Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். July 21, 20153:48 pm மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமனின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி யாகூப் மேமன் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி மும்பை நாக்பூர் சிறையில் வரும் 30 ஆம் தேதி காலை 7 மணிக்கு யாகூப் மேமனுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதற்கான உத்தரவை ஏற்கனவே தடா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 53 வயதான யாகூப் அப்துல் ரசாக் மேமன், மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிதி உதவி செய்ததாக கைது செய்யப்பட்டார…

    • 0 replies
    • 650 views
  2. ஈராக்கில் தனது படை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அமெரிக்கா இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியது. 2003 ஆம் ஆண்டு பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறி அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா படையெடுத்தது. இப்போது அங்கு வன்முறைகள் தொடரும் நிலையில் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். சுமார் 9 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் 4,487 அமெரிக்க படையினரும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஈராக்கியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை 30,000 அமெரிக்கப் படையினர் காயமடைந்தனர். இந்த யுத்தத்திற்காக ஒரு ட்ரில்லியன் அமெரக்க டொலர்கள் அமெரிக்காவினால் செலவிடப்பட்டுள்ளன. ஈராக்கின் பாக்தாத் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமெ…

  3. “இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?” “உங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அர சாங்கம் வெட்கப்பட்டு பிரச்னையைச் சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இந்திய அரசுக்கு வெட்கம் எல்லாம் கிடையாது.இது தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது. தமிழர்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என எத்தனையோ வகையினர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமை யால் தற்கொலை செய்துகொள்கின்றனர். எதிர்ப் பவர்களை ராணுவம், போலீஸ், சல்வா ஜூடும் என கூலிப் படைகளைவைத்துக் கொல்வதற்கே தயங்காத அரசு, …

  4. தமிழிசையை வளர்க்க திராவிட ஆட்சிகள் உதவவில்லை - ராமதாஸ் சென்னை: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட ஆட்சிகளில் தமிழிசை வளர்ச்சிக்கும், தமிழிசைக் கலைஞர்கள் முன்னேற்றத்திற்கும் எதுவும் செய்யப்படவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம் 5வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தில் மற்ற இசைக்கு நிகராக தமிழ் இசை வளர்ச்சி அடையவில்லை. கடந்த 40 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழிசை கலைஞர்களுக்கும், தமிழ் இசைக்கும் எந்த பயன்பாடோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை. எனது கருத்தில்…

  5. மாறிவரும் கனடியத் தேர்தல் களம்! நாடு தழுவிய ரீதியல் முன்னேறி வரும் லிபரல் கட்சி கனடாவில் தேர்தலிற்கு இன்னமும் நான்கு வாரங்களே இருக்கும் நிலையில் இன்று வெளிவந்த கருத்துக் கணிப்புக்கள் பலரினதும் கவனத்தையும், குறிப்பாக சிறுபாண்மைச் சமூகத்தாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசிக் கட்டத்தையொட்டிய பிரச்சாரத்தை எட்டியுள்ள தேர்தல்க் களத்தில் லிபரல் கட்சியானது புதிய ஜனநாயகக் கட்சியையும் தாண்டி முன்னேறி வருவதை இன்று வெளியான இரண்டு கருத்துக் கணிப்புக்கள் காட்டி நிற்கின்றன. முதலாவது கருத்துக் கணிப்பின் பிரகாரம் ஒன்றாரியோ மாகாணத்தில் லிபரல் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வது கடந்த வாரத்திலிருந்து அவதானிக்கப்பட்டுள்ளது. கனடிய மாகாணங்களிலேயே அதிக ஆசணத்தைக் கொண்டதும் ரொறன்ரோவைத் தல…

  6. தெற்காசியாவின் வாரிசு அரசியல் கலாசாரம் [03 - January - 2008] [Font Size - A - A - A] கடந்த வாரம் படுகொலையுண்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புதிய தலைவராக புதல்வன் பிலாவால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறா

    • 0 replies
    • 874 views
  7. ‘பிக் பென்’ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவு பிரித்தானியாவின் புகழ்பெற்ற ‘பிக் பென்’ கோபுரம் முதன்முதலாக ஒலி எழுப்பி இன்றுடன்(ஜுலை 11) 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாட ‘பிக் பென்’ கோபுரம் ஒலி எழுப்பாது. அங்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதே அதற்கு காரணமாகும். 2017ஆம் ஆண்டு ஆரம்பமான சீரமைப்புப் பணிகள், 2021ஆம் ஆண்டே நிறைவடையும். 96 மீட்டர் உயரமுள்ள கோபுரம் நீண்ட காலம் நல்ல நிலையில் நீடிக்க சீரமைப்புப் பணிகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வடக்கு முனையில் அமைக்கப்பட்டுள்ள எலிசபெத் கோப…

    • 1 reply
    • 487 views
  8. வெள்ளத்தால் நைஜீரியாவில் 274 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை அடுத்து அங்குள்ள சிறைச்சாலையில் இருந்து 270 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தால் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 1,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 281 கைதிகள் பாதுகாப்பான நிலையங்களுக்கு மாற்றப்பட்டபோது தப்பியோடியுள்ளனர் எனவும், அவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தப்பியோடியவர்களின் அடையாளங்கள், அவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட…

  9. பிரித்தானியாவின் மிகப் பெரிய பொலிஸ் பிரிவொன்றின் (GMP) பிரதான பொலிஸ் தலைமை அதிகாரியான Michael Todd நேற்றிரவில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் இன்று Bwlch Glas மலைப்பகுதியில் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமரும் மரணமான அதிகாரியும். இவர் கிட்டத்தட்ட 30 வருடங்களாக பிரித்தானிய பொலிஸ் சேவையில் பணியாற்றியவர் ஆவார். இவருக்கு வயது 50 மட்டுமே. இவரது திடீர் மர்ம மரணம் பிரித்தானிய பொலிஸ்துறை மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பிரித்தானியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. http://news.bbc.co.uk/1/hi/england/manchester/7290359.stm

    • 6 replies
    • 1.6k views
  10. சென்னையில் பெய்த கனமழையால், சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வட கிழக்கு பருவழை சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் விட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் முழுவதும் நிரம்பியதால், அதிலிருந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் கூவம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. அதனால் கூவம் ஆற்றை ஒட்டிய குட…

  11. இன்றைய நிகழ்ச்சியில்… - பாரிஸ் காலநிலை மாநாட்டில் ஒப்பந்தம் வருமா வராதா உடன்பாட்டுக் காலக்கெடு சனிக்கிழமை வரை நீட்டிப்பு! - பாரிஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரான்சில் அதிகரிக்கும் அதிரடி சோதனைகள் - கைது நடவடிக்கைகள்! மதத்தின் அடிப்படையில் தாம் இலக்குவைக்கப்படுவதாக முஸ்லிம்கள் அச்சம்! - நீண்ட மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியம் என்ன? இல்லற வாழ்வில் 90 ஆண்டுகளை கடந்துள்ள ஜோடியைக் கேட்கலாம்!

  12. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் காவல்துறை தலைமையகத்தில் காவல்துறையினரை கத்தியால் குத்த முயன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காவல்துறை தலைமையக கட்டிடத்திற்குள் நுழைந்த நபர் அங்கிருந்த காவல்துறையினரை தாக்க தொடங்கினார் என தகவல்கள் வெளியாகின்றன. இதனை தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதலிற்கான காரணம் உட்பட ஏனைய விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. பல காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன https://www.virakesari.lk/article/66153 Paris knife attacker kills 4 people at police headquarters Four police employees were killed in a knife attack at Paris police headquarters on Thursday, accordi…

    • 4 replies
    • 554 views
  13. ஐரோப்பிய நாடுகள் நிர்பந்தத்தால் அகதிகளுக்கு கதவை அடைத்தது ஜெர்மனி ஏஞ்சலா மெர்கெல் ஜெர்மனிக்கு வரும் அகதிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பான் மையான அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்தது. இதுவரை அங்கு சுமார் 8 லட்சம் அகதிகள் குடியேறி உள்ளனர். ஆனால் இதர ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனி மீது கடும் அதிருப்தி தெரிவித்தன. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் மறைந்து இஸ்லாம் ஆதிக்கம் அதிகரித்…

  14. பாண் வெட்டும் கத்தியினால் தனது அண்ணனின் குரல்வளையை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கல்கிரியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி கொலைச் சம்பவம் கடந்த 10 ஆம் திகதி காலை ....................... தொடர்ந்து வாசிக்க............................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2509.html

    • 0 replies
    • 718 views
  15. அலாஸ்கா விமான விபத்தில் 10 பேர் பலி. அலாஸ்காவில் சிறியரக விமானம் வீழ்ந்ததில் அதிலிருந்த 10 பேரும் பலியாகியுள்ளனர்.மூவரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிதைந்த விமானங்களுக்குள் மற்றையவர்களின் உடலங்களும் இருக்கலாம் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு யாழுடன் இணைந்திருங்கள். https://www.cnn.com/2025/02/07/us/alaska-cessna-bering-air-hnk/index.html

  16. தென்கொரியாவுக்கு மேலாக அமெரிக்கப் போர் விமானம் பறந்துள்ளது வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது அமெரிக்க போர் விமானம் ஒன்று தென்கொரியாவுக்கு மேலாக மிகவும் தாழ்வாக பறந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் குவாம் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட, அணு ஆயுதங்களை கொண்டுசெல்லக்கூடிய இந்த B-52 ரக போர் விமானத்துக்கு பாதுகாப்பாக அமெரிக்க மற்றும் தென்கொரிய போர் விமானங்களும் உடன் பறந்துள்ளன. வடகொரியா கடந்தவாரம் நடத்தியிருந்த அணு குண்டு பரிசோதனைக்கு பதிலடியாகவே அமெரிக்கா தனது வான் தாக்குதல் வல்லமையை வெளிப்படுத்தியுள்ளது. ஹைட்ரஜன் குண்டு ஒன்…

  17. ஹவாய் தீவுக்கூட்டங்கில் ஒன்று ஒயாஹூ. இதன் வடக்கு கடற்கரை பகுதியான ஹலெய்வா பகுதியில் அமெரிக்க கப்பற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த இரண்டு ஹெலிகாப்டரிலும் தலா ஆறு பேர் இருந்தனர்.பயிற்சியில் ஈடுபட்ட இந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் திடீரென நேருக்கு நேர் மோதி வெடித்து சிதறின. இந்த விபத்து காரணமாக அதில் இருந்த 12 பேர் நிலைமை என்ன என்று தெரியவில்லை. இந்த விபத்தை அமெரிக்க ராணுவ அலுவலகம் உறுதி செய்துள்ளார். கடற்கரை காவல்கடையினர் ஹெலிகாப்டரின் எரிந்த பாகத்தை மீட்டுள்ளனர். ஆனால், யாரையும் உயிருடன் காணவில்லை என்று கூறினார்கள். இதனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.விபத்திற்கான முழுக்காரணம்…

  18. காசாவில் எட்டு மருத்துவர்களின் உயிரிழப்புக்கு செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்! தெற்கு காசாவின் ரஃபாவில் பணியில் இருந்த எட்டு மருத்துவர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) கோபமடைந்துள்ளதாக கூறியுள்ளது. மார்ச் 23 அன்று அல்-ஹஷாஷினில் ஒன்பது பேர் கொண்ட அம்பியூலன்ஸ் குழு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக IFRC தெரிவித்துள்ளது. ஒரு வாரமாக அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒரு மருத்துவர் இன்னும் காணவில்லை. பாலஸ்தீன ரெட் க்ரெசண்ட் சொசைட்டி (PRCS), தங்கள் ஊழியர்களின் உடல்களும், காசாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆறு உறுப்பினர்களின் உடல்களும், ஒரு ஐ.நா. ஊழியரின் உடல்கள…

  19. 18 APR, 2025 | 04:52 PM ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில் இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்குள் இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து சில நாட்களில் நான் பேசுகிறேன். ட்ரம்ப் இவ்விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளார். ஏனெனில் இதற்காக அவர் நிறைய நேர…

  20. பிரெக்சிட்டிற்குப் பிந்தைய குடியேற்ற விதிகளில் பிரிட்டன் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி திறன் குறைவான தொழிலாளர்களுக்கு இனிமேல் பிரிட்டன் விசா வழங்கப்பட மாட்டாது. குறைந்த சம்பளத்தில் ஐரோப்பிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதை விட்டுவிட்டு, இருக்கும் தொழிலாளர்களின் திறனை வளர்ப்பதுடன் கூடுதல் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துமாறு தொழில் நிறுவனங்களை பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும், இதர நாட்டவர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார். திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆண்டொன்றுக்கு 30 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து 25,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக…

    • 0 replies
    • 839 views
  21. பிரித்தானியாவில் அகதிகளுக்கு எதிரான பேரணியின் போது வன்முறையில் ஈடுபட முயன்றவர்களை பொலிசார் கைது செய்தனர். பிரித்தானியாவுக்கு அதிகளவு வரும் அகதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானியாவின் கெண்டில் அமைந்துள்ள கடற்கரை நகரமான டோவரில் அகதிகளுக்கு எதிராகவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் நியோ நாசிக் ஆதரவு வலதுசாரிகள் பேரணி மேற்கொண்டனர். அதேவேளையில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகதிகளுக்கு ஆதரவாகவும் கெண்ட் இனவெறி எதிர்ப்பு அமைப்பினர் பேரணி நடத்தி…

  22. பனாமாவில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து கசிந்த மில்லியன் கணக்கான ஆவணங்கள், உலக அளவில் இன்னும் பெரும் சர்ச்சைகளை கிளப்பிவருகின்றன.கடந்த ஒரு வாரகாலமாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தந்தை இயன் கேமரூன் வெளிநாட்டு நிறுவனம் பிரிட்டனில் வரி கட்டாமல் தவிர்த்ததா? அதன் லாபம் டேவிட் கேமரூனுக்கு கிடைத்ததா என்கிற புகார்கள் நீடித்து வந்தன.1980 களில் பஹாமாஸ் தீவில் பிளேர்மோர் வெளிநாட்டு நிதியத்தை டேவிட் கேமரூனின் தந்தை உருவாக்கினார் என்றும், அந்நிறுவனம் பிரிட்டனில் வரி செலுத்தவில்லை என்றும் பனாமா ஆவணங்கள் தெரிவித்திருந்தன. வரி தொடர்பாக வெளிப்படைத்தன்மை தேவை என்று சர்வதேச மாநாடுகளில் வலியுறுத்திய பிரிட்டன் பிரதமர், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பலனடைந்த…

  23. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டினர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் தாக்கிய பெண்மணி ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். நோய் தாக்கிய 15 பேர் சிகிச்சை பெற்று நலம்பெற்று வருவதாகவும், இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை தமது நாட்டுக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதே நிகழ்வில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ், கடந்த 14 நாட்களில் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித…

    • 0 replies
    • 537 views
  24. ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து; 68 பேர் மரணம், 74 பேர் மாயம்! ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஏமனுக்கு அருகில் நடந்த தொடர்ச்சியான கப்பல் விபத்துக்களில் அண்மைய நிகழ்வாகும். ஏமனில் உள்ள சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தலைவரான அப்துசாட்டர் எசோவ் கூறுகையில், 54 எத்தியோப்பிய குடியேறிகளுடன் சென்ற கப்பல், தெற்கு யேமன் மாகாணமான அப்யானில் இருந்து ஏடன் வளைகுடாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூழ்கியது. கான்ஃபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய 54 புலம்பெயர்ந்தோரின் உடல…

  25. 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்! ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa), 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனம் செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதன் விளைாவக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக AFP செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது உலகளவில் சுமார் 103,000 பேரைப் பணியமர்த்துகிறது. அதன் வலையமைப்பில் யூரோவிங்ஸ், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், சுவிஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் இத்தாலியின் புதிய முதன்மை விமான நிறுவனமாக அண்மையில் கையகப்படுத்திய ஐடிஏ ஏர்வேஸ் ஆகியவை அடங்கும். ஜேர்மனி இரண்டாவது வருட மந்தநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.