Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. யு.எஸ்.சில் கென்ரக்கி என்ற இடத்தில் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதால் விமானத்தில் பயணம் செய்த நால்வர் கொல்லப்பட்டனர். “துணிச்சலான ஒரு சிறிய பெண்” – விமானத்தில் இருந்து தப்பிய 7-வயது சிறுமி காயங்களுடனும் அதிர்ச்சியடைந்த நிலையில் வெறுங்காலுடன் நடந்து சென்று வீடொன்றின் கதவை தட்டி உதவி கேட்டுள்ளாள். வெள்ளிக்கிழமை மாலை விமானம் கீழே வீழுந்து அரை மணித்தியாலங்களின் பின்னர் இது நடந்துள்ளது. மோசமாக இரத்தம் ஓடிய நிலையில், கால்களில் இருந்து இரத்தம் வழிய ,மூக்கால் இரத்தம் வழிந்து முகமெல்லாம் இரத்த கறையுடன் ஒரு காலில் மட்டும் காலுறை காணப்பட வெறும்காலுடன் காணப்பட்டாள் என அவள் உதவி கேட்டு தட்டிய வீட்டின் சொந்தகாரரான 71-வயது லறி வில்கின்ஸ் என்பவர் செய்தியாளரிடம் தெரிவித்தார். தனது …

    • 3 replies
    • 876 views
  2. போகோ ஹராமால் 40 பேர் கடத்தப்பட்டதாக சந்தேகம் நைஜிரியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 40 இளம்வயது ஆண்களும், சிறார்களும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. போகோ ஹராம் குழுவினர்புத்தாண்டு தினத்தன்று இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக மலேரி என்ற கிராமத்தில் இருந்து மைதுகுரி நகருக்கு தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வந்த ஆயுதமேந்திய போகோ ஹராம் அமைப்பினர், தம்முடைய உரையைக் கேட்குமாறு கிராமத்திலிருந்த ஆண்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதன்படி அவர்களின் பேச்சைக் கேட்கச் சென்ற இளம் ஆண்கள் சுற்றிவளைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறப்படுக…

    • 0 replies
    • 429 views
  3. இந்தியா: ஐப்பானிய மாணவியுடன் வல்லுறவு; 5 பேர் கைது ஐப்பானிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று, அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஒருமாத காலத்துக்கு அவரை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 ஆண்களை இந்திய காவல்துறை கைது செய்துள்ளது. இந்தியாவில் பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் போராட்டங்கள் நடந்தனசுற்றுலா வழிகாட்டிகள் என்று கூறிக்கொண்டு இரண்டு நபர்கள், அந்தப் பெண்ணை அணுகியதாகவும், அதன் பின்னர் அந்தப் பெண்ணை பிகாரில் உள்ள பௌத்தர்களின் புனித இடமான புத்தகயா உட்பட பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கொல்கத்தா காவல்துறை அதிகாரியான பல்லவ் கான்டி கோஷ் தெரிவித்துள்ளார். இந்தக் குழு, பின்னர் …

  4. வாஷிங்டன், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ. இவர் மீது அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புளோரிடா கோர்ட்டில் 'செக்ஸ் புகார்’ வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், 'நான் 14 வயது சிறுமி ஆக இருந்தபோது அமெரிக்காவின் கோடீசுவரர் ஜெப்ரி எப்ஸ்டினுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை பலமுறை கற்பழித்தார். அது மட்டு மல்ல, தன்னுடைய நண்பர்களுக்கும் என்னை 'செக்ஸ்' விருந்தளித்தார். அவர்களில் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ (ராணி எலிசபெத் மகன்) மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழக சட்ட பேராசிரியர் வக்கீல் ஆலன் டெர்ஷோவிட்சும் அடங்குவர் என தெரிவித் துள்ளார். பாதிக்கபட்ட பெண் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பேப்பரில் கூறி இருப்பதாவது ;_ இளவரசர் ஆண்ட்ரூ தன்னை 3 மு…

  5. இஸ்லாமாபாத் குஜராத் மாநிலம் அரபிக்கடலில் பாகிஸ்தான் நாட்டு படகை, இந்திய கடலோர காவல்படையினர் இடைமறித்தனர். அப்போது படகு தீ வைத்து வெடிக்க செய்யப்பட்டுள்ளது. கடந்த 31-ம் தேதி இரவு குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 365 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததுள்ளது. அப்போது கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடலோர காவல்படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஒலிபெருக்கி மூலம் சரண் அடைந்துவிடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தான் படகில் இருந்தவர்கள் படகினை மிகவும் வேகமாக ஓட்டியுள்ளனர். இதனையடுத்து காவல்படையினர், அவர்களை பின்தொடர்ந்தனர். மிகநீண்ட தூரம் விரட்டி சென்ற நிலையில் படகு தீ வைத்து …

  6. லக்னோ, இந்தியாவின் பல முக்கிய நகரங்களை குண்டு வைத்து தகர்க்க சதி செய்ததாக வங்காள தேசத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தீவிரவாதி பிடிபட்டார் கடந்த டிசம்பர் மாதம் 17–ந்தேதி மேற்கு வங்க மற்றும் உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கூட்டாக இணைந்து டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து மடிக்கணினி ஒன்றும், சில வரைபடங்களும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவனிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் முகமது ரக்துல்லா என்பதும், அவன் வங்காளதேசத்தின் பரித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீவிரவாதி என்பதும் தெரிய வந்தது. கூட்டாளியை சந்திக்க திட்டம் மேலும் அவனுடைய கூட்டாளி…

  7. புதுடெல்லி, இந்திய எல்லையில் 13 முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய, விடிய தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தம் மீறல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2002–ம் ஆண்டில் இருந்து போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது. என்றாலும் அந்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்கு அப்பால் இருந்தபடி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான…

  8. சிரி­யாவில் கடந்த ஆண்டு மோதல்­களில் 17,790 பொது­மக்கள் உட்­பட 76,000 பேர் பலி சிரி­யாவில் கடந்த 4 வருட கால­மாக இடம்­பெற்று வரும் மோதல்­களில் அந்­நாடு அதி­க­ளவு உயி­ரி­ழப்­புக்­களை எதிர்­கொண்ட ஆண்­டாக 2014 ஆம் ஆண்டு விளங்­கு­வ­தா­கவும் அந்த ஆண்டில் 76,000 க்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் பிரித்­தா­னி­யாவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் மனித உரி­மைகள் அவ­தான நிலையம் அறிக்­கை­யிட்­டுள்­ளது. பலி­யா­ன­வர்­களில் 3,501 பொது­மக்கள் உட்­பட 17,790 பொது­மக்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர். அதே­ச­மயம் கடந்த ஆண்டில் ஈராக்கில் இடம்­பெற்ற மோதல்­களில் 15,000 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இது அந்­நாடு 2007 ஆம் ஆண்­டி­லி­ருந்து அதி­க­ள…

    • 0 replies
    • 393 views
  9. கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தை, அதன் விமானி இரியாண்டோ, வானிலை மோசமானதால் வேறு வழியே இல்லை என்ற நிலையில், கடற்பரப்பில் விமானத்தை பத்திரமாக இறக்கியிருக்கிறார். எனினும், மோசமான கடல் அலைகளே விமானத்தை சேதப்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. வானிலை காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருந்தால் அவசர காலத்தில் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் டிரான்ஸ்மிட்டர் செயல்பட்டிருக்கும். ஆனால், விமானம் விழுந்து நொறுங்கவோ, வெடித்துச் சிதறவோ இல்லை. மோசமான வானிலையின் காரணமாக இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில், 162 பயணிகளையும் காப்பாற்ற தனியொரு விமானியால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில்தான், அவர் அவசர காலத்தில் கடற்பரப்பில் விமானத்த…

    • 0 replies
    • 882 views
  10. ஏர் ஏசியா விமான பணிப்பெண் கடைசியாக காதலனுக்கு அனுப்பிய லவ் மெசேஜ். இந்தோனேஷியா விமான விபத்தில் பலியான விமான பணிப்பெண் ஒருவர் கடைசியாக தனது மொபைலில் இருந்து காதலனுக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ8501 என்ற விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த நிஷா என்ற 22 வயது இளம்பெண், விமானத்தில் இருந்து தனது காதலருக்கு இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளத்தில் இருந்து ஐ லவ் யூ என்ற மெசேஜ் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பெண்ணின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இவரது உடலை பார்த்து இவரது காதலர் தியோ என்பவர் கதறி கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சம் கலங்கும்படி இருந்தது. இந்நிலையில் விமான விபத்தில் பலியான …

    • 0 replies
    • 545 views
  11. நிர்வாண சங்கத்தை தோற்றுவித்தவரின் இறுதி நிகழ்வுகள் நடந்தன ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நிர்வாண வாழ்முறை புத்துணர்சியளிப்பதாக அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்உலக அளவில் இயற்கையாளர்கள் அல்லது ஆடைகளற்று வாழ்பவர்களுக்கான சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான கிறிஸ்டியான் லெகாக்கின் இறுதி நிகழ்வுகள் பாரிஸில் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய இரவில் தமது 103ஆவது வயதில் அவர் காலமானார். இயற்கையாக வாழ்வது அதாவது ஆடைகளற்று நிர்வாணமாக வாழ்வது எனும் கலாச்சாரத்தை 1933ஆம் ஆண்டு முதல் பின்பற்றத் தொடங்கிய அவர், உலக இயற்கையாளர்கள் சம்மேளனம் எனும் அமைப்பை இதற்காகத் தொடங்கிட உதவினார். விடுமுறை காலத்தில் ஆடைகள் இல்லாமல் இருக்கும் அனுபவத்தை கூடுதலாக முன்னெடுப்பதே தம…

  12. "இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் குற்றச்சாட்டை அரண்மனை மறுக்கிறது பிரிட்டிஷ் அரசி எலிச்பெத்தின் மகன்களில் ஒருவரான இளவரசர் ஆண்ட்ரூ, சட்டரீதியான வயதுக்கு கீழே இருந்த அமெரிக்கப் பெண் ஒருவருடன் பலவந்தமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என அந்த அமெரிக்கப் பெண் எழுப்பிய குற்றச்சாட்டை பங்கிங்ஹாம் அரண்மனை மறுத்துள்ளது. இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை அரச குடும்பம் மறுத்துள்ளனர்இளவரசர் முறையற்ற வகையில் நடந்து கொண்டார் எனக் கூறும் வகையிலான இந்தக் கூற்றுகள் முற்றாக உண்மைக்கு புறம்பானவை என்று அரசியின் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண்மணி வைத்துள்ள குற்றச்சாட்டானது, இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் நன்பர் ஜெஃப்ரி எப்ஸ்டைன் மீது அமெரிக்காவின் புளோரிடா மாகா…

    • 0 replies
    • 554 views
  13. போர்பந்தர்: குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் கடல்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை தடுத்து நிறுத்தியது. இந்திய கடற்படை நெருங்கிய நிலையில் திடீரென அக் கப்பல் வெடிவைத்து தகர்த்தக்கப்பட்டது. அதில் இருந்த 4 பேரும் தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது. குஜராத்தின் நீண்ட கடல்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளை நடத்துவதாக உளவுத்துறை பலமுறை தெரிவித்திருந்தது. அத்துடன் கராச்சியில் இருந்து மீன்பிடிக் கப்பல் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கப்பல் ஒன்று குஜராத்தை நோக்கி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனால் குஜராத் கடல் பகுதியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த ந…

  14. ஒட்டாவா- 2015-ல் கனடிய குடியுரிமை பெறுவதற்கான செலவு மேலும் அதிகரிக்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் இரண்டாவது தடவையாக கொன்சவேட்டிவ் அரசாங்கம் ஒருவர் குடியுரிமை பெறுவதற்கான கட்டணத்தை அதிகரிக்கின்றது. குடியுரிமை விண்ணப்பங்களை செயலாக்கம் செய்வதற்கான புதிய கட்டணம் ஜனவரி மாதம் 1-ந்திகதியிலிருந்து 530-டொலர்களாக அதிகரிக்கப்படுகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் இக்கட்டணம் 300-ஆக அதிகரிக்கப்பட்டது. குடிமக்களாக இருப்பதற்கு அதற்கான செயலாக்கம் தொடர்பான செலவின் பெரும் பகுதியை அவர்கள் செலுத்த வேண்டும் என அரசாங்கம் கருதுவதாக தெரியவருகின்றது. புதிய கட்டண பகுப்பாய்வு ஒன்றில் அதிகரித்த கட்டணம் செயலாக்க கட்டண செலவான 555-டொலர்களையும் ஏறக்குறைய ஈடுசெய்யும் என குடியுரிமை மற்றும் குடிவரவு திணைக…

    • 0 replies
    • 500 views
  15. 32 இணையதளங்களை இந்திய அரசு "தடை" செய்தது சரியா? இந்திய அரசின் இணையதளங்கள் மீதான "தடை"யால் சர்ச்சைஇந்தியாவுக்குள் இணைய சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களை தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணைய சுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம் என்கிற இணைய சுதந்திரத்திற்கான தன்னார்வ தொண்டு அமைப்பு இந்திய அரசு தடை செய்திருப்பதாக கூறப்படும் 32 இணையதளங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது. அதில் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் காணொளிகளுக்கான இணையதளங்கள் உள்ளிட்ட பல பிரபல இணையதளங்களின் பெயர்கள் இருக்கின்றன. அவை தவிர, உலக அளவில் இணைய ஆவணப்படுத்தலுக்கு…

    • 0 replies
    • 451 views
  16. பெங்களூரு: அணு குண்டு தயாரிப்பதற்காக விடுதலை புலிகள் இயக்கம் வைத்திருந்த சிவப்பு பாதரசம் என்று பொய் சொல்லி சாதாரண கல்லை ரூ.150 கோடிக்கு விலைபேசிய பலே மோசடிக்காரர்கள் மூவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் ஒரு கும்பல், சிவப்பு பாதரசம் என்ற பெயரில் ஒரு பொருளை விற்பனை செய்ய முயலுவதாக நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மோசடி நபர்களை கையும், களவுமாக பிடிக்கும் நோக்கத்தில், மாறுவேடத்தில்,, வாடிக்கையாளரை போல அந்த மூன்று பேரையும் அணுகினர் போலீசார். அப்போது, அந்த நபர்கள் கூறிய தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கம், அணு குண்டை தயாரிக்க சோவியத் ரஷ்யாவிடமிருந்து குறிப்பிட்ட மூலப்பொருளை வாங்கியதாகவும், இய…

  17. பெய்ரூட்: தாங்கள் பிடித்து வைத்துள்ள ஜோர்டானைச் சேர்ந்த விமானியை எவ்வாறு கொலை செய்வது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ட்விட்டரில் மக்களிடம் கருத்து கேட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோர்டானைச் சேர்ந்த விமானி முவாத் அல் கசீஸ்பெஹ்(26) என்ற மாவோஸை பிணையக் கைதியாக பிடித்தனர். விமானப் படை விமானியான அவர் தனது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சிரியாவின் ரக்கா நகரில் தரையிறங்கினார். அப்போது தான் அவர் தீவிரவாதிகளிடம் சிக்கினார். தீவிரவாதிகள் விமானியை பேட்டி கண்டு அதை தங்களின் மாதாந்திர பத்திரிக்கையில் வெளியிட்டனர். அந்த செய்தியை அவர்கள் இணையதளத்தில் ஆங்கிலத்திலும் வெளியிட்டனர். இது குறித்து கருத்து தெர…

  18. ஆஸ்திரேலியே கடற்கரைகளில் சூரிய குளியல் படுக்கைகளில் படுத்துக்கொண்டு நிறத்தை கறுக்க செய்யும் முறைக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு வந்த செயற்கை சூரிய குளியல் படுக்கைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை ஆஸ்திரேலிய புற்றுநோய் ஆணையம் வரவேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 70 வயதை கடந்த 3-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கபடுகின்றனர். இதனால் சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் தோல் புற்றுநோயை தடுக்க முடியும் என்று அந்த ஆணையம் ஆஸ்திரேலிய அரசுக்கு அறிவுறுத்தி வந்…

  19. கனடிய மக்கள் நடுஇரவு எதிர்கொள்ளும் 2015-ம் ஆண்டு ஆரம்பத்துடன் காட்டெருமை வேட்டயாடுதல் முதல் புதிய புகைத்தல் தடை சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கனடா முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. சில கனடியர்கள் தங்கள் பொக்கெட்டுகளில் மேலதிக பணத்தை பார்க்க கூடியதாக இருக்கும். வேறு சிலர் தாங்கள் எங்கே புகைப்பிடிக்க முடியும் எப்படி புதிய செல்லப்பிராணிகளை சொந்தமாக்க முடியும் அல்லது எதனை வேட்டையாட முடியும் என்பன வற்றிற்கான புதிய சட்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். 2015-ஜனவரி 1-ந்திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்: ரயில் கப்பல்கள் சம்பந்தமான புதிய சட்டம்: 2013 யூலை மாதம் கியுபெக்கில் இடம்பெற்ற கொடிய ரயில் விபத்து காரணமாக புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் ஜ…

    • 0 replies
    • 332 views
  20. சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர், 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உலகமெங்கும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது, மக்கள் வெகு உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். இதேபோன்று சீனாவில் செங்காய் நகரில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரபல்யமான சென்யி சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் அமெரிக்க டொலர் போன்ற கூப்பன்கள் மாடியில் இருந்து வீசப்பட்டுள்ளது. மக்கள் இதனை எடுப்பதற்காக முந்தி சென்ற போது, கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவருமே மா…

    • 0 replies
    • 355 views
  21. உக்­ரே­னி­ட­மி­ருந்து கிறி­மி­யாவை ரஷ்ய ஜனா­தி­பதி புட்டின் கைப்­பற்­றி­யது அவர் செய்த பெரிய தவறு என்றும் அந்த வகையில் புட்டின் அப்­ப­டி­யொன்றும் பெரிய புத்­தி­சாலி கிடை­யாது எனவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா கூறி­யுள்ளார். என்.பி.ஆர். வானோலிச் சேவைக்கு அளித்த பேட்­டி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.புட்டின் சிறந்த அறி­வாளி என்­றி­ருந்த மதிப்­பீட்டை ரஷ்யா தற்­போது சந்­தித்­துக்­கொண்­டி­ருக்கும் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் பொய்­யாக்­கி­யுள்­ள­தாக ஒபாமா குறிப்பிட்டார். ரஷ்யா மீதான சர்­வ­தேச பொரு­ளா­தாரத் தடைகள் கார­ண­மா­கவும், சர்­வ­தேச சந்­தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்­பட்­டி­ருக்கும் மோச­மான வீழ்ச்­சி­யாலும் ரஷ்யப் பொரு­ளா­தாரம் கடும் பாதிப்­புக்­குள்…

  22. ஜகார்தா இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம் கடந்த 28-ந் தேதி காலை புறப்பட்டுச் சென்றது. அதில் விமான ஊழியர்கள் 7 பேரும், 155 பயணிகளும் இருந்தனர். இதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 149 பேரும், தென்கொரியர்கள் 3 பேரும், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தலா ஒரு பயணியும் இருந்தனர். இவர்களில் 17 பேர் சிறுவர்-சிறுமிகள். இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் யாரும் இதில் பயணம் செய்யவில்லை. இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜாவா கடல் பகுதியில் பறந்தபோது விமான கட்டுப்பாட்டு மையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. தொடர்ந்து விமானம் பற்றிய தகவல் எதுவு…

  23. கனடா- எட்மன்டனில் இரு இளம் பிள்ளைகள் உட்பட்ட ஒன்பது பேர்களின் உயிர்களை குடித்த கொடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை ஒரு முட்டாள் தனமான பாரிய படுகொலை என தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இப்படுகொலைகள் மூன்று இடங்களில் ஒரே நபரால் செய்யப்பட்டுள்ளது. இவை ஒரு குழு சம்பந்தப்பட்டதல்ல எனவும் மாறாக உள்நாட்டு வன்முறையான சோக சம்பவம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு ஒரு பெண் எட்மன்டன் தெற்கில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சில மணித்தியாலங்களின் பின்னர் ஒரு இளம் பெண் மற்றும் பையன் இவர்களுடன் இரு ஆண்களும் 3-பெண்களும் நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப் பட்டனர்.அன்றய தினம் மாலை அதிகாரிகள் ஒரு தற்க…

  24. 2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது பொன்விழாவை கொண்டாடுவதை குறிக்கும் வகையில் அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிங்கப்பூர் நகர் அடுத்து ஆண்டு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் நாளாந்தத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப்பெட்டி வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நான் ஒரு பொன்விழாக் குழந்தை" என்று குறிப்பிடும் குழந்தையின் ஆடைகள் உள்ளிட்ட பரிசுகளும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மறக்கமுடியாத தருணங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகமும், நினைவு பதக்கமும் வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் வாழும் அ…

  25. ஏர் ஏசியாவை குறி வைக்கும் "கருப்புக் கரம்"... முன்கூட்டியே எச்சரித்த சீன பிளாக்கர்! பெய்ஜிங்: இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் கிளம்பி பாதி வழியிலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி 162 பேரின் உயிரைப் பறித்துள்ள ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகும் என்று முன்கூட்டியே தனது பிளாக்கில் எழுதிய சீனரால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏர் ஏசியா விமானத்தை ஒரு "கருப்புக் கரம்" குறி வைத்துள்ளதாக டிசம்பர் 15ம் தேதி தனது பிளாக்கில் எழுதியுள்ளார் இந்த பிளாக்கர். இவரது பெயர் விவரம் தெரியவில்லை. இவரே மர்ம மனிதராகவும் இருக்கிறார். இவரது பிளாக்கில் உள்ள எழுத்துக்கள்தான் இப்போது பெரும் பரபரப்பாகியுள்ளன. ஏர் ஏசியாவை குறி வைக்கும் டிசம்பர் 15ம் தேதி இவர் வெளியிட்ட ஒரு போஸ்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.