Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தான்சானியா நாட்டு ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பு தான்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜான் மகுஃபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த 61 வயதான ஜான் மகுஃபுலி, சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன. இதன்போது, ஜான் மகுஃபுலிக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சன நெரிசலில் சிக்க…

  2. மலேசியா : செளதி மன்னரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு செளதி மன்னர் சமீபத்தில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த போது அவரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார். செளதி மன்னர் மலேசியாவிற்கு வருவதற்கு ஒரு மாதம் முன்பு தன்னுடைய படையினர் ஏமனிலிருந்து வந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் உள்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக மலேசிய காவல்துறை தலைவர் ஹாலித் அபு பக்கர் தெரிவித்தார். சுமார் இரு ஆண்டுகளாக தற்போது வரை ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து செளதி தலைமையிலான கூட்டணிப்படைகள் எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. …

  3. நெதர்லாந்து - துருக்கி இடையே விரிசல்; இராஜதந்திர உறவுகள் தற்காலிகமாக நிறுத்தம் நெதர்லாந்துடனான இராஜதந்திர உறவுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து அதிர்ச்சியளித்திருக்கிறது துருக்கி. இதை வெளிப்படுத்தும் வகையில், துருக்கிக்கான நெதர்லாந்துத் தூதுவருக்கு நாட்டினுள் நுழைய அனுமதி மறுத்திருக்கிறது துருக்கி. இந்த அறிவித்தலை துருக்கி பிரதமர் நுமான் குர்த்துல்மஸ் வெளியிட்டுள்ளார். நெதர்லாந்தில் கடந்த வாரம் அரசியல் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் துருக்கி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலந்துகொள்ள விரும்பினார். இருந்தபோதும் அவருக்கு அனுமதியளிக்க நெதர்லாந்து அரசு மறுப்புத் தெரிவித்துவிட்டது. இதனால் பெரிதும் அதிருப்தியடைந்த அந்த அமைச்சர், இதற்கான வ…

  4. டிரம்பின் உதவியாளராக இணைந்தார் மகள் இவான்கா அமெரிக்க அதிபரின் உதவியாளர் என்ற நிலையில் ஊதியம் வழங்கப்படாத பணியாளராக இவான்கா டிரம்ப் தன்னுடைய தந்தையின் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைANDREW HARRER-POOL/GETTY IMAGES அதிகாரப்பூவமற்ற முறையில் பணிபுரியும் தன்னுடைய தொடக்க திட்டத்திற்கு அறநெறிமுறை வல்லுநர்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்புக்களை தொடர்ந்து அமெரிக்காவின் முதல் மகளான இவான்கா டிரம்ப் இதற்கு இசைந்திருக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட திறனோடு, அதிபருக்கு ஆலோசனை வழங்குவதில் சிலர் தெரிவித்த கவலைகளுக்கு செவிமடுத்துள்ளதாக 35 வயதாகும் இவான்கா டிர…

  5. 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் எத்தியோப்பியாவில் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளனர் - ஐ.நா. எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் சுமார் 350,000 மக்கள் பேரழிவு தரும் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்கள் மற்றும் உதவி குழுக்களின் பகுப்பாய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. "டைக்ரேயில் இப்போது பஞ்சம் உள்ளது" என்று ஐ.நா. உதவித் தலைவர் மார்க் லோகாக் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்ட பின்னர் கூறினார். வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள டைக்ரே பிராந்தியம், நவம்பர் முதல் மோதலில் மூழ்கியுள்ளது. இராணுவத் தளத்தின் மீது பிராந்திய போரிளிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிராக கூட்டாட்சி படைகள் பதிலடி கொடுத்தன. ஏழு மாதங்களுக்குப் பிறகு பல்…

  6. டொரண்டோவில் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம். டொரண்டோவில் 17 மாத குழந்தை ஒன்று ஏழாவது மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்தும் அதிசயமாக காயங்களுடன் உயிர் பிழைத்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டொரண்டோவின் Thorncliffe Park Dr., near Don Mills Road and Overlea Boulevard,என்ற இடத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கட்டிடடத்தின் ஏழாவது மாடியின் பால்கனியில் இருந்து நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் ஒரு குழந்தை தவறி விழுந்தது. ஆனால் அந்த குழந்தை விழுந்த இடம் அடர்ந்த புல்வெளிப்பகுதியாக இருந்ததால் குழந்தை பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தது. போலீஸ் விசாரணையில் குழந்தை பால்கனியில் இருந்த ஒரு நாற்காலியின் மீது ஏ…

  7. சம உரிமை கோரி... போராட்டம் நடத்திய, பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல்! சம உரிமை வேண்டும் மற்றும் பெண்களுக்கு அரசாங்கத்தில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், பெண்களை தலிபான்கள் சவுக்கால் அடித்ததாக கூறப்படுகின்றது. நேற்று (புதன்கிழமை) காபூல் நகரில் ஒரு வீதியில் அணிவகுத்துச் சென்ற பெண்களை தடுத்து நிறுத்திய தலிபான்கள், சவுக்கால் அடித்தும் மின்சாரத்தை உமிழும் தடிகளால் தாக்கியதாகவும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் கூறுகின்றனர். தலிபான்கள் தங்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்த ஒருநாளுக்கு பிறகு இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள்ளாக நடைபெற்ற இரண்டாவது போராட்டம் இதுவாகும். பெண்களின் உரிமைகளுக்கு உறுதியளிப்பதாக தலிபான்…

  8. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக அறிவிப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. உடனடியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் இரவில் அறிவிக்க நேரிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தெலுங்கானா விவகாரம் இன்று ராஜ்யபாவில் புயலைக் கிளப்பியது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர்ந்து நடந்து வரும் சமயத்தில் இதுபோன்ற முக்கிய அறிவிப்புகளை சபைக்குத் தெரிவிக்காமல் அறிவித்தது குறித்து பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ராஜ்யசபாவில் இருமுறை பெரும் அமளி ஏற்பட்டது. பின்னர் ப.சிதம்பரம் எழுந்து இதுகுறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், "நேற்று வெங்கையா நாயுடு தெலுங்கானா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது அரசு பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்…

  9. பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு பாகிஸ்தான் இடைக்கால பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட ஷாகித் ககான் அப்பாஸி. - படம். | ராய்ட்டர்ஸ். பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். அவரது இடத்தில் தற்போது ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பில் 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார். பிரிந்திருந்த எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர். அந்நாட்டு அரசியல் சாசன முறைப்படி ரகசிய வாக்கெ…

  10. கோவாவில் நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் கலந்து கொண்டு பேசிவருகிறார். நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி ஊழல் விவகாரத்தில் வெட்கம் இல்லாமல் உள்ளது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தால் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும் கனிம வளங்களின் ஒதுக்கீடு வெளிப்படையாக நடைபெறும் என்று மோடி கூறியுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டடோர்களிடம் ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த பணம் கோவாவில் கட்டிட விபத்தில் பலியானோர்களுக்கு வழங்கப்படும் என்று மோடி கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-12-Congress-is-shameless-about-corruption-says-Modi-in-Goa

  11. உக்ரைனுக்கு... போர் விமானங்களை அனுப்ப போலந்து திட்டம் – அமெரிக்கா மறுப்பு ! ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஊடக உக்ரைனுக்கு சோவியத் தயாரிப்பான Mig-29 போர் விமானங்கள் அனைத்தையும் அனுப்பும் போலந்தின் யோசனையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவுடன் போட்டியிடும் வான்வெளியில் பறப்பது முழு நேட்டோ கூட்டணிக்கும் கடுமையான கவலையை ஏற்படுத்தும் என கூறி பென்டகன் அதனை மறுத்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு இராணுவ ஜெட் விமானங்களை வழங்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு போலந்து அழைப்பு விடுத்தது. உக்ரேனிய விமானிகள் உண்மையில் போலந்திற்குள் எல்லையைத் தாண்டி அவர்களை மீண்டும் உக்ரைனுக்குள் பறக்கவிட முடியும் என அரசியல் …

  12. பிரித்தானிய அமைச்சரவையில் பிரெக்சிற் விவகாரம் குறித்து கடும் விவாதம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவை இன்று இரண்டரை மணித்தியாலங்களிற்கு மேல் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய அமைச்சரவை சந்திப்பின்போது பிரதமர் தெரேசா மே நாளை இத்தாலியில் தான் ஆற்றவுள்ள உரை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். பிரதமரின் உரையில் இடம்பெற்றுள்ள விடயங்களை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் பிரதமரின் உரையின் பிரதிகள் அமைச்சர்களிடம் வழங்கப்ப…

  13. மியன்மாருக்கு போப் ஃபிரான்சிஸ் விஜயம்! நவம்பர் மாதம் மியன்மாருக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், மியன்மாரின் சிரேஷ்ட பௌத்த சமயத் தலைவர்களையும், இராணுவ உயரதிகாரிகளையும் அந்நாட்டு மக்கள் தலைவர் ஆங் சான் சூ கீயையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது. மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், அந்தப் பிரச்சினை குறித்தே மேற்படி முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. நவம்பர் ஆறாம் திகதி முதல் டிசம்பர் இரண்டாம் திகதி வரையான இந்த விஜயத்தின்போது போப் ஃபிரான்சிஸ் பங்களாதேஷுக்கும் விஜயம் செய்யவுள்ளார். மியன்மா…

  14. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கடன்களை பிரித்தானியா செலுத்த வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கடன்களை பிரித்தானியா செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டதன் பின்னர் கொடுக்க வேண்டியவற்றை செலுத்தாது, அதற்கு முன்னதாகவே செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன்-க்ளூட் ஜங்கர் ( Jean-Claude Juncker ) இதனைத் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் புதிய புதிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் பிரச்சினைகள் காரணமாகவே எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் பிரிடெக்ஸிற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்ற…

  15. தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது! [Wednesday, 2014-03-26 12:46:37] தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி செய்து, நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளதால், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கை டெல்லியில் முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டில் நடைபெற்ற பல்வேறு நாசவேலைகளில் முக்கிய பங்காற்றியவர் என்று கருதப்படுகிற இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி ஜியா உர் ரகுமான் என்ற வாக்கஸ், கடந்த 22 ஆம் தேதி காலை ராஜஸ்தான்…

  16. அமேஸன் காட்டின் ஆதிவாசிகள் தென் அமெரிக்காவின் அமேஸன் காட்டில் வெளி உலகுடன் தொடர்பில்லாத செவ்விந்தியர்கள் வசிக்கும் பகுதிகளின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிரேஸிலின் அக்ரே மாநிலத்தின் ஷியனே நதிக்கு அருகில் கடந்த25 ஆம் திகதி இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தைக் கண்டவுடன் அம்மனிதர்கள் அம்புகளுடன் விமானத்தை குறிபார்த்து நிற்கும் காட்சிகள் புகைப்படங்களில் பதிவாகியுள்ளன. இப்பழங்குடி மக்கள் மானுடவியலாளர்களால் இதுவரை தொடர்புகொள்ளப்படாத மக்கள் என கூறப்படுகிறது. (படங்கள்: ரோய்ட்டர்ஸ்) http://metronews.lk/article.php?category=lifestyle&news=4990

  17. ம்மு, ஜூலை.17, 2010 காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நான்காவது நாளாக துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. இதில் ஒரு ராணுவ மேஜரும், ஜவான்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தினர் தேடுதல் வேட்டை இன்று 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேடுதல் வேட்டையின் போது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் ஒருவரும், ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். ராணுவத்துகும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிப்ளவ் நாத் தெரிவித்தார். மேஜர் ஜி.எஸ்.செகாவத், ராணுவ வீரர்கள் நா…

  18. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள தனது தனி பங்களாவில் கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தேசித்துள்ளார். இப்போதெல்லாம் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது பங்களாவில் பெரும்பாலும் தங்குவதில்லை. மாமல்லபுரத்திற்கு அருகே சிறுதாவூரில் பல ஏக்கர் பரப்பளவில் மிக மிக பிரமாண்டமாய் எழுப்பப்பட்டுள்ள பங்களாவில் தான் தங்குகிறார். சசிகலா சகிதமாய் அடிக்கடி இங்கு போய்விடுகிறார். டிசம்பர் 27ம் தேதி சிறுதாவூர் பங்களாவுக்குச் சென்ற ஜெயலலிதா அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். இந்த பங்களாவிலேயே புத்தாண்டை ஜெயலலிதா கொண்டாடினார். தொடர்ந்து இதே வீட்டிலேயே தங்கியிருக்கும் ஜெயலலிதா, பொங்கல் பண்டிகையையும் இங்கேயே கொண்டாட முடிவு செ…

  19. எரிபொருள் கொள்வனவுக்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் – மஹிந்தானந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் காலங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் எரிபொருள் கொள்வனவுக்கான உடன்படிக்கையை எட்டுவதற்கு தொலைபேசியில் உரையாடுவதற்கு வசதியாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஜூலை 10ஆ…

    • 0 replies
    • 173 views
  20. ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி மியன்மாருக்குள் நுழைவதற்கு தடை ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஐ.நாவின் விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ (Yanghi Lee ) எதிர்வரும் ஜனவரி மாதம் மியன்மார் செல்லவிருந்தார். இந்தநிலையில் அவர் நடுநிலையாக செயற்படவில்லை எனத் தெரிவித்து மியன்மார் அரசு இவர் மியன்மாருக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இதேவேளை ரக்கைன் மாநிலத்தில் மோசமான செயல்கள் இடம்பெறுவதனை தனக்கு விதிக்கப்பட்ட தடை உணர்த்துகின்றது என யாங்ஹீ லீ தெரிவித்துள்ளார். கடந்த யூலை மாதம் மியா…

  21. டெஹ்ரானைத் தாக்கிய புழுதிப் புயல் இரானியத் தலைநகர் டெஹ்ரானில் இன்று தாக்கிய புழுதிப் புயல் குறைந்தது ஐந்து பேரைப் பலி வாங்கியுள்ளது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் டெஹ்ரான் மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் நுழைந்து வீசிய இந்தப் புழுதிக் காற்றில் மேலும் 30 பேர் காயமடைந்தனர். வானத்தை ஆரஞ்சு நிறமாக்கிய இந்தப் புழுதிப் புயல் , ஜன்னல்களையும் உடைத்து, துகள்களை சிதறடித்தது.இந்த புழுதிப் புயலுடன் கடும் மழையும் மின்னலும் சேர்ந்து தாக்கின. புழுதியும், கணலும் ஒரு சுவர் அளவுக்கு உயர்ந்து எழுந்து டெஹ்ரானைச் சூழ்ந்தது. இதனையடுத்து டெஹ்ரானில் மின் தடை ஏற்பட்டு நகரெங்கிலும் இருள் சூழ்ந்தது. சில மரங்கள் விழுந்ததாலும், சிதறடிக்கப்பட்ட துகள்களாலும், மக்கள் சிலர் காயமடைந்தனர். …

    • 0 replies
    • 493 views
  22. 16ஜூன் 2014 13: பாக்தாத்: ஈராக்கில் பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. சமீபத்தில் கடத்தி சென்ற 1700 ராணுவ வீரர்களை கொத்து, கொத்தாகக சுட்டு கொன்றதாக இந்த பயங்கரவாத அமைப்பினர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம் பயங்கரவாதிகள் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்களும், ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இஷாகி நகர் மொசூல், திக்ரித், ஜலாலா, சாதியா, ஆகியன தற்போது பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் கடத்தி சென்ற ராணுவ வீரர்கள் ஆயிரத்து 700 பேரை சுட்டு கொன்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கொலைகள் திக்ரித் நகரில் நடத்தப்பட்டதாக தெரிகிற…

  23. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சௌதி: பெண்களுக்கு புதிய அனுமதி பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள தீவிர இஸ்லாமியவாத நாடான சௌதி அரேபியா பாலியல் பிரிவினைகளை குறைக்கும் முயற்சிகளில் ஒரு படியாக, கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெ…

  24. குரங்கு அம்மை நோய் ; அமெரிக்காவில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் அதிகரித்து வருவதன் காரணமாக பொது சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது. குரங்கு அம்மை நோயும் வைரசால் பரவும் நோய் என்பதால் கொரோனா போல் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்து வருகிறது. இதனால் உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. குரங்கு அம்மை ந…

  25. *சும்மா கிடைத்ததை ஓசியில் கிடைத்ததாகச் சொல்வது வழக்கம். இது எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் நம் நாடு இருந்த போது அவர்கள் அனுப்பும் தபால்களில் o.c.s என்ற முத்திரைக் குத்தப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் on company service என்பதாகும். o.c.s முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்பு ஒட்டாமலே எங்கும் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் எல்லாமே ஓசியாகிவிட்டது. ம.ஞானபிரகாஷ்,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.