உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
திருமலையில் இன்று சுப்ரபாதத்துடன் திருப்பள்ளி எழுந்துகொள்ள வேண்டிய வெங்கடாசலபதி பெருமாள், தமிழ் பத்திரிகையாளர்களின் கூக்குரலை கேட்டுதான் எட்டிப்பார்த்திருப்பார். பிரசாத லட்டு தரும் திருப்பதியில், இன்று போலீசாரின் லத்தி அடிதான் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு கிடைத்தது. அமைதி வேண்டி பக்தர்கள் படையெடுக்கும்திருப்பதி இன்று, அதிகாலையிலேயே அல்லோகலப்பட்டது. இத்தனைக்கும் அடிப்படை காரணம் திருவாளர்., ராஜபக்சேவின் திருப்பதி வருகைதான். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த பாவத்தை கழுவவோ என்னவோ, அதிபரான பிறகு இன்றுடன் நான்காவது முறையாக திருமலை வந்து பெருமாளை தரிசனம் செய்துள்ளார் ராஜபக்சே. விவிஐபி அந்தஸ்துடன் அவரை கவனித்துக் கொண்டன மத்திய, மாநில அரசுகள். ஆனா…
-
- 3 replies
- 877 views
-
-
புதுடெல்லி, 1990-ல் இருந்து ஜம்மு காஷ்மீரில் 21,562 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதிலில், ஜனவரி 1990 முதல் டிசம்பர் 2013 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரில் 21,562 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், 16,757 பொதுமக்களும் 1425 பாதுகாப்பு படையினரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் அரசின் தகவலின் படி தீவிரவாத தொடர்பு சம்பவங்களால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண விதிமுறைகளின் படி கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.அவ்வப்போது விதிமுறைகளில் சட்டதிருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். http://www.dailythanthi.com/New…
-
- 0 replies
- 228 views
-
-
மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை! 17:42:08 Tuesday 2014-12-09 மும்பை: மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை கிடைத்துள்ளது. பேஸ்புக்கே வேலையாக பலர் இருக்கும் போது, அதே பேஸ்புக்கில் ரூ. 2 கோடி சம்பளத்துடன் மும்பையைச் சேர்ந்த ஆஸ்தா அகர்வாலுக்கு (20) வேலை கிடைத்துள்ளது. தற்போது இவர் மும்பை ஐஐடியில் கம்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் ஆஸ்தாவுக்கு பேஸ்புக்கில் ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது குறிப்…
-
- 0 replies
- 924 views
-
-
வாசகர்களின் ஆதரவைப் பெற்றாலும் மோடியை நிராகரித்த 'டைம்ஸ்' எடிட்டர்கள்! நியூயார்க்: டைம் பத்திரிகையின் ஆண்டின் சிறந்த மனிதர் போட்டியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியேற்றப்பட்டுள்ளார். வாசகர்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற, மோடியால் பத்திரிகையின் ஆசிரியர்களின் மனதை கவர முடியவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவை அறிவிக்கும். இந்த ஆண்டும் டைம் பத்திரிக்கை வாசகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது. வாசகர்கள் 50 உலக தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் சிஇஓக்களில் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு வாக்களித்தனர். வாக்கெடுப்பு. நவம்பர் 19ம் தேதி துவங்கிய வாசகர்கள் வாக்கெடுப்…
-
- 3 replies
- 1.9k views
-
-
பெங்களூரு: இந்தியாவை இந்த 5 முக்கியத் தீவிரவாதிகளும் உலுக்கி வருகிறார்கள். சிறையிலிருந்து தப்பி 3 முக்கிய கொள்ளைச் சம்பவங்கள், சென்னையில் ரயிலுக்குக் குண்டு வைத்தது, பிஜ்னூரில் நடந்த குண்டுவெடிப்பு என அடுத்தடுத்து நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் சிமி அமைப்பைச் சேர்ந்த இந்த ஐந்து பேரும் அடுத்து தென் மாநிலங்களில் மிகப் பெரிய நாச வேலையில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாடு முழுவதும் காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இவர்களைப் பிடிக்க தீவிரமாக முயன்று வருகின்றனர். இவர்களைப் பிடிக்க நேற்று நாடு தழுவிய உஷார் எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. ஆனால் இவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறி வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் கந…
-
- 0 replies
- 428 views
-
-
வெல்லிங்டன், நியூசிலாந்து: நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு சொகுசுக் கப்பலில் 200 பயணிகளுக்கு நோரோ வைரஸ் அதாவது காலரா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தி டான் பிரின்சஸ் என்ற அந்த சொகுசுக் கப்பலில் 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த வயிற்றுப் போக்கு பரவியுள்ளதாம். ADVERTISEMENT இந்தக் கப்பல் நேற்று ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதாக இருந்தது. கடந்த 13 நாட்களாக இது கடலில் பயணித்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது வயிற்றுப் போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மியாமியைச் சேர்ந்த பிரின்சஸ் க்ரூய்ஸஸ் என்ற கப்பல் நிறுவனம்தான் இந்த கப்பலின் உரிமையாளர் ஆகும். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் அலிஸ்டர் ஹம்ப்ரி கூற…
-
- 0 replies
- 398 views
-
-
அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சிஐஏ கைகொண்ட சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளை, கொடுமையானது என்றும் திறனற்றது என்றும் வர்ணித்துள்ள அமெரிக்க செனட் அவை அறிக்கை, இம்முறைகளைக் கையாண்டதற்காக சி ஐ ஏ வை கடுமையாக விமர்சித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சி ஐ ஏ வின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சி ஐ ஏ வின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன சில நேரங்களில் தடுத்து வைக்கப்பட்டோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையானது சித்ரவதையை ஒத்திருந்ததாக செனட் அவையின் புலனாய்வுக் குழுவின் தலைவர் டையான் பெயின்ஸ்டைன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்…
-
- 0 replies
- 363 views
-
-
இஸ்ரேல் போர்க் குற்றங்களை புரிந்துள்ளது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது. காசா மீது நடத்தப்பட்டத் தாக்குதல் இந்த ஆண்டின் கோடைக்காலத்தில் காசாப் பகுதியில் இருந்த, நன்கு அறியப்பட்ட நான்கு முக்கியமானக் கட்டிடங்களை அழித்ததன் மூலம் இந்தக் குற்றத்தை இஸ்ரேல் புரிந்துள்ளது என்று அம்னெஸ்டி அமைப்பு கூறியுள்ளது. பொதுமக்கள் குடியிருந்த அந்தக் கட்டிடங்கள் தாக்கி தரைமட்டமாக்கப்பட்டது கூட்டுத் தண்டனை அளிக்கப்படக் கூடியக் குற்றம் எனவும் அம்னெஸ்டி கூறுகிறது. காசாப் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புகள் அந்தக் கட்டிடங்களின் சில பகுதிகளை பாலஸ்தீன பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தினார்கள் என்று இஸ்ரேல் நம்பியது என்பதை ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலு…
-
- 0 replies
- 399 views
-
-
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு முகவரத்தின் புலனாய்வு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.ஏ) முன்னாள் ஊழியரான எட்வர்ட் ஸ்னோடனை தனது கவர்ச்சியால் மயக்குமாறு முன்னாள் உளவாளியான அனா சொப்மனுக்கு ரஷ்யாவின் புலனானய்வுப் பிரிவுத் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர் என ரஷ்யாவின் முன்னாள் புலனாய்வு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளாரென பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து தப்பிச் சென்ற 31 வயதான எட்வர்ட் ஸ்னோடனை தனது நாட்டுக்கு மீண்டும் கொண்டுவருவதற்கு அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அவர் தற்போது ரஷ்யாவில் அடைக்கலம் பெற்றுள்ளமை குற…
-
- 0 replies
- 495 views
-
-
ரேணிகுண்டா: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி வந்தடைந்தார். இலங்கை அதிபர் ராஜபக்சே தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டா வந்தடைந்தார். அவருக்கு ஆந்திர காவல்துறையினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அலப்ரி சென்ற ராஜபக்சே, அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார். இன்று இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் ராஜபக்சே நாளை (10ஆம் தேதி) அதிகாலை 2.45 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் சுப்பரபாத சேவையின்போது, ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் போராட்…
-
- 0 replies
- 388 views
-
-
மீண்டும் ராஜிவ் கொலை வழக்கு: "கேபி"யிடம் விசாரணை நடத்த இண்டர்போல் உதவியை நாடியது சிபிஐ!! Posted by: Mathi Published: Monday, December 8, 2014, 9:36 டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பதம்நாபானிடம் விசாரணை நடத்துவதற்காக 'இண்டர்போல்' உதவியை சிபிஐ கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கப்பட்ட போதும் இந்த கொலைச் சதியின் பின்னணி குறித்து விசாரிக்க சிபிஐ-ன் கீழ் பல்நோக்கு கண்காணிப்புக் குழு ஒன்று ஜெயின் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தால் 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்க…
-
- 1 reply
- 522 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்சே, இன்றைக்கும் அங்கே வாழும் தமிழ் மக்களைத் தாங்கொணா துயரத்துக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி வருகிறார். அவரை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக்கோரி நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவரை திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தன் இனவெறிக் கொடூரங்களை மறந்துவிட்டு சர்வ சாதாரணமாக திருப்பதிக்கு வருவதும் போவதுமாக இருந்த ராஜபக்சே, இப்போதைய பா.ஜனதா கட்சியின் ஆட்சியிலும் அதே பயண நடவ…
-
- 1 reply
- 377 views
-
-
பக்ராய்ச் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உத்திரபிரதேச மந்திரி ஆசம்கான்,கடந்த நவமபர் மாதம் 13-ந்தேதி பேசும் போது தாஜ் மகாலை உ.பி.மாநில வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும். தாஜ்மகாலின் நிர்வாகி யாக என்னை நியமிக்க வேண்டும் என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உத்திரப் பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது தாஜ்மகால் இருக்கும் இடத்தில் முன்பு தேஜோ மகாலய கோவில் இருந்தது. அந்த கோவில் நிலத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்கான ஆவணங்கள் உள்ளன. இந்த இடத்தில் தான் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. அதில் கோவிலின் ஒரு பகுதியும் அடங்கும். சமாஜ்வாடி க…
-
- 1 reply
- 399 views
-
-
இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலத் தீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டுள்ளன. அந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் தொடங்க ஐந்து நாட்கள் ஆகும் என்று மாலத்தீவின் அரசும் கூறுகிறது. இந்நிலையில் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து விமானம் மற்றும் கப்பல்கள்…
-
- 26 replies
- 3.6k views
-
-
சீன நாட்டில் உள்ள ஒரு மாலில் சுமார் $32 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தினால் ஆன நடைபாதையை அமைத்து சாதனை செய்துள்ளனர். இந்த பாதையின் மீது நடந்து செல்வதற்காக இந்த மாலிற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். சீன நாட்டில் உள்ள Yichang என்ற பகுதியில் உள்ள மால் ஒன்றில் $32 மில்லியன் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கொண்டு நடைபாதை அமைத்து அதன்மீது கடினவகை கண்ணாடியை போட்டு வைத்துள்ளனர். இந்த கண்ணாடியின் மீது நடந்து சென்றால் தங்கத்தின் மீது நடந்து செல்வது போன்ற உணர்வு இருக்குமாம். மேலும் இந்த பாதையில் நடந்து சென்றால் நல்ல யோகம் வரும் என சீன மக்கள் நம்புகின்றனர். Yichang மால் ஆரம்பித்து 18வருடங்கள் ஆனதையொட்டி இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மால் அதிகாரிகள் தெரிவித்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
திருச்சி: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே என பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார் ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணா. காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் விவசாயிகள் பந்த் நடத்தியுள்ளனர். தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு கர்நாடகா அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காது, விவசாயம் பாதிக்கப்படும் என அவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி வந்த நடிகர் ரஜினிகாந…
-
- 1 reply
- 665 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வருகை தர உள்ளார். அவரின் வருகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, புது டில்லி நகரம் முழுவதும் சோதனை, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/articles/2014/12/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-…
-
- 0 replies
- 361 views
-
-
ஆஸ்திரேலியாவில் குடியேறும் வெளிநாட்டவர்களில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக மெல்போர்ன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2012-13-ம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேற 1 லட்சத்து 23 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 40,100 விண்ணப்பங்கள் இந்தியர்களிடம் இருந்து பெறப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 46.6 சதவீதம் அதிகமாகும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் இருந்து 27,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் இருந்து 21 ஆயிரத்து 700 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேற விண்ணப்பித்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்களின் எண்ணிக்கை நாள…
-
- 0 replies
- 497 views
-
-
இஸ்ரேல் - பாலஸ்தீன வரைபடம் யூதர்கள் என்றவுடனே உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அந்த இனத்தைக் கூண்டோடு (குறைந்தபட்சம் ஜெர்மனி யிலிருந்து) ஒழிப்பதற்கு ஹிட்லர் எடுத்துக் கொண்ட முயற்சிகளா? பல நாடுகளுக்குச் சிதறினார்கள் அவர்கள். உலகின் பல பகுதிகளிலும் யூதர்கள் பரவிக் கிடந்தாலும் அவர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பைப் பல விதங்களிலும் உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. (விஞ்ஞானி ஐன்ஸ்டீன், கம்யூனிஸத் தந்தை கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்கள் சால் பெல்லோ மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக், மதியூகி கிஸிங்கர் ஆகியோர் மறக்கக் கூடியவர்களா?) அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் மிகவும் செல்வாக்கான பதவிகளில் யூத இனத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் நெஞ்சு நிறைய ஏக்கம் - ‘’நாம் …
-
- 11 replies
- 1.9k views
-
-
பெஷாவர், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தொடர்பாக அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர். சவூதி அரேபியாவில் பிறந்து வளர்ந்தவர் அட்னன் சுக்ரிஜுமா. அல்-கொய்தா தலைவர்களில் ஒருவராக இருந்த இவர் அந்த இயக்கத்தின் உலகம் முழுவதுமான நடவடிக்கைகளுக்கு பொறுப்பு வகித்து வந்தார். பாகிஸ்தானில் வசித்து வரும் அல்-கொய்தா தலைவர்கள் உத்தரவின்படி கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதை மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய 5 பேரில் சுக்ரிஜுமாவும் ஒருவர். இவர் மான்ஹேட்டன்…
-
- 0 replies
- 647 views
-
-
வாஷிங்டன், அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில், ரஷ்யாவுடன் வியாபாரம் செய்வதற்கு இது சரியான நேரமல்ல என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை இது எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் செய்தித்துறை செயலாளர் மேரி ஹார்ப் கூறுகையில், 'எங்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருந்தாலும் பல நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரு நாட்டின் அதிபரின் பயணம் மற்றொரு நாட்டு அதிபரின் வருகையை எந்த விதத்திலும் பாதிக்காது. முதலில் அதிபர் புதினின் வருகையால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வர்த்தக, பொருளாதா…
-
- 0 replies
- 383 views
-
-
புதுடெல்லி, ஜனவரி மாதம் 26 ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியும் ஒபாமா வுடன் போனில் பேசியும், நேரில் சந்தித்தபோதும் அழைப்பு விடுத்தார். இதை அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். அவரது இந்தியப் பயணத்தை அமெரிக்க அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நடைபெறும் குடியரசு தின விழாக்களில் அமெரிக்க நாட்டு அதிபர் ஒருவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கவுரவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒபாமா வருகையை யொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிபர் ஒபாமா தீவிர வாதி…
-
- 0 replies
- 261 views
-
-
காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட காயம். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். வரும் 9ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் 3 வது கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு இன்று பிரசாரம் செய்த பிரதமர் மோடி பேசுகையில்; பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்கள் தியாகம் போற்றுதலுக்குரியது. இவர்களது தியாகம் எப்போதும் மறக்க முடியாது. இது எதிர்கால சந்ததியினர் வரை நினைவில் கொள்ளப்படும். இந்த தாக்குதலில் ஜார்கண்ட் புதல்வன் இறந்துள்ளார். இவரது வீர தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன். மாநிலத்தின் வளர்ச்சியே எனது நோக்கம் : நான் கடந்த லோக்சபா தேர்தலில் இங்கு வந்து ஓட்டு கேட்டேன். நீங்கள் அள்ளி வழங்கினீர்கள். பா.ஜ…
-
- 0 replies
- 402 views
-
-
முஸ்லீம்களின் தனிச் சட்டத்தின் படி பெண்கள் பருவம் அடைந்து இருந்தாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து இருந்தாலோ பெற்றோரின் சம்மதம் இன்றியும் திருமணம் செய்து கொள்ளலாம் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு சூரத் பகுதி முஸ்லீம் இளைஞர் யூசுப் லோகத் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் படி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பருவம் அடைந்த அல்லது 15 வயது முஸ்லீம் பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாமிய தனிச் சட்டம் கூறுவதாக குறிப்பிட்டு, யூசுப் லோகத் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டார். http://seithy.com/breifNews.php?newsID=122137&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 397 views
-
-
அகதிகளுக்கு தாற்காலிக நுழைவு இசைவு (விசா) வழங்கும் சர்ச்சைக்குரிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், தனது குடியேற்றச் சட்டத்தை ஆவுஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா ஆவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்ககல் செய்யப்பட்டது. மசோதா மீது இரவு முழுவதும் நடைபெற்ற விவாதத்துக்குப் பின், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அது வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தையடுத்து, தஞ்சம் தேடி ஆவுஸ்திரேலியா வரும் அதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான தாற்காலிக நுழைவு இசைவு வழங்கப்படும். அந்த நுழைவு இசைவு வைப் பெறுவதன் மூலம், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்கும் உரிமையை அகதிகள் பெற முடியாது. நுழைவ…
-
- 0 replies
- 259 views
-