உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா தன்னை இந்திய தேசத்தின் மகனாக கருதுவதாகவும், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். கிட்டத்தட்ட இந்த தேசத்தில் 54 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நான், இங்குள்ள சாதம், சப்பாத்தி, மற்றும் டீ ஆகியவற்றை சாப்பிட்டும், அருந்தியும் வந்துள்ளதாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். திபெத்தின் கலை மற்றும் கலாசாரம் குறித்து 5 நாள் விழாவை துவக்கி வைக்கும் அவர், தான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்துக் கொண்டபோது தலாய் லாமா அருணாசல பிரதேசத்தில் உள்ள கென்சிமானி பாதை வழியாக 80000 திபெத்தியர்களுடன் கவுகாத்தியை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=102820&cate…
-
- 2 replies
- 349 views
-
-
அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைப்பது குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே பாஜக மேலிடத்திடம் தெரிவித்து விட்டேன். என் கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று தெரியவில்லை. அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்து போகும். ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதே போன்று திமுகவும் அழிந்துவிடும் என்று தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=102629&category=IndianNews&lang…
-
- 4 replies
- 452 views
-
-
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் களம் காண உள்ளது. இந்த கூட்டணியில் ஐக்கியம் ஆவாரா அல்லது தனி அணி காண்பாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிலைப்பாடு மிகவும் ரகசியமாக உள்ளது. இந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி முன்னணி தலைவர்களிடம் பேசிய போது, ஈழத்தில் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் இலங்கை ராணுவம் அழிப்புக…
-
- 6 replies
- 851 views
-
-
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கடந்த 60 ஆண்டு களில் இலங்கைத்தீவில், ஈழத்தமிழ் மக்களுக்கு, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழ் இனப்படு கொலையால் நேர்ந்த அழிவு, மனித மனங்களைத் துடிதுடிக்க வைக்கும் கொடுந்துயரம் ஆகும். உலகெங்கும், தமிழகத்திலும் நீதிக்காகத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளந்தலைமுறையினர் நடத்திய அறவழிக் கிளர்ச்சிகளால், மனித குலத்தின் மனசாட்சி மெல்ல மெல்ல விழித்துக்கொண்டது. சிங்கள அரசு நடத்திய இப்படுகொலைக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளும் ஆயுத உதவி செய்து உள்…
-
- 0 replies
- 468 views
-
-
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அடுத்தடுத்து அணு உலை அமைக்கப்படுவதைக் கண்டித்து இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கூடங்குளத்தில் 1 மற்றும் 2வது அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழல்களும், குளறுபடிகளும் நிறைந்திருக்கிறது. இதன் உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகள் பரிசோதித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த 15 அம்ச பரிந்துரைகளை அமுல்படு்தப்பட்டிருக்கின்றனவை என்ற தகவல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். குற்ற சாட்டுகள் உண்மை என்று தெரிந்தால் 2 அணு உலைகளையும் இழுத்து மூட வேண்டும். கூடங்குளத்தில் மேலும் 3,4வது அணு உலைகள் அமைக்க…
-
- 0 replies
- 411 views
-
-
திமுக நாடகத்தை நம்ப மாட்டோம்: பிரேமலதா மனைவி பிரேமலதாவுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் “வீட்டுக்குள் பேசவேண்டிய விஷயத்தை ஊடகங்கள் முன் கருணாநிதியும் அழகிரியும் பேசுகின்றனர். திமுக-வின் கபட நாடகத்தை நம்பத் தயாராக இல்லை” என்று மனைவி பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் வரும் 2-ம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை மாநாட்டுக்கான அனுமதியைக் காவல்துறையினர் வழங்காத நிலையில், புதன்கிழமை மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பிரேமலதா நம்மிடம் பேசியதாவது: தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனு கொடுத்தோம். இதுவரை அனுமதி இல்லை. சட்டத்தையும் நீதியையும் மதித்து உரிமையைக் கேட்போம்.முறையோடு அனுமதி பெற்றுதான் …
-
- 0 replies
- 447 views
-
-
அதிக ஊழல் வாதிகள் கொண்டது இந்தியா தான் என்றும், இதில் 169 பேர் ஊழல்வாதிகள் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் ஆம்ஆத்மி கட்சி நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஊழலில் சிக்கிய அரசியல்வாதிகள் பட்டியலை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டார். இதன் அடிப்படையில் ஊழல்வாதிகள் மாநிலத்திற்கு ஒருவர் வீதம் இருந்தாலும், தமிழகத்தில் தான் 5 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள். இன்று முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: நாட்டில் ஊழல் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலுக்கு பின்னர் ஒரு ஊழல்வாதிகூட பார்லி.,க்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும், வரும் தேர்தல், அரசியலில…
-
- 3 replies
- 643 views
-
-
கனடாவில் எஸ்கலேட்டரை உபயோகித்த பெண் ஒருவரின் ஆடை மற்றும் தலைமுடி மின் படிக்கட்டில் சிக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மொன்ட்ரியல் மாகாணத்தில் இருக்கும் சுரங்கப்பாதை ஒன்றில் இயங்கும் எஸ்கலேட்டரில் 48 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் கூட்ட நெரிசல் மிக்க இடத்தில் எதிர்பாராத விதமாக அவரது ஆடை மின் படிக்கட்டில் சிக்கியது, விபரீதத்தை உணர்ந்த அவர் உடனடியாக அதனை எடுக்க முயன்ற போது அருகிலிருந்தவர்களும் அவருக்கு உதவியுள்ளனர். ஆனால், அப்போது அப்பெண்ணின் தலைமுடியும் மின்படிக்கட்டில் சிக்கியது. இதனால் அருகில் இருந்தவர்களால் அப்பெண்ணிற்கு உதவ இயலவில்லை. அவசர உதவிக்கு அழைப்பதற்குள…
-
- 3 replies
- 591 views
-
-
மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைக்க வேண்டும் என்ற புல்லரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை தூக்கிலிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தவிர புல்லர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மனு மீது மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், புல்லர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஒரு வார காலத்திற்குள் அவரது உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர் பான வழக்கில் காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு மரண தண்டனை வ…
-
- 0 replies
- 342 views
-
-
விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள, போர்மியூலா வன் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் நரம்பியல் பரிசோதனைகளின்போது அறிவுறுத்தல்களுக்கு பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவரால் கண்சிமிட்ட முடிவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸின், அல்ப்ஸ்மலையில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த மைக்கல் ஷூமாக்கர் பிரெஞ்சு வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான தினத்திலிருந்து செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள மைக்கல் ஷூமாக்கரை கோமா நிலையிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கோமா நிலையில் வைத்திருப்பதற்கு வழங்கப்படும் மருந்துக…
-
- 0 replies
- 383 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வியாழக்கிழமை (30) இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தங்களது கருணை மனு மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்ததால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்பது இந்த வழக்கின் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கோரிக்கையாகும். இந்த மனு மீது தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தபோது,…
-
- 0 replies
- 194 views
-
-
அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பனிப் புயலால் 6 முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அமெரிக்கா கடந்த ஒரு மாதமாக கடும் பனிப் பொழிவில் சிக்கி தவிக்கிறது. நாடு முழுவதும் மைனஸ் டிகிரிக்கும் கீழ் குளிர் வீசுகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் அட்லாண்டா பகுதியில் திடீரென கடும் பனிப்புயல் தாக்கியது. பல மணி நேரம் இந்த புயல் நீடித்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நகர முடியாமல் நின்றன. பல வாகனங்கள் விபத்தில் சிக்கின. பள்ளிக் கூடம் சென்ற மாணவர்களும் அலுவலகத்திற்கு சென்ற ஊழியர்களும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே நின்றனர். டெக்சாஸ், கரோலினா பகுதிகள்…
-
- 0 replies
- 187 views
-
-
பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம். இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள். சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் இந்த இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் உங்களுக்கு சட்டென புரிந்து கொள்ள முடியும்) பரீட்சையின் இறுதியில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்…
-
- 26 replies
- 1.6k views
-
-
'இந்த ஆண்டின் நேர்காணல்'... இப்படித்தான் 'டைம்ஸ் நெள' சேனல் ராகுல் காந்தியுடனான நேர்காணல் பற்றி விளம்பரப்படுத்தியது. ஆனால், ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு அளித்த முழுநீள தொலைக்காட்சிப் பேட்டியோ, அவரது ஆதரவாளர்களை ஏமாற்றத்திலும், அவரது விமர்சகர்களை ஆரவாரத்திலும் ஆழ்த்தும் நிலைக்குத் தள்ளியது. இந்தப் பேட்டிக் களத்தில், காங்கிரசின் நட்சத்திர பரப்புரையாளர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கிடைத்த வாய்ப்பில் இருந்து நழுவினார். 'இந்து தேசியவாதம்' என்ற மோடியின் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் இவைதான் என எதையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னை மூன்றாவது …
-
- 1 reply
- 562 views
-
-
புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இசை அமைப்பாளர் விஷால் தாத்லானி, தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியை , 'கயவன்' என்றும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'கொலைக்காரன்' என்றும், 'இந்தியா இப்போது கொலைக்காரனுக்கும், கயவனுக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். நேற்று இரவு தாத்லானியின் இந்த பதிவை அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். http://news.vikatan.com/article.php?module=news&aid=238…
-
- 2 replies
- 481 views
-
-
புதுடெல்லி: ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஓரின சேர்க்கை சட்டரீதியாக செல்லும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்று கூறும் இ.பி.கோ. 377வது பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் கூறியது. இதனால், ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 11 ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம். அது, ஆயுள் தண்டனை வரை அளிக்…
-
- 0 replies
- 335 views
-
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக நியூயோர்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக மாட்டார் என்று அவரது வழக்குரைஞர் ரவி பத்ரா தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றதாகவும், அப்போது மனித உரிமை மீறல் வழக்கு தொடர்பாக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டதாகவும் சீக்கிய அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இதனை சோனியா மறுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை அமெரிக்காவிலோ அல்லது நியூயோர்க்கிலோ தாம் இல்லை என்று சோனியா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க உள்…
-
- 1 reply
- 363 views
-
-
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தாய்லாந்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக வேலை செய்தவர் கார்ல் சிலிம் (51). இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியில் சேர்ந்தார். அதற்கு முன்னதாக 2007 முதல் 2012 வரை அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். டொயோட்டா உள்ளிட்ட சர்வதேச மோட்டார் நிறுவனங்களிலும் பல முன்னணி பதவிகளை வகித்து வந்துள்ளார். தென் கொரியா, தா…
-
- 1 reply
- 568 views
-
-
இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை படகொன்று கவிழ்ந்ததால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உல்லாசப் படகில் சுமார் 43 உல்லாசப் பயணிகள் பேர் பயணம் செய்துள்னர். அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு அருகிகிலுள்ள வடகுடாவுக்கும் ரொஸ் தீவுக்கும் இடையில் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில் இப்படகு மூழ்கியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். இப்படகு விரைவாக மூழ்கியதால் பயணிகள் தப்புவதற்கு அதிக அவகாசம் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3958#sthash.RztgGecs.dpuf
-
- 2 replies
- 499 views
-
-
பிரான்ஸின் ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட்டுக்கும் அவரின் காதலி வலேரி திரையர்வெய்லருக்கும் இடையிலான காதல் முறிவடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட், திருமணம் செய்யாத நிலையில் 2007 ஆம் ஆண்டு முதல் வலேரி திரையர்வெய்லருடன் இணைந்து வாழ்ந்தார். 2012 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பிராங்சுவா ஹொலண்டே பதவியேற்றது முதல் வலேரி திரையர்வெய்லரே அந்நாட்டின் முதற்பெண்மணியாக விளங்கினார். ஆனால், சில மாதங்களாக பிரான்ஸின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஜூலி காயெட்டுடன் ஜனாதிபதி ஹொலண்ட்டுக்கு இரகசிய தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அண்மையில் ஜூலி காயெட்டின் வீட்டுக்கு ஜனாதிபதி ஹொலண்ட் இரகசியமாக செல்வதை 'குளோசர்' எனும் பிரெஞ்சு சஞ்சிகையான …
-
- 0 replies
- 398 views
-
-
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திடீர் மாற்றம் உக்ரைன் ( Ukraine ) அரசியலில் நேற்றைய சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ஜனுகோவிற்ச் ( Janukowitsch ) தன் அரசியல் எதிரிகளுக்கு அரசாங்கத்தில் பல உயர் பதவிகள் தர முன் வந்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் வெளிவிவகாரச் செயலரான அர்செனி ஜசென்யுக்கிற்கு ( Arseni Jazenjuk) முதன் மந்திரிப் பதவியும், குத்துச்சண்டை வீரரான விற்றலி கிலிற்ச்கோ விற்கு உதவிப் பிரதமர் பதவியும் தர முன்வந்துள்ளார். நாட்டில் சட்டதிருத்த மசோதா கொண்டு வரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.. தற்போதைய பிரதமர் நிக்கோலை அசரோவ் ( Nikolai Asarov ) ராஜினாமா செய்ய வேண்டும் எனும் நிபந்தனை ஏற்கனவே பாராளுமன்ற அவசரகால இருப்பின் போது சென்ற நாட்களில் முடிவெடுக்கப்பட்டதாகும். புதிய முதன்…
-
- 1 reply
- 357 views
-
-
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட செய்வதற்கு ஆதரவாக நிதி வசூலை தொடங்கப் போவதாக அரசியல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார். அதில் வெற்றி பெற்ற ஒபாமா, பின்னர் அதிபர் தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். அடுத்த அதிபர் தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இம்முறை ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக பேசிய ஹிலாரி, தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதில் போட்டியிடுவது தொடர்பான எனது முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பேன் என்று கூ…
-
- 0 replies
- 255 views
-
-
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி குறித்து கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் எம்.பி மணி சங்கர் அய்யர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருபவர் மணிசங்கர் அய்யர். தமிழகத்தை சேர்ந்த இவரது அலுவலகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அவயாம்பாள்புரத்தில் உள்ளது. இங்கு 2 மோட்டார் பைக்கில் 6 பேர் வந்தனர் . பூட்டி கிடந்த அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. தாக்குதல் நடத்தியவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் அறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மணிசங்கர் அய்யர் ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மணிசங்கர் அய்யர் நேற்று டில்ல…
-
- 11 replies
- 687 views
-
-
புதுடெல்லி: நடிகர் கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்மபூஷன்; தொழில் துறை மல்லிகா ஸ்ரீநிவாசனுக்கு பத்மஸ்ரீ மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானி ஆர். எஸ். மஷெல்கருக்கு பத்ம பூஷன் விருதும், நடிகை வித்யா பாலன், பரேஷ் ராவல் ஆகியோருக்கு பதம்ஸ்ரீ விருதும் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று விளையாட்டு வீரர்களான கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்குவாஷ் வீரர் பல்லிக்கல் மற்றும் கோபிசந்த் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தை சேர்ந்த நடிகர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் டி.எச்.வினாயக்ராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 2.8k views
-
-
அமெரிக்க பெண்களில், ஐந்தில் ஒருவர் பலாத்காரம்! வாஷிங்டன்: அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புகள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடக்கவுள்ள நிலைமையில் தற்போது இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு ஆறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இளம் பெண்கள் பலாத்காரம் அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்…
-
- 6 replies
- 903 views
-