Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுச்சேரி: புதுச்சேரியில் கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்- பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வை…

  2. 30 மாடிக்கட்டிடம் கட்ட எத்தனை நாள் ஆகும் என உங்களிடம் கேட்டால் குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று தானே சொல்வீர்கள். இல்லையில்லை, பதினைந்தே நாளில் கட்டி முடித்து விடலாம் எனச் சொன்னால் நம்புவீர்களா..? அதெப்படிச் சாத்தியம் என்று தானே கூறுவீர்கள். ஆனால், அதையும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் சீனக் கட்டிடத் தொழிலாளர்கள். வழக்கமாக இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டுவதென்றால் அஸ்திவாரம் தோண்டவே பல மாதங்கள் ஆகும். ஆனால், பதினைந்தே நாளில் முழுக் கட்டிடத்தையும் கட்டி நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துப் போயிருக்கிறார்கள் சீனர்கள். ஹூனான் புரோவின்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தான் இந்த 30 மாடிக் கட்டிடத்தை 15 நாளில் கட்டிக் கொடுத்துள்ளாது. மொத்தம் 200 தொழிலாளர்கள் இந்தக் கட்டிடப் பணியில…

  3. ஜம்மு காஷ்மீர் மாநில அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங், பணம் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது ஆட்சியைக் கவிழ்க்க கொடுக்கப்படவில்லை. மாறாக சமூக நலத்திற்காக கொடுக்கப்பட்ட பணம் என்றும் அவர் விளக்கியுள்ளார். ராணுவத்தின் ரகசிய நிதியிலிருந்து இது கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தவறான நோக்கத்திற்கு இது பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சமூக நலத் திட்டங்களுக்காக மட்டுமே இந்த நிதியிலிருந்து பணம் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் டெல்லி கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டதால் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தப் பிரச்சினை கிளப்ப்பட்டுள்ள…

  4. டெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் அதிர்வுகள் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. பலுசிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மாலை 5.05 மணிக்கு டெல்லியில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இந்த அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் பலுசிஸ்தானில் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. மிகப் பெரிய நிலநடுக்கமாக இருப்பதால் பெருமளவில் சேதம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலத்துக்கடியில் 22 கி.மீ. ஆழத்தில் இந்தநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது…

  5. மும்பை: மும்பையில் 40 வயது விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஒன்பது பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்த 40 வயது விதவைப் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். மும்பையில், காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார் அப்பெண். அப்போது, அப்பெண்ணிற்கு முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து, அப்பெண் தன் இரு குழந்தைகளுடன் தினமும் இரவில் அவரது டெம்போவிலேயே உறங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல டெம்போவில் குழந்தைகளுடன் தூங்கிக்கொ…

  6. சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் திசினோ மாநிலத்தில் பெண்கள் முகத்தை மூடி புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கென அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என 65 வீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு முஸ்லீம் அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்பு சபையும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றத்தை புரிவோரும் புர்கா அணிந்து சென்று குற்றங்களை புரியலாம் என்றும் பொது இடங்களில் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்றும் அம்மாநில மக்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பிரான்ஸ் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுவிட்சர்லாந்தின் 26 மாநிலங்களில் ஒன்றான திசினோ மாநிலம் புர்கா அணிவதற்கான தடை சட்டத்தை கொண்டுவர உள்ளது…

  7. சுவிட்சர்லாந்தில் கட்டாய இராணுவ சேவையை இரத்து செய்ய வேண்டுமா என நேற்று நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இராணுவ சேவையை இரத்து செய்வதற்கு எதிராக 73 வீத வாக்குகளும் ஆதரவாக 27 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 26 மாநிலங்களிலும் நேற்று இத்தேர்தல் நடத்தப்பட்டது. சுவிட்சர்லாந்து குடிமக்களில் 18வயதிற்கும் 32 வயதிற்கும் இடைப்பட்ட ஒவ்வொருவரும் கட்டாய இராணுவ பயிற்சியை எடுக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை இரத்து செய்ய வேண்டும் என்றும் கட்டாய இராணுவ சேவை நாடு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதற்கான தோற்றப்பாட்டை கொண்டிருப்பதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டி வந்தன. இராணுவ பயிற்சி பெற்றவர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் இச்சட்டம…

  8. துப்பாக்கி வன்முறை நமக்கு வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்தவாரம் வாசிங்டன் கடற்படைத் தலைமைத் தளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=93551&category=WorldNews&language=tamil

  9. பெர்லின்: ஜெர்மனியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று, ஏஞ்சலா மெர்கலின் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். ஜெர்மனியில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சிக்கும், எல்.பி.டி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஓட்டுப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்துச் சென்றனர். பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதில், மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி 42 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தது உறுதியானது. மெர்கலினை எதிர்த்து போட்டியிட்ட எல்.பி.டி. கட்சிக்கு 26 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி மெர்க…

  10. திருச்சி: திருச்சியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பாஜக பேனர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் போட்டோ மட்டும் கிழிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பாஜக மாநாட்டில் பங்கேற்க பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை ஆன்லைனில் மட்டும் 30,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர விண்ணப்பங்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சியில் மோடிக்கு எதிராக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போலீசாரைக் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே திருச்சியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனர்களில் மோடியின் …

  11. கென்யாவின் தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் பலரை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அங்காடி வளாகத்தில், முற்றுகையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கென்யாவின் பாதுகாப்பு படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். கடுமையான துப்பாகிச் சத்தம் கேட்டுவருவதாக சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். வர்த்தக வளாகத்தில் இருந்து புகை கிளம்புகிறது கென்யாவின் விமான நிலையம் ஒன்றில் பயணிகள் சிலரை விசாரணைக்காக தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.கட்டிடத்திலிருந்து புகை கிளம்புவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன. கென்யத் துருப்பினர் டஜன் கணக்கில் இந்த வர்த்தக வளாகத்தில் நுழைந்திருந்தனர். பணயக் கைதிகளைக் கா…

  12. ஆர்பிஐ-யின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்களைத் தொடர்ந்து , வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ), கடந்த 8 வர்த்தக தொடர்களில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை கொள்முதல் செய்துள்ளதாக டச் வங்கி தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக நிதி நெருக்கடியின் காரணமாக, நாட்டில் எஃப்ஐஐ அவுட்ஃபுளோஸ் தீவிரமாக இருந்து வந்த நிலையில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காணப்பட்ட வெளியேற்றங்களில் 25 சதவிகிதத்தை எஃப்ஐஐகள் ஈடுசெய்துள்ளனர் என முக்கிய உலக நிதி சேவைகள் மூலமாக தெரியவந்துள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் இடையே இந்தியாவில் காணப்பட்ட 4 பில்லியன் டாலர் எஃப்ஐஐ அவுட்ஃபுளோ, ஒரு சரணடையும் அச்சநிலைக்கு வழிவகுத்தது என டச் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. "ஆர்…

  13. லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற அமெரிக்க மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் துலியாகன்ஜ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவர் தனியாக பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, ஆட்டோ டிரைவர் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உதவி கேட்டு கூச்சல் போட்டுள்ளார் அப்பெண். ஆனால், அவரது சத்தம் வெளியே கேட்காத வண்ணம் ரேடியோவின் சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளனர் குற்றவாளிகள். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அப்பெண்ணை அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த காமுகர்கலிடம் இருந்து தப்பிக்க எண்ணிய அம்மாணவி, குவைசர்பாக் என்னும் பகுதிக்கு …

  14. டெல்லி: நாட்டில் மதவாதத்தைத் தூண்டி விட்டு குளிர் காயும் விஷ சக்திகளை மாநில அரசுகள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டெல்லியில் இன்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்... மதக் கலவரங்களை ஒடுக்குவதில்தான் மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். மத வாத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அவர்கள் எந்த அரசியல் இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் ஒடுக்க வேண்டும். முஸாபர் நகரில் நடந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் …

  15. கென்னியாவின் தலைநகர் நெய்ரோபியிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடியினுள் புகுந்த ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. நெய்ரோபியிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த ஆயுததாரிகள் கொள்ளையடிக்க முற்பட்டதாகவும், அதன் பின்னர் தீவிரவாத தாக்குதலாக அதனை மாற்றிக்கொண்டதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தற்சமயம் பல்பொருள் அங்காடியைச் சுற்றி பாதுகாப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/83167------20-.html

  16. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதலில் எண்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் கிறிஸ்தவ சமூகத்தார் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். கிறிஸ்தவர்கள் கூடுதல் பாதுகாப்பு கோருகின்றனர் கிறிஸ்தவர்களுக்கு அரசாங்கம் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் குரலெழுப்புகின்றனர். பாகிஸ்தானின் அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் குண்டுத் தாக்குதலைக் கண்டித்திருந்தனர்.தலைநகர் இஸ்லாமாபாத்தில் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் மறியல் போராட்டம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் கூடுதல் பாதுகாப்பு கோருகின்றனர் அந்நாட்டின் …

  17. கென்யாவின் தலைநகர் நைரோபியில் பொதுமக்கள் பலரை இஸ்லாமியவாத ஆயுததாரிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அங்காடி வளாகத்தில், மறுபடியும் மறுபடியும் துப்பாக்கிகள் வெடித்தபடி உள்ளன, பல தடவை பெரிய வெடிச் சத்தங்களும் கேட்டுள்ளன. நிறைய பேருடைய கதி பற்றி இன்னும் விவரம் இல்லை. இந்த கடை வளாகத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், வேறு 63 பேர் இன்னும் கணக்கில் வராமல் உள்ளனர் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும், அம்முயற்சிகளின்போது பணயக் கைதிகளின் உயிகளைப் பாதுகாக்க மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் கென்யாவின் இராணுவம் முன்னதாகக் கூறியிருந்தது. சொமாலியா…

  18. ஈரானில் சுமார் 2000கி.மீ தூரம் சென்றுத் தாக்கும் 30 ஏவுகணைகளைன் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது ஈரானை தாக்க நினைக்கும் பிற நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி போல் இருந்தது.ஈரான் நாட்டில் அணுஆயுதங்கள் அதிகளவில் சேமிக்கப்படுவதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அந்நாட்டின் மீது குற்றம் சாட்டி வருகின்றன. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது சில பொருளாதாரத் தடைகளை அமல் படுத்தியது. இஸ்ரேலும் தன் பங்கிற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது.ஆனால், தன் மீது குறை கூறும் அண்டை நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது ஈரான். இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே …

  19. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விடும் முதல் ஆய்வுக் கோள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், தற்போது இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தமிழோசையிடம் தெரிவித்தார். வானிலை சீராக இருந்தால் அக்டோபர் 28 ஆம் தேதி இந்தக் கோ…

  20. டுனிஸ்: வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும், உடல் ரீதியாக உற்சாகம் ஏற்படுத்தவும் துனிஷியாவிலிருந்து பெருமளவில் பெண்கள் சிரியாவுக்கு போவதால் துனிஷிய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நாட்டின் மகளிர் நலத்துறை வகுத்துள்ளதாம். செக்ஸ் ஜிஹாத் என்று இது வர்ணிக்கப்படுகிறது. போராளிகளுக்கு இன்பம் இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோல துனிஷிய பெண்களை சிரியாவுக்குள் அனுப்பி அங்குள்ள போராளிகளுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்த முயல்வோர் கட…

  21. பிரான்சில் தனது 3 வயது மகனுக்கு அணிவித்த டி சர்ட்டால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அணிபவித்து வருகிறார் தாய் ஒருவர். பெட்ரோமாஸ் லைட்டே தான் வேனுமா..?, நான் பேஸ்புக்கில் இல்லை' என வித்தியாசமான வாசகங்கள் அமையப் பெற்ற டி சர்ட்களை அணிவது ஆண், பெண் என இரு பாலருக்குமே விருப்பமான ஒன்று தான். அந்தவகையில், பிரான்சு நாட்டில் தனது 3 வயது மகனுக்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என எழுதப்பட்ட டி சர்ட்டை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிய காரணத்திற்காக அவனது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் விநோதமாகத் தானே இருக்கிறது. நான் ஒரு வெடிகுண்டு.... பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் பவுச்ரா என்ற பெண்மணி தனது 3 வயது மகனான ஜிகாத்ஸ்க்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என்ற வார்த்தையும், செப்டம்பர் 11 என்ற தேத…

  22. நடைபெற்ற தேர்தலின் மூலம், தமிழர்களுக்கு அரசியலில் முழு அதிகாரம் கிடைக்கும் என இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். மேலும், இந்தத் தேர்தல் அகதிகளாக உள்ள தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசியல் சாசனப்படி, ராஜீவ்-­ ஜெயவர்தன ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் வடக்கு பகுதியில், தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன்மூலம், இலங்கையில் தமிழர்கள் 37 பேருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும். இதன்மூலம் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட மு…

  23. சென்னை: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை-தமிழக மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதையும், கைது செய்வதையும் தடுக்கும் வகையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காக நான் தங்களுக்கு கடிதம் எழுகிறேன். கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்களை தாக்குவது மற்றும் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பாக்ஜலசந்தி தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியாகும். ஆனால் அதை தடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்து வருக…

  24. பெஷாவர்: பாகிஸ்தானில் இரு இடங்களில் தேவாலயங்களை தற்கொலைப்படையினர் தாக்கியத்தில் 45க்கும் அதிகமானோர் பரிதாபமாகப் பலியானார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமையாகையால், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு பிரார்த்தனை செய்ய செல்வது வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தான் பெஷாவர் நகர் கீசா கவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று 600 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், பிரார்த்தனை முடிந்து மக்கள் தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது அவர்களை குறிவைத்து இரு இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இக்கொடூரத் தாக்குதலில் சிக்கி சுமார் 45 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கு உடனடிய…

  25. இந்திய இலங்கை மீனவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து டிசம்பரின் சென்னையில் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக முதலவர் ஜெ ஜெயலலிதா இருநாட்டு மீனவர்களும் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அவர்களிடையே எதிர்வரும் டிசம்பரில் சென்னையில்பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவவேண்டும் என அவர் கோரியிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதமொன்றில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 36 தடவை இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளது என்றும், 254 மீனவர்களை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதும் 97 தமிழக மீனவர்கள் இலங்கை ஜெயிலில் பல மாதங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.