உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
500 தீவிரவாதிகள் அடுத்தடுத்து தூக்கிலிடப்படுவர்: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு. இஸ்லாமாபாத்: தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் 500 பேர் இனிவரும் 2 அல்லது 3 வாரங்களில் தூக்கிலிடப்படுவர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தீவிரவாதிகளின் கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்ட்டன. இதனால் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் மொத்தம் 500 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட உள்ளனர். இப்படி தூக்கிலிடுவதால் தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தப் போரில் நிச்சயம் நாங்கள் வெல்வோம். இவ்வாறு நிசார் கூறினார். நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 4 replies
- 636 views
-
-
குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய விழாவில், இந்து மதத்திற்கு மாறிய 225 கிறிஸ்தவர்கள்! காந்திநகர்: குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில் 225 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியுள்ளனர். விஸ்வ இந்து பரிஷத் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் அரணை கிராமத்தில் சனிக்கிழமை கர் வாப்சி என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 225 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறினர். அவர்களுக்கு பகவத் கீதை பரிசளிக்கப்பட்டது. அந்த 225 பேரும் இந்துவாக மாறும் முன்பு அவர்களை பரிசுத்தமாக்க மஹா யாஞ்ன்யா என்ற யாகம் நடத்தப்பட்டதாக விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் நாது பட்டேல் தெரிவித்தார். இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி அசோக் சர்மா…
-
- 5 replies
- 959 views
-
-
டெல்லி: இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், ‘‘டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்றார். ஏற்கனவே சோனியா காந்திக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சோனியா …
-
- 21 replies
- 1k views
-
-
சமூக இணையதள புரட்சி ஓடும் ரயிலில் குடித்து விட்டு பெண்ணை கேலி செய்த நபர்கள் டிவிட்டர் உதவியால் கைது செய்யப்பட்டனர். பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று சங்கமித்ரா ரயிலில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார். அவர் பயணித்த அதே பி3 ஏசி கோச்சில் மேலும் மூன்று வாலிபர்களும் பயணித்துள்ளனர். ரயில், பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் மதுபான பாட்டிலை எடுத்து மாற்றிமாற்றி மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். மது போதையில் தங்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர். படமெடுத்த இளம் பெண் இதனால் அப்பெண் மிகவும் அதிர்ச்சியடைந்தார். சமயோஜிதமாக ஒரு வேலையை செய்தார் அப்பெண். அதாவது தனது செல்போனில் வாலிபர்கள் மது குடிப்பதையும், மது பா…
-
- 3 replies
- 724 views
-
-
பிரிட்டனைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரான யுவதி யொருவர் தென் அமெரிக்காவில் அரைநிர்வாணமாக வாழும் பழங்குடி இனத்தவர்கள் தொடர்பான ஆவணப்படமொன்றை தயாரிப்பதற்கு சென்றபோது அப்பழங்குடி இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சாரா பேகம் எனும் இந்த திரைப்பட இயக்குனர் ஈக்குவடோர் நாட்டில் ஹுவாரோனி பழங்குடியினர் தொடர்பாக அறிந்து அவர்கள் தொடர்பான ஆவணப்படமொன்றை தயாரிப்பதற்கு திட்டமிட்டார். 21 வயதான சாரா பேகம், மேற்படி படப்பிடிப்புக்காக இதற்காக தனது குழுவினருடன் ஈக்குவடோரின் காட்டுப்பகுதிக்கு சென்று ஹுவாரோனி பழங்குடியினரை சந்தித்தார். அப்பழங்குடியினருடன் பழகிய சாரா பேகம் அவர்கள் மீது…
-
- 1 reply
- 741 views
-
-
பாஜக தலைவர் சுப்ரமணியசுவாமியின் பெயரில் இயங்கும் போலி பேஸ்புக் பக்கத்தை நீக்குவதற்கு பதிலாக சுப்ரமணியன் சுவாமியின் பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டுவிட்டது. தனது பெயரில் இருக்கும் போலியான பக்கத்தை நீக்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை வைத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, பேஸ்புக் நிறுவனமும், அவரது பெயரில் இருக்கும் போலியான பக்கங்களை நீக்கும் பணியில் ஈடுபட்டது. அதில் தவறுதலாக சுப்ரமணியன் சுவாமியின் உண்மையான பக்கம் நீக்கப்பட்டுவிட்டது. போலியாக செயல்படும் பக்கம் இன்னமும் இயக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரமணிய சுவாமியின் பேஸ்புக் பக்கத்தை சுமார் 10 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். http://seithy.com/breifNews.php?newsID=123023&category=…
-
- 3 replies
- 536 views
-
-
ஜேர்மனி நாட்டில், ‘’பெஜிடா’’ என்ற பெயரில் வளர்ந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு எதிராக ஜேர்மனியின் ஜூதர்களுக்கான மத்திய கவுன்ஸிலின் தலைவர் பேசியுள்ளார். ஜேர்மனிய இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு யூத தலைவர் கண்டனம் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் ஒட்டுமொத்தமாக அந்த மதத்தையே இழிவுபடுத்த பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜேர்மனிய பத்திரிகை ஒன்றுக்கான செவ்வியில், ஜோசப் ஜூஸ்டர் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதற்கான பெஜிடாவின் திட்டங்கள் குறித்து ஜேர்மனியில் உள்ள றோமன் கத்தோலிக்க திருச்சபையும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அந்த இயக்கம் தோன்றிய இடமான ட்ரெஸ்டனில் திங்களன்று நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில் பல்லாயிரக் கணக்கானோர…
-
- 0 replies
- 424 views
-
-
இக்காலப்பகுதியில் R.I.D.E (Reduce Impaired Driving Everywhere)சோதனைகள் அதிகரித்திருப்பதால் ”குடி”மக்கள் அவதானமாகவும் இருக்கவும். அளவாக குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுங்கள் இல்லையேல் பொதுப்போக்குவரத்து மற்றும் குடிக்காதவருடன் பயணம் செய்யுங்கள். வீதிக்கு வீதி புதுமையாக வகையில் காவல்த்தறையினர் இந்த சோதனை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். முதலாவதாக காவல்த்துறையினர் உங்களிடம் பேச வரும் போது பயப்படாதீர்கள், அவர்களது கேள்விகளக்கு உடனடியாக பதிலளியுங்கள். வாகனத்தின் ஜன்னலைத் திறந்து வாகனம் ஓட்டுபவர்கள், சுவிங்ஹம் சப்பிடுவோர், காவல்த்தறையினரை கவனிக்காது வேறு எங்காவது பார்த்தவாறு கதை சொல்லுவோர் சந்தேகத்துக்கு இடமானவர்களாக கணிக்கப்படுவார்கள். - R.I.D.E சோதனையைக்கண்டால் U அடிப்ப…
-
- 8 replies
- 1.5k views
-
-
தமிழ் உள்பட எந்த மொழியையும் இனி அலுவலக மொழியாக சேர்க்க முடியாது என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லி மேலவையில் நேற்று சுதர்சன நாச்சியப்பன், தமிழ் மொழியை அலுவல் மொழியாக சேர்க்க வேண்டும் என்று தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி கூறும்போது, ‘‘பல மொழிகளை அலுவல் மொழியாக சேர்ப்பதில் பல பின்விளைவுகள் உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் உள்பட பல வசதிகள் தேவைப்படுகிறது. எனவே இனி எந்த மொழியையும் அலுவல் மொழியாக சேர்க்க முடியாது’’ என்றார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த அவர், இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனையில் …
-
- 1 reply
- 1.4k views
-
-
புதுடில்லி: கேரள மீனவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய, இரண்டு இத்தாலியர்களை, இந்தியாவிற்கு அனுப்புவதற்கான சூழல் தற்போது இல்லை என, இத்தாலி தெரிவித்துள்ளது.கடந்த, 2012ம் ஆண்டு, இத்தாலி கப்பல் மாலுமிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், கேரளாவை சேர்ந்த இருமீனவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஆஜராவார்கள் என, இத்தாலி அரசு உறுதி அளித்ததன் பேரில், மாலுமிகள் இருவரும் தாய்நாடு திரும்பினர். இந்நிலையில், ஜனவரியில் விசாரணைக்கு வரும் இவ்வழக்கில், மாலுமிகள் இருவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். அவர்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என, அண்மையில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. ஆனால், பக்கவாத நோயில் இருந்து மீண்டு வந்த மாலுமி லட்டோருக்கு, அடுத்த மாதம் இதய அறுவை சி…
-
- 0 replies
- 472 views
-
-
ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு வெகுவாகக் வீழ்ச்சியடைந்துள்ளதையடுத்து, தமது புதிய மாடல்களுக்கு முன்பதிவு செய்யும் முறையை ரெனால்ட் மற்றும் நிசான் ஆகிய இரண்டு கார் நிறுவனங்களும் அங்கு ரத்து செய்துவிட்டன. நிசான் கார் தொழிற்சாலை தங்களது மற்ற கார்களுக்கான விலைகளையும் அவர்கள் ரஷ்யாவில் அதிகரித்துள்ளனர். ரெனால்ட்- நிசான் கூட்டமைப்பு ரஷ்யாவின் கார் சந்தையில் முக்கிய இடத்தில் உள்ளது. இருந்தும் கார்களின் விற்பனை வேகமாகக் குறைந்து வருவதாகவும் இதனால் எல்லோரும் பெரும் இழப்புக்களை சந்திக்கும் நிலையில் உள்ளதாகவும் ரெனால்ட்- நிசான் கூட்டமைப்பின் தலைவர் கரோல் கோசான் தெரிவித்துள்ளார். டாலருக்கு எதிரான ரூபிளின் மதிப்பு இந்த ஆண்டு பாதியாகக் குறைந்து விட்டது. இதனால் வேறு சில கார் தய…
-
- 0 replies
- 1.5k views
-
-
அலகாபாத்: திருமணம் என்னும் தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது செல்லாது என உத்தரப் பிரதேச மாநில அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த 5 தம்பதியர்களில், கணவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். மனைவி ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். திருமணத்துக்காக கணவரின் மதமான இஸ்லாமுக்கு 5 பெண்களும் மதம் மாறியிருந்தனர். அந்த 5 தம்பதியினரும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தனர். இந்த மனுக்கள், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வானி முன்னிலையில் வி…
-
- 0 replies
- 612 views
-
-
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ராபர்ட் வதேரா ஹரியானாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அரசுக்கு சொந்தமான நிலங்களை சலுகை விலையில் பெற்று, பின்னர் மற்ற நிறுவனங்களுக்கு கைமாற்றிவிட்டு, பல நூறு கோடி ரூபாயை ராபர்ட் வதேரா சம்பாதித்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து தேர்தலிலும் எதிரொலித்தது. ஹரியானாவில் வதேரா டி.எல்.எப். நிறுவனத்துடன் நடத்திய நிலபேர விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதா அப்போது குற்றம் சாட்டியது. காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின் பேரில் முதல்வர் ஹூடா அவசர அவசரமாக…
-
- 0 replies
- 319 views
-
-
இஸ்லாமாபாத்: தாலிபான் தீவிரவாதிகளுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் பாகிஸ்தான் சிறைகளில் தற்போது தூக்குத் தண்டனை விதித்து அடைக்கப்பட்டுள்ள 3000 தீவிரவாதிகளையும் 48 மணி நேரத்திற்குள் தூக்கில் போட்டு விட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தாலிபான்களையும் முழுமையாக அழிப்போம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு வெளியே நடக்கும் குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களை பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் தூண்டி வருகிறது. நாட்டின் எல்லையிலோ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுகிறது, தீவிரவாதிகளையும் ஊடுறுவச் செய்கிறது. ஆனால் இன்று பாகிஸ்தானுக்குள் பிரச்சி…
-
- 0 replies
- 646 views
-
-
பாரீஸ்: பாலஸ்தீன தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேல் முன்னாள் அதிபர் சிமோன் பெரஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் தற்போது 'பார்வையாளர்' அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது. பாலஸ்தீனம் ஒரு தனிநாடாக ஐ.நாவில் முழுமையான உறுப்பினர் நாடாக இணைவதற்கான முயற்சிகளை அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜோர்டான் நாடு ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அதில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து 2017ஆம் ஆண்டுக்குள் விலகிக் கொள்ள வேண்டும்; பாலஸ்தீனமும் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; இதனடிப்படையில் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீ…
-
- 0 replies
- 436 views
-
-
அவுஸ்ரேலியா குயின்ஸ் லெண்ட் மாநிலத்தில் உள்ள மனோர என்னும் இடத்தில் ஒரு வீட்டுக்குள் இருந்த 18 மாதம் தொடக்கம் 15 வயது வரைக்கும் இடைப்பட சிறுவர்கள் 8 பேர் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணைகள் நடத்தப் படுவதாக குயின்ஸ் லாண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர் . குறித்த சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பலத்த காயங்களுடன் 34 வயது மதிக்கக்தக்க பெண் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணைகள மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். http://virakesari.lk/articles/2014/12/19/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0…
-
- 0 replies
- 478 views
-
-
பாட்னா: பீகாரில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். நேபாள் மற்றும் இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள பீகார் மாவட்டங்களை மையமாகக் கொண்டு வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. பாட்னா, தர்பங்கா, அராரியா, முங்கர், சுபுவால் மற்றும் மதுபானி உள்ளிட்ட இடங்களில் இரவு 9.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். முன்பும் கூட அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது அது பீகாரின் தர்பங்கா, மதுபானி உள்ளிட்ட பகுதிகளில்…
-
- 0 replies
- 666 views
-
-
Alan Gross was freed as part of a deal with Cuba that paves the way for changes in U.S. policy, officials say. The U.S. and Cuban presidents speak separately at noon. http://www.cnn.com/
-
- 4 replies
- 667 views
-
-
தங்களைத் திருமணம் செய்ய மறுத்த நிறைமாத கர்ப்பிணி உட்பட 150 இளம்பெண்களின் தலைகளை துண்டித்துக் கொடூரமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஈராக் நாட்டின் மனித உரிமைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈராக் நாட்டில் தங்களது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் தங்களைத் திருமணம் செய்ய மறுத்த கர்ப்பிணி உட்பட சுமார் 150 இளம்பெண்களின் தலைகளைத் துண்டித்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொலை செய்து உள்ளனர் என்றும், அவர்களை மொத்தமாக ஒரே இடத்தில் புதைத்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அபு அனஸ் அல்-லிபி என்ற தீவிரவாதியே இந்த பெண்களை கொன்றதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐ.எஸ்.தீவிரவாதிகள் 50 ஆண்கள் மற்றும்…
-
- 0 replies
- 3.2k views
-
-
இந்திய பெருங்கடலில் தமிழக, கேரளா மீனவர்கள் 102 பேரை... கைது செய்தது இங்கிலாந்து கடற்படை! கன்னியாகுமரி: இந்திய பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 102 மீனவர்களை இங்கிலாந்து கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக இந்திய பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்திய பெருங்கடலில் இங்கிலாந்துக்கு சொந்தமாக டியாகோ கார்சியோ தீவு உள்ளது. இந்தத் தீவை அமெரிக்கா குத்தகைக்கு எடுத்து கடற்படை தளம் அமைத்துள்ளது. இந்நிலையில் தமிழக, கேரளா மீனவர்கள் டியாகோ கார்சியோ தீவுப் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இங்கிலாந்து கடற்படை 102 மீனவர்களை கைது செய்துள்ளது. அண்…
-
- 1 reply
- 481 views
-
-
ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பை ஐரோப்பிய யூனியன் நிதிமன்றம் புதன்கிழமை நீக்கியது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் சொத்துக்கள் முடக்கம் தொடரும் எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு சேர்க்கப்பட்டது. ஒரு அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதற்குரிய சட்டப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்படவில்லை. விதிமுறைகளின் அடிப்படையில்தான் அந்தப் பட்டியலிலிருந்து ஹமாஸ் அமைப்பின் பெயர் நீக்கப்படுகிறதே தவிர, ஹமாஸ் ஒரு பயங்கரவாத…
-
- 4 replies
- 444 views
-
-
புரட்சி மூலம் சுதந்திர போராட்டம் நிகழ்த்திய சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சை இன்றளவும் தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது. அண்மையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் உள்ளதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கறிஞர் வி. ரமேஷ் தாக்கல் செய்திருந்த் இந்த மனுவில், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடமுள்ள 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக பாரதிய சுபாஷ் சேனாவின் ஒருங்கிணைப்பாளர் ஏ. அழகுமீனா (35) சார்பில் மதுரை நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவ…
-
- 5 replies
- 4.1k views
- 1 follower
-
-
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவ பள்ளிக்குள் தாலிபான் தீவிரவாதிகள் நடந்த கோர காட்சியின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளியில் தாலிபான்கள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 132 பள்ளிக் குழந்தைகள், 9 பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளில் ஒருவர், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்கள். இதையடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து மொத்த 141 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த சண்டை படங்கள் தற்போது வெளியா…
-
- 1 reply
- 736 views
-
-
இங்கிலாந்து திருச்சபை தனது முதல் பெண் ஆயரை நியமித்துள்ளது. இங்கிலாந்தின் முதல் பெண் ஆயர் எனும் பெருமையை பெற்றுள்ள லிப்பி லேன் அம்மையார் இதையடுத்து வணக்கத்துக்குரிய லிப்பி லேன் அம்மையார், ஸ்டாக்பார்ட் ஆயராக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்பார். இதன் மூலம் பல நூற்றாண்டுகளாக ஆண்கள் மட்டுமே ஆயராக வரமுடியும் எனும் நடைமுறை இங்கிலாந்தின் ஆங்லிக்கன் திருச்சபையில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் தான் மிகவும் உவகை அடையும் அதே நேரம் அயர்ச்சியும் அடைந்துள்ளதாகவும் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள லிப்பி லேன் அம்மையார் தெரிவித்துள்ளார். சர்ச் ஆஃப் இங்கிலாந்தில் முதல் முறையாக 1994 ஆம் ஆண்டு பெண்கள் மதகுருமார்களாக நியமிக்கப்பட்டனர். அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உட்பட பல நாட…
-
- 0 replies
- 465 views
-
-
புதுடெல்லி, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்தார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ஐ.எஸ். இயக்கத்தால் இந்தியாவுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியவுடன் அவற்றை நாங்கள் கவனத்தில் கொண்டோம். இந்த நிகழ்வுகள், எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றன. அதன் நடவடிக்கைகளை ஒடுக்க விரும்புகிறோம். ஆகவே, அந்த இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது. இந்திய வாலிப…
-
- 2 replies
- 382 views
-