Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்யும் ஆதாரங்கள் எனக்கூறி ஒலிப்பதிவு நாடாக்களை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செவ்வாயன்று புதுடில்லியில் வெளியிட்டார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியிடப்பட்ட இந்த சில தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் ஆகியோருக்கு இடையேயான உரையாடல்கள் என கூறப்படும் ஒலிப்பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டன. தொடர்புடைய விடயங்கள் ஊழல், திமுக மேலும் கலைஞ…

  2. பதிமூன்று மாத காலம் நடுக் கடலில் திக்குத்தெரியாமல் தத்தளித்து உயிர் தப்பியுள்ள எல் சால்வடோர்காரர் ஒருவர் சொந்த நாடு திரும்பி குடும்பத்தாரைக் காண விருப்பம் தெரிவித்துள்ளார். மெக்ஸிகோவின் மேற்குக் கரையில் பழுதான இவரது படகு கடல் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆஸ்திரேலியாவுக்கு வடக்கேயுள்ள மார்ஷல் தீவுக் கூட்டத்தின் பவளத் தீவு ஒன்றில் அண்மையில் கரை ஒதுங்கியுள்ளது. கடல் ஆமைகள், பறவைகள், மீன்கள் போன்றவற்றை பிடித்து பச்சையாக உண்டும், தனது சிறுநீரையே குடித்தும் இவர் உயிர் வாழ்ந்துள்ளார். தனது அளவற்ற கடவுள் நம்பிக்கையும், அன்புக்குரியவர்களைக் காண வேண்டும் என்ற ஆவலும், பிடித்த உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கனவும்தான் கடும் கஷ்டங்களுக்கு இட…

  3. உலகின் முதனிலை கணனி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகிக்கொண்டார். உலகச் செல்வந்தர்களில் முன்னணி வகித்து வரும் பில் கேட்ஸ் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிப்பாளர்களில் ஒருவரான ஜோன் தொம்பசன் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பணிப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட பில் கேட்ஸ், நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தொடர்ந்தும் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட சத்யா நடெல்லா மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்க…

    • 8 replies
    • 1.4k views
  4. 2ஜி ஊழல் சம்பந்தமாக கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் மற்றும் கடந்த திமுக ஆட்சியில் உளவுத்துறை டிஜிபியாக இருந்த ஜாபர் ஷெரிப்புக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் தற்போது வெளிவந்துள்ளது. முதலில் ஜாபர் ஷெரிப்பிடம் கலைஞர் டிவி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், 2ஜி வழக்கிலிருந்து தயாளு அம்மாளை காப்பாற்றும் வகையில் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர்களின் சந்திப்புகள் தொடர்பாக ஆவணங்கள் முறைகேடாக திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக 200 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கனிமொழிக்கும் ஜாபர் ஷெரிப்புக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதே பணப் பரிமாற்றம் தொடர…

  5. மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் மண்ணில் புதையுண்டு கிடந்த டைனோசரஸ் படிவங்கள் கடந்த 2000–ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து 27 டைனோசரஸ் முட்டைகளும் இருந்தன.அவற்றை கைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மந்து அருகே அஷ்மேதாவில் உள்ள புதை படிவம் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அவை விசேஷ கண்ணாடி பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், அங்கிருந்த 27 டைனோசரஸ் முட்டைகளும் திடீரென மாயமாயின, அவற்றை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தார் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 498 மற்றும் 380 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக அருங்காட்சியகத்தின் பாதுகாவலர…

  6. ரஷ்யாவில், அதிக வயதாகுவற்கு முன்னரே பலர் இறப்பதற்கு அளவுக்கதிமாக மதுபானம் அருந்துவது காரணமாக உள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் பிரபல வொட்கா மதுபானத்தை அதிகமாக அருந்துவது இத்தகைய மரணங்களுக்கு காரணமாகின்றனவாம். மொஸ்கோவிலுள்ள ரஷ்ய புற்றுநோய் நிலையம் மற்றும் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ரஷ்ய ஆண்களில் 25 சதவீதமானோர் 55 வயதுக்கு முன்னர் மரணமடைவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானோரின் மரணங்களுக்கு மதுபானம் காரணமாம். ஈரல் நோய்கள், மதுபானம் நஞ்சாதல் முதலியவற்றின் காரணமாக மரணங்கள் ஏற்படுவதுடன் மதுபோதையில் சண்டையிடுவதாலும் பலர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது…

  7. தென் சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்சினையால் தற்போது 3.7 மில்லியன் மக்களுக்கு அவசரமாக உணவு தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. தென் சூடானின் கடந்த டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டின் இராணுவ வீரர்களுக்குமிடையில் வன்முறை ஆரம்பமானது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 860,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் உள்நாட்டு வன்முறையினால் 3.7 மில்லியன் பேர் உணவின்றித் தவிக்கின்றனர். இது தென் சூடானின் 3 இல் 1 பகுதி சனத்தொலை ஆகும். இவர்களுக்கு அவசரமாக உணவு தேவைப்படுகின்றது. இந்த நெருக்கடி நிiலையை எதிர்கொள்ள 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 169 பில்லியன் ரூபா) தேவைப்படும் என ஐ.நாவ…

  8. திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா தன்னை இந்திய தேசத்தின் மகனாக கருதுவதாகவும், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். கிட்டத்தட்ட இந்த தேசத்தில் 54 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நான், இங்குள்ள சாதம், சப்பாத்தி, மற்றும் டீ ஆகியவற்றை சாப்பிட்டும், அருந்தியும் வந்துள்ளதாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். திபெத்தின் கலை மற்றும் கலாசாரம் குறித்து 5 நாள் விழாவை துவக்கி வைக்கும் அவர், தான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்துக் கொண்டபோது தலாய் லாமா அருணாசல பிரதேசத்தில் உள்ள கென்சிமானி பாதை வழியாக 80000 திபெத்தியர்களுடன் கவுகாத்தியை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=102820&cate…

  9. இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கடந்த 60 ஆண்டு களில் இலங்கைத்தீவில், ஈழத்தமிழ் மக்களுக்கு, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழ் இனப்படு கொலையால் நேர்ந்த அழிவு, மனித மனங்களைத் துடிதுடிக்க வைக்கும் கொடுந்துயரம் ஆகும். உலகெங்கும், தமிழகத்திலும் நீதிக்காகத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளந்தலைமுறையினர் நடத்திய அறவழிக் கிளர்ச்சிகளால், மனித குலத்தின் மனசாட்சி மெல்ல மெல்ல விழித்துக்கொண்டது. சிங்கள அரசு நடத்திய இப்படுகொலைக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளும் ஆயுத உதவி செய்து உள்…

  10. கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அடுத்தடுத்து அணு உலை அமைக்கப்படுவதைக் கண்டித்து இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கூடங்குளத்தில் 1 மற்றும் 2வது அணு உலையில் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழல்களும், குளறுபடிகளும் நிறைந்திருக்கிறது. இதன் உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகள் பரிசோதித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த 15 அம்ச பரிந்துரைகளை அமுல்படு்தப்பட்டிருக்கின்றனவை என்ற தகவல்களை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். குற்ற சாட்டுகள் உண்மை என்று தெரிந்தால் 2 அணு உலைகளையும் இழுத்து மூட வேண்டும். கூடங்குளத்தில் மேலும் 3,4வது அணு உலைகள் அமைக்க…

  11. சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் களம் காண உள்ளது. இந்த கூட்டணியில் ஐக்கியம் ஆவாரா அல்லது தனி அணி காண்பாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிலைப்பாடு மிகவும் ரகசியமாக உள்ளது. இந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி முன்னணி தலைவர்களிடம் பேசிய போது, ஈழத்தில் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் இலங்கை ராணுவம் அழிப்புக…

  12. திமுக நாடகத்தை நம்ப மாட்டோம்: பிரேமலதா மனைவி பிரேமலதாவுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் “வீட்டுக்குள் பேசவேண்டிய விஷயத்தை ஊடகங்கள் முன் கருணாநிதியும் அழகிரியும் பேசுகின்றனர். திமுக-வின் கபட நாடகத்தை நம்பத் தயாராக இல்லை” என்று மனைவி பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் வரும் 2-ம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை மாநாட்டுக்கான அனுமதியைக் காவல்துறையினர் வழங்காத நிலையில், புதன்கிழமை மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பிரேமலதா நம்மிடம் பேசியதாவது: தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனு கொடுத்தோம். இதுவரை அனுமதி இல்லை. சட்டத்தையும் நீதியையும் மதித்து உரிமையைக் கேட்போம்.முறையோடு அனுமதி பெற்றுதான் …

  13. கனடாவில் எஸ்கலேட்டரை உபயோகித்த பெண் ஒருவரின் ஆடை மற்றும் தலைமுடி மின் படிக்கட்டில் சிக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மொன்ட்ரியல் மாகாணத்தில் இருக்கும் சுரங்கப்பாதை ஒன்றில் இயங்கும் எஸ்கலேட்டரில் 48 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் கூட்ட நெரிசல் மிக்க இடத்தில் எதிர்பாராத விதமாக அவரது ஆடை மின் படிக்கட்டில் சிக்கியது, விபரீதத்தை உணர்ந்த அவர் உடனடியாக அதனை எடுக்க முயன்ற போது அருகிலிருந்தவர்களும் அவருக்கு உதவியுள்ளனர். ஆனால், அப்போது அப்பெண்ணின் தலைமுடியும் மின்படிக்கட்டில் சிக்கியது. இதனால் அருகில் இருந்தவர்களால் அப்பெண்ணிற்கு உதவ இயலவில்லை. அவசர உதவிக்கு அழைப்பதற்குள…

  14. மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைக்க வேண்டும் என்ற புல்லரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை தூக்கிலிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தவிர புல்லர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மனு மீது மத்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், புல்லர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஒரு வார காலத்திற்குள் அவரது உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர் பான வழக்கில் காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு மரண தண்டனை வ…

  15. விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள, போர்மியூலா வன் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் நரம்பியல் பரிசோதனைகளின்போது அறிவுறுத்தல்களுக்கு பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவரால் கண்சிமிட்ட முடிவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸின், அல்ப்ஸ்மலையில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த மைக்கல் ஷூமாக்கர் பிரெஞ்சு வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான தினத்திலிருந்து செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள மைக்கல் ஷூமாக்கரை கோமா நிலையிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கோமா நிலையில் வைத்திருப்பதற்கு வழங்கப்படும் மருந்துக…

  16. அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைப்பது குறித்து என் கருத்தை நான் ஏற்கனவே பாஜக மேலிடத்திடம் தெரிவித்து விட்டேன். என் கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று தெரியவில்லை. அழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்து போகும். ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதே போன்று திமுகவும் அழிந்துவிடும் என்று தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=102629&category=IndianNews&lang…

  17. அதிக ஊழல் வாதிகள் கொண்டது இந்தியா தான் என்றும், இதில் 169 பேர் ஊழல்வாதிகள் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் ஆம்ஆத்மி கட்சி நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஊழலில் சிக்கிய அரசியல்வாதிகள் பட்டியலை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டார். இதன் அடிப்படையில் ஊழல்வாதிகள் மாநிலத்திற்கு ஒருவர் வீதம் இருந்தாலும், தமிழகத்தில் தான் 5 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள். இன்று முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: நாட்டில் ஊழல் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும். வரவிருக்கும் தேர்தலுக்கு பின்னர் ஒரு ஊழல்வாதிகூட பார்லி.,க்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும், வரும் தேர்தல், அரசியலில…

  18. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வியாழக்கிழமை (30) இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தங்களது கருணை மனு மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் செய்ததால் மரண தண்டனையை ஆயுளாக குறைக்க வேண்டும் என்பது இந்த வழக்கின் குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கோரிக்கையாகும். இந்த மனு மீது தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தபோது,…

  19. அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பனிப் புயலால் 6 முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அமெரிக்கா கடந்த ஒரு மாதமாக கடும் பனிப் பொழிவில் சிக்கி தவிக்கிறது. நாடு முழுவதும் மைனஸ் டிகிரிக்கும் கீழ் குளிர் வீசுகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் அட்லாண்டா பகுதியில் திடீரென கடும் பனிப்புயல் தாக்கியது. பல மணி நேரம் இந்த புயல் நீடித்தது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நகர முடியாமல் நின்றன. பல வாகனங்கள் விபத்தில் சிக்கின. பள்ளிக் கூடம் சென்ற மாணவர்களும் அலுவலகத்திற்கு சென்ற ஊழியர்களும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே நின்றனர். டெக்சாஸ், கரோலினா பகுதிகள்…

  20. பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம். இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள். சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் இந்த இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் உங்களுக்கு சட்டென புரிந்து கொள்ள முடியும்) பரீட்சையின் இறுதியில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்…

  21. 'இந்த ஆண்டின் நேர்காணல்'... இப்படித்தான் 'டைம்ஸ் நெள' சேனல் ராகுல் காந்தியுடனான நேர்காணல் பற்றி விளம்பரப்படுத்தியது. ஆனால், ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு அளித்த முழுநீள தொலைக்காட்சிப் பேட்டியோ, அவரது ஆதரவாளர்களை ஏமாற்றத்திலும், அவரது விமர்சகர்களை ஆரவாரத்திலும் ஆழ்த்தும் நிலைக்குத் தள்ளியது. இந்தப் பேட்டிக் களத்தில், காங்கிரசின் நட்சத்திர பரப்புரையாளர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கிடைத்த வாய்ப்பில் இருந்து நழுவினார். 'இந்து தேசியவாதம்' என்ற மோடியின் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் இவைதான் என எதையும் குறிப்பிடவில்லை. அதற்குப் பதிலாக, தன்னை மூன்றாவது …

  22. புதுடெல்லி: ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஓரின சேர்க்கை சட்டரீதியாக செல்லும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்று கூறும் இ.பி.கோ. 377வது பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் கூறியது. இதனால், ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 11 ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம். அது, ஆயுள் தண்டனை வரை அளிக்…

  23. புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இசை அமைப்பாளர் விஷால் தாத்லானி, தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியை , 'கயவன்' என்றும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'கொலைக்காரன்' என்றும், 'இந்தியா இப்போது கொலைக்காரனுக்கும், கயவனுக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். நேற்று இரவு தாத்லானியின் இந்த பதிவை அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். http://news.vikatan.com/article.php?module=news&aid=238…

  24. சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக நியூயோர்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராக மாட்டார் என்று அவரது வழக்குரைஞர் ரவி பத்ரா தெரிவித்துள்ளார். சோனியா காந்தி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றதாகவும், அப்போது மனித உரிமை மீறல் வழக்கு தொடர்பாக அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டதாகவும் சீக்கிய அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இதனை சோனியா மறுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை அமெரிக்காவிலோ அல்லது நியூயோர்க்கிலோ தாம் இல்லை என்று சோனியா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சோனியா காந்தி நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க உள்…

  25. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தாய்லாந்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக வேலை செய்தவர் கார்ல் சிலிம் (51). இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியில் சேர்ந்தார். அதற்கு முன்னதாக 2007 முதல் 2012 வரை அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். டொயோட்டா உள்ளிட்ட சர்வதேச மோட்டார் நிறுவனங்களிலும் பல முன்னணி பதவிகளை வகித்து வந்துள்ளார். தென் கொரியா, தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.