உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் காலமானார் நாடின் கார்டிமர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கார்டிமர் தன் 90-வது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். ஜோகன்னஸ்பர்க்கிலுள்ள அவரது இல்லத்தில், தூங்கிக் கொண்டிருந்த போது கார்டிமர் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கார்டிமர் 1991-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கவுரவிக் கப்பட்டார். கார்டிமர் 15 புதினங்களையும், ஏராளமான சிறுகதைகள், புனைவுகளற்ற கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. இனவெறிக்கு எதிரான போராளி தென் ஆப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவை சார்ந்தே அவர் அதிகம் எழ…
-
- 0 replies
- 312 views
-
-
'ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா' என்று இவ்வம்மையாரையும், அவர் பின்னில் இருக்கும் அரசியல்வாதிகளின் செல்வாக்கையும் ஆவேசமாகச் சாடும் இவ்வேளையில், இந்நிகழ்வில் வெறித்தனமான பற்றோடு பங்கேற்று, வரலாறுக் காணாத வகையில் விழாவைச் சிறப்பாக அரங்கேற்றிய இப்பாழும் மக்களின் மீதும் கொஞ்சம் சாடல்களை வீசுவது தவறாகிவிடுமா? வாழ்க நம் மக்கள்! வளர்க நம் கல்விக்கலாச்சாரம்! fb.
-
- 0 replies
- 508 views
-
-
அமெரிக்க ராணுவ வீரர்களின் சுகபோக வாழ்க்கைக்காக தென் கொரிய அரசால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள், தங்களுக்கு உரிய நஷ்ட ஈடும், இறுதிவரை அரசின் அரவணைப்பும் தேவை என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். 1960-களில், அப்பா அடிக்கிறார் என்பதற்காகக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே இளம் பெண்ணாக வந்த சோ மியுங் ஜா (76), பாலியல் தொழில் தரகர்களிடம் சிக்கினார். அமெரிக்க வீரர்களுக்காக நடத்தப்பட்ட பாலியல் தொழில் விடுதியில் விற்கப்பட்டார். இரண்டாவது உலகப் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட தென் கொரிய மகளிரைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதற்காக தங்கள் நாட்டுக்கு உரிய நஷ்டஈட்டைத் தர வேண்டும் என்று தென் கொரிய அரசு ஜப்பான் மீது வழக்கு தொடுத்துள்ள நிலையில், தென் கொரிய அரசு மீதே முன்னாள்…
-
- 1 reply
- 434 views
-
-
நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் திடீரென தீ பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜுலை 13 ஆம் தேதி மாலை நியூ ஜெர்சியிலிருந்து மும்பைக்கு 313 பயணிகளோடு புறப்பட்ட ஏர் இந்தியா 144 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இடது புற என்ஜினில் தீ பற்றியதாக விமானி தகவல் கொடுத்தார். இதையடுத்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் நியூ ஜெர்சி விமானநிலையத்தை வந்தடைந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட பழுது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்டதாக வெளிவந்த…
-
- 1 reply
- 278 views
-
-
7-வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல். | படம்: ஏ.பி. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. ஏழாவது நாளை எட்டியுள்ள வான்வழித் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள சேதம் குறித்து காஸா சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தெற்கு காஸா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தந்தை, மகன் உள்பட 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ரஃபான், கான் யூனிஸ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் படைகள் காஸா மீது வான்வழி தாக்குதல் நடத்தத் துவங்கியதில் இருந்து இதுவரை 170 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள…
-
- 0 replies
- 457 views
-
-
"நமக்கான விடிவு காலம் நெருங்குகிறது. இறைத்தூதரின் தீர்க்கதரிசனம் நிஜமாகிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய கிலாபத்துக்கள் உலகம் முழுவதும் நிலைநாட்டச் செய்யும் கறுப்புப் படை உதயமாகிவிட்டது. ஜிஹாதில் பங்கெடுக்கும் தருணம் இதுவே" என சில நாடுகளிலுள்ள சில இஸ்லாமியர்கள் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த திடீர் உணர்ச்சிவசத்துக்கு காரணம் என்னவென்றால் உலகமே தற்போது பேசிக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் இஸ்லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் சிரியா அல்லது இஸ்லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் எண்ட் லெவன்ட் (ஐ.எஸ்.ஐ.எல்) எனும் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கமே. கடந்த மாதம் தான் கைப்பற்றிய ஈராக் படையினர் பலரை ஐ.எஸ்.ஐ.எஸ். அ…
-
- 3 replies
- 1.8k views
-
-
வேட்டி' விவகாரம்: தமிழக அரசு தலையிட தலைவர்கள் வலியுறுத்தல் வேட்டி அணிந்து சென்ற நீதிபதி, வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் தலைவர்கள், பொது நிகழ்ச்சிகளில் ஆடை கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் உள்ளது. இங்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.எஸ்.அருணாசலம் எழுதிய நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் சிவப்பு விளக்கு பொருத்திய தனது அலுவலக காரில் சென்றுள்ளார். வேட்டி அணிந்து சென்றிருந்த அவரை விழா அரங்கு…
-
- 5 replies
- 480 views
-
-
இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில், செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ சத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செலுத்தப்பட்டது. மங்கள்யான் அதன் 11 மாத பயணத்தில் உள்ள நிலையில், அது இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் பயணிக்க வேண்டிய 680 மில்லியன் கீ.மி தூரத்தில் தற்போது 525 மி…
-
- 0 replies
- 236 views
-
-
புலி அருகிவரும் உயிரினங்களில் ஒன்று புலித்தோல் விற்பனையை அனுமதிக்கின்றமைமைய சீனா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளதாக அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான சர்வதேச கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுகளில் அடைத்து வளர்க்கப்படும் புலிகளின் தோல்களை வணிக நோக்கத்திற்காக விற்கும் நடவடிக்கையை சீனா அனுமதிப்பதாக குற்றம்சாட்டும் முக்கிய அறிக்கையொன்று ஜெனீவாவில் நடந்துவரும் இந்த சந்திப்பின்போது வெளியிடப்பட்டுள்ளது. சைட்ஸ் என்ற 'அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்பாடு' தொடர்பான சீனாவின் தூதுக்குழுவினர், இந்த புலித்தோல் விற்பனை நடந்துவருவதை ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெனீவா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கூறுகின்றனர். அதேநேரம், புலிகளின் எலும்புகளின் விற்பனை தடைசெ…
-
- 0 replies
- 320 views
-
-
இந்தியாவில் சுற்றுலா விடுதிகளை விட சாலையோர உணவகங்கள் சுகாதாரமானவை: ஆஸ்திரேலிய உணவு ஆய்வாளர் தகவல் கோப்புப் படம்: ஜீ.மூர்த்தி. தெருவோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் சுகாதார மற்றவை, உடலுக்குக் கேடு விளைவிப்பவை என்ற கருத்து தவறாகிவிடும்போல் இருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல உணவு வரலாற்று ஆய்வாளர் சார்மைன் ஓ பிரெய்ன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்திய உணவு வகைகளைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளார். அதில், இந்திய சுற்றுலா விடுதி களில் வழங்கப்படும் உணவு களைக் காட்டிலும், சாலையோர உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் பாதுகாப்பானவை என்று அவர் கூறியிருக்கிறார். ‘தி பெங்குயின் புட் கைடு டூ இந்தியா’ என்ற புத்தகத்தை சார்மைன் ஒ பிரெய்ன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 407 views
-
-
ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை, அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.8 ரிச்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோவில் இருந்து வட-கிழக்காக உள்ள நமி பகுதியில் பூமியின் சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி அதிகால 4.22 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தையடுத்து கடலில் ஒரு மீற்றர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழலாம் என்பதால் புகுஷிமா அணு உலை அமைந்திருக்கும் கடலோரப் பகுதியில் உள்ள இவாட்டே, மியாகி ஆகிய நகரங்களுக்கு ‘சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவாட்டே நகர மக்களை உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ப…
-
- 0 replies
- 256 views
-
-
புதுடெல்லி: 2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் 58 புதிய ரயில்கள் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்ற சிறப்பு அம்சங்கள் வருமாறு: * 58 புதிய ரயில்கள் அறிமுகம் * அகமதாபாத்- சென்னைக்கு புதிய ரயில் இயக்கப்படும். * தொழில்நுட்பம்- தொழில்நுட்பம் சாரா படிப்புகளுக்காக ரயில்வே பல்கலைக்கழகம் * அனைத்து ரயில் நிலைய கூரைகளில் சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்படும். * ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்ற ரூ.1800 கோடி ஒதுக்கீடு * விழாக்காலங்களில் வேளாங்கண்ணி, மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில் சேவை தொடரும். * சாலிமார்- சென்னை, ஜெய்ப்பூர்- மதுரை ஏ.சி. விரைவு ரயில்கள் விரிவுபடுத…
-
- 4 replies
- 392 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்ற தமிழர்கள் தமிழகத்தில்! சுப்ரமணிய சுவாமியின் புதிய புரளி இது! [Friday 2014-07-11 22:00] ஈராக் மற்றும் சிரியாவில் ஆயுதமேந்தி போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவியிருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி புதிய பரளி புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பதாவது.. இந்திய அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பாக எனக்குத் தெரியவந்…
-
- 0 replies
- 518 views
-
-
பாக்தாத்: அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தம் மூலப் பொருளான யுரேனியத்தை சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது. ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஈராக்கில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது. இஸ்லாமிய தேசம் சிரியா மற்றும் ஈராக்கில் தமது அமைப்பு கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து "இஸ்லாமிய தேசம்" என்ற தனிநாடும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக பக்தாதி அறிவிக்கப்பட்டும் இருக்கிறார். இவருக்கு கீழ்தான் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இருக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்…
-
- 1 reply
- 753 views
-
-
சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பிடியில் கடந்த 44 மாதங்களாக இருக்கும் தமிழர் ஒருவரை விடுவிக்க மாநில அரசு உதவ முன்வர வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், செயல்பாட்டாளர்களும் கோரியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியைச் சேர்ந்த டெனிசன் உட்பட 15 பேர், 28.9.2010 முதல் கடற்கொள்ளகியர்களின் பிடியில் உள்ளனர் என்றும், அவர்களில் 8 பேர் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் புன்னைக்காயல் கப்பல் மாலுமிகள் சங்கத்தின் உறுப்பினர் வெர்ஜில் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தொடர்புடைய விடயங்கள் ஆட்கடத்தல் இவர்களை விடுவிக்க ஒன்பது கோடி இந்திய ரூபாய்கள் வரை அவர்கள் கோரியுள்ளதாக, டெனிசன் ஒரிரு தினங்களுக்கு முன்னர் தமது குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடியபோ…
-
- 0 replies
- 480 views
-
-
புதுடெல்லி: 2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் சிகரெட், பான் மசாலா, குட்கா, எவர்சில்வர் பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் டி.வி., சோப், செருப்பு உள்ளிட்டவை மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2014-15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய சிறப்பு அம்சங்கள் வருமாறு: * எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக அதிகரிப்பு. * வைரம், நவரத்தினக் கற்களின் விலை குறையும. * சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் உற்பத்தி வரி. * சோப்புகள் தயாரிப்புக்கான உற்பத்தி வரி குறைக்கப்படும். இதனால், …
-
- 0 replies
- 953 views
-
-
புதுடில்லி:அமெரிக்காவுக்கு தற்காலிக பணியாளர்களாக செல்லும், இந்தியர்களுக்கு வழங்கப்படும், 'எச்1பி' விசாவுக்கு, அந்நாட்டு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக, 'எச்1பி' விசாவை அந்நாட்டு அரசு வழங்குகிறது. ஆண்டுதோறும், 85 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன.இந்த விசாவை பெற்றவர்கள், ஆறு ஆண்டுகள் வரை, அமெரிக்காவில் தங்கியிருந்து பணிபுரியலாம். அமெரிக்காவில், ஏறக்குறைய ஆறு லட்சம் பேரிடம் இந்த விசா உள்ளது.இந்நிலையில், அதிகளவு இந்தியர்களுக்கு, இந்த விசா வழங்கப்படுவதால், தங்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதாக, அமெரிக்கர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக…
-
- 1 reply
- 436 views
-
-
புதுடெல்லி: விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தின் போது மக்களவையில் ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருப்பது போன்ற காட்சி டி.வி.யில் ஒளிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் நேற்று முன்தினம் (7ஆம் தேதி) தொடங்கியது. இந்நிலையில், இன்று (9ஆம் தேதி) பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இதையடுத்து, விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கண்களை மூடி, தலையை வலதுபுறமாக தொங்க விட்டு கொண்டிருந்தது போன்ற காட்சி நாடாளுமன்ற டி.வி.யில் ஒளிபரப்பானது. மேலும் இந்த காட்சி வலைதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகு…
-
- 1 reply
- 450 views
-
-
சம்சுங் தொழிற்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் 36 மில்லியன் டொலர் (சுமார் 469 கோடி ரூபா) பெறுமதியான இலத்தினரியல் சாதனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பிரேஸில் நாட்டில் சாவோ பவ்லோ நகருக்கு அருகிலுள்ள கம்பினாஸ் எனுமிடத்திலுள்ள சம்சுங் இலத்திரனியல் நிறுவனத்தின் தொழிற்சாலையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினமிரவு தீடிரென தொழிற்சாலைக்குள் புகுந்த ஆயுதம் தாங்கிய 20 பேர் கொண்ட குழுவொன்று 200 பணியாளர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக உள்ளுர் பொலிஸார் ஏ.ஃப்.பிக்கு தெரிவித்துள்ளார். இதன்போது 40 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள், லெப்டொப்கள், டெப்லட் உள்ளிட்ட மேலும் பல இலத்திரனியல் சாதனங்களும் கொள்ளையிடப…
-
- 0 replies
- 363 views
-
-
புதுடெல்லி: வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ‘நேஷனல் ஹெரால்டு’ நாளேட்டுக்கு சொந்தமான சுமார் ரூ.1.600 கோடி சொத்துக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது சட்ட விரோத பண பரிவர்த்தன…
-
- 0 replies
- 359 views
-
-
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித் ஷா பா.ஜனதாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக முந்தைய தலைவரான ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டெல்லியில் இன்று பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜ்நாத் சிங் விலகினார். இதனையடுத்து பா.ஜனதாவின் புதிய தலைவராக, ஆட்சி மன்றக்குழுவில் இடம்பெற்றுள்ள 12 உறுப்பினர்களால், அமித் ஷா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக கட்சித் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இத்தகவலை, கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் அறிவித்தார். மோடி, அத்வானி வாழ்த்து பா.ஜனதா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்…
-
- 0 replies
- 324 views
-
-
அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களில் சார்ஜ் செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினி சாதனங்கள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல் கைதாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் புதிய வகை குண்டுகளை தயார் செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளும் அச்சம் காரணமாகவே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பிள் ஐ போன், சம்சுங் கலக்ஸி உள்ளிட்ட கையடக்கதொலைபேசிகள், டெப்லட்கள், லெட்டொப்கள் உள்ளிட்ட ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் சார்ஜ் செய்யப்படாமல் அமெரிக்க செல்லும் விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்க அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் தீர்மானம் செய்துள்ளனர். ஐரோப்பா, மத்திய கிழக்கு, ம…
-
- 2 replies
- 464 views
-
-
கிறிஸ்தவ பாதிரியார்களினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிப்படைந்த சிறுவர்களிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபகாலமாக சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் உலகளவில் சிறுவர் - சிறுமிகள் பலர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிகன் சிட்டியில் நேற்று நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார் போப் ஆண்டவர். கெஞ்சிக் கேட்கிறேன்... பாதிரியார்களின் பாலியல் துஸ்பிரயோகத்தை மறந்துவிடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்…
-
- 0 replies
- 344 views
-
-
ராஜீவ் கொலையில் விடுதலைப்புலி பத்மநாபனை விசாரிக்ககோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் சென்னை ஐகோர்ட்டில், மைலாப்பூரை சேர்ந்த ஜெபமணி மோகன்ராஜ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை புலித் தலைவர் பிரபாகரன், அவரது நெருங்கிய நண்பரும், விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவருமான கே.பி. என்று அழைக்கப்படும் கே.பத்மநாபன் என்ற குமரன் பத்மநாபன், பொட்டுஅம்மான் உட்பட பலரை சி.பி.ஐ. பல்நோக்கு புலனாய்வு பிரிவு போலசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கே.பி. என்ற கே.பத்மநாபன் 2009-ம் ஆண்டு மலேசியாவில் வைத்து இலங்கை ராணுவம் கைது செய்தது. ராஜீவ்காந்தி கொலையில் பத்மநாபன்தான், நிதி உதவி வழங்கும் பொருளாளராக செயல்பட்டுள்ளார். இந்த கொலையில் நடந…
-
- 0 replies
- 488 views
-
-
பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு திபெத். திபெத் பண்பாடு நடு ஆசியாவின் மலைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் வாழும் மக்களின் பண்பாடு ஆகும். திபெத் பண்பாடு என்பது திபெத்திய பெளத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள், இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடு என உலக இனவரைவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். திபெத் பண்பாட்டின் ஒரு சின்னமாக வெளி உலகால் நன்கு அறியப்பட்ட முகம் திபெத்திய பெளத்த சமயத்தின் தலைவராகக் கருதப்படும் பாரம்பரிய தலாய் லாமா ஆவார். ஆனால் பேராசை கொண்ட சீனா, இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் இருந்ததால், அதனை தனதாக்கிக் கொள்வதன் மூலம், இந்தியாவை,…
-
- 0 replies
- 3.8k views
-