உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தடவை மாநில கட்சிகளின் எழுச்சி மிக அதிகமாக இருப்பதால் வாக்காளர்களை கவரும் யுக்தியை பற்றி பாரதீய ஜனதாவும் காங்கிரசும் ஆலோசித்து வருகின்றன. பா.ஜ.க. சார்பில் குஜராத் முதல்– மந்திரி நரேந்திர மோடி, காங்கிரஸ் சார்பில் ராகுல் பிரதமர் வேட்பாளர்களாக வலம் வர உள்ளனர். நரேந்திர மோடி ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால் நாடெங்கும் ‘மோடி அலை’ வீசுகிறது. ஆனால் ராகுல் களத்தில் இன்னும் காலடியே எடுத்து வைக்கவில்லை. அவர் பற்றி நாட்டு மக்களிடம் வலுவான இமேஜ் இல்லை. நேரு குடும்பத்து வாரிசு, இளம் தலைவர் ஆகியவற்றை தவிர அவரிடம் வேறு என்ன இருக்கிறது என்று அடிக்கடி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ராகுல் மீதான இந்த விமர்…
-
- 1 reply
- 496 views
-
-
அமேதி: உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு இடையே மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இதில் குறிப்பாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, அவரது அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகளில் ஆம் ஆத்மி கட்சியினர் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக அமேதியில் வரும் 12-ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் குமார் விஸ்வாஸ் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்…
-
- 2 replies
- 346 views
-
-
வாடிகன் நகரில் மேலோங்கும் ஓரினச்சேர்க்கை புனித தலமாய் கருதப்படும் வாடிகன் நகரம் ஓரினச்சேர்க்கைகளால் நிறைந்துள்ளது என முன்னாள் சுவிஸ் காவல் உறுப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 5ம் திகதி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,பல்லாண்டுகளுக்கு முன்னர் வாடிகனில் காவல் உறுப்பினராக இருந்தபோது பல முறை கார்டினல்களாலும், ஆயர்களாலும்,குருக்களாலும்,பிற அதிகாரிகளாலும் ஓரினச்சேர்க்கைக்கு தூண்டிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 20 மதகுருக்கள் என்னை தூண்டிவிடும் நோக்கில் சில்மிஷ கோரிக்கைகளை விடுத்து ஓரினச்சேர்கையில் என்னுடன் ஈடுபட முயன்றுள்ளனர். இவ்வகை ஓரினச்சேர்க்கையாளர்கள் மதகுரு என்ற போர்வையில் மக்களை வழிநடத்துபவன் போல் போலி வேடமிட்டு பதவி …
-
- 7 replies
- 984 views
-
-
இந்திய பெருங்கடலில், சீன ஆதிக்கம், ஊடுருவல் தடுக்கும் வகையில், தஞ்சை விமானப்படைக்கு, புதிய வரவாக, எந்த அபாயத்தையும் சமாளிக்கவல்ல, 'குளோப் மாஸ்டர் சி 17' ரக விமானம், தரையிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை அருகே சூலூர், சென்னை அடுத்த தாம்பரம் என, இரு விமானப்படை தளங்கள் செயல்பட்டு வந்தன. இதையடுத்து, மூன்றாவதாக, புதிய விமான தளம், தஞ்சாவூரில், 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.இது, போர் விமானங்களை நிறுத்தும் வகையில், அதிநவீன ஓடுபாதையுடன் கூடிய முதல் விமானப்படை தளமாக விளங்குகிறது. கடந்த, 2012ம் ஆண்டில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட, மணிக்கு, 3,200 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய, 18 சூப்பர்சானிக், 'சுஹாய்' ஜெட் ரக விமானங்கள், தஞ்சையில் நிறுத்தி வைக்கப்பட்…
-
- 2 replies
- 450 views
-
-
கடந்த சில நாட்களாக வட அமெரிக்காவை துருவ பனி சுழல்காற்று தாக்கி வருகிறது. இதனால் அங்கு கடும் பனி மழை கொட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பல பகுதிகள் பனி மூடிக்கிடக்கின்றன. வீட்டை விட்டு பொது மக்கள் யாரும் வெளியே வரமுடியவில்லை. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வட கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது. இந்த வார இறுதி வரை 3,700 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மைனஸ் 51 டிகிரி அளவுக்கு குளிர் வாட்டுகிறது. சிகாகோ, இல்லினாய்ஸ், மின்னாபாலிஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கடும…
-
- 1 reply
- 308 views
-
-
பாலாசூர்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திப்பூர் அருகே ராணுவ ஆராய்ச்சி கழகம், இன்று பிருத்வி2 ஏவுகணை சோதனை மேற்கொண்டது. பிருத்வி2 ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ. தூரத்தில் இலக்கை வலிமையுடையது. இந்திய ராணுவத்தின் வழக்கமான சோதனைகளில் ஒன்றான இந்த ஏவுகணை சோதனை, இன்று காலை நடத்தப்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: பிருத்வி2 ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று சுமார் 350 கிமீ தாண்டி சென்று இலக்கை தாக்கும் திறனுடையதாகும். ராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக ஆயுத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் பிருத்வி…
-
- 0 replies
- 421 views
-
-
டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரியங்கா காந்தி திடீரென ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி 17-ந்தேதியன்று இதற்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியாவின் அரசியல் செயலரான அகமது படேல், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மூத்த …
-
- 4 replies
- 626 views
-
-
சோனியா, ராகுல், முலாயம் சிங்கை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் லக்னோவில் நிருபர்களிடம் கூறியதாவது:– வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 20 மாநிலங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது. நாட்டின் முக்கிய தலைவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவோம். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் சிங் ஆகியோரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை விரைவில் முடிவு செய்வோம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். வருகிற பிப்ரவரி மாதம் 15–ந்தேதிக்குள் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிடும். தேர…
-
- 0 replies
- 296 views
-
-
காஷ்மீரில் ராணுவம் நீடிப்பது அல்லடு வாபஸ் பெறுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததை பிரஷாந்த் பூஷண் வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரி பேட்டியளித்தார். இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி பிரதேச முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், அது பிரஷாந்த் பூஷணின் தனிப்பட்ட நிலைப்பாடு. கட்சியின் கருத்தல்ல” என்று அறிவித்தார். இறுதியில் தனது கருத்தை மாற்றிக்கொண்ட பூஷண், “காஷ்மீர் மாநிலமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதே ஆம் ஆத்மியின் கருத்தாகும். நானும் இதை…
-
- 3 replies
- 422 views
-
-
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தை விலக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் பூஷண் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இது பிரசாந்த் பூஷணின் சொந்த கருத்து என ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷண், ஜம்மு காஷ்மீர் மக்கள் விரும்பினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி ராணுவ பாதுகாப்பை விலக்கி கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு பொதுவாக்கெடுப்ப…
-
- 4 replies
- 631 views
-
-
தஞ்சாவூர் : இந்திய பெருங்கடலில், சீன ஆதிக்கம், ஊடுருவல் தடுக்கும் வகையில், தஞ்சை விமானப்படைக்கு, புதிய வரவாக, எந்த அபாயத்தையும் சமாளிக்கவல்ல, 'குளோப் மாஸ்டர் சி 17' ரக விமானம், தரையிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை அருகே சூலூர், சென்னை அடுத்த தாம்பரம் என, இரு விமானப்படை தளங்கள் செயல்பட்டு வந்தன. இதையடுத்து, மூன்றாவதாக, புதிய விமான தளம், தஞ்சாவூரில், 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.இது, போர் விமானங்களை நிறுத்தும் வகையில், அதிநவீன ஓடுபாதையுடன் கூடிய முதல் விமானப்படை தளமாக விளங்குகிறது.கடந்த, 2012ம் ஆண்டில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட, மணிக்கு, 3,200 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய, 18 சூப்பர்சானிக், 'சுஹாய்' ஜெட் ரக விமானங்கள், தஞ்சையில் நிறுத்தி வைக்கப்பட்டு…
-
- 1 reply
- 677 views
-
-
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இதில் குறிப்பாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, அவரது அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். முதற்கட்டமாக அமேதியில் வரும் 12-ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் குமார் விஸ்வாஸ் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனுமன் சிங் கூறியதாவது:- ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்ட தயாரிப்பு பணிகளுக்கு இளைஞர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நேரு-காந்தி வாரிசு அரசியலு…
-
- 0 replies
- 391 views
-
-
ஏ.கே 47 ரக ரஷ்சியத் தயாரிப்பு தானியங்கித் துப்பாக்கியை கண்டுபிடித்த Mikhail Kalashnikov தனது 94 வயதில் ரஷ்சியாவில் இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவர் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியினரின் துப்பாக்கிகளுக்குப் போட்டியாக இதனை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி இருந்தாலும்.. உலகம் பூராகவும்.. மிக பெருமளவில் பாவிக்கப்படும் அதேவேளை.. பெருமளவு மனிதப்படுகொலைகளுக்கு காரணமாக இருக்கும் ஆயுதமாக இது இன்று மாறி உள்ளது. தமிழில் செய்தி ஆக்கம்: நெடுக்ஸ். பிரதான மூலம்: http://www.bbc.co.uk/news/world-europe-25497013
-
- 24 replies
- 2.7k views
-
-
முதுபெரும் இயற்கை விவசாய ஆர்வலர் கோ. நம்மாழ்வார், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்கோட்டை கிராமத்தில் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு 75 வயது. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றினார். ஆனால் அரசின் செயல்முறைகளில் அதிருப்தியுற்று வெளியேறி, பின்னர் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மாதிரிப் பண்ணை 'இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இப்போதைய தேவை. கம்பு, எள், கேழ்வரகு (குரக்கன்), கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிச…
-
- 28 replies
- 9.7k views
-
-
அமெரிக்காவில், இந்திய தூதரக அதிகாரி, தேவயானி கைது செய்யப்பட்ட பின், அவரது ஆடைகளை கலைந்து, அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தது போன்ற வீடியோ காட்சிகள், அமெரிக்க சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 'இந்த வீடியோ காட்சிகள் பொய்யானவை' என, அமெரிக்கா மறுத்துள்ளது. விசா மோசடி வழக்கு: அமெரிக்காவுக்கான, இந்திய துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ராகேட், விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்நாட்டு அதிகாரிகள், தன் ஆடைகளை கலைந்து சோதனையிட்டதாகவும், தூதரக அதிகாரிக்கான மதிப்புடன் தன்னை நடத்தவில்லை எனவும் தேவயானி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தேவயானியை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிப் பதிவுகள், அமெரிக்க சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது. …
-
- 17 replies
- 2.2k views
-
-
ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தை விலக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் பூஷண் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இது பிரசாந்த் பூஷணின் சொந்த கருத்து என ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷண், ஜம்மு காஷ்மீர் மக்கள் விரும்பினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி ராணுவ பாதுகாப்பை விலக்கி கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்…
-
- 0 replies
- 362 views
-
-
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இன்று 48வது பிறந்த நாள் கொண்டாடும் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’உள்ளத்திலிருந்து ஒலிக்கும் நிஜ குரலை கேட்க வேண்டும். இத்தனை புகழ் பெற்றும் அடக்கமாக இருப்பது பற்றி கேட்கிறீர்கள். நான் தேர்ந்தெடுத்துள்ள பாதை என்னை அப்படி இருக்க செய்கிறது. சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதற்கு நான் எனக்காக வகுத்துள்ள கொள்கைகளே காரணம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்திய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது. ஜெய்ஹிந்த்’’என்று கூறனார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=11428…
-
- 0 replies
- 2.5k views
-
-
மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதால் தேர்தல் முடிவுகளில்... மாற்றம் இருக்கும் : 73% மாற்றம் இருக்காது : 25% நோட்டா : 2% மொத்த வாக்குகள்: 4233 வாக்களிக்க இங்கு செல்லுங்கள்: http://tamil.thehindu.com/
-
- 0 replies
- 595 views
-
-
ஜெட்டா மீது பறந்த விமானத்திலிருந்து விழுந்த மனித உடல் உறுப்புகள்! ஜெட்டா: சவூதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் சக்கரத்தில் யாராவது சிக்கியிருக்கலாம். அவரின் உடல் உறுப்புகளே கீழே விழுந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜெட்டா மீது விமானம் பறந்தபோது இந்த உடல் உறுப்புகள் கீழே விழுந்தன. இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் அல் போக் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம் என்றார். விமானத்தின் லேன்டிங் கியர் ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் நியு யோர்க் மற்றும் நியு ஜெர்ஸி மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு அமெரிக்காவை பெரும் பனிப்புயலொன்று தாக்கியுள்ளதை அடுத்து இந்த அவசரகால நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்புயலால் சில இடங்களில் இரண்டு அடி உயரத்துக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுநூற்றுக்கணக்கான விமானசேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. முக்கிய வீதிகளும் மூடப்பட்டுள்ளன. மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பெரும்பாலும் பள்ளிக்கூடங்களும் அலுவலகங்களும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வீதியில் கொட்டுவதற்காக வைத்திருந்த உப்புமூடைகள் விழுந்ததில் சிக்கிய பணியாளர் ஒருவரும் உ…
-
- 9 replies
- 743 views
-
-
03.01.2014 பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதும் வடமாநில டி.வி.க்களும், இணைய தளங்களும் அதை பெரிது படுத்தி தகவல்கள் வெளியிட்டன. தினமும் அவரைப் பற்றிய கருத்து கணிப்புகள், பேச்சுகள், செயல்பாடுகள் ஆகியவை பற்றி பரபரப்பாக வெளியாகி வந்தன. 5 மாநில சட்டசபை தேர்தலின் போதும் நரேந்திர மோடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் டெல்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசையும், பாரதீய ஜனதாவையும் வீழ்த்தியதால் டி.வி., இணைய தளங்களின் பார்வை கெஜ்ரிவால் பக்கம் திரும்பியது. அதற்கு ஏற்ப கெஜ்ரிவால் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. கெஜ்ரிவால் பற்றிய தகவல்களுக்கு வடமாநில டி.வி.க்…
-
- 0 replies
- 541 views
-
-
சிரியா மற்றும் துருக்கியைச் சேர்ந்த குர்து இனப் பெண்கள் தமக்கான தன்னாதிக்க அரசுக்காக ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பெரும்பாலும் துருக்கிக்கு எதிராக, சுதந்திர குர்திஸ்தானுக்காகப் போராடுகின்ற பிகேகே என்னும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் தீவிரவாதிகளால் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள். பிகேகேயின் 40 வீதமான போராளிகள் பெண்களாவர். அந்த குர்து இனப் பெண் போராளிகளின் தளபதியை பிபிசியின் ஜிஹார் கொல் அவர்களுக்கு சென்று சந்திக்க்க் கிடைத்தது. குர்து இனத்தவர்களுக்கான தாயகத்துக்கு அப்பாலும் அவர்களது போராட்டம் விரிவடைந்துள்ளதாக அவர் கூறுகிறார். அது குறித்த காணொளி தமிழ் (03:03 min) http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140105_pkkfemale.shtml
-
- 0 replies
- 433 views
-
-
வடகொரியாவின் சர்வாதிகாரி கிம் யொங் உன் தனது தந்தையாரின் ஒரே சகோதரியின் கணவரான Jang Song-Thaek ஐ ஆடைகளை அகற்றி விட்டு 3 நாள்களாகப் பசித்திருந்த 120 காட்டு நாய்கள் இருந்த கூட்டுக்குள் வீசி கொடுரமாகக் கொலைசெய்திருக்கின்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் கிம் தனது முன்னாள் காதலியான பாடகி Hyon Song-wol ஐ சுட்டுக்கொன்றிருந்தார். http://www.mirror.co.uk/news/world-news/north-korea-kim-jong-uns-uncle-2983138
-
- 3 replies
- 784 views
-
-
டெல்லி: ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தாங்கள் போட்டியிட விரும்பும் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் தலா 100 பேரிடமிருந்து ஆதரவுக் கையெழுத்துப் பெற்று சமர்ப்பித்தால்தான் டிக்கெட்டுக்குப் பரிசீலிக்கப்படுவர் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இப்படிச் செய்யாமல் யாராவது விண்ணப்பித்தால் அவர்களது பெயர் வேட்பாளர் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்ததோடு, தற்போது காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியிலும் அமர்ந்துள்ளது. அடுத்து லோக்சபா தேர்தலிலும் மகத்தான முத்திரையைப் பதிக்க அது ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலைய…
-
- 2 replies
- 578 views
-
-
8cd1ed90ee26d704dac8a3918761717a
-
- 0 replies
- 456 views
-