Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள, போர்மியூலா வன் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் நரம்பியல் பரிசோதனைகளின்போது அறிவுறுத்தல்களுக்கு பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவரால் கண்சிமிட்ட முடிவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸின், அல்ப்ஸ்மலையில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த மைக்கல் ஷூமாக்கர் பிரெஞ்சு வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான தினத்திலிருந்து செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள மைக்கல் ஷூமாக்கரை கோமா நிலையிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கோமா நிலையில் வைத்திருப்பதற்கு வழங்கப்படும் மருந்துக…

  2. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வியாழக்கிழமை (30) இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தங்களது கருணை மனு மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்ததால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்பது இந்த வழக்கின் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கோரிக்கையாகும். இந்த மனு மீது தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தபோது,…

  3. அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பனிப் புயலால் 6 முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அமெரிக்கா கடந்த ஒரு மாதமாக கடும் பனிப் பொழிவில் சிக்கி தவிக்கிறது. நாடு முழுவதும் மைனஸ் டிகிரிக்கும் கீழ் குளிர் வீசுகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் அட்லாண்டா பகுதியில் திடீரென கடும் பனிப்புயல் தாக்கியது. பல மணி நேரம் இந்த புயல் நீடித்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நகர முடியாமல் நின்றன. பல வாகனங்கள் விபத்தில் சிக்கின. பள்ளிக் கூடம் சென்ற மாணவர்களும் அலுவலகத்திற்கு சென்ற ஊழியர்களும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே நின்றனர். டெக்சாஸ், கரோலினா பகுதிகள்…

  4. பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம். இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள். சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் இந்த இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் உங்களுக்கு சட்டென புரிந்து கொள்ள முடியும்) பரீட்சையின் இறுதியில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்…

  5. 'இந்த ஆண்டின் நேர்காணல்'... இப்படித்தான் 'டைம்ஸ் நெள' சேனல் ராகுல் காந்தியுடனான நேர்காணல் பற்றி விளம்பரப்படுத்தியது. ஆனால், ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு அளித்த முழுநீள தொலைக்காட்சிப் பேட்டியோ, அவரது ஆதரவாளர்களை ஏமாற்றத்திலும், அவரது விமர்சகர்களை ஆரவாரத்திலும் ஆழ்த்தும் நிலைக்குத் தள்ளியது. இந்தப் பேட்டிக் களத்தில், காங்கிரசின் நட்சத்திர பரப்புரையாளர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கிடைத்த வாய்ப்பில் இருந்து நழுவினார். 'இந்து தேசியவாதம்' என்ற மோடியின் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் இவைதான் என எதையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னை மூன்றாவது …

  6. புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இசை அமைப்பாளர் விஷால் தாத்லானி, தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியை , 'கயவன்' என்றும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'கொலைக்காரன்' என்றும், 'இந்தியா இப்போது கொலைக்காரனுக்கும், கயவனுக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். நேற்று இரவு தாத்லானியின் இந்த பதிவை அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். http://news.vikatan.com/article.php?module=news&aid=238…

  7. புதுடெல்லி: ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஓரின சேர்க்கை சட்டரீதியாக செல்லும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்று கூறும் இ.பி.கோ. 377வது பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் கூறியது. இதனால், ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 11 ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம். அது, ஆயுள் தண்டனை வரை அளிக்…

  8. சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக நியூயோர்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக மாட்டார் என்று அவரது வழக்குரைஞர் ரவி பத்ரா தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றதாகவும், அப்போது மனித உரிமை மீறல் வழக்கு தொடர்பாக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டதாகவும் சீக்கிய அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இதனை சோனியா மறுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை அமெரிக்காவிலோ அல்லது நியூயோர்க்கிலோ தாம் இல்லை என்று சோனியா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க உள்…

  9. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தாய்லாந்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக வேலை செய்தவர் கார்ல் சிலிம் (51). இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியில் சேர்ந்தார். அதற்கு முன்னதாக 2007 முதல் 2012 வரை அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். டொயோட்டா உள்ளிட்ட சர்வதேச மோட்டார் நிறுவனங்களிலும் பல முன்னணி பதவிகளை வகித்து வந்துள்ளார். தென் கொரியா, தா…

  10. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படகொன்று கவிழ்ந்ததால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உல்லாசப் படகில் சுமார் 43 உல்லாசப் பயணிகள் பேர் பயணம் செய்துள்னர். அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு அருகிகிலுள்ள வடகுடாவுக்கும் ரொஸ் தீவுக்கும் இடையில் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில் இப்படகு மூழ்கியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். இப்படகு விரைவாக மூழ்கியதால் பயணிகள் தப்புவதற்கு அதிக அவகாசம் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3958#sthash.RztgGecs.dpuf

  11. பிரான்ஸின் ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட்டுக்கும் அவரின் காதலி வலேரி திரையர்வெய்லருக்கும் இடையிலான காதல் முறிவடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட், திருமணம் செய்யாத நிலையில் 2007 ஆம் ஆண்டு முதல் வலேரி திரையர்வெய்லருடன் இணைந்து வாழ்ந்தார். 2012 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பிராங்சுவா ஹொலண்டே பதவியேற்றது முதல் வலேரி திரையர்வெய்லரே அந்நாட்டின் முதற்பெண்மணியாக விளங்கினார். ஆனால், சில மாதங்களாக பிரான்ஸின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஜூலி காயெட்டுடன் ஜனாதிபதி ஹொலண்ட்டுக்கு இரகசிய தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அண்மையில் ஜூலி காயெட்டின் வீட்டுக்கு ஜனாதிபதி ஹொலண்ட் இரகசியமாக செல்வதை 'குளோசர்' எனும் பிரெஞ்சு சஞ்சிகையான …

  12. ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திடீர் மாற்றம் உக்ரைன் ( Ukraine ) அரசியலில் நேற்றைய சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ஜனுகோவிற்ச் ( Janukowitsch ) தன் அரசியல் எதிரிகளுக்கு அரசாங்கத்தில் பல உயர் பதவிகள் தர முன் வந்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் வெளிவிவகாரச் செயலரான அர்செனி ஜசென்யுக்கிற்கு ( Arseni Jazenjuk) முதன் மந்திரிப் பதவியும், குத்துச்சண்டை வீரரான விற்றலி கிலிற்ச்கோ விற்கு உதவிப் பிரதமர் பதவியும் தர முன்வந்துள்ளார். நாட்டில் சட்டதிருத்த மசோதா கொண்டு வரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.. தற்போதைய பிரதமர் நிக்கோலை அசரோவ் ( Nikolai Asarov ) ராஜினாமா செய்ய வேண்டும் எனும் நிபந்தனை ஏற்கனவே பாராளுமன்ற அவசரகால இருப்பின் போது சென்ற நாட்களில் முடிவெடுக்கப்பட்டதாகும். புதிய முதன்…

  13. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட செய்வதற்கு ஆதரவாக நிதி வசூலை தொடங்கப் போவதாக அரசியல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார். அதில் வெற்றி பெற்ற ஒபாமா, பின்னர் அதிபர் தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். அடுத்த அதிபர் தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இம்முறை ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக பேசிய ஹிலாரி, தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதில் போட்டியிடுவது தொடர்பான எனது முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பேன் என்று கூ…

  14. பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குறித்து கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி மணி சங்கர் அய்யர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருபவர் மணிசங்கர் அய்யர். தமிழகத்தை சேர்ந்த இவரது அலுவலகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அவயாம்பாள்புரத்தில் உள்ளது. இங்கு 2 மோட்டார் பைக்கில் 6 பேர் வந்தனர் . பூட்டி கிடந்த அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. தாக்குதல் நடத்தியவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் அறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மணிசங்கர் அய்யர் ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மணிசங்கர் அய்யர் நேற்று டில்ல…

  15. புதுடெல்லி: நடிகர் கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்மபூஷன்; தொழில் துறை மல்லிகா ஸ்ரீநிவாசனுக்கு பத்மஸ்ரீ மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானி ஆர். எஸ். மஷெல்கருக்கு பத்ம பூஷன் விருதும், நடிகை வித்யா பாலன், பரேஷ் ராவல் ஆகியோருக்கு பதம்ஸ்ரீ விருதும் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று விளையாட்டு வீரர்களான கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீரர் பல்லிக்கல் மற்றும் கோபிசந்த் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தை சேர்ந்த நடிகர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் டி.எச்.வினாயக்ராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. …

    • 2 replies
    • 2.8k views
  16. அமெரிக்க பெண்களில், ஐந்தில் ஒருவர் பலாத்காரம்! வாஷிங்டன்: அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புகள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடக்கவுள்ள நிலைமையில் தற்போது இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு ஆறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இளம் பெண்கள் பலாத்காரம் அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்…

    • 6 replies
    • 903 views
  17. மேலூர் பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் 97–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகராட்சி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு ஆர்.சாமி எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– தமிழக முதல்–அமைச்சர் அம்மா அவர்களின் 2001–2006 ஆம் ஆண்டு ஆட்சியின்போது எனது கோரிக்கை ஏற்று 2006–ம் ஆண்டு மேலூருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உத்தர விட்டார். ஆனால் அதற்கு பின் வந்த தி.மு.க. ஆட்சியின் போது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. நான் இது குறித்து பல முறை அப்போது சட்டசபையில் பேசினேன். தற்போது தமிழகத்தின் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றவுடன் அம்மா அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்…

    • 20 replies
    • 1.3k views
  18. கடற்கொள்ளையர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய பிரான்ஸ் கடற்படை ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை பிரான்ஸ் நாட்டு கடற்படை மீட்டுள்ளது. ஓமன் கடற்பகுதியில் கடந்த 18ம் தேதி பிரான்ஸ் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்ட போது அவர்கள் மீடப்பட்டுள்ளனர் என்று புதுடெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன. கடற்கொள்ளையர்கள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்ததாக தகவல்கள் வெளியாகியது. இதனை அடுத்து ஐரோப்பிய யூனியன் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் சென்ற கடற்படையினர். அப்போது 11 இந்திய மாலுமிகளை கட…

  19. கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த இளம்பெண் ஒருவர், பஞ்சாயத்து தீர்ப்பு காரணமாக 13 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் சபல்பூல் கிராமத்தை சேர்ந்த இளம் பெண், ஒருவர் அந்த பகுதியில் உள்ள வேறுசாதி வாலிபரை காதலித்தார். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப் பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கு பஞ்சாயத்தார் ரூ.2,000 அபராதம் விதித்தனர் அபராத தொகையை செலுத்த வசதி இல்லை என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறினார். இதையடுத்து, அந்த பெண்ணை யார் வேண்டு மானாலும் இலவசமாக…

  20. மும்பை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை 'ஐட்டம் பாய்' என பாலிவுட் குத்தாட்ட நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது பத்திரிகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாலிவுட் குத்தாட்ட நாயகி ராக்கி சாவந்த்துடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலைவிட ராக்கி சாவந்த் நன்றாக ஆட்சி செய்வார் என்றும் அதில் கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராக்கி சாவந்த், ''உத்தவ்ஜி எது சொன்னாலும் அது சரியாக இருக்கும். அரவிந்த கெஜ்ரிவால் ஆட்சி செய்வதற்காக மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். அவர் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தெருவுக்கு வரக்கூடாது. சட்டங்கள…

  21. தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதிப்பட்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரை கவுரவபடுத்தும் விதமாக பிரிட்டோரியாவிலுள்ள யூனியன் கட்டிடத்துக்கு எதிரே அவருக்கு மிகப்பெரிய சிலை ஒன்று எழுப்பபட்டு உள்ளது.வெண்கலத்தால் 9 மீட்டர் உயரமும் 4.5 டன் எடையும் கொண்டதாக இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஒருமைபாட்டு தினமான டிசமபர் 16-ந்தேதி சிலை நிறுவபட்டது. நெல்சன் மண்டேலாவுக்கு வைக்கப்பட்டுள்ள சிலையில், அதை உருவாக்கிய சிற்பிகள் தங்களது தயாரிப்பு என்பதைக் குறிக்கும் வகையில், அச்சிலையின் காதில் ஒரு பித்தளையிலான முயல் ஒன்றை வைத்து உள்ளனர். இதை கண்டறிந…

  22. சுனந்தாவின் கையில் யாரோ ஆழமாக கடித்த தழும்பு: யார் அந்த நபர்? டெல்லி: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் கையில் யாரோ ஆழமாக கடித்த தழும்பு இருந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் விஷத்தால் இறந்திருக்கலாம் என பின்னர் பேசப்பட்டது. மேலும் அவர் இறக்கும் முன்பு யாருடனோ போராடியுள்ளார் என்றும், அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட காயங்கள் அவரது உடலில் உள்ளது என்றும் தகவல் கிடைத்தது. இந்நிலையில் சுனந்தாவின…

  23. 1974 ஓப்பந்தப்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என சென்னை ஐகோர்ட்டில் மத்திய வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மீனவர் பாதுகாப்பு பேரவைத் தலைவர் பீட்டர் ராயப்பன் தொடர்ந்த வழக்கில் கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை உண்டு என மனு தாக்கல் செய்தார். மனுதாரர் வாதத்தை மறுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு கச்சத்தீவுக்கு கப்பல் போக்குவரத்து 1976 இல் ரத்து செய்யப்பட்டதாகவும், 1974 ஓப்பந்தப்படி கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என்றும் மத்திய அரசு மனு தாக்கல் செய்துதுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=387312596123454556#sthash.lhX3QxqJ…

  24. புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வர் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கடுமையாக தாக்கி பேசியுள்ளார். டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக எழுந்த புகார் தொடர்பான பிரச்னையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த பிரச்னையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் டெல்லில் தர்ணா போராட்டம் நடத்த…

  25. புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி காவல்துறையில், தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரத்தை டெல்லி மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தி வரும் தர்ணா போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. 7.45 P.M. போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால் டெல்லி துணைநிலை ஆளுநருடன் பேச்சு நடத்திய பின் முதல்வர் கெஜ்ரிவால், தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 6.45 P.M. போராட்டத்தை கைவிட கெஜ்ரிவால் மறுப்பு ஆம் ஆத்மியின் இந்த போராட்டம் மத்திய அரச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.