Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெஹ்ரானைத் தாக்கிய புழுதிப் புயல் இரானியத் தலைநகர் டெஹ்ரானில் இன்று தாக்கிய புழுதிப் புயல் குறைந்தது ஐந்து பேரைப் பலி வாங்கியுள்ளது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் டெஹ்ரான் மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் நுழைந்து வீசிய இந்தப் புழுதிக் காற்றில் மேலும் 30 பேர் காயமடைந்தனர். வானத்தை ஆரஞ்சு நிறமாக்கிய இந்தப் புழுதிப் புயல் , ஜன்னல்களையும் உடைத்து, துகள்களை சிதறடித்தது.இந்த புழுதிப் புயலுடன் கடும் மழையும் மின்னலும் சேர்ந்து தாக்கின. புழுதியும், கணலும் ஒரு சுவர் அளவுக்கு உயர்ந்து எழுந்து டெஹ்ரானைச் சூழ்ந்தது. இதனையடுத்து டெஹ்ரானில் மின் தடை ஏற்பட்டு நகரெங்கிலும் இருள் சூழ்ந்தது. சில மரங்கள் விழுந்ததாலும், சிதறடிக்கப்பட்ட துகள்களாலும், மக்கள் சிலர் காயமடைந்தனர். …

    • 0 replies
    • 493 views
  2. லக்னோ: கடந்த ஒருவார காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் சிக்கி வரும் உ.பி.யில், மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நிகழ்த்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்தவாரம் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி அன்று உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் தொகுதியான அசாம்காரிலுள்ள சராய்மீர் பகுதியில் 17 வயது சிறுமி, 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, நேற்று (2ஆம்தேதி) பரேலி பகுதியில் உள்ள பகேரி …

  3. சாலை விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்!! டெல்லி: சாலை விபத்தில் சிக்கிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். டெல்லி விமான நிலையம் அருகே இன்று காலை அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கோபிநாத் முண்டே மிகவும் ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது திடீரென கோபிநாத் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவர்கள் தொ…

  4. சிங்கப்பூர்: ஏற்றுமதியில் அதிகரிப்பு, உயர்தர வர்த்தக முதிர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிகப்படியான கவனத்தை செலுத்துதல் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் அண்டை நாடான சிங்கப்பூர் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் முன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஐஎம்டி வோல்டு காம்பிடீடிவ்நஸ் சென்டர் என்ற அமைப்பு வோல்டு காம்பிடீடிவ்நஸ் என்ற வருடந்திர இதழை வெளியிட்டது. இதில் உலக நாடுகளின் பொருளாதார போட்டியை சந்திக்கும் வகையில் சிங்கப்பூர் கடந்த வருடம் 5ஆம் இடத்தில் இருந்தது இந்த வருடம் முன்றாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. போட்டி நிறைந்த உலகில் போட்டித்தன்மை இல்லாத இடமே இல்லை என்று சொன்னால் மிகையாகாது. இந்த வகையில் போட்டித்தன்மை அதிகம் கொண்ட பொருளாதார நாடுகளில் சிங்கப்…

  5. பரேலி (உ.பி): உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 22 வயது இளம்பெண்ணை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேபரேலி பகுதியில் உள்ள பகேரி என்ற இடத்தில் 22 வயது இளம் பெண் ஒருவர் மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணில் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட் ஊற்றிய மர்ம கும்பல், பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் முகம் சிதைந்த நிலையில், ஆய்திபுரா கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. பின்னர…

  6. புதுடெல்லி: டெல்லி மாணவி வன்கொடுமை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் இருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, டிசம்பர் 29ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர், அத்தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=28568

  7. ஐந்து வருட காலமாக அவ்(f)கானிஸ்தானில் தலிபான் இயக்கத்தினால் பயணக் கைதியாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி, அமெரிக்க தேசத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வீரரான பேர்க்டால் என்பவரின் விடுதலை, மிகவும் பயங்கரமான ஐந்து தலிபான் இயக்கத்தினரை தலிபானிடம் கையளித்ததன் மூலம் சாத்தியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிகவும் முக்கிய எதிரிகளான தலிபான் இயக்கப் புரட்சிக்காரர்களில் ஐந்து பேரும், குவன்ரனமோ சிறைச்சாலையில் இதுவரை காலமும் சிறைவைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டதாக நம்பப்பட்ட ராணுவவீரரை விடுதலை செய்யும் வேலைத் திட்டத்தை, பென்ரகன் தொடர்ந…

    • 0 replies
    • 465 views
  8. சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் வரும் படகுகள் மத்தியதரைக் கடலில் விபத்துக்குள்ளாவதை தடுக்க குடியேற்றவாசிகள் ஐரோப்பாவை வந்தடைவதற்கு அரசாங்கங்கள் உதவ வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த மே 28 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 12 ஆம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெற்று வரும் 103 ஆவது சர்வதேச தொழில் கூட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே பாப்பரசர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இன்று உலகம் எதிர்கொண்டிருக்கும் மோசமான பிரச்சினைகளில் பாரிய மக்கள் குடிபெயர்வும் ஒன்றாகவுள்ளதாக பாப்பரசர் பிரான்சிஸ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவநம்பிக்கையும் புறந்தள்ளப்படுவதையும் எதிர்கொண்ட குடியேற்றவாசிகள் தமது பயணங்களின் போதான சோக மற்றும் அனர்த்த அனுபவங…

    • 0 replies
    • 393 views
  9. ஹைதராபாத்தில் வண்ணமயமான மின்விளக்கு அலங்காரத்துடன் காட்சியளிக்கும் தெலங்கானா தியாகிகள் நினைவிடம். நாட்டின் 29-வது மாநிலமாக இன்று தெலங்கானா மாநிலம் உதயமானது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட ஹைதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொண்ட தெலங்கானா மாநிலம் இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக செயல்பாட்டிற்கு வருகிறது. 58 ஆண்டு போராட்டத்தின் பலனாக கிடைத்த தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு, அப்போதைய ஹைதராபாத் மாநிலம் நிஜாம்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை இந்தியாவுடன் சேர்க்க இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், ‘ஆபரேஷன் போலோ’ என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கை மூலம் ஹ…

    • 7 replies
    • 639 views
  10. லஞ்சம் தந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் முன்னாள் கத்தாரி கால்பந்து துணைத் தலைவர் , மொஹமத் பின் ஹம்மாம் கத்தாரில் 2022ம் ஆண்டு உலகக் கோப்பை கால் பந்துப் போட்டியை நடத்த முடிவு செய்யப்படுவதற்காக, உலகக் கால்பந்து நிறுவனமான, பிபாவின் அதிகாரிகளுக்கு 5 மிலியன் டாலர்கள் வரை லஞ்சம் தரப்பட்டதாகக் காட்டும் ஆவணங்களை லண்டன் பத்திரிகை, சண்டே டைம்ஸ், வெளியிட்டிருக்கிறது. உலகக் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் துணைத் தலைவரான, கத்தார் பிரஜை, மொஹமத் பின் ஹம்மாம், உலகக்கால்பந்து சம்மேளன அதிகாரிகளுக்கு வெவ்வேறு தவணைகளில் இந்தப் பணத்தை வழங்கினார் என்பதைக் காட்டும் லட்சக்கணக்கான ஆவணங்களை இந்தப் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. இந்த வாக்கெடுப்புக்கும் ஒராண்டு முன்னதான காலத்திலிருந்தே…

  11. ஹபீஸ் சயீத் இந்தியாவிலிருந்து காஷ்மீரை விடுவிக்க நேரம் வந்துவிட்டது. ஆகவே, காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு எதிராக இறுதி ஜிகாத்துக்கு (புனிதப் போர்) தயாராகுங்கள் என, 2008- மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் அறைகூவல் விடுத்துள்ளார். நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவில் பங்கேற்றதன் மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்லாமாபாத்திலுள்ள புகழ் பெற்ற ஆப்பாரா சதுக்கத்தில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஜமாத் உத் தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் பங்கேற்றார். இந்த வளாகம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைமையகத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்கூட்ட…

  12. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பொறுப்பேற்ற ஒரே வாரத்தில், சில முக்கிய முடிவுகளை எடுத்து வரும் நரேந்திர மோடி அந்த வரிசையில் மத்திய அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றை கலைத்து உத்தரவிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 21 அமைச்சர்கள் குழுக்களும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களும் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்களில் முடிவெடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும், அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கவும் இது வழிவகுக்கும் என்று பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பாக, சில அமைச்ச…

    • 1 reply
    • 473 views
  13. மோடி இப்போது 110 கோடி + 30லட்சம் மக்களின் நம்பிக்கை நாயகமாக வந்துள்ளார்.. அவரது செயல்பாடுகளை (அவருக்கு கிடைக்கும்..கொடுக்கும் பல்புகளை) ஒரே திரியில் பதிந்து..அதை தொடர்ந்து ஓட்டிகொண்டிருந்தால்...என்ன? எல்லா விடயங்களும் ஒரே இடத்தில் இருக்குமே.... ----------------------------------------------------------------------------------------------------------------------------- உபயம்: கவிதை வானம் பிரதமர் மோடி ராஜபக்சேவுக்கு வச்ச ஆப்பு நமது பிளாக்கில் வைத்த கருத்துக்கணிப்பில் ....பிரதமர் மோடியால் ராஜபக்சேவுக்கு ஆதாயமா? ஆபத்தா? என்ற பதிவில் ஆபத்தே என்று அனைவரும் வாக்களித்தனர் அது உண்மையாகிவிட்டது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண…

    • 2 replies
    • 694 views
  14. உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அகிலேஷ் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு ஒருபுறம் உ.பி. அரசிடம் அறிக்கை கோரியதோடு, சிபிஐ விசாரணைக்கும் கோடிட்டு காட்டியுள்ள நிலையில், மாநிலத்தில் போராட்டங்களும் வெடித்துள்ளன. உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரிகள், கடந்த செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில்…

  15. புதிய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள பத்து அம்சங்கள் நாடு சிறந்த பாதையில் செல்ல வழிவகுக்கும் என ஐஏஎஸ் அதி காரிகள் கருத்து கூறி உள்ளனர். இது குறித்து தி இந்துவிடம் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது: நாட்டில் சட்டங் களை இயற்றுவது அரசியல் வாதிகள் என்றாலும் அதை அமல்படுத்துவது அதிகாரிகள் தான். சில பிரச்சினைகளில் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அதிகாரிகளும் சிக்கிக் கொள் கிறார்கள். இதனால் அரசியல் வாதிகளிடம் இருந்து விலகி இருந்து பணியாற்றவே அதிகாரி கள் வட்டம் விரும்புகிறது. இதற்கு முடிவுகட்டும் பொருட்டு மோடி அறிவித்த 10 அம்சங்களில் முதல் இரண்டு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதிகாரிகளிடம் நம்பிக்கை பின்விளைவுகள் குறித்த அச்சம் இல்லாத வகையில் அதிகாரிகள் வட்டாரத்தில் நம்பிக்கையை …

  16. உலகின் மிகப் பெரிய இணைய தேட சேவை கூகுள்தான். இணையத்தில் கூகுள் தேடல் சேவையைக் கொண்டு தேடும்போது தம்முடைய வாழ்க்கைப் பற்றி முடிவுகளில் வரக்கூடிய விவரங்களில் அனாவசியமான விவரங்களை அழிக்கச் சொல்லி கூகுளிடம் ஐரோப்பியர்கள் முறையிடுவதற்கான சேவை ஒன்றை ஆரம்பிப்பதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது. ஏனைய தேடல் சேவை இணையதளங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமானோர் பயன்படுத்தும் உலகின் மிகப் பெரிய சேவை கூகுள் தேடல் சேவைதான். ஐரோப்பாவில் இருந்து நிறைய பேர் தம் தனிநபர் விவரங்களை அழிக்கச் சொல்லிக் கேட்டு கூகுளிடம் முறையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், நெடுங்கால தீர்வு நோக்கில் இவ்விவகாரத்தை கையாள்வதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக மூத்த அதிகாரிகளும் சுயாதீனமாக செயல்படும் நிபுணர்…

  17. ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு பிரச்சாரம் தொடங்குகிறது ஸ்காட்லாந்து பிரிட்டனிடமிருந்து பிரிந்து போகவேண்டுமா என்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான அதிகார பூர்வ பிரச்சாரக் கட்டம் இன்று தொடங்குகிறது. இந்த கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரச்சாரப் பருவம் செப்டம்பர் 18ம் தேதி வரை அமலில் இருக்கும். செப்டம்பர் 18ம் நாள், ஸ்காட்லாந்தின் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் , ஸ்காட்லாந்து ஐக்கிய ராச்சியத்தின் ஒரு அங்கமாக இருக்கவேண்டுமா அல்லது சுதந்திரம் பெறவேண்டுமா என்பது குறித்த கேள்விக்கு வாக்குகள் மூலம் பதிலளிப்பார்கள். இந்த பிரச்சாரப் பருவமான அடுத்த 16 வாரங்களுக்கு, பிரச்சாரத்திற்கான செலவாக 25 லட்சம் டாலர்கள் உச்சவரம்பு இரு தரப்பு பிரச்சாரக் குழுக்களுக்கு விதிக்கப்படு…

    • 1 reply
    • 385 views
  18. ஸ்பெல்லிங் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் தொடர்ந்து வெற்றி ஆங்கிலச் சொற்களில் உள்ள எழுத்துக்களை சரியாகச் சொல்லும் அமெரிக்க தேசிய " ஸ்பெல்லிங்" போட்டியில் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக இரு மாணவர்கள் இணையாக வென்றுள்ளனர். இந்த இருவரும் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. பதிமூன்று வயதான அன்சுன் சுஜோ மற்றும் 14 வயதான ஸ்ரீராம் ஹத்வார் ஆகிய இரு இந்திய வம்சாவளி மாணவர்களும், இந்த தேசிய சொல்லெழுத்துப் போட்டியில் வென்றபின் கிடைத்த கோப்பையை இணைந்து உயர்த்திப் பிடித்தனர். இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் வந்த வேறு 10 பேரை அவர்கள் தோற்கடித்தனர். அவர்களுக்கு வெற்றிப் பரிசாக, இந்த கோப்பையைத் தவிர, தலா 30,000 டாலர்கள் தரப்படுகிறது. இந…

    • 0 replies
    • 459 views
  19. நகரி: திருப்பதி கோவில் சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா, சீமாந்திரா என இரு மாநிலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் 2 ஆம் திகதி இரு மாநிலங்களும் அதிகாரபூர்வமாக பிரிகின்றன. இதையொட்டி அரசு ஊழியர்கள், அரசின் சொத்துக்கள், கார்கள் மற்றும் அரசு கோப்புகள் ஆகியவை இரு மாநிலத்துக்கும் பிரிக்கப்பட்டு வருகின்றன. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் சீமாந்திராவில் உள்ளது. நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோவிலாக திருப்பதி உள்ளது. இந்தக் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் உள்ளன. தெலுங்கானாவில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. மாநிலம் பிரிக்கப்பட்டாலும் தெலுங்…

    • 0 replies
    • 559 views
  20. புதுடில்லி: கடும் வெயில் அடித்து கொண்டிருந்த நேரத்தில் டில்லியில் இன்று மாாலை 4.55 மணியளவில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டது. இதனால் நகர் முழுவதும் கும்மிருட்டில் மூழ்கியது. புழுதி புயல் வீசி போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தது, பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டில்லியில் மட்டுமல்லாமல் வடகிழக்கு மாநிலங்களில் இந்த பாதிப்பு இருந்தது. குறிப்பாக டில்லி அருகே உள்ள குர்கான், நொய்டாவில் பலத்த மழை பெய்தது. மதியம் வெயில் 45 டிகிரி செல்சியஸ் கொளுத்தி வாங்கியது . பின்னர், பலத்த மின்னலும், இடியும் மக்களை அச்சுறுத்தியது. மரங்கள் , மின்கம்பங்கள் சாய்ந்தன. மாலை 4.55 மணியளவில் திடீரென இருட்டியது. தொடர்ந்து புயல் காற்று வீசியது. நேருக்கு நேர் என்ன வருகிறது என்பதை கூட பார்க்க ம…

    • 0 replies
    • 588 views
  21. மாலைமலர் மே. 30 பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26–ந்தேதி பதவி ஏற்ற போது, அவருடன் 45 பேர் மத்திய மந்திரிகளாக பொறுப்பு ஏற்றனர். ஒன்றுக்கு ஒன்று தொடர் புடைய துறைகளை ஒருங்கிணைந்து குறைந்த அளவில் மந்திரிகளை பணிகளில் ஈடுபடுத்தும் திட்டத்துடன் மோடி இந்த மந்திரி சபையை உருவாக்கியுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 70–க்கும் மேற்பட்ட மந்திரிகள் இருந்தனர். மோடி அந்த அளவு அதிக மந்திரி பதவியை ஏற்படுத்த மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் குறைந்தபட்சம் 60 மந்திரிகளாவது தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ராணுவம், சட்டம், சுற்றுச் சூழல் உள்பட பல்வேறு துறைகளுக்கு புதிய மந்திரிகள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. எனவே மத்திய மந்திரி சபையை விரிவாக்கம் செய்வது பற்றி மோடி பா.ஜ.க. மூத்…

  22. புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார். சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடி தனி நபராக குடியேறும் முதல் பிரதமர் ஆகிறார். இதுவரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான் குடியேறினர். கடந்தவாரம்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் இல்லத்தை காலி செய்தார். வழக்கமாக முன்னாள் பிரதமர் காலிசெய்துவிட்டு போனபின்னர், புதிதாக அங்கு வரும் பிரதமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, வீட்டில் பலமாற்றங்களை செய்யுமாறு கூறுவதும், புதிதாக பர்னிச்சர்கள், ஆடம்பர அலங்கார விளக்குகள், வண்ணம் பூசுவது என லட்சக்கணக்கான ரூபா…

  23. புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தவர் சிவசங்கர் மேனன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மத்தியில் பதவியேற்றதை தொடர்ந்து, இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் தோமல், 1968ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தார். மேலும், இவர் உளவுத்துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். http://news.vikatan.com/article.php?module=news&aid=28482

  24. படாயூன் (உ.பி): உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநில அரசிடம் விளக்கம் கோரினார். உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் கண்…

  25. தென் அமெரிக்கக் கண்டத்தில் இரு தீவுகளைக் கொண்ட நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு. இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்கப் பழங்குடியினர் வசித்தனர். ஐரோப்பியர்களின் ஆதிக்கத் துக்குள் இந்த நாடு வந்தபோது, இங்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க, சீன, போர்த்துக்கீசிய, இந்திய நாடுகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர். 1820-களில் இந்தியர்களை ஏமாற்றி வெளிநாட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்வது பெரும் தொழிலாக இருந்தது. மக்களும் பிழைப்புக்காக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற தவிப்பில் இருந்தனர். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகள், மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றனர். இந்தியர்களை அடிமைத் தொழிலாளர்களாக விற்பனை செய்யும் தொழிலை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.