உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
பிலாவல் பூட்டோ| படம்: ராய்டர்ஸ். காஷ்மீரின் ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்க மாட்டோம், இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்வோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். பெனாசிர் அலி பூட்டோவின், மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் பகுதியில் அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இதனை தெரிவித்தார். பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு வயது 20. அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இளம் தலைவராவார். இந்நிலையில், தங்களது பாகிஸ்தான் மக்கள் கட்சியானது, இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும். காஷ்மீரின், ஓர் அங்குலம் அளவுகூட இந்தியாவிடம் விட்டுவைக்காது என பேசியுள்ளது பரபரப்பை…
-
- 0 replies
- 437 views
-
-
பிரான்ஸ் போர் விமானங்கள் ஈராக்கில் தாக்குதலைத் தொடங்கின! [saturday 2014-09-20 08:00] ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுப் போர் விமானங்கள் முதல் தாக்குதலை நடத்தியிருப்பதாக அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.ஈராக்கின் வட கிழக்குப் பகுதியில் இருந்த ஐஎஸ் பாசறை ஒன்றின் மீது விமானங்கள் தாக்குலை நடத்தியதாகவும் வரும் நாட்களில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் அதிபர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத மத்தியில் அமெரிக்கா ஐஎஸ் இயக்கத்தினர் மீது 170க்கும் மேற்பட்ட தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல நகரங்களும் சிறுநகரங்களும் இருக்க…
-
- 0 replies
- 620 views
-
-
அவுஸ்திரேலியாவை தீவிரவாதிகள் இலக்குவைக்கக் கூடும் என்ற புலனாய்வுத் தகவலையடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. கன்பராவிலுள்ள பாராளுமன்ற தளத்தின் பாதுகாப்பை அவுஸ்திரேலிய பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் டோனி அப்பொட் தெரிவித்தார். சிட்னி நகரில் தீவிரவாதத்துக்கு எதிரான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஒரு நாளின் பின்பே பாராளுமன்ற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ். போராளிகளின் ஆதரவாளர்கள் அவுஸ்திரேலியாவில் தலையை வெட்டி படுகொலை செய்தல் உள்ளடங்கலான படுகொலைகளை செய்வதற்கு திட்…
-
- 0 replies
- 377 views
-
-
Subscribe இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்ந்து உயிர் துறப்பார்கள்: மோடி இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, இந்தியாவுக்காகவே உயிர் துறப்பார்கள் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மோடி, இந்திய முஸ்லிம்கள் தங்களது தாளத்திற்கு ஏற்ப ஆடுவார்கள் என அல் காய்தா இயக்கம் தவறான எண்ணத்தை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இம்மாத கடைசியில் தாம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவு…
-
- 0 replies
- 384 views
-
-
ஆண்மைக் குறைவு..! திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை! மத்திய-மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோடீஸ்! [Friday 2014-09-19 21:00] தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சேர்ந்த வாலிபருக்கும், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தப் பெண் தனது கணவருக்கு ஆண்மைக் குறைவு இருப்பதாக கூறி விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தார். சமூக நலத்துறை அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் திருச்சி ஜூடிசியல் மாஜ…
-
- 0 replies
- 498 views
-
-
தம் தரப்பு வெற்றியை கொண்டாடும் வாக்காளர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 31 உள்ளூராட்சிப் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 1,914,187 பேரும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,539,920 பேரும் வாக்களித்திருந்தனர். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திர…
-
- 15 replies
- 1.5k views
-
-
வீட்டிலேயே ரூ. 348 கோடியில் மருத்துவமனை - சூமாக்கரின், மருத்துவ செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்! பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டில் படுகாயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சைப் பெற்று வரும் பார்முலா -1 கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கரின் மருத்துவச் செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்முலா-1 கார் பந்தயத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் சூமாக்கர். இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கினார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சூமாக்கர் சுயநினைவை இழந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சூமாக்…
-
- 2 replies
- 347 views
-
-
அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்புவதற்கு ஐ.எஸ் ஐ.எஸ் போராளிகள் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.எஸ்ஐ.எஸ் போராளி ஒருவர் புதிய திட்டங்கள் குறித்து எழுதியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தின் படி ஐ.எஸ்ஐ.எஸ் போராளிகள் பெப்சி போத்தலில் எபோலா வைரஸை கலந்து அதை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்று அங்குள்ள நீர் நிலைகளில் கலந்து விட திட்டமிட்டுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அவர்களை எபோலா வைரஸ் தாக்கியதும், அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு எபோலோ வைரஸை பரப்பவும் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. http://virakesari.lk/articles/2014/09/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%…
-
- 0 replies
- 441 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான வழிகளில் அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வெளியிட்ட கருத்து மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 12 புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைத்ததாக ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இதில் நான்கு படகுகள் ஒரேஞ் லைப் போட்ஸ் எனப்படும் ஆபத்தான படகுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான நிலைமைகளில் உயிர் காப்பதற்காக பயன்படுத்தப்படும் அவசர படகுகளைப் பயன்படுத்தி புகலிடக் கோரிக்கையாளர் கடல் வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படகுகள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை, …
-
- 0 replies
- 255 views
-
-
தலையை வெட்ட சதி செய்ததாக 15 பேர் ஆஸ்திரேலியாவில் கைது கொலைசெய்து அதை காட்சிப்படுத்த விரும்பிய ஒரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்திருக்கிறார். இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களுக்காக பொதுமக்களின் தலையை வெட்டிக்கொல்ல முயன்றவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் தொடர்பாக அரசுக்கு கிடைத்த முன்னெச்சரிக்கை புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் இவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டதாக அப்பாட் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களும் சண்டையிடுவதாக வெளியான கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு தீவிரவாதிகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுற…
-
- 4 replies
- 636 views
-
-
ஆண்மை பரிசோதனைக்காக ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாக நித்தி புகார்! தமக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்களை, பிரதமர் மோடி எனக்கு நெருக்கமானவர் எனக் கூறி நித்யானந்தா மிரட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தன்னை ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தியதாக கர்நாடக சிஐடி போலீஸார், விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் மீது புகார் கூறியுள்ள நித்யானந்தா, அவர்களுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நித்யானந்தாவுக…
-
- 9 replies
- 4.6k views
-
-
ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாகுமா? இன்று சர்வஜன வாக்கெடுப்பு 2014-09-18 10:47:15 பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டுமா என்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து மக்கள் இன்று வியாழக்கிழமை வாக்களிக்கவுள்ளனர். பிரித்தானிய பிரஜைகள், 52 பொதுநலவாய நாடுகளின் பிரஜைகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளில் ஸ்கொட்லாந்து பிராந்தியத்தில் வசிப்பவர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றலாம். ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல வேண்டுமா என வாக்குச்சீட்டில் கேட்கப்பட்டிருக்கும். இதில் 'ஆம்' என பெரும்பாலான ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களித்தால், 2016 மார்ச் 24 ஆம் திகதி ஸ்கொட்லாந்து புதிய சுதந்திர நாடாகவிடும் என்பது குற…
-
- 4 replies
- 1.7k views
-
-
இபோலா நோயாளிகளுக்கு களத்தில் முன்னின்று உதவி வருகிறது எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உயிர்க்கொல்லியான இபோலா நோய் பரவிவருவதைக் கட்டுப்படுத்துவதில் வெளிநாட்டு இராணுவங்கள் உதவ முன்வர வேண்டும் என எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தொண்டு நிறுவனம் சக்திமிக்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இபோலாவைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் முன்னின்று செயலாற்றுகின்ற இந்த அமைப்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள சூழ்நிலையால் திணறிவருவதாகக் கூறுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே இரண்டாயிரத்து ஐநூறைத் தாண்டியுள்ளது.வெளிநாடுகள் உடனடியாக இராணுவத்தினரையும், மருத்துவ உதவிக் குழுக்களையும் அனுப்பி நோயைக் கட்டுப்படுத்த வேண்…
-
- 1 reply
- 264 views
-
-
ஒரு முட்டை உற்பத்திக்கு தேவை 196 லிட்டர் 'மறை நீர்'! 2 பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். ஒரு பொருளுக்குள்…
-
- 1 reply
- 6.9k views
-
-
அவுஸ்திரேலியாவானது தனது தீவிரவாத அச்சுறுத்தலை மத்திய மட்டத்திலிருந்து உயர்மட்டத்திற்கு உயர்த்தியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்பொட் தெரிவித்தார். ஈராக் மற்றும் சிரியாவிலான போராளிகள் பிரச்சினையால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவு குறித்து கவலை அதிகரித்துள்ளதை கவனத்திற் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி போராளிக் குழுவுடன் இணைந்து பணியாற்றும் அல்லது அதனால் ஈர்க்கப்படும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். எனினும் திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்று தொடர்பில் குறிப்பிடத்தக்க புலனாய்வுத் தகவல் எதுவும் தமக்க…
-
- 1 reply
- 293 views
-
-
இளைஞனைக் கத்தியால் குத்திய நான்கு இலங்கையர்களைத் தேடுகிறது பிரித்தானியப் பொலிஸ் லண்டனில் 24 வயதான இளைஞன் ஒருவரை தலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற நான்கு இலங்கையர்களை பிரித்தானியப் பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் லண்டன் மிட்சம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 24 வயதான இளைஞரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு நான்கு இலங்கையர்கள் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதில் ஒருவர் 5 அடி 7 அங்குல உயரமான விளையாட்டு வீரர் போலத் தோற்றமளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. seithy.com
-
- 1 reply
- 600 views
-
-
'எச்ஐவி' இல்லா சான்றிதழ் தந்தால்தான் திருமணம்: தமிழகத்துக்கு வழிகாட்டும் தேனி மாவட்ட கிராமம் எச்ஐவி நெகட்டிவ் எனச் சான்றிதழ் தந்தால் மட்டும் திருமணம் செய்யும் வழக்கத்தை கட்டாயமாக்கி, தமிழகத்துக்கே வழிகாட்டுகிறது தேனி மாவட்டத்தில் உள்ள கருங்கட்டான்குளம் கிராமம். இக் கிராமத்தின் சேவையை உயர் நீதிமன்றம் பாராட்டியது. ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மையால் திருமணங்கள் தோல் வியில் முடிவதைத் தடுக்க, திருமணத்துக்கு முன் ஆணுக் கும் பெண்ணுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும் திட்டத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்வைத்தது. இப்பிரச்சினைக் குத் தீர்வுகாணும் நோக்கத்தில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான சிறப்பு விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வி…
-
- 2 replies
- 609 views
-
-
அமெரிக்க யுத்த விமானம் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் முதல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. மோதல்களில் இராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு நேரடியாக ஆதரவு வழங்கும் நோக்கத்தில், அமெரிக்காவின் யுத்த விமானங்கள் இராக்கின் வட பகுதியிலும் பாக்தாத் அருகிலும் உள்ள இலக்குகள் மீது குண்டுகள் வீசியுள்ளன. அதிபர் ஒபாமா இந்த புதிய வியூகத்தை சென்ற வாரம் அறிவிப்பதற்கு முன்பாக, அமெரிக்கப் படையினரை பாதுகாக்கும் நோக்கிலோ அல்லது மனிதாபிமான நோக்கங்களுக்காகவோதான் முன்னதாக நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்று வாஷிங்டன் கூறியிருந்தது. சமீபத்தில் இராக்க…
-
- 0 replies
- 708 views
-
-
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை | படம்: பிடிஐ 9 மாநில இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கை ஓங்கியுள்ளது; ராஜஸ்தானிலும் ஆளும் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. மூன்று மக்களவை மற்றும் உ.பி.யின் 11, ராஜஸ்தானின் 4, குஜராத்தின் 9, மேற்கு வங்காளத்தின் 2, அசாமின் 3 மற்றும் சிக்கிம், திரிபுரா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அத்தனை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குஜராத் …
-
- 0 replies
- 316 views
-
-
2016-அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி விருப்பம் இண்டியனோலா:அமெரி்க்காவின் மாஜி அதிபர் பில் கிளிண்டனில் மனைவியும் மாஜி வெளியுறவு அமைச்சரும்ான ஹிலாரி.ஜனநயாக கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார்.2016ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு ஆர்வம் உள்ளதாக தெரியவந்துள்ளது.இது குறித்து நேற்று அயோவா மாகாணத்தின் டெஸ் மோய்னஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் ஹிலாரி கலந்துகொண்டு பேசினார்.அப்போது இது குறித்து கேட்டபோது அதிபர் தேர்தல் என்றாலே எனக்கு உற்சாகம் வந்துவிடுவதாக அவர் தெரிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1071607
-
- 0 replies
- 374 views
-
-
கர்நாடகாவில் சூடு பிடிக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளித்தனர் கன்னட மக்கள் ! இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம். இந்தியை மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக்கி மற்ற தொன்மையான மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாக இந்திய அரசு பாவித்து வருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் இந்தி அல்லாத பிற மொழிகளை இந்திய அரசு புறக்கணித்து வருகிறது. இது உலகில் மிகப்பெரிய மொழித் தீண்டாமை ஆகும். இந்தி தெரியாவிட்டால் தமிழகத்தை தாண்ட முடியாது , சென்னையை தாண்ட முடியாது , வீட்டை தாண்டி வெளியே வர முடியாது என்றெல்லாம் பொய்யான திணிப்பு பரப்புரைய…
-
- 5 replies
- 800 views
-
-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்... 1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும் 3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம். 3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்) 4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம். 5. செய்யாறு கிராமம், சர்வே எண்…
-
- 2 replies
- 1.3k views
-
-
லடாக்கில்.... 100 இந்திய வீரர்களை. 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்? டெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 100 இந்திய வீரர்களை 300 சீன ராணுவத்தினர் முற்றுகையிட்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே உறுதியான எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் புர்ட்சே என்ற இடத்தில் கடந்த மாதம் 25 கி.மீ தூரம் சீனப் படையினர் ஊடுருவினர். இந்திய ராணுவத்தினர் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் லடாக் பகுதியில் டெம்சாக் என்ற இடத்தில் சீன வீரர்கள் 30 பேர் கடந்த 11ந் தேதி 500 மீட்டர் தூ…
-
- 0 replies
- 840 views
-
-
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் ஐக்கிய ராஜ்ஜியத்திடமிருந்து ஸ்காட்லாந்து பிரிந்துபோவது பற்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பற்றி பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் முதல் முறையாக தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மக்கள் வியாழக்கிழமை தங்கள் வாக்குகளை போடும் போது எதிர்காலத்தைப் பற்றி கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். அவரது கருத்துக்கள் ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கு எதிரானவர்களுக்கு ஆதரவானதாக அவர்களால் கூறிக்கொள்ளப்படலாம் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பக்கிங்காம் அரண்மனை அதிகாரிகளோ இந்த கருத்துக்கள், அரசி, பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின்படி வகிக்கும் பக்கசார்பற்ற நிலையை மீறவில்லை என்று கூறுகிறார்கள். பிரிட்டிஷ் …
-
- 1 reply
- 487 views
-
-
பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லப்போகிறதா? உலக அரங்கில் தற்போதைய மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று இது. ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமா? என்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில் ஆம் என அதிகமானோர் வாக்களித்தால் இரு வருடங்களுக்குள் ஸ்கொட்லாந்து சுதந்திர தனி நாடாகிவிடும். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியனவற்றை இணைத்துதான் ஐக்கிய இராச்சியம். முன்னர் அயர்லாந்தும் பிரிட்டனுடன் இணைந்திருந்தது. ஆனால் 1922 ஆம் ஆண்டு அயர்லாந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகியது. அயர்ல…
-
- 0 replies
- 530 views
-