Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டொரண்டோ: பிரபல காமிக்ஸ் கதாபாத்திரமான சூப்பர் மேனின் 75வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த 7 தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளது கனடா. உண்மை, நீதி மற்றும் நியாயத்திர்குப் போராடும் காமிக்ஸ் கதாபாத்திரம் சூப்பர்மேன். இந்த காமிக்ஸ் ஹீரோ தோன்றி கிட்டத்தட்ட 75 வருடங்கள் நிறைவு பெற்று விட்டதாம். அதனைக் கொண்டாடும் வகையில், கனடா நாட்டின் டொரண்டோ துண்டாஸ் சதுக்கத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற அந்தவிழாவில், 7 புதிய நாணயங்களை வெளியிட்டது ராயல் கனடா மின்ட். இந்த நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனவை. உண்மைக்காக, நீதிக்காகப் போராடும் சூப்பர்மேன் கதாபாத்திரம், கனடா நாட்டின் ஜோ ஷஸ்டர் மற்றும் அவரது அமெரிக்க நண்பரான ஜெர்ரி சீகல் ஆகியோ…

  2. கேதார்நாத்: புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 86 நாட்களுக்குப் பின்னர் கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜைகள் தொடங்கியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இமாலய சுனாமியால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவிலை சுற்றி அமைந்திருந்த ஹோட்டல்கள், கடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் கோவிலுக்குஎந்த வித சேதமும் ஏற்படவில்லை. எனினும் சடலங்கள் குவிந்திருந்த காரணத்தினாலும், கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாலும் பூஜைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கேதார்நாத் கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேத…

  3. டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று ஏபிபி நியூஸ் நீல்சன் மூட் ஆப் தி நேஷன் சர்வே தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு மொத்தம் உள்ள 70 இடங்களில் 32 இடங்கள் கிடைக்கும் என்றும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் கிடைக்கலாம் என்றும் இது கணித்துள்ளது. ஆகஸ்ட்14 முதல் 20 வரை இந்த சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 7084 பேரிடம் கருத்து கேட்டு பெற்றனர். 1998 முதல் டெல்லியை காங்கிரஸ் ஆண்டு வரும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலம் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.டெல்லி சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் பாதிக்கும் என்றும் கணிப்பு கூறுகிறது. இந்தக் கட்சிக்கு…

  4. டெல்லி: குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தொடர்ந்தும் மறுத்து பிடிவாதம் காட்டி வருகிறார். இதனால் நரேந்திர மோடி பிரதமராக அறிவிப்பது ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்கியே தீருவது என்பதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. பந்தை தமது எல்லைக் கோட்டிலிருந்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் பக்கம் தட்டிவிட்டிருக்கிறது அந்த இயக்கம். இதனால் விரைவில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் ராஜ்நாத் சிங் இருக்கிறார். இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் மோடியை எதிர்க்கும் அத்வானியை இன்று பகலில் சந்தித்து ஆ…

  5. நியூயார்க்: அமெரிக்க வர்த்தக மைய கட்டிட தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அமெரிக்க, இஸ்ரேல் இணையதளங்களை முடக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஹேக்கர்ஸ்எனப்படும் இணையதள ஊடுறுவல்காரர்கள். கடந்த 2001ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்குவைதா இயக்கத் தீவிரவாதிகள் உலக வர்த்தக மைய கட்டிடங்கள் மீது விமானங்களை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த கொடூரத் தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு இணையத் தளங்களை செயலிழக்க வைக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்ட போதும், இந்த சமீபத்திய மிரட்டல் கடந்த 2ம் தேதி யூ ட்யூப் வீடியோ வாயிலாக விடுக்கப்ப…

  6. நியூயார்க்: அமெரிக்கர்கள் மட்டுமல்ல.. உலகமே நினைத்துப் பார்க்க முடியாத பெருந்தாக்குதல் செப்டம்பர் 11.. 3 ஆயிரம் பேரை பலி கொண்ட அமெரிக்கா மீதான வான் தாக்குதலின் 12வது ஆண்டு நினைவு நாள்.. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் தகர்த்தனர் ஒசாமா பின்லேடனின் அல் குவைதா இயக்க தீவிரவாதிகள்.. ஈராக் மீதான அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புக்கான எதிர்வினை என்று பிரகடனம் செய்து கொண்டது அல்குவைதா. ஆனால் உலகம் இதுவரை கண்டிராத ஒரு கொடூர முறையில் தாக்குதலை நடத்தியிருந்தனர் அல்குவைதாவினர். விமானங்களை அல்குவைதா தீவிரவாதிகள் கடத்தி உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மோதச் செய்தனர். அடுத்தடுத்து விமானங்கள் கட்டடங்கள் மீது மோதியதில் கட்டடம் இடிந்து தர…

  7. பெங்களூர்: பிரிட்டானியா நிறுவனம், உலகளவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. நிதி பற்றாக்குறையினால் இந்நிறுவனம் பெங்களூர் பிரிட்டானியா கார்டன் எஸ்டேடில் உள்ள தனது சொத்துக்களை, 700 கோடிக்கு விற்ற திட்டமிட்டுள்ளது. இதனால் பிரிட்டானியா நிறுவனம் தனது தலைமையகத்தை 90,000 சதுர அடியில் பெங்களூர், ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி வளாகத்திற்கு மாற்ற உள்ளது. மேலும் இந்தியாவில் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதால், இத்தகைய பெரும் மதிப்புடைய சொத்தை ஒப்பந்தம் செய்ய பொருத்தமான நபரை கண்டறிய முடியவில்லை என நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் லாப விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது, கடந்த 2005ஆம் ஆண்டு இதன் லாப விகிசம் 12.3…

  8. மாணவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் முஸ்லீம் மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாமா என்பது குறித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது. ஜெர்மன் நகரான பிராங்க்பர்ட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 13 வயது மாணவியின் பெற்றோர்கள், தங்களது மகள் அந்தப்பள்ளியில் நீச்சல் பயிற்சி பெறக்கூடாது என்று கூறியதை அடுத்து இந்த வழக்கு வந்திருக்கிறது. ஜெர்மன் பள்ளியொன்றில் முஸ்லிம் மாணவிகள் ( ஆவணப்படம்) சில முஸ்லீம் மாணவிகள், புர்கினி ( புர்கா + பிக்கினி) என்றழைக்கப்படும் உடல் முழுவதையும் மறைக்கும் நீச்சலுடையை அணிந்து கொண்டு , சக மாணவர்களுடன் நீச்சல் பயிற்சி பெறுகிறார்கள். ஆனால் , நீச்சல் அரைக்காலுடை மட்டும் அணிந்திருக்கும் மாணவ…

  9. சிரியாவின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அங்கு இரு தரப்புமே போர்க் குற்றங்களிலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்க படைகள் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், பெருமளவில் பொதுமக்களை கொலை செய்து, மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தி, கொத்தணிக் குண்டுகளையும் பயன்படுத்தியதாக ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது. பொதுமக்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் கிளர்ச்சிக்காரர்கள் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் அதற்கான பொறுப்புக் கூற நேரிடலாம் என்ற அச்சமின்றி இருப்பதாகவும், அவர்கள் நீதி முன்பாக நிறுத்தப்ப…

  10. நோர்வே பொதுத் தேர்­தலில் பழை­மை­வாத கட்­சியைச் சேர்ந்த எர்னா சோல்பேர்க் வெற்­றி­பெற்­றுள்ளார். அந்­நாட்டின் தொழிற்கட்­சியைச் சேர்ந்த பிர­தமர் ஜீன்ஸ் ஸ்ரொல்­ரென்பேர்க் தோல்­வியை ஒப்புக்கொண்­ட­தை­ய­டுத்து ஆட்­சியை அமைக்க எர்னா சோல்பேர்க் தயா­ரா­கி­வ­ரு­கிறார். மேற்­படி தேர்­தலில் பெரும்­பான்மை வாக்­குகள் எண்­ணப்­பட்ட நிலையில், 4 வல­து­சாரி கட்­சி­களை உள்­ள­டக்­கிய எர்னா சோல்­பேர்க்கின் கூட்­ட­மைப்­பா­னது பாரா­ளு­மன்­றத்தின் 169 ஆச­னங்­களில் 96 ஆச­னங்­களை வென்­றெ­டுத்­துள்­ளது. தேர்தல் வெற்­றி­யை­ய­டுத்து எர்னா உரை­யாற்­று­கையில், இது வல­து­சாரி கட்­சி­க­ளுக்­கான வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க வெற்றி எனக் கூறினார். 2011 ஆம் ஆண்டில் 77 பேர் பலி­யா­வ­தற்க…

  11. டெல்லி: பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி நல்ல சாய்ஸ்தான். அவரது தலைமையின் கீழ் பணியாற்ற நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். கிட்டத்தட்ட டெல்லியின் ஓ.பன்னீர்செல்வமாக மாறி வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். இடைக்காலமாக முதல்வர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் இருந்தார். பின்னர் ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்ததும், அவரது தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் செயல்பட தானும் தயாராகவே இருப்பதாக பிரமதர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள பேட்டி.... 2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இருக்க நான் தயார். ராகுல் காந்தி தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்றாலும் அதற்கும் ந…

  12. சோனியாவுக்கு யு.எஸ். மருத்துவமனையிலேயே சம்மன் வழங்க கோர்ட் உத்தரவு! நியூயார்க்: சீக்கியர் கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நியூயார்க் நகர மருத்துவமனையிலேயே சம்மன் வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டத்தின் கீழ் சீக்கிய மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், சீக்கியர்களுக்கு எதிரான இத் தாக்குதலை ம…

  13. அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அருகே சிறிய படகில் ஆயுதங்கள் மற்றும் ஏராளமான வெடிபொருட்களுடன் வந்து கொண்டிருந்த 5 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இந்திய கடற்படையினரின் பாதுகாப்புப் பணியின் போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த படகு ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் இருந்ததை அடுத்து, படகில் வந்த தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரையும், மியான்மரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=92525&category=IndianNews&language=tamil

  14. டெல்லி: லோக்சபா தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என பாரதிய ஜனதா கட்சியும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் முட்டுக்கட்டைகளையும் மீறி ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்களில் ஒருவரான இருந்தவர் நரேந்திர மோடி. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களாக வலம் வந்தவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர். கடந்த சில ஆண்டுகளாக நரேந்திர மோடியின் விஸ்வரூபமானது அவரை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை நிர்வாகிகளில் ஒருவர் என்ற நிலைக்கு உயர்த்தியது. ராஜ்நாத்சிங், பாஜகவின் தலைவரான பின்னர் மோடி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றார். பின்னர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே லோக்சபா…

  15. சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக ஜெர்மனியின் தாமஸ் பாக்ஹ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ ஓ சியின் புதிய தலைவர் தாமஸ் பாக்ஹ் கடந்த 12 வருடங்களாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக இருந்த ழாக் ரோக் அவர்களை அடுத்து தாமஸ் பாக்ஹ் அந்தப் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் புவனஸ் எய்ரிஸின் இடம்பெற்ற தேர்தலில் அவர் தேர்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு ஆறு பேர் போட்டியிட்டனர். வழக்கறிஞரான தாமஸ் பாக்ஹ் இதுவரை ஐ ஓ சி யின் துணைத் தலவராக இருந்தார். 1976 ஆம் ஆண்டு கனடாவின் மொண்ட்ரியோல் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், வாள்வீச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் தாமஸ் பாக்ஹ் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒலிம்பி…

  16. மாஸ்கோ/டமாஸ்கஸ்: ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று ரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து அவற்றை அழிக்க சிரியா ஒப்புதல் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி 1400 பேரை படுகொலை செய்தது சிரியா என்கிறது அமெரிக்கா. இந்த ரசாயன ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றால் பேரழிவு ஏற்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இதனாலேயே சிரியா மீது ராணுவ நடவடிக்கை அவசியம் என்று அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. ரஷ்யாவில் சிரியா அமைச்சர் இந்நிலையில் சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல்-மோவுலிம் நேற்று மாஸ்கோவுக்கு சென்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேயி லாவ்ரோவை சந்தித்து பேச்சு நடத்தினார். ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்வோம் ச…

  17. ஜெய்ப்பூர்: ஊழல்களின் அடிப்படையில்தான் ஆங்கில எழுத்து வரிசையை படிக்க வேண்டும் என காங்கிரஸ் புது கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறது.. அதாவது A-ஆதர்ஷ் ஊழல்.. B- போபர்ஸ் ஊழல்.. C- காமன்வெல்த் ஊழல்" என்றுதான் இனி மாணவர்கள் படிக்க வேண்டியது இருக்கும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், முன்னாள் முதல்வர் வசுந்தரராஜேவின் யாத்திரையால் பாரதிய ஜனதா கட்சி இம்மாநிலத்தில் வலுவடைந்துள்ளது. ராஜஸ்தான் மக்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய தேர்தலின் போது தவறு செய்துவிட்டதாக கூறுகின்றனர். கடந்த தேர்தலில் தாங்கள் செய்த அந்த தவறுக்கு பிராயசித்தம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளனர்.…

  18. சிட்னி: மேற்கு சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ப்ளூ மவுன்டெய்ன்ஸ் பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு பதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் ப்ளூ மவுன்டெய்ன்ஸ் மற்றும் மேற்கு சிட்னி பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு பரவியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மொத்தம் 63 இடங்களில் தீப் பற்றி எரிவதாகவும் அதில் 31 கட்டுக்கடங்காமல் உள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த காட்டுத் தீயால் சிட்னியில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்களில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒரு வீடு முற்றிலும் எரிந்துவிட்டது. இந்த தீயால் சிட்னியில் …

  19. சென்னை: பெரியார், அண்ணா, திமுக பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா வேலூரில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று திமுக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெரியார், அண்ணா, திமுக பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா வேலூரில் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தற்போது பெய்து வரும் மழை தொடர்ச்சியாக செப்டம்பர் 15ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை திமுக முப்பெரும் விழா நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/09/10/tamilnadu-dmk-s…

  20. டெஹ்ரான்: ஈரானில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 44 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள். படுகாயமடைந்த 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு, 11 மணியளாவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, ஈரான் - கோம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாரா விதமாக அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, அதன் முன்னே சென்றுகொண்டிருந்த காரின் மீதும், அதனைத் தொடர்ந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீதும் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்து, அதில்…

  21. டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையேயான மோதலில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஈவ் டீசிங்கில் தொடங்கிய மோதல் மூன்று கொலைகளாகி இரு பிரிவினரிடையேயான வன்முறையாக வெடித்து 38 பேர் வரை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருக்கிறார். இந்த வன்முறையில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திரு…

  22. இலங்கைக்கான தனது விஜயத்தின் போது தன்னை சந்தித்தவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறைகள், மற்றும் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் மீண்டும் கவலை வெளியிட்டுள்ளார். ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24வது மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை ''இலங்கையில் புனர்நிர்மாணம், நல்லிணக்கம், போரின் பின்னரான பொறுப்புக் கூறல் ஆகியவற்றுடன், மத சகிப்பின்மை, ஆளுகையும் சட்டத்தின் ஆட்சியும் போன்ற பரந்துபட்ட மனித உரிமைகள் நிலவரம் ஆகியவற்றிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து நானறிவதற்கு ஏதுவாக எனது அண்மைய விஜயத்துக்கு ஏற்பாடு செய்த…

  23. டில்லி அருகே மாணவி ஒருத்தியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நால்வர் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு தண்டனை புதன்கிழமை விதிக்கப்படும் . இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். டில்லி பாலியல் வல்லுறவு வழக்கு-- பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பதின்பருவ இளைஞர் ஒருவர் சிறார்களுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கடந்த வாரம் மூன்று ஆண்டுகள் சீர்திருத்த நிலையம் ஒன்றில் கழிக்க தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் மார்ச் மாதத்தில் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதத்தில் டில்லி அருகே ஓடும் பஸ்ஸில் நடந்த இந்த சம்பவம் இந்தியாவெங…

  24. கென்யாவின் துணை அதிபர் வில்லியம் ரூட்டோ மீதான விசாரணை தி ஹேகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. 2007 ஆம் ஆண்டு, கென்யாவில் இடம்பெற்ற சர்ச்சைகுரிய தேர்தலை அடுத்து எழுந்த வன்முறைகளை அவர் ஏற்பாடு செய்து நடத்தினார் என்று ரூட்டோ மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. வில்லியம் ரூட்டோ இதே போல மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் உஹுரு கென்யாட்டா தம்மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் எதிர்கொள்கிறார்.ஆனால் தன் மீது குற்றமில்லை என்று அவரும், அவருடன் கூட்டாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஒலிபரப்பாளர் ஜோஷுவா அரப் சாங்கும் கூறியுள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சரித்திரத்திலேயே, கேள்…

  25. செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழிப் பயணமாகச் செல்ல, உலகெங்கிலிருந்தும் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, இந்தத் திட்டத்தின் பின்னால் இருப்பவர்கள் கூறுகிறார்கள். சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் ஒரு நிரந்திர தளத்தை அமைக்க 'மார்ஸ் ஒன்' எனப்படும் அந்தத் திட்டக் குழுவினர் எண்ணியுள்ளனர். மிகவும் ஆபத்தான, ஏழு மாதப் பயணத்தை விண்வெளியாளர்களால் எதிர்கொள்ள முடியும் என்றால், செவ்வாய் கிரகத்தில் இந்த நிரந்தரத் தளம் அமைக்கப்படும் . திட்டம் உள்ளது, தொழில்நுட்பம் தேவை செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் க்யூரியாசிட்டி விண்கலன். இந்தத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் டச்சு பொறியாளர் ஒருவர், 2023 ஆம் ஆண்டு சுமார் நாற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.