உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரின்போது டெல்லி ஸ்மாஷர்ஸ் வீராங்கனைகளை ஒரு போட்டியி்ல விளையாட விடாமல் தடுத்தது தொடர்பாக முன்னணி வீராங்கனை ஜுவாலா கட்டாவிடம் விசாரணை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தவுள்ளது. பெங்களூரில் ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த போட்டியில் விளையாட விடாமல் டெல்லி வீரர்களை ஜுவாலா தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்கா பீட்ஸ் அணிக்கு எதிரான போட்டி இது. இதில், காயமடைந்த வீரர் ஹூ யூன்-க்குப் பதில், ஜான் ஓ ஜோர்ஜென்சனை சேர்க்க அந்த அணி முயன்றது. இதற்கு ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் இந்த மாற்றத்தை ஜுவாலா விரும்பவில்லை. மாற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். மேலும் நமது கோரிக்கை…
-
- 0 replies
- 514 views
-
-
இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் வழித்தடம் தெரியாமல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.திடீரென பனி மூடியதால் சாலையில் நகர முற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. வாகன ஓட்டிகள் என்ன நடக்கிறது என்பதை யூகிப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
Worldtamils Win மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் சுவிஸ் (வீடியோ இணைப்பு) உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது. பொருளாதார வரிசையில் நாடுகளின் வளர்ச்சி குறித்து ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர், பின்லாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து எட்டாவது இடத்திலும், ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) 10வது இடத்திலும் உள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்து பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்கள், தொழில்வளர்ச்சி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் மேலோங்கி காணப்படுவதாக W…
-
- 0 replies
- 513 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருக்கும் Liberal Party நீண்ட காலமாக பாதுகபப்பை தேடிவரும் அகதிகளுக்கும், எங்களின் தூய்மையான விடுதலைப்போராட்டத்திற்கும் வெவ்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். எதிர்கட்சியின் துணைத் தலைவர் Julie Bishop அவர்கள் சிறிலங்காவிற்கு சென்று வந்ததும் அங்கே தமிழர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திவரும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் சிறிலங்காவை பாராட்டினார். ஆனால் எங்கள் மக்களுக்கு சிறிலங்கா அரசு தொடர்ந்தும் கொடுத்து வரும் பெரும் துயரங்களை நாங்கள் யாவரும் அறிவோம். பாதுகாப்பை தேடிவரும் தமிழீழ அகதிகளின் வரவை எதிர்ப்பவர்களின் வாக்கை தம் பக்கம் திருப்புவதற்காகவும். அவுஸ்திரேலிய பாராள…
-
- 0 replies
- 583 views
-
-
பாரிஸ்: கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சிரியாவில் அரசுப்படைகள் 3 முறை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக சிரியா அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் இடங்களில் இருந்து தடய மாதிரிகளை சேகரித்த ஐ.நா. சபை அதிகாரிகள் அவற்றை ஆய்வகங்களில் பரிசோதித்து வருகின்றனர். இந்த நிலையில் சிரியா அரசின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்காவின் ராணுவ தாக்குதலில் பங்கேற்பது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் டேவிட்…
-
- 4 replies
- 670 views
-
-
சீனாவில் ஆறு ஒன்றில் அமோனியக் கழிவுகள் கலந்ததால் பெருந்தொகையான மீன்கள் உயிரிழந்துள்ளன. சீனாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகனப்பெருக்கத்தின் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய கழிவு நீர் அருகில் இருந்த ஆற்றில் கலந்ததால், அங்கிருந்த மீன்கள் இறந்து கிடக்கும் காட்சி அனைவரையும் திகைப்படையச் செய்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள பியுஹே ஆற்றிலேயே மீன்கள் பெருந்தொகையில் உயிரிழந்துள்ளன. இதற்கு அருகில் உள்ள தனியார் இரசாயன தொழிற்சாலையின் அமோனிய கழிவுகள் கலந்தமையே காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆற்றின் மேல்பகுதியில் மீன்கள் இறந்து கிடக்கும் தகவல் அறிந்து விரைந்து வ…
-
- 2 replies
- 580 views
-
-
வைரக்கம்மலை விழுங்கிய கோழி. கொல்ல மனமில்லாமல் 8 வருடங்கள் காத்திருக்க இங்கிலாந்து பெண் முடிவு. இங்கிலாந்தில் ஒரு பெண் கோழி ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் ஆசையாக வளர்த்த கோழி அவரது விலைமதிப்புள்ள வைரத்தோடு ஒன்று தெரியாமல் விழுங்கிவிட்டது. ஆனாலும் கோழியை கொல்ல மனமில்லாமல் அது இயற்கையாக சாகும் வரை காத்திருந்து பின்னர் வைரக்கம்மலை எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். இதே நம்மூரில் என்றால் உடனடியாக கோழியை கொன்று சிக்கன் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டு வைரக்கம்மலையும் கைப்பற்றிவிடுவார்கள். அந்த இங்கிலாந்து பெண்ணின் இரக்க குணத்தை அவர்கள் உறவினர்கள் பெரிதும் பாராட்டினார்கள். இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் Claire Lennon, (38). இவர் வீட்டில் கோழி ஒன்ற…
-
- 0 replies
- 491 views
-
-
தீயினால் பாதிக்கப்பட்ட St. Jacobs Market-ல் உள்ள ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சென்ற வாரம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மார்கெட் பகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. St. Jacobs Market என்ற பகுதியில் சென்ற வாரம் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான கடைகள் பெரும் பாதிப்படைந்தன. பின்னர் பாதிக்கப்பட்ட கடைகள் மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று நேற்று வியாழக்கிழமை ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒண்டோரியோ பிரிமியர் Kathleen Wynne இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 2200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மிகப்பெரிய கட்டிடத்தின் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் மிக வேகமாக மராமத்து பண…
-
- 0 replies
- 278 views
-
-
டொரண்டோவில் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம். டொரண்டோவில் 17 மாத குழந்தை ஒன்று ஏழாவது மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்தும் அதிசயமாக காயங்களுடன் உயிர் பிழைத்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டொரண்டோவின் Thorncliffe Park Dr., near Don Mills Road and Overlea Boulevard,என்ற இடத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கட்டிடடத்தின் ஏழாவது மாடியின் பால்கனியில் இருந்து நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் ஒரு குழந்தை தவறி விழுந்தது. ஆனால் அந்த குழந்தை விழுந்த இடம் அடர்ந்த புல்வெளிப்பகுதியாக இருந்ததால் குழந்தை பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தது. போலீஸ் விசாரணையில் குழந்தை பால்கனியில் இருந்த ஒரு நாற்காலியின் மீது ஏ…
-
- 0 replies
- 474 views
-
-
டமாஸ்கஸ்: சிரியா அருகே மத்திய தரைக் கடல் பகுதியில் இன்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வந்து விழுந்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ஏவுகணை பயிற்சியின்போது இவை ஏவப்பட்டுள்ளன. ஆனால், இது குறித்து இந்த இரு நாடுகளும் எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்தன. ஆனால், இந்த ஏவுகணைகள் வீசப்பட்டதை ரஷ்யா கண்டுபிடித்து வெளியுலகுக்கு சொன்னதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஏவுகணை பயிற்சி நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுவிட்டது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. ஆனால், சிரியாவுக்கு …
-
- 5 replies
- 706 views
-
-
தாலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிய வர்த்தகரை திருமணம் செய்த கொண்ட, 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, பக்திகா மாகாணத்தில் இருந்து அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானில் தனது வாழக்கை குறித்து காபூலிவாலாவின் வங்காள மனைவி என்ற பெயரில் இவர் எழுதிய புத்தகத்தில் அவர் தனது ஆப்கன் கணவர் ஜான்பாஸ் கானுடன் வாழ்ந்த வாழ்க்கையை வர்ணித்துள்ளார். இந்திப் படம் கடந்த 1995 ஆம் ஆண்டு ஆப்கானில் இருந்து தான் தப்பி வந்தது குறித்து சுஷ்மிதா பேனர்ஜி எழுதிய அந்தப் புத்தகம் 2003 ஆம் ஆண்டு இந்தியில் திரைப் படமாக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மிகவு…
-
- 1 reply
- 509 views
-
-
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: சிரியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிப்படையும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்காக ரஷ்யா சென்றுள்ள சீனாவின் துணை நிதி அமைச்சர் ஜூ குயாங்யோ செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபைதான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து சர்வதேச நாடுகள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நிச்சயமாக சர்வதேச பொருளாதாரத்தில் குறிப்பாக எண்ணெய் விலையில் பெரும் எதிர்விளைவுகளே உருவாகும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/09/05/world-china-…
-
- 0 replies
- 391 views
-
-
பனாஜி: கோவா மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்களும் கலாசார அடிப்படையில் ஹிந்துக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்திய ப்ளாக் வெளியிட்டிருக்கும் மனோகர் பார்க்கர் பேட்டியின் முக்கிய அம்சங்கள்: இந்தியா கலாசார ரீதியாக ஹிந்து நாடு. கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களும் கூட கலாசார அடிப்படையில் ஹிந்துக்களே. ஏனெனில் அவர்கள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறையானது பிரேசிலில் இருப்பது போல இல்லை. கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களின் வழிபாட்டு முறையும் கூட ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை ஒத்ததாகவே இருக்கிறது. நான் ஒரு ஹிந்து என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த தொடர்பு இல்லை. சில ஊடகங்கள் …
-
- 0 replies
- 451 views
-
-
டெல்லி: இருவேறு துருவங்களாக எதிரிகளாக செயல்பட்டாலும் கட்சி வேறுபாடின்றி திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அதிமுக எம்.பி. தம்பித்துரையும் நாள்தோறும் தமிழக பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இன்றும் இருவரும் கச்சத்தீவு மற்றும் காமன்வெல்த் மாநாடு விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் பிரச்சனையை எழுப்பினர். லோக்சபாவில் பேசிய திமுக எம்.பி. டி..ஆர். பாலு, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். போருக்கு பின் இலங்கையில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். தமிழர்கள் காணாமல் போனதை பல்வேறு மனித உரிமை அமைப்பு…
-
- 0 replies
- 526 views
-
-
சிரியா சொந்த மக்கள் மீதே ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தி 1300க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த உள்ளது. இதற்காக அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யா தனது அதிவிரைவு ஏவுகணை போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. இந்தப் போர்க்கப்பல் அந்தப் பிராந்தியத்தில் ஏற்கனவே உள்ள ரஷ்ய கடற்படை பிரிவில் சேர்ந்து கொள்ளும் என தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சிரியா பகுதியில் போர் மேகம் சூழ்ந்துவிட்டதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். http://www.seithy.com/breifNew…
-
- 8 replies
- 940 views
-
-
-ஏ.கே.கான் அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்தேன்.கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.ஹிட்லர் கொல்லப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரம். அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் சூடு பி…
-
- 2 replies
- 594 views
-
-
பாட்னா: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியக் குறியே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று அந்த அமைப்பின் நிறுவனரான யாசின் பத்கல் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் பத்கல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்திய -நேபாள எல்லையில் உள்ள கிராமத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட பத்கல் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பத்கல் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்... இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய இலக்கே மோடிதான்.நரேந்திர மோடியை நாங்கள் நெருங்கி விட்டால் பெருமளவில் சர்வதேச நாடுகளிலிருந்து எங்களுக்குப் பணம் குவிந்து விடும்.மோடிக்கு அடுத்து நாங்கள் குறி வைத்திருப்பது பாஜக மூத்த தலைவ…
-
- 1 reply
- 372 views
-
-
நோக்கியா நிறுவனத்தின் 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்த தொலைபேசி வர்த்தகத்தை அமெரிக்கா தொழில்நுட்ப பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் மொபைல் தொலைபேசிகள் தயாரிப்பில் ஒரு காலத்தில் நோக்கியாவே முன்னணியில் இருந்தது. ஆனால் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள் வந்த பிறகு, சந்தையில் நோக்கியாவின் பங்கு வேகமாக குறைந்தது. விழும் நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாஃப்ட் எனினும் நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கும் திட்டத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஸ்மார்ட் ஃபோன்: பின் தங்கிய மைக்ரோசாஃப்ட் ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் முன்னணியிலுள்ள ஆப்பிள் மற்றும் சாம்சங் தொலைபேசிகள். ஆப்பிள் மற்றும் கூகள் நிறுவனங்களின் ஆண்ட்ரா…
-
- 1 reply
- 526 views
-
-
நியூயார்க்: கடந்த 1984ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற முயன்றதாகக் கூறி அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி காப்பாற்ற முயல்வதாக சீக்கியர்களுக்கான நீதி உரிமை பெறும் அமைப்பு (எஸ்.எஃப்.ஜே) மற்றும் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த 2…
-
- 1 reply
- 1.7k views
-
-
மும்பை: மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் கோவிந்த் ராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பதவிக்கு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார். ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரிசர்வ் வங்கியின் இளம் கவர்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித…
-
- 0 replies
- 467 views
-
-
டெல்லி: 2ஜி ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல் எல்லாம் ஜுஜுபியாக தெரிகிறது.... தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பரபரப்பான ஊழல் விவகாரம். அதாவது ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் ஊழல்தான் இந்தப் புதிய பரபரப்பு. இந்தியக் கடல் பகுதியிலிருந்து ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் சுரண்டப்பட்டுள்ளதாக இந்தப் பரபரப்பு ஊழல் கூறுகிறது. நாட்டின் இயற்கை வளங்கள் எந்த அளவுக்கு மிக மோசமான முறையிலும், மகா மோசடியாகவும் சுரண்ட்டப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த ஊழல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அமைந்துள்ளது. மேலும் அணு சக்தி எரிபொருளான தோரியம், தவறானவர்களின் கைகளுக்குப் போகும் மகா பயங்கரமான ஆபத்தும் இதில் மறைந்திருப்பது பெரும் கவலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. வழக்கம…
-
- 0 replies
- 672 views
-
-
சிரியாவுக்கு எதிராக ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கை கூடாது: ரஷ்ய அதிபர் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 செப்டம்பர், 2013 - 09:43 ஜிஎம்டி Facebook Twitter Google+ பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக ரஷ்ய அதிபர் புடின் சிரியாவுக்கு எதிராக மேற்குலகம் ஒருதலைப்பட்சமாக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சிரியாவின் அரசு தனது நாட்டு மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் அதன் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், அப்போதும் ரஷ்யா நிச்சயம் எதிர்க்கும் என்று தான் கூறவில்லை என புடின் கூறினார். உலகின் மு…
-
- 1 reply
- 408 views
-
-
குண்டும் குழியுமாக இருக்கு சாலைகள் மராமத்து செய்யப்படாமல் இருக்கும் நிலையை வெளிப்படுத்த, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு நகரவாசிகள், அந்த குண்டு குழிகளுக்கு மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பெயர்களைச் சூட்டியுள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது. குண்டு குழிகள் நிறைந்த சாலைகள் --புதுமையான எதிர்ப்பு ( ஆவணப்படம் சாலைகள் பொதுவாக மோசமான நிலையில் உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இந்த புதுமையான நடவடிக்கையை சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரவாசிகள் எடுத்துள்ளனர். ராய்ப்பூரின் சாலைகளில் உள்ள குண்டுகுழிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதில் பயணிக்கும் காரோட்டிகள் தாங்கள் இந்த குழிகளில் தவறுதலாகக் காரை செலுத்தினால், தாங்கள் காயமடைவதாகக் கூறுகிறார்…
-
- 1 reply
- 422 views
-
-
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுகீட்டு ஊழல் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மறுத்துவிட்டதாக அவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரி டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ. ராசா, 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் 2011 பிப்ரவரி 17-ந் தேதி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஐ துணை கண்காணிப்பாளரான ராஜேஸ் சஹால் இன்று சாட்சியமளித்தார். அப்போது 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று ஆ. ராசாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவ…
-
- 1 reply
- 241 views
-
-
மும்பை: இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டன் டோகோ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டனாக இருப்பவர் மும்பையைச் சேர்ந்த சுனில் ஜேம்ஸ் (38). அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே லாகோஸ் என்ற இடத்தில் சென்ச்சுரியன் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். கடற்படை அதிகாரிகள் போன்று உடை அணிந்து 30 முதல் 35 கொள்ளையர்களை கப்பலுக்குள் வந்துள்ளனர். கடற்கொள்ளையர்கள் கேப்டன் சுனில் மற்றும் மாலுமிகளை ஒரு நாள் சிறைப்பிடித்து வைத்து அதன் பிறகு அவர்களை விடுவித்துள்ளனர்.ஜூலை 31ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப…
-
- 1 reply
- 399 views
-