைவர் லிசா பெண்டர் அறிவித்துள்ளார். தங்கள் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை உருவாக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மினியாபொலிஸில், மே 25ம் திகதி, 46 வயத…
-
- 0 replies
- 271 views
-
-
துருக்கி நாட்டில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் ஒரு பகுதியினரை அரசு ஆதரவு ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியது. இந்த ராணுவப் புரட்சியை முறியடித்துவிட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட 161 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட 2 ஆயிரத்து 839 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் பிரதமர் பினாலி யில்டிரிம் கூறியுள்ளார். இ…
-
- 0 replies
- 180 views
-
-
3 ஆயிரம் பலூன்களை பறக்கவிட்டு தென்கொரியா மீது உளவியல் போர் தொடுக்கும் வடகொரியா தென்கொரியாவுக்கு எதிராக உளவியல் போர் தொடுக்கும் விதமாக 1.2 கோடிக்கும் அதிகமான துண்டுப் பிரசுரங்கள் அடங்கிய 3000க்கும் மேற்பட்ட ராட்சத பலூன்களை பறக்கவிடும் நூதன போர் முறையை மீண்டும் வடகொரியா கையிலெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில், வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள், வட கொரியாவுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பலூன்களைப் பறக்கவிட்டனர். இந்தச் செயலுக்குப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக வடகொரியா தனது எதிர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதற்கமைய, கொரிய நாடுகளுக்கு இடைப்பட்ட ஒப்பந்தத்தத்தை மீறி, பிரசாரங்களில் தேசத்துரோகிகள் ஈடுபடுகிறார்கள். …
-
- 0 replies
- 405 views
-
-
டிரம்ப்பின் மனைவி மிலானியாவின் நிர்வாண படங்களை வெளியிட்டது நியூயார்க் போஸ்ட் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டியும், கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் போஸ்ட், டிரம்ப்பின் மனைவி மிலானியாவின் நிர்வாண படங்களை தனது முதல் பக்கத்திலும், உள் பக்கங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி ஆக்ளி ஆபீஸ்" (The Ogle Office) என தலைப்பிட்டு மிலானியாவின் நிர்வாண படங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது போன்ற ஆற்றல்மிக்க அ…
-
- 2 replies
- 774 views
-
-
பிரிட்டனைச் சேர்ந்த மாடலிங் பெண் ஒருவரை, கொடூரமாக கற்பழித்து இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் கத்தியால் ஆழமாக குத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றவாளியும் பாதிக்கப்பட்ட மாடலிங் பெண்ணும் நிதிமன்றத்தில் ஆஜரானார்கள். பிரிட்டனைச் சேர்ந்த 25 வயது மாடலிங் பெண், Cheryl Maddison, கடந்த 2008ஆம் ஆண்டு Moroccan Mohamed Fadel El Anssari என்ற பயங்கர ஆசாமியால் கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்டார். பாலியல் வல்லுறவுக்குப் பின், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் இரண்டு மார்புகளுக்கு நடுவே ஆழமாக குத்தி காயப்படுத்திய்தோடு அவருடைய் உடலில் 21 இடங்களில் கத்தியால் காயப்படுத்தியுள்ளான். இதனால் ரத…
-
- 1 reply
- 838 views
-
-
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது, அதில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படை (சீல்) அதிகாரி ஒருவர் அந்த சோதனையில் தன்னுடைய பங்கு குறித்து எழுதிய புத்தகத்தின் மூலம் கிடைத்த சுமார் 7 மில்லியர் டாலர் வருவாயை விட்டுக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் புத்தகம் வெளியான 2012-ல் அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகனிடமிருந்து முறையான அனுமதி பெறவில்லை என்பதே அதற்குக் காரணம். மார்க் ஓவென் என்ற புனை பெயரில் புத்தகம் எழுதிய மாட் பிஸ்ஸோனெட், தான் எழுதிய 'நோ ஈஸி டே' என்ற புத்தகத்தின் மூலம் கிடைத்த அனைத்து லாபங்கள் மற்றும் ராயல்டி தொகைகளை விட்டுக் கொடுக்க உள்ளார். இதில், திரைப்பட உரிமைகள் மற்றும் அவர் பேசியதற்கான கட்டணங்கள் உள்ளிட்டைவையும் அடங்கும். மாட் பிஸ்ஸோனெட் பிஸ்ஸோன…
-
- 1 reply
- 538 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக புரட்சி வெடிக்கும் நிலையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அந்நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் மதகுரு காத்ரி தலைமையில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் அரசுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றமும் இன்னொருமுனையில் களமிறங்கியிருக்கிறது. இந்த சூழலில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கராச்சி விமான நிலையம் வழியே துபாய்க்கு குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு மாறுபாடாக கராச்சி விமான நிலையம் வழியாக சர்தாரியின் குடும்பத்தினர் மட்டும் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சர்தாரியின் குடு…
-
- 0 replies
- 328 views
-
-
ஒரே மாதத்தில் 950 கோடி நிதி சேகரித்த ஹிலாரி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் ஆகஸ்ட் மாதம் 143 மில்லியன் டாலர் (சுமார் 950 கோடி இந்திய ரூபா) தேர்தல் நிதி திரட்டினார். இது தொடர்பாக ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல் பிரசாரக் குழு மூத்த அதிகாரி ராபி மூக் தெரிவித்ததாவது, ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதிக்காக 23 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நிதி அளித்துள்ளனர். சராசரியாக ஒவ்வொரு ஆதரவாளரும் 50 டாலர் தேர்தல் நிதி அளித்துள்ளார். இந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 143 மில்லியன் டாலர் தேர்தல் நிதி திரட்டப்பட்டது. ஹிலாரியை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கச் செய்ய ஜனநாயகக் கட்சியின் அனைத்துத் தொண்டர்களும் மிகவும் முனைப்பாகச் …
-
- 0 replies
- 469 views
-
-
ஒபாமாவை விட புடின் சிறந்த தலைவர் : டிரம்ப் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மீண்டும் பாராட்டியுள்ளார். கோப்புப் படம் மூத்த ராணுவ பிரிவினருடன் நடந்த கேள்வி - பதில் பகுதியில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு சிறந்த தலைவர் என்று டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்தார். வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையேயான உறவில் பிரச்சனைகள் இருக்காது என்றும் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை வெளி…
-
- 0 replies
- 428 views
-
-
எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்... பாகிஸ்தானுக்கு நோ ஸ்வீட்ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று எல்லைப் பாதுகாப்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஜோரியில் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை ஒருவித அச்சத்துடனேயே கொண்டாடினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…
-
- 0 replies
- 258 views
-
-
சென்ற பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி இரவு எட்டு மணியளவில் டொரண்டோவின் Jane Street and Finch Avenue பகுதியருகே சாலையில் நடந்து கொண்டு சென்ற 24 வயது இளம்பெண் ஒருவரை இரண்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று காரில் வந்து வழிமறித்து, இளம்பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று, தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு இழுத்து சென்று இருவரும் மாறி மாறி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் டொரண்டோவையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் அவர் கூறிய அங்க அடையாளங்களை கம்ப்யூட்டரில் வைத்து பழைய குற்றவாளிகளின் பட்டியலில் பார்த்தபோது, ஒருவரை அந்த பெண் அடையாளம் காட்டினார். இதன் மூலம் இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றாவாளியின் பெயர் …
-
- 0 replies
- 408 views
-
-
யார் இந்த சோனியா காந்தி ?சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான். இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம். உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Antonia A…
-
- 0 replies
- 882 views
-
-
அமெரிக்க சனநாயகம் பிரத்தியேகமானதா? அண்மைய நாடாளுமன்றக் கலவரம் கூறும் செய்தி என்ன? – தமிழில் ஜெயந்திரன் 46 Views அமெரிக்கத் தேர்தலின் பின்னர் மாநிலங்கள் ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் செலுத்திய வாக்கை எண்ணி, ஜோ பைடனே ஐக்கிய அமெரிக்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற விடயத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு தற்போது துணை அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் மைக் பென்ஸ் (Mike Pence) ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்க காங்கிரசின் இரண்டு சபைகளையும் கூட்டினார். வழமையாக இந்த நிகழ்வு மிக எளிமையான ஒரு நிகழ்வாகவும் ஒரு மணித்தியாலத்தில் நடந்து முடிகின்ற முழுக்க முழுக்கச் சம்பிரதாயபூர்வமான ஒரு நடைமுறையாகவுமே இதுவரை இருந்து …
-
- 0 replies
- 523 views
-