Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடெல்லி: " ஷீரடி சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர், அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும்?" என்று துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். இந்துக்கள் ஷீரடி சாய்பாபாவை வழிபடுவதற்கு, துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுள்களின் படங்களையும் பயன்படுத்துகின்றனர். பணம் பெறுகின்றனர் என்று கூறியுள்ள அவர், நமது கடவுள்களின் படங்களை பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு யார் அனைத்தையும் கொடுப்பார்கள் என்று எழுப்பியுள்ளார். இந்து கடவுள் புகைப்படங்களுடன் சாய்பாபாவின் பட…

    • 3 replies
    • 1.7k views
  2. கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் சாடல் உச்சநீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்கும் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி பழிவாங்கல் அரசியலை கடைபிடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்க நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரைத்தது. ஆனால் இதை மத்தியா அரசு ஏற்க மறுத்தது. கோபால் சுப்பிரமணியம் விவகாரத்தில் பாஜக பழிவாங்கலுடன் செயல்படுகிறது: காங்கிரஸ் சாடல் இந்த விவகாரத்தில் மத்திய அரசை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா மிகக் கடுமையாக சாடியிருந்தார்…

  3. மும்பை: எல்லோருடைய முன்னிலையிலும் உனது ஆடைகளை கலைவேன் என பெண் ஒருவரை மிரட்டியதாக சிவசேனா எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, கிழக்கு பந்தரா, காந்திநகர் சங்கம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கேர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கிழக்கு பந்தரா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் பால சவந்த், 'எல்லோருடைய முன்னிலையிலும் உனது ஆடைகளை அகற்றி உன்னை அடிப்பேன்' என என்னை மிரட்டினார் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சிவசேனா எம்.எல்.ஏ. பிரகாஷ் பால சவந்த் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்ததும் நுற்றுக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர…

  4. சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 81வது இடம் கிடைத்துள்ளது. உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த நாட்டுக்கான அளவுகோல்கள் அடிப்படையில், நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தியா 81வது இடத்தில் உள்ளது. ஆனால், சீனாவுடன் ஒப்பிடுகையில் இது பெருமைக்குரியதுதான். ஏனென்றால், சீனா 107வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில், அயர்லாந்துக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. மனித இனத்துக்கும், பூமிக்கும் ஆற்றிய பணிக்காக இக்கவுரவம் கிடைத்துள்ளது. பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை அடுத்தடுத்து இடங்களைப் பிடித்துள்ளன. http://news.vikatan.com/article.php…

  5. பர்மாவில் மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் (ஆவணப்படம்) மியன்மாரின் (பர்மா) இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு மசூதியும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை போலிசார் தடுத்தனர். முஸ்லீம் ஒருவர் சுடப்பட்டார் என்றும், மூன்று பௌத்தர்கள் காயமடைந்தனர் என்றும் உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. பர்மாவின் மேற்குப் புற மாகாணமான ரக்கைன் மாகாணத்தில், கடந்த மூன்றாண்டுகளாகவே, பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்துக்கும் இடையே மதரீதியான வன்செயல்கள் நடந்து வந்திருக்கின்றன. இந்த மோதல்களில் 2012ம் ஆண்டில் மட்டும், ரக்கைன…

  6. இஸ்லாமிய கிலாஃபத்தில் வந்து குடியேற உலக முஸ்லீம்களை அழைக்கிறார் அல் பக்தாதி உலக முஸ்லீம்கள் இராக் மற்றும் சிரியாவுக்கு வந்து புதிதாக உருவானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசை பலப்படுத்த ஐஸிஸ் அமைப்பின் தலைவர் அபு பக்ர் அல் பக்தாதி கோரியிருக்கிறார். இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது என்பது முஸ்லீம்களுக்குரிய "கடமை" என்று அவர் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் கூறியிருக்கிறார். குறிப்பாக, நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய கிலாஃபத்துக்கு வரவேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார். "சிரியா , சிரியர்களுக்கு மட்டுமானதல்ல, இராக், இராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல , ம…

    • 0 replies
    • 407 views
  7. நரேந்திர மோடி பிரதமராகலாம் என்கிற சூழலில் அமெரிக்கா பாஜகவை வேவுபார்த்ததாக புகார் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய பிரதான எதிர்கட்சியான பாஜகவை அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்ததாக வெளியான செய்திகள் தொடர்பில் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்கமுடியாதவை என்று வர்ணித்திருக்கும் இந்திய அதிகாரிகள் இனிமேல் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று அமெரிக்கா உறுதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையால் வேவு பார்க்கப்பட்ட வெளிநாட்டு அரசியல் கட்சிகள் பட்டியலில் பாஜகவும் இருந்த…

    • 0 replies
    • 518 views
  8. ஹுமாயூன் சமாதி இந்தியாவின் தலைநகர் டெல்லியை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரி மத்திய கலாச்சார அமைச்சகம் யுனெஸ்கோ அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் யுனெஸ்கோவின் தேர்வுக் குழுவினர் டெல்லியை பார்வையிட உள்ளனர். பாரம்பரியம் மிக்க நகரம் டெல்லி என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை மத்திய கலாச்சார அமைச்சகம், டெல்லி சுற்றுலாக் கழகம், டெல்லி போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியங்களுக்கான இந்திய அறக்கட்டளை அமைப்பு ஆகி யவை இணைந்து தயாரித்துள்ளன. இந்த அறிக்கை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பழைய டெல்லியில் உள்ள ஷாஜஹானா பாத் மற…

    • 0 replies
    • 400 views
  9. புதிய நாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவின் ராக்கா நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடியை ஏந்தி ஆர்பரிக்கும் கிளர்ச்சிப் படை வீரர் | படம்: ராயட்டர்ஸ் இராக்கில் கிளாபத் தனி நாடு அறிவிக்கப்பட்டுவிட்டதாக தங்கள் கொடியுடன் கோஷமிட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.|படம்: ராய்ட்டர்ஸ். இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட் கிளர்ச்சிப்படை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது ஜிகாத் நடத்த வேண்டும் என்று தனது ரமலான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது. இராக், சிரியா நாடுகளின் நகரங்களை இணைத்து இஸ்லாமிய சட்டத்தின் அடிபபடையிலான தனி நாடை அமைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்பு கடந்த சில வாரங்களாக இராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் தளபதி …

  10. தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்பு வழங்க வழிவகுக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் விசாரணையில் இந்த தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. வழக்கு விபரம் தொடர்புடைய விடயங்கள் நீதித்துறை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கறிஞர் சோலை சுப்ரமணியம் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு ஒன்றில், 1994ம் வருடம் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில் சட்டத்துக்கு முரணான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக குற்றம் கூறினார்…

  11. செல்வாக்கை பயன்படுத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணை செய்வதற்காக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஷி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக முன்னூதாரணம் இல்லாத வகையில் அமைந்த இந்த நடவடிக்கைக்காக பாரிஸுக்கு அருகிலுள்ள நாந்தேர்ரே பகுதியில் இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு தொடர்பாக உள் இரகசியங்கள் மற்றும் தகவல்களை பெற முயன்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை சர்கோஷியின் வழக்குரைஞரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவங்களால் எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் ஜனாதிப…

    • 0 replies
    • 448 views
  12. ஐஸிஸ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரித் நகரில் சிக்கிய இந்திய செவிலியர்களுக்கு நெருக்கடி இராக்கில் நடந்து வரும் தொடர் வன்முறையில் புதிய குண்டு வெடிப்பு தாக்குதல்களினால், திக்ரித் நகரில் உள்ள இந்திய செவிலியர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனையின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தனித்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரித்தின் இந்த மருத்தவமனையில் 46 இந்திய செவிலியர்கள் சிக்கியுள்ளனர். இந்தியாவிற்கு திரும்ப வேண்டுமா அல்லது இராக்கிலேயே நெருக்கடி இல்லாத பகுதிகளில் தங்கிவிட வேண்டுமா என்ற மனக் குழப்பத்தை பல செவிலியர்கள் எதிர்கொள்கின்றனர்.அந்த மருத்துவமனை வளாகத்தில் குண்டுகள் வெடித்ததை அடுத்து, மர…

    • 0 replies
    • 441 views
  13. முதல் உலகப் போரைத் தூண்டிய படுகொலையின் நூறாண்டு இளவரசர் ப்ரான்ஸ் பெர்டினாண்ட் படுகொலை, ஜூன் 28, 1914 சரயோவாவில் கொலை ஆஸ்திரிய பட்டத்து இளவரசர் ஆர்ச்ட்யூக் ப்ரான்ஸ் பெர்டினாண்ட் மற்றும் அவரது மனைவி சோபி, ஆகிய இருவரும், செர்பிய தேசியவாதி, காவ்ரிலொ ப்ரின்சிப் என்பவரால் கொலை செய்யப்பட்டது, ஆறே வாரங்களில் போர் மூளச் செய்யும் தொடர் நிகழ்ச்சிகளைத் தூண்டியது. இது அடுத்த நான்காண்டுகளுக்கு நீடித்த மேலும் பரவலான மோதலுக்கு வழிவகுத்தது. போருக்கு இட்டுச்சென்ற வாரம், ஆகஸ்டு 1-12, 1914 நெருக்கடியில் ஐரோப்பா ஆகஸ்டின் முதல் இரு வாரங்களில் நெருக்கடி முற்றுகிறது. ஐரோப்பிய நாடுகள் உலகை மோதலில் ஆழ்த்துகின்றன. ஜெர்மனி, ரஷ்யா மீதும் பிரான்ஸ் மீது போர் தொடங்குகிறது. பெல்ஜியத்தை…

    • 0 replies
    • 478 views
  14. கடந்த இரு வாரமாகப் பாக்கிஸ்தான் ராணுவம், தலிபான்களுக்கு எதிராக வான் வழித்தாக்குதலை நடாத்துகின்றது : ஐரோப்பியசெய்தியாளர் கடந்த இரு வார காலமாகப் பாக்கிஸ்தான் ராணுவம், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் வழித்தாக்குதலை நடாத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தலிபானின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசமான வட வசிறிஸ்தான் பகுதிகளில், தரை வழித்தாக்குதலையும் பாக்கிஸ்தான் ராணுவம் ஆரம்பித்துள்ளது. நேற்றைய திங்கட்கிழமை நடாத்தப்பட்ட தாக்குதலில் பதினைந்து தீவிர வாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் ராணுவம் நடாத்திவரும் தரைவழிப் போரில் கவசவாகனங்களும், நவீன போர்க் கருவிகளும் உபயோகிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகள…

    • 0 replies
    • 452 views
  15. ஆஸ்திரியாவின் இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்ட் கொல்லப்பட்ட சம்பவத்தின் நினைவு நாளை யொட்டி, போஸ்னியா தலைநகர் சரயேவோவில் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடந்தது. வியன்னா பில்ஹார்மோனிக் இசைக் குழுவினர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரிய அதிபர் ஹெய்ன்ஸ் பிஷர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். எனினும், செர்பியப் பிரதமர் அலெக்சாண்டர் வூகிக், போஸ்னியன் செர்ப் அதிபர் மிலோராட் தோடிக் போன்ற தலைவர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளனர். நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடம் முதல் உலகப் போர் நினைவாகக் கட்டப்பட்டது. 1992 முதல் 1995 வரை நடந்த போஸ்னிய உள்நாட்டுப் போரின்போது போஸ்னியன் செர்ப் படைகளால் சேதப்படுத்தப்பட்ட இந்தக் கட்டிடம், சமீபத்தில்தான் புதுப்பிக…

    • 0 replies
    • 391 views
  16. புதிய "கேலிஃபேட்" உருவானதாக ஐஸிஸ் அறிவிப்பு இராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய மதரீதியான அரசு ( கேலிஃபேட்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக , இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐஸிஸ் அறிவித்திருக்கிறது. இந்த புதிய அரசின் கேலிஃப் ஆகவும், உலகின் அனைத்து முஸ்லீம்களின் தலைவராகவும், தனது தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி இருப்பார் என்று அது அறிவித்திருக்கிறது. இந்த கேலிஃபேட், வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு இராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும் அது அறிவித்திருக்கிறது.அவர் இனி கலிஃப் இப்ராஹிம் என்ற பெயரில் அறியப்படுவார் என்று அது கூறியது. இந்த கேலிஃபேட், வட சிரியாவின் அலெப்போவிலிருந்து கிழக்கு இராக்கில் …

    • 0 replies
    • 465 views
  17. இராக்கில் அமெரிக்காவுக்கு உதவியவர்களையே நட்டாற்றில் விட்டுவிட்டது அமெரிக்க அரசு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்ஸன் ஹென்றி ஏ. கிஸ்ஸிங்கரின் காதில் இப்படிக் கிசுகிசுத்தார்: “நாம் இதைப் பற்றியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.” என்ன செய்தாலும் தெற்கு வியட்நாம் தேறவே போவதில்லை என்பதே அவருடைய கிசுகிசுப்புக்குப் பொருள். அது 1972 ஆகஸ்ட் மாதம். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தெற்கு வியட்நாம் நொறுங்கிவிடும் என்பதே நிக்ஸனின் கவலை. “இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு இந்த நாடு எப்படியாவது தாக்குப்பிடிக்கும் வழியை நாம் கண்டாக வேண்டும்; வரும் அக்டோபருக்குள் நாம் அதைச் செய்துவிட்டால் 1974 ஜனவரிக்குப் பிறகு யாரும் இதை எதுவும் செய்துவிட முடியாது” என்று ஆமோதித்தார் கிஸ்ஸிங்…

  18. 1. புலத்தில் சிலர் போரின்போதும் போரின்பின்னும் கள நிலவரங்களைப்பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாது விடுதலையை ஒரு கூச்சல்போல போடுகிறார்கள். அவர்கள் நமக்கு வேண்டிய சக்திகள். ஆதலால் அவர்கள் அனுபவமுள்ளவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எமக்கு ஆதரவான சிங்களத் தோழர்கள் மிகுந்த ஆபத்துக்களின் மத்தியில் போரின்போதும் பின்னும் இனக்கொலை ஆவணங்களை திரட்டி உலகிற்க்குத் தந்துள்ளனர். இத்துடன் கற்றுக்கொள்வதற்க்காக யதீந்திராவின் பதிவையும் தீப செல்னவனின் பதிவையும் இணைக்கிறேன். 2 யதீந்திராவின் பதிவு பிரசன்ன விதேனகேயின் திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தொிவித்தை முன்வைத்து பலரும் பல விதமான பதிவுகளை இட்டு வருகின்றனர். பிரசன்னவின் குறித்த படத்தை நான் பார்க்கவில்லை. …

  19. June 29th, 2014 அன்று பிரசுரிக்கப்பட்டது. லண்டன் விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு விமானத்தின் மீது தரையிறங்கிய ஒரு விமானம் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை லண்டனில் உள்ள Stanstead Airport என்ற விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த Ryanair விமானம் ஒன்றின் மீது அதே நிறுவனம் விமானம் தரையிறங்க முயற்சித்த போது ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு விமானத்தின் இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால்பகுதியும் சேதமடைந்தது. இரண்டு விமானத்திலும் சேர்த்து மொத்தம் 189 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இரு விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பலமணி நேரங…

  20. விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கள்கிழமை (ஜூன் 30) காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 5 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 8.52 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிஷங்களில் 5 செயற்கைக்கோள்களையும் அவற்றுக்குரிய பாதைகளில் நிலை நிறுத்தும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் கொண்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டார். விஞ்ஞானிகளுக…

  21. பாக்தாத் :ஈராக் முழுவதையும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின், இந்தியாவை கைப்பற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின், ஐந்தாண்டு சதித் திட்டம் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அதிபராக இருந்த சதாம் உசேன், 2006ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட பிறகு, அந்நாட்டில் மக்களாட்சி மலர்ந்து, ஜலால் தலாபானி அதிபராகவும், நூரி அல் மாலிக் பிரதமராகவும் பதவியேற்றனர்.கடந்த 2002ம் ஆண்டு முதல், அந்நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களும், உள்நாட்டு கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த, சதாம் உசேனின் ஆதரவாளர்களான, 'இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் அல்ஷாம் - ஐ.எஸ்.ஐ.எஸ்.…

    • 4 replies
    • 750 views
  22. புதுடில்லி : துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசமும், ஜம்மு - காஷ்மீரின் பெரும்பகுதி யும், தங்களுக்கே சொந்தமானது என, தெரிவிக்கும் வரைபடம் ஒன்றை, சீன அரசு வெளியிட்டு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.அத்துடன், ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவத்தினர், சமீபத்தில், அத்துமீறி நுழைந்ததும் தெரிய வந்துள்ளது. மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு செயலர் சுஜாதா சிங் ஆகியோருடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ளார். சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும், பஞ்சசீல ஒப்பந்தத்தின், 60ம் ஆண்டு விழாவில் பங்கேற்கும் அவர், சீன பிரதமர் லீ கெகியாங், அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர…

    • 0 replies
    • 762 views
  23. ஜம்மு காஷ்மீர்: அமர்நாத் பனிலிங்கத்தை காண முதல் குழு யாத்திரிகர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். இருப்பினும் அதிக பனி பொழிவின் காரணாமாக பயணம் செயவதில் சிரமம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு 20 அடி பனி லிங்கம் காணமுடியும் என்றும், பக்தர்களுக்கு தேவையான பல்வேறு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் http://temple.dinamalar.com/news_detail.php?id=32822

    • 3 replies
    • 1.2k views
  24. ரசாயன உரங்கள் அல்லாத இயற்கை முறையில் பயிரிடப்படும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஆர்கானிக் பாலுக்கும் தற்போது அமோக வரவேற்பு கிடைக்கத் தொடங்கி உள்ளது. இயற்கையான பாலுக்கும், உணவுப் பொருள்களுக்கும் என்றும் தனி மரியாதை உண்டு. இயற்கையான முறையில் மூலப் பொருளை உற்பத்தி செய்து புதிய தொழில்நுட்பங்களில் அவற்றை உணவுப் பொருளாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஆரோக்கியமான உணவுக்கு அடிப்படை. அதைக் கருத்தில்கொண்டு சென்னையை அடுத்த கொடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பாரம்பரிய மற்றும் இயற்கை உணவு பதப்படுத்துதல், தரம் மற்றும…

  25. சென்னை: சென்னை போரூர் அருகே உள்ள , மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில், 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் புதியதாக 11 மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மாலை திடீரென பெய்த பலத்த மழை காரணமாக அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சுமார் 40 பணியாளர்கள் வரை சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.இவர்களில் பெரும்பாலானோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.