Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எரிமலைக் குழம்பு படிந்து ஜப்பானில் புதிய தீவு உருவானது! எரிமலைகள் தொடர்ந்து வெளியேற்றும் குழம்புகள் படிந்து டோக்கியோவின் தென்கிழக்கே புதிய தீவுத்திட்டு ஒன்று தோன்றியுள்ளதாக ஜப்பானியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. மனிதர்கள் நடமாட்டம் அற்ற போனின் தீவுகள் என்று அழைக்கப்படும் ஒகசவாரா தீவுத்தொடரின் அருகில் நிஷிநோஷிமா கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பரப்பில் இந்த தீவு அமைந்துள்ளது.ஜப்பானின் கடலோரக் காவல்படை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் ஆலோசகர்கள் இந்தப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்தத் தீவு சுமார் 200 மீ விட்டம் கொண்டதாக அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையும் சேர்த்து டோக்கியோவிற்கு தெற்கில் உள்ள சுமார் 30 தீவுகளுடன் ஜப்பானும் எரிமலைகள் அதிக சீ…

  2. தமிழர்களின் அன்னையின் ஆலயம் முள்ளிவாய்க்கால் இடித்த தமிழக காட்டுமிரான்டி அரசை கண்டித்து கோவையில் 20-11-2013 அன்று மாலை அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரும்திரளானோர் கலந்துகொண்டனர். http://www.pathivu.com/news/28226/57//d,article_full.aspx

  3. சிங்கப்பூர்: மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் என்றும், அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். சிங்கப்பூரில் தெற்காசியா புலம்பெயர்ந்தோர் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.மூன்றாவது நாளான இன்று மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதி ஒருவர், ‘‘சிறுபான்மை தமிழ்மக்கள் இன்னலுற்று வருகிற இலங்கையில் முதலீடுகள் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும்?’’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம்,"தனது சொந்த நாட்டு மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்க…

  4. உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட 85 பேருக்கு பிணை வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. பெரும் சர்ச்சைக்கிடையே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட இந்த நினைவு முற்றம் கடந்த 8ஆம் திகதி திறக்கப்பட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதன் சுவர் இடிக்கப்பட்டது. அதேவேளையில், விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலிப்பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 85பேர் மீது க…

  5. பெங்களூரு: ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய் (37) தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7.10 மணி அளவில் இவர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற மர்ம நபர், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார். அவரை …

  6. இந்திய சீன எல்லை --- புதிய ராணுவப் பிரிவு உருவாக்க இந்தியா உத்தரவு இந்தியா ,சீனாவுடனான தனது எல்லை நெடுகே புதிய ராணுவப் பிரிவொன்றை உருவாக்கி நிலை நிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் 50,000 கூடுதல் படையினர் இந்த எல்லையில் நிறுத்தப்படுவார்கள். இந்தப் புதிய பிரிவு மேற்கு வங்க மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். கடந்த ஆண்டில், சீனத்துருப்புக்கள், இந்திய நிலப்பரப்புக்குள் பல முறை ஊடுருவிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சீனாவும் இந்த எல்லை நெடுகே துருப்புக்களை குவித்திருக்கிறது. இமாயலப் பகுதிகளில் பல இடங்களில், எல்லைப் பிரச்சினை கொண்டிருக்கும் இந்த இரு நாடுகளும், 1962ல் ஒரு சுருக்கமான போரில் ஈடுபட்டன. http://www.bbc.co.uk/tami…

  7. பெய்ரூட்டில் ஈரானிய தூதுவராலயத்தை இலக்குவைத்து தாக்குதல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள ஈரான் தூதுவராலய பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் தூதுவராலய வளாகத்தில் இருந்த கட்டிடங்கள் சிலவற்றுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இரட்டைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டமையே வெடிப்புக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தூதுவராலயத்தை இலக்குவைத்து ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் தூதுவராலய அதிகாரிகள் எவரும் உயிரிழந்துள்ளனரா என்பது தொடர்பில் இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. http://www.virakesari.lk/?q=node/359267 …

  8. ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு, இந்திரா காந்தி அமைதி விருது. டெல்லி: 2013-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதிக்கான விருது ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி அறக்கட்டளை ஆண்டுதோறும் அமைதி, முன்னேற்றம், உலக ஒற்றுமைக்காக பாடுபடுவோரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான விருதுக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் (வயது 59) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமர் மன்மேகன் சிங் தலைமையிலான சர்வதேச குழு இவரைத் தேரந்தெடுத்துள்ளது. ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது ஜெர்மனை பொருளாதார வளர்ச்சியடைய செய்தமைக்காக ஏஞ்செலா மெர்க்கலுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதற்…

  9. ராஜபக்சவுடன் மன்மோகன்சிங்கும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என விக்கிரவாண்டி ஏ.ஆர்.எஸ்.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்பு விழாவில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர் - வரும் பாராளுமன்ற தேர்தல் எங்களது இலக்கல்ல. ஆனால் இந்த தேர்தலில் நாங்கள் வகுக்கும் வியூகம் நாடாளுமன்றத்தையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது முழு பலத்தை பயன்படுத்தி அதற்கான இலக்கை அடைவோம். அண்ணாவின் பெயரையும், பெரியாரின் பெயரையும் உச்சரிக்க தகுதி உள்ள ஒரே கட்சி நமது இயக்கம் மட்டும்தான். அ.தி.மு.க.–தி.மு.க. கட்சிகளுடன் என்றும் உறவு கிடையாது. சுயமரியாதையை விட்டுகொடுக்காமல் தேர்தலை சந்திப்போம்.மாற்று கட்சி பிரமுகர்கள் நமது கட்சிக்கு …

  10. இந்தியர்களில் 53 சதவீதத்தினர் அதாவது சுமார் 60 கோடி இந்தியர்கள் கழிப்பறை வசதியில்லாமல் திறந்த வெளியில் மலசலம் கழிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக கழிப்பறை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை விடுத்த அறிக்கையொன்றிலேயே உலக வங்கி இப்புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது. உலகளளவில் 250 கோடி மக்கள் போதியளவு கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் இருப்பதாகவும் இவர்களில் 10 கோடி பேர் திறந்தவெளியில் மலசலம் கழிப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. ஐ.நா.வினால் அனுஷ்டிக்கப்படும் முதன் முதலாவது உலக கழிப்பறை தினம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3030#sthash.Y46mxcvU.dpuf

  11. மூணாறு: தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு ஊரைவிட்டு வெளியேற நிர்பந்தித்து வருவதாக கேரளா மாநில அரசு மீது தமிழக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். ஆதிவாசிகளின் நிலம் என்று பொய்யான சாயம் பூசி விரப்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர் அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்கள். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்டது அட்டப்பாடி மலைப்பகுதி. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்படாததற்கு முன்பு இருந்தே, அட்டப் பாடி பகுதியில் தமிழர்கள் அதிகளவில் குடியேறினர். அட்டப்பாடியில் இப்போது 15 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர். 200-க்கும் அதிகமான ஆதிவாசி மலைக் கிராமங்களை உள்ளடக்கிய அட்டப்பாடியில் ஆதிவாசிகளின் இடங்களை விலைக்கு வாங்கி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தென்னை, வாழை,…

  12. துடெல்லி: 10 கோடி ரூபாய் இழப்பு கேட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய பிரதேச சட்டசபைக்கு வரும் 25 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் அங்கு சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்காக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் முதல்வர் சவுகான் வீட்டில் பணம் எண்ணும் எந்திரம் இருப்பது போலவும், காண்டிராக்ட் பணிகளுக்கு அவரும், அவர் மனைவி சத்னாவும் பணம் வாங்கி குவிப்பது போலவும் எழுதப்பட்டிருந்தது. சோனியா காந்தியும் அந்த கூட்டத்தில் பேசும் போது,அந்த விளம்பரத்தில் இருப்பது போன்றே பேசினார். இந்நிலையில், இதற்கு கடும் …

  13. புதுடெல்லி:டெல்லி தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் அதிகளவில் வராததால், ராகுல் காந்தி அதிருப்தி அடைந்தார். 7 நிமிடத்தில் பேச்சை முடித்து கொண்டு கிளம்பினார். டெல்லி, சட்டீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. டெல்லியில் டிசம்பர் 4ம் தேதி வாக்கு பதிவு நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ. தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் காங்கிரசின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக தக்ஷின்புரி கருதப்படுகிறது. இங்கு நேற்று தேர்தல் பிரசார கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று, முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகள் குறித்து பேசினார். ஆனால், அவரது பேச்சை கேட்க மக்கள் கூட்…

  14. சமீபத்தில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட, விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவை, நேட்டோ உளவு பார்த்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் விக்ரமாதித்யா கப்பல் கட்டப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன், அக்கப்பல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அப்போது, நோர்வேயில் இருந்து வந்த ஒரு நேட்டோ படைக்கு சொந்தமான விமானம், விக்ரமாதித்யாவின் செயல்பாடுகளை உளவு பார்த்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில், இக்காட்சி தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை நேட்டோ விமானம் உளவு பார்த்துள்ளதாக வெளியான தகவல், இந்திய ராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. http://www.seithy.com/bre…

  15. இன்றைய உலகம் பலதைக் கூறினாலும் விடுதலைப் புலிகள் உரிமைப் போராட்ட வீரர்கள். அவர்கள் இருந்த நாட்களில் இன்றைய காலம் போல் தமிழர்கள் அழிக்கப்படவில்லை. அவர்கள் தமிழருக்கு அரண். எமது ஆட்சியில் ஈழத்தின் விடிவு நிச்சயம் என பா.ஜ.க அகில இந்திய தேசியச் செயலாளர் டொக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். தமிழ் மக்கள் முழு உரிமையுடனும் கூடிய அதிகாரத்தை அனுபவித்து சுதந்திரமாக வாழ வேண்டும். அவ்வாறான சூழ்நிலை தாமதமானால் எமது ஆட்சியில் நிச்சயம் என பாரதிய ஜனதாக் கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளர் டொக்டர். திருமதி. தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=97119&category=TamilNews&language=tamil

  16. 900 வரு­டங்கள் பழை­மை­யான ப்ரீஹ் விஹேர் இந்துக் கோயில் கம்­போ­டியா நாட்­டுக்குச் சொந்­த­மா­னது என்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த தீர்ப்­பினை ஐ.நா உயர் நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் வழங்­கி­யுள்­ளது. கம்­போ­டியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­களின் எல்­லையி­ல் இக் கோயில் அமைந்­துள்­ளது. இதனால் இக்­கோ­யி­லுக்­காக இவ்­விரு நாடு­களும் நீண்ட கால­மாக சண்­டை­யிட்­டுக்­கொண்­டி­ருந்­தன.. தீர்ப்பு வெளி­யா­­வ­தற்கு முன்னர் கோயிலைச் சுற்­றி­யி­ருந்த பகு­தியில் தாய்­லாந்து மற்றும் கம்­போ­டிய பாது­காப்பு படை­யினர் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்­பட்­டது. இந்­நி­லையில், இக்­கோ­யிலும் அதனைச் சுற்­றி­யுள்ள குறித்­த­வொரு பகு­தியும் …

  17. "நெல்சன் மண்டேலாவால் பேச இயலவில்லை' தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவினால் பேச இயலவில்லை என்று அவருடைய முன்னாள் மனைவி வின்னி மண்டேலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா, சிகிச்சைக்குப்பின் குணமடைந்துள்ளார். எனினும், மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், வீட்டிலேயே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை, 22 மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரால் இப்போது பேச இயலவில்லை. நுரையீரலை சுத்திகரிக்க, அவருடைய வாயில் டியூப்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவருக்கு ஏதேனும் தேவையெனில், சைகை…

  18. ரஷ்யாவில் போயிங் விமானமொன்று விழுந்து நொறுங்கியதில் இதுவரைக்கும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் மத்தியில் கஸான் விமான நிலையத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரை இறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் 50 பயணிகளும் ஆறு சேவையாளர்களும் இருந்ததாக ஒரு தகவலும் மொத்தமாகவே 52 பேர் மட்டுமே இருந்ததாக இன்னுமொரு தகவலும் தெரிவிக்கின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/89846--52-.html

  19. க்ஹர்கோனே(ம.பி.): ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பா.ஜனதாவினர் பகல் கனவு காண்பதாகவும், இந்த பேராசை காரணமாக அக்கட்சியின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக உள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் க்ஹர்கோனேவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, மோடியையும். பா.ஜனதாவையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசுகையில்,"பாஜகவினர் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற பேராசையில் ஒருவருக்கொருவர் கீழே தள்ளிவிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். மேலும் மக்களை கவர்ச்சிகரமான பேச்சால் கவர்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள் …

  20. ஐதராபாத்:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீ அணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு சொந்தமான சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இங்கிருந்துதான் விண்வெளிக்கு ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களும், விண்வெளி ஆய்வு கலங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. கடைசியாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கல்யான் விண்கலம் அனுப்பப்பட்டது. அது தற்போது பூமியை சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சு…

  21. இன்று காலை 6h30 முதல் 7h00 மணியளவில் BFMTV யின் பாதுகாப்புப் பிரிவினர் தமது கடமையை ஆரம்பித்தனர். அச்சமயம் திடீரென பெரிய துப்பாக்கியுடன் 12 rue Oradour-sur-Glane à Issy-les-Moulineaux (Hauts-de-Seine) இலுள்ள BFMTVயின் நடு மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார். அந்தச் சமயம் அங்கு தனக்கான கடிதத்தை எடுக்க பிரதான மண்டபத்திற்குள் வந்த பிரதான செய்தித் தொகுப்பாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் ஏச்சரிக்ப்பட்டுள்ளார். ஆயுதத்துடன் நின்ற 30 வயது மதிக்கக் கூடிய அந்த மர்ம நபர் தொகுப்பாளரை எச்சரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். காவற்துறையினர் இன்னமும் BFMTV யின் தலைமையகத்திலேயே நிற்கின்றனர். அங்கு துப்பாக்கிக் குண்டின் வெற்றுக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அங்கு சுட்ப்பட்டனவா என…

  22. சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுப்பாதை அதிகரிக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, மங்கள்யான் விண்கலம் கடந்த 5ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் முதலில் பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அந்த சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தப்பட்டது. முதல் மூன்று சுற்றுப்பாதையில் அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்நிலையில், நேற்று இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக எரிபொருள் செயல்படுவது இயக்கப்பட்டது. ஆனால் மங்கள்யானில் உள்ள அந்த கருவி இயங்கவில்லை. இதன…

  23. பீமெட்டரா(சத்தீஸ்கர்) "மேடம் (சோனியா) நீங்கள் நோயாளியாக உள்ளீர்கள்...எனவே இளவரசர் (ராகுல்) கட்சி பொறுப்புக்கு வரட்டும். அவர் காங்கிரஸ் தலைவராக வந்தாலாவது சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குகிறாரா? என பார்க்கலாம்" என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டலாக அறிவுறுத்தி உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பீமெட்டரா என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, சோனியாவை 'மேடம்' என்றும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை 'இளவரசர்' என்றும் கிண்டலாக குறிப்பிட்டார். "மேடம் நீங்கள் நோயாளியாகி விட்டீர்கள். இளவரசர் பொறுப்பைஎடுத்துக்கொள்ளட்டும். அதன்பின்னர் அவர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 24 மணி நேரமும் மின்சாரம் கொட…

  24. பாலத்தீனத்தின் முன்னாள் தலைவர் யசீர் அரபாத் விஷமூட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சுவிட்சர்லாந்து அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. மருத்துவ, தடயவில் நிபுணர்களினால் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யசீர் அரபாத் பிரான்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் விஷமூட்டி கொல்லப்பட்டிருந்தார் என இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. இதில் ஈவிரக்கமற்ற வகையில் இஸ்ரேல் செயல்பட்டுள்ளதாக பலஸ்தீனர்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர். எனினும், இதனை நிராகரித்துள்ள இஸ்ரேல் அரசாங்கம், வெளியாகியுள்ள சுவிர்லாந்தின் மருத்து அறிக்கை குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்…

  25. Home உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் பங்கேற்க இல்லாத நிலை. உள்ளூர் நாளிதழில் இந்த செய்தியை பார்த்த சக ராணுவ வீரரான ரிக் கிளமண்ட் இந்த நிலை கண்டு வேதனை அடைந்தார். கிளமண்ட் ஆப்கன் போரில் பங்கேற்று இரு கால்களையும் இழந்தவர். பெரியவர் பெர்சிவலில் இறுதிசடங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.