Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: பலியான மலேசிய தமிழ் ஏர் ஹோஸ்டஸ் பிரமீளா ராஜேந்திரன். கோலாலம்பூர்: உக்ரைன்- ரஷ்ய எல்லைப் பகுதியில் புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களில் ஒருவர் தமிழ்ப் பெண் என்று தெரிய வந்துள்ளது. ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரன் என்ற அந்த 30 வயதுப் பெண் ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றியுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு நனவாகி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியவர் பிரமீளா என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர். சீனப் பத்திரிகை வெளியிட்டது. சீன மொழியில் வெளியாகும் மலேசிய நாளிதழ் சின் சியூ சுட்…

  2. வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'ராணா பிளாசா' ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஆயிரத்து 134 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சுமார் 2400 பேர் உடல் உறுப்புகள் சிதைந்து படுகாயமடைந்தனர். ஆயிரக்கணக்கான பிணங்களின் குடலை புரட்டும் துர்நாற்றத்தை மூன்று நாட்களாக சகித்துக் கொண்டு, இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வர முடியாமல் போராடிய ஒரு பெண், தனது ஒரே குழந்தையை காப்பாற்றவாவது உயிர் பிழைத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் தனது ஒரு கையால் ரம்பத்தை எடுத்து, மிகப் பெரிய கல்தூணின் கீழ் சிக்கியிருந்த மற்றொரு கையை வெட்டி வீசி விட்டு தப்பி வந்த சோகக் கதை தற்…

  3. இடிபாடுகளுக்குள் இன்னும் சடலங்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது இஸ்ரேலிய படைநடவடிக்கை தொடங்கிய கடந்த 13 நாட்களில் நேற்றிரவு நடந்துள்ள மிக மோசமான ஷெல் தாக்குதல்களில், காசாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு காசாவில் ஷெஜாய்யா பகுதியில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன. சடலங்கள் வீதியில் வைக்கப்பட்டிருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.மேலும் பலரின் சடலங்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. கடுமையதான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான இடங்களை ஆம்பியூலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறப்…

    • 0 replies
    • 414 views
  4. யுக்ரைனில் மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டமை தொடர்பிலான முழுமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். விமானத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளிவராத நிலையில் அங்கு முன்னெடுக்கபடும் விசாரணைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்குமென மோடி கடிதம் மூலம் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு உறுதியளித்துள்ளார். அத்துடன் நேற்று அனுப்பிய கடிதத்தினூடாக எம்.எச்.17 விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலையும் மோடி தெரிவித்துள்ளார். நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டமிலிருந்து கடந்த வியாழக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் யுக்ரைனின் கிழ…

  5. புதுடில்லி: சீனா, தன் ராணுவ வீரர்களுக்கு புதிதாக வழங்கியுள்ள வரைபடங்களில், அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தங்களுக்கு சொந்தமானதாக உரிமை கொண்டாடியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டின், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை, சீனா, தங்களுக்கு சொந்தமானது என, அவ்வப்போது உரிமை கொண்டாடி, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில நேரங்களில், அருணாச்சல பிரதேசத்துக்குள், சீன விமானங்கள், ராணுவ வீரர்கள், அத்துமீறி நுழைவதும் உண்டு. இந்திய அதிகாரிகள், சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பர். இந்நிலையில், எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள, தங்கள் வீரர்கள் அனைவருக்கும், சீனாவின் வரைபடம் ஒன்றை, அந்த நாட்டு அரசு வழங்கியுள்ளது. பாதுக…

    • 2 replies
    • 582 views
  6. பாக்தாத்தில் 5 இடங்களில் கார் குண்டு தாக்குதல்: 26 பேர் சாவு பிரதி ஈராக்கில் முக்கிய நகரங்களைப் பிடித்து தனி நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ். போராளிகள், ராணுவத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். பாக்தாத்தை நோக்கி முன்னேறி வரும் அவர்களை ஈராக் ராணுவமும், ஷியா போராளிகளும் இணைந்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இழந்த பகுதிகளை மீட்பதற்கும் ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. அதேசமயம் இனவாத தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து 5 இடங்களில் இன்று தற்கொலைப் படையினர் கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். முதல் குண்டு அபு தஷீர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் வெடித்தது. இத…

    • 0 replies
    • 416 views
  7. பழமையான தமிழ் மொழியின் அடிப்படையில், வளமான கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் அதிகாரபூர்வமாக சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது எனத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் பதிமூன்றாம் தேதிவரை, சமஸ்கிருத வாரத்தை எல்லா மாநிலங்களிலும் கொண்டாட வேண்டுமென மத்தியப் பள்ளிக் கல்வித் துறையின் செயலர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் தீவிரமான சமூக நீதி இயக்கமும் மொழி இயக்கமும் நடைபெற்றுள்ளது. ஆகவே அதிகாரபூர்வமாக சமஸ்கிருத வாரத்தைத் தமிழகத்தில் கொண்…

  8. காஸா மீதான தரைவழி தாக்குதலுக்குத் தயாராகும்படி இஸ்ரேல் பிரதமர் உத்தரவு! - ஒபாமா எச்சரிக்கை [saturday 2014-07-19 17:00] காஸா மீதான தரைவழி தாக்குதலை விரிவுபடுத்த தயாராகும்படி ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 314 ஆகி உள்ளது. இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் 48 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார். இதற்கிடையே காஸா நிலவரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, காஸாமுனை மீதான தரைவழி தாக்குதலை குறிப்…

  9. உக்ரைன் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப் பட்ட மலேசிய ஜெட் பற்றிய முக்கிய தகவல்கள்! [Friday 2014-07-18 23:00] மலேசியன் ஏர்லைன்ஸின் MH 17 விமானம் அம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நேற்று வியாழக்கிழமை மாலை உக்ரைன் ரஷ்ய எல்லையில் இருந்து 40 Km தொலைவில் டொனெட்ஸ்க் மாவட்டத்திலுள்ள ஹ்ராபோவே வான் பரப்பில் ஏவுகணையால் தாக்கி அழிக்கப் பட்டது. இதன்போது விமானத்தில் பயணித்த அனைத்து 283 பயணிகளும் 15 விமானப் பணியாளர்களும் உட்பட 298 பேர் கொல்லப் பட்டனர். கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தரையில் இருந்து விமானம் தாக்கும் ஏவுகணையால் இவ்விமானம் தாக்கி அழிக்கப் பட்டதாக அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செ…

  10. வாஷிங்டன்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் தனது நிலையை ரஷ்யா மாற்றிக்கொள்ளாவிட்டால், அதை பார்த்துக்கொண்டு அமெரிக்கா சும்மா இருக்காது என அதிபர் ஒபாமா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, மலேசிய விமானம் ஏவுகணைகளைக் கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த விமான விபத்தில் அமெரிக்கர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். விமான விபத்து தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் நெதர்லாந்து நாட்டு தலைவர்களுடன் விவா…

  11. சிரிய இராணுவம் ஐ.எஸ். போராளிகள் மோதல் 90 இராணுவ வீரர்கள் பலி: - எரிவாயு வயலை கைப்பற்றினர் போராளிகள் [Friday 2014-07-18 21:00] சிரியாவில் முன்னேறி வரும் ஐ.எஸ். போராளிகள் நேற்று எரிவாயு வயலை கைப்பற்றினர். அப்போது நடந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 90 பேரை சுட்டுக்கொன்றனர். அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைப் பிடித்து இஸ்லாமிய நாட்டை உருவாக்கியுள்ள ஐ.எஸ். போராளிகள் குழு, தொடர்ந்து அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு சவாலாக விளங்குகின்றனர். அவர்களிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக சிரியா விமான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷார் எரிவாயு வயலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த போராளிகள் குழு, அங்கு பாது…

  12. உக்ரைன் விமானம் என நினைத்து தாக்கினேன்: - ரஷ்ய ஆதரவுப்படை தலைவர் [Friday 2014-07-18 11:00] மலேசிய விமானத்தை உக்ரைன் விமானப்படை விமானம் என தவறுதலாக நினைத்து தான் சுட்டுவிட்டதாக ரஷ்ய ராணுவ ஆதரவுப் படையின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 295 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை மதியம் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர். இந்நிலையில் ரஷ்ய ஆதரவுப்படை தீவிரவாதிகளின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உக்ரைன் விமானப்ப…

  13. https://www.facebook.com/photo.php?fbid=465419050262262&set=a.121009184703252.21333.100003825135026&type=1&theater நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய நோக்கி புறப்பட்ட MH17 விமானம் உக்ரேய்ன் வான் பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டதால் அவ்விமானத்தில் பயணித்த 295 பேரும் நேற்று உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த விமானம் புறப்பட முன்னர் அதன் பயணிகளில் ஒருவரான நெதர்லாந்து நாட்டுக் காரர் Cor Pan என்பவர், ஆம்ஸ்டர்டாம் சிபோல் விமானநிலையத்தில் வைத்து அவ்விமானத்தை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். 'ஒருவேளை இவ்விமானம் காணாமல் போனால், விமானத்தின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை நினைவ…

  14. உக்ரைனின் கிழக்கில் பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டதற்கான பொறுப்பை உக்ரைனே ஏற்க வேண்டும் என்று இன்று வெள்ளிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். பிரிவினைவாதிகளுக்கு எதிராக ஓர் இராணுவ நடவடிக்கையை உக்ரைன் அரசாங்கம் மீண்டும் தொடங்காமல் இருந்திருந்தால் இது நடந்திருக்கமாட்டாது எனவும் அவர் கூறினார். அங்கு அமைதி இருந்திருப்பின் இந்த துயர சம்பவம் இடம்பெற்றிருக்காது. தென்கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கை நடைபெற்றிருக்காவிடின் இது இடம்பெற்றிருக்காது எனவும் அவர் கூறினார். இந்த துயர சம்பவத்துக்கான பொறுப்பை இந்தச் சம்பவம் இடம்பெற்ற ஆட்புலத்தின் அரசாங்கம் ஏற்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இயன்ற சகல உதவிகளையும் வழங்குமாறு ரஷ்ய அதிகாரி…

  15. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டது. அந்த விமானம், உக்ரைன் நாட்டு வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ராடார்‘ கருவியின் பார்வையில் இருந்து மறைந்தது. சற்று நேரத்தில், விமானம் தீப்பிடித்தபடி, வானத்தில் இருந்து நெருப்புக் கோளமாக தரையில் விழுந்தது. மலேசிய விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 298 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டர் என்று உக்ரைன் அரசு தரப்பு கூறியுள்…

  16. ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஈராக்கில், ஐ.எஸ்,ஐ,எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பு, அங்குள்ள அரசுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு சிரியாவிலும், ஈராக்கிலும் பல நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரக்கா, திக்ரித், மோசூல் உள்ளிட்ட பல நகரங்கள் இந்த அமைப்பின் பிடியில் சிக்கி உள்ளன. இதைத் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து, புதிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பில் இந்தியாவை சேர்ந்த ஒரு தமிழர் உட்பட 18 பேர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், …

  17. உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்டடாமிலிருந்து மலேசியா நோக்கிப் பயணித்த எம்.எச்.17 ரக விமான உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்ய ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களினால் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைன் இராணுவமே விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்துள்ளதால் அந்த கறுப்பு பெட்டியில் உள்ள தகவல் பரிமாற்றம் மூலம், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய…

  18. ஒரு வேளை உலகம் முடியப் போகுதோ...? கிலியை ஏற்படுத்தும் சைபீரியாவின் பெரும் பள்ளம். மாஸ்கோ: சைபீரியாவின் யாமல் தீபகற்பத்தில் தோன்றிய மிகப்பெரிய பள்ளத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குட்பட் வடக்கு சைபீரியாவின் தீபகற்ப பகுதியான யாமல் ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையாக அமைந்துள்ளது. இயற்கை எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு இப்பகுதி ஆகும். உலகத்தின் கடைசிப் பகுதி என்றும் இது அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மெகா சைஸ் பள்ளம் தோன்றியுள்ளது. இது 80 மீ அகலம் கொண்டதாகவும் இருந்தது. ஆனால் ஆழம் என்ன என்று தெரியவில்லை. எனவே அதன் ஆழம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திடீரென இந்தப் பள்ளம் தோன்றியத…

  19. இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் 120க்கும் மேற்பட்ட மக்கள் பலி காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களில் தொடங்கிய நாள்முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவிவரும் ஹமாஸ் ஆயுததாரிகளின் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகின்றது. ராக்கெட் தாக்குதல்களில் எந்தவொரு இஸ்ரேலியரும் கொல்லப்படவில்லை. பீய்ட் லாஹியா நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று பயன்படுத்திவந்த கட்டடம் மீது நடந்துள்ள வான் தாக்குதல்களில் அங்கவீனச் சிறார்கள் இருவர் கொல்லப்…

    • 14 replies
    • 878 views
  20. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேரனும், மகள் பிரியங்கா-ராபர்ட் வதேரா தம்பதியரின் மகனுமான ரேஹான் இன்று பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் போது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்தார். நேரு குடும்பத்து ஐந்தாவது தலைமுறை ரேஹான் 13 வயது ஆகிறது. அவர் இன்று தனது 3 நண்பர்களுடன் வந்து இருந்தார்.அவர் சபாநாயகர் இருக்கைக்கு நேர் எதிரில் அமர்ந்து இருந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=113258&category=IndianNews&language=tamil

  21. யுக்ரெயின் ராணுவம் (ஆவணப்படம்) யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில் ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த எஸ்.யு 25 ரக விமானம் புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார் என்றும், அவர் காயமின்றி மீட்கப்பட்டார் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார். ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து ஒரு யுக்ரெயினிய கிராமம் ஒன்றில் க்ராட் ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது போல காட்டும் amateur வீடியோ காட்சிகளை யுக்ரெயினிய ஊடகங்கள் காட்டின. இந்த காட்சிகளை பிபிசியால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை. கிழக்கு யுக்ரெயினில் பிரிவினைவாதி…

  22. பெங்களூரு: பெங்களூருவில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி 2 பேரால் பள்ளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவின் கிழக்குப்பகுதியில் விப்கியார் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் நிஷா ( பெயர் மாற்றம்) என்ற சிறுமியை அப்பள்ளியில் பணிபுரியும் உடற் பயிற்சியாளரும், காவலாளியும் சேர்ந்து பள்ளியின் மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அச்சிறுமி கழிப்பறைக்கு சென்றபோதே அவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர். கடந்த ஜுலை 2 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்…

  23. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வரும் நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்டுசன் டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய விஷத்தை தடவி கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாக ஷனான் கெஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெக்சாஸ் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, விஷத்தை வைத்ததாக ஒப்புக்கொண்ட நடிகை, ஆனால் விஷம் தடவிய கடிதங்களை தனது முன்னாள் கணவர்தான் அனுப்பினார் என்றும் வாதிட்ட…

  24. பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீஃப்புக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது... "பாகிஸ்தான் அரசுடன் இணைந்து, இணக்கமாக செயல்பட தயாராக உள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேலும் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கராச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அந்த கடிதத்தில் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நவாஸ் ஷெரீஃப், தனது இந்தியப் பயணம் திருப்திகரமாக இருந்ததாகவும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் இரு நாடுகளுக்கு இட…

  25. காஸா மீது ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் முற்றியுள்ளது. காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், காஸாவில் 208-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்போரை நிறுத்துவதற்காக எகிப்து மேற்கொண்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனான் மற்றும் காஸா பகுதியிலிருந்து ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துகின்றனர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.