உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அமேத்தியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். அவருடன் அவரது சகோதரி பிரியங்காவும் சென்றிருந்தார். விழாவை முடித்துக் கொண்டு ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பிரியங்கா ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் அமேத்தியில் இருந்து டெல்லி கிளம்பினர். அப்போது மோசமான வானிலை காரணமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்ல வேளையாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=88489&category=IndianNews&language=tamil
-
- 5 replies
- 571 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் இன்று கடும் வெப்பம் நிலவியது. இத்தாலியில் பெரும்பாலான பகுதிகளில் 40பாகைக்கு மேல் வெப்பம் காணப்பட்டது. சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, லண்டன் போன்ற இடங்களில் சராசரியாக 30பாகைக்கு மேல் வெப்ப நிலை காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஓரங்களிலேயே பகல் பொழுதை கழித்து வருகின்றனர். இதேவேளை ஐரோப்பாவில் சிறந்த கடற்கரையாக விளங்கும் இத்தாலி ரிமினி கடற்கரை பகுதிக்கு தினசரி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் சென்று வருகின்றனர். நீச்சல் அடிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான கடற்கரையாக இத்தாலி ரிமினி கடற்கரை கருதப்படுகிறது. - See more at: http://www.thinakkathir.com/?p=51458#sthash.EWIcVeoz.dpuf
-
- 0 replies
- 405 views
-
-
பறக்கும் தட்டில் 'பாயா'...!! பிரித்தானியாவிலுள்ள லண்டன் மாநகரில் "யோ சுசி (Yo Sushi)" என்ற ஜப்பானிய உணவகம், தனது வாடிக்கையாளர்களுக்கு தொலை தூரத்திலிருந்து 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் பறக்கும் தட்டில் (இத்தட்டிற்குப் பெயர் "ஐ ட்ரே" ) சுவையான பர்கர் மற்றும் பாயா உணவு வகைகளை பரிமாறுகின்றனர். இத்தட்டு மணிக்கு 25 கி.மீ வேகத்தில் சுற்றிப்பறந்து 50 மீட்டர் எல்லைவரையுள்ளவர்களை கவர்கிறது. http://youtu.be/y9RKXO1rr7g உணவு பரிமாறும் வேலையாட்கள், ஐபாட் எனப்படும் மொபைல் கருவி மூலம் பறக்கும் தட்டின் அசைவுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துகின்றனர். சமையல் அறையியுள்ள சமையற்காரர்கள், பறக்கும் தட்டில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவியின் மூலம் உ…
-
- 5 replies
- 934 views
-
-
எனது தலைமையிலான மேற்கு வங்காள மாநில அரசை கலைக்க மத்திய அரசு சதி செய்து வருகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மாநில பட்ஜெட்டை நிறைவேற்ற நேற்று மேற்கு வங்காள மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- எனது தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் டார்ஜீலிங் மலைப் பகுதியிலும், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த ஜங்கிள்மகால் பகுதியிலும் அமைதி நிலவி வருகிறது. இந்த அமைதியை சீர்குலைக்கவும் மாநில அரசின் நடவடிக்கைகளில் தடையை ஏற்படுத்தவும் மத்திய அரசு தனது ஏஜென்சிகளின் மூலம் முயற்சித்து வருகிறது. கடந்த கால ஆட்சியின்போது 2003ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் கலவரங்களில் 40 பேர் பலியாகினர். 2008 உள்ளாட்சி தேர்தலில் 35 பேர் பல…
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா – ஆஸி கூட்டு நடவடிக்கை!? இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் அவுஸ்திரேலியாவின் பையின் கெப் என்ற இடத்தில் இருந்தே ரகசியமான முறையில் ஒட்டு கேட்கப்படுவதாகவும் அந்த இடம் அமெரிக்காவின் ரகசியமான ஒரு மையம் எனவும் தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோடன், இந்த ரகசியம் மையம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். எக்ஸ் கியாதோர் என்ற ரகசிய நடவடிக்கையின் கீழ், உலகில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் மேற்படி ரகசிய மையத்தில் இருந்து டெப் செய்யப்படுகிறது என ஸ்னோடன் கூறியுள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பினால் இந்த ரகசிய ம…
-
- 2 replies
- 675 views
-
-
நாட்டின் பிரதமர் பதவிக்கு மோடி வருவதை எப்படியும் தடுப்பேன் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். நாட்டின் பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியும் நரேந்திர மோடியும் தகுதியானவர்கள் அல்ல என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விமர்சித்திருந்தார். இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்திக்கு பிரதமர் வாய்ப்பை இந்திய மக்கள் கொடுக்க வேண்டும். ராகுல் காந்திக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை. ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவர் சிறந்த பிரதமர் என்பதை நிருபித்து காட்டுவார். பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி மிகவும் பொருத…
-
- 1 reply
- 439 views
-
-
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு உடை அணிய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. லக்னௌவில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் ஜீன்ஸ், டிசர்ட் அணியவும், இன்டர்நெட் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கவர்ச்சியான உடை அணிந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள 6 விடுதிகளிலும் இந்த விதிமுறை கட்டாயம் பின்பற்றப்பட்டு வந்தது. மேலும் இந்த விடுதி மாணவிகள் சினிமாவிற்கும், ரெஸ்டாரென்டிற்கும் போகக்கூடாது. இன்டர்நெட் பார்க்கவும் தடை இருந்தது. தங்களுடைய விடுதி டைனிங்ஹாலில் மட்டுமே பெண் மாணவியர்கள் உணவு உட்கொள்ள வேண்டும்.தனியாக செல்போன் வைத்து பேசவும், தடை இருந்தது. இந்த நில…
-
- 0 replies
- 439 views
-
-
அமெரிக்காவில் இருந்து தப்பிய ஸ்நோடனை ஒப்படைத்தால் அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்க மாட்டோம் என்று ரஷ்யாவிடம் அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அமெரிக்கா எப்படியெல்லாம் உளவு பார்த்தது என்பதை அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா அவர் மீது தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய ஸ்னோடென் ஹாங்காங்கில் தஞ்சமடைந்தார். பின்னர் ரஷியாவின் விமான நிலையத்தில் கடந்த ஒரு மாத காலமாக தங்கியிருக்கும் அவர் ரஷியாவிடம் அடைக்கலம் கோரினார். ஆனால் அந்நாடோ, இனியும் அமெரிக்கா பற்றிய ரகசியங்களை வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. இருப்பினும் ஸ்னோடெனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்…
-
- 0 replies
- 420 views
-
-
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக நடிகர் சாய்குமார் தெரிவித்துள்ளார். தமிழில் அந்தப்புரம் படம் மூலம் அறிமுகமானவர் சாய்குமார். வேட்டிய மடிச்சுக்கட்டு, திருவண்ணாமலை, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் பாரதீய ஜனதா கட்சியில் உள்ளார். இவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூரில் நிருபர்களிடம் கூறுகையில், "இன்றைக்கு அரசியல் என்பது வயதானவர்களும், பணக்காரர்களும் இருக்கும் இடமாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்மல்லா…
-
- 0 replies
- 325 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=24553
-
- 30 replies
- 1.2k views
-
-
அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதை கையகப்படுத்தி நிர்வகிக்க புதுவை அரசு ஆலோசித்து வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் அரவிந்தர் ஆசிரமத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் அரசே அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அரவிந்தர் ஆசிரமத்தை நிர்வாகிக்க அரசு அதிகாரிகளை நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/07/26/tamilnadu-puducherry-govt-will-take-over-aurobindo-ashram-179920.html
-
- 0 replies
- 394 views
-
-
டெல்லி: கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் 50 பேர் குதிரைகளில் கடந்த 16ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சுமார் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் கடந்த 17ம் தேதி காலை வரை தங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வந்ததைப் பார்த்த நம் வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சீன வீரர்களோ இது எங்கள் பகுதி நீங்கள் ஆக்கிரமித்த எங்கள் பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்று இந்திய வீரர்களிடம் தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைத்துள்ளனர். ஒரு வழியாக 2 நாட்கள் சண்டைக்குப் பிறகு கடந்த 18ம் தேதி அவர்கள் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த சண்…
-
- 7 replies
- 654 views
-
-
டெல்லி: 1 ரூபாய் செலவிலேயே ஒருவரால் வயிறார சாப்பிட முடியும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சு மக்களின் கோப தீயினை தூண்டிவிட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்த மத்திய திட்டக்குழு, கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ.27.20க்கு மேலும், நகரங்களில் ரூ.33.33க்கு மேலும் வருமானம் ஈட்டுபவர்கள் ஏழைகளாகக் கருதப்பட மாட்டார்கள் எனக் கூறியது. மத்திய திட்டக்குழுவின் இந்த அறிவிப்புக்கு பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில், திட்டக்குழுவ…
-
- 0 replies
- 575 views
-
-
வத்திக்கான் தூதரை வெளியேற்ற ஆர்ப்பாட்டம் மலேசியாவிற்கான வத்திக்கானின் முதல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவரை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பல முஸ்லீம் ஆர்வலர்கள் மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர். மலேசியாவிற்கான முதல் வத்திக்கான் தூதரான பேராயர் ஜோசப் மரினோ, 'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீமல்லாதவர்களும் பயன்படுத்தலாம் என்ற வாதத்துக்கு ஆதரவு தந்ததற்காக நாட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்படும் பைபிள்களிலும் மற்ற இலக்கியப் படைப்புகளிலும் , 'கடவுள்' என்ற பதத்தை , 'அல்லா' என்று மொழி பெயர்க்க உள்ள உரிமை குறித்து ஒரு சட்டரீதியான போராட்டம் நடந்துவருகிறது. அது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த முஸ்லி…
-
- 0 replies
- 359 views
-
-
அமெரிக்காவின் உளவு முகத்தை உலகம் முழுவதும் அம்பலப்படுத்திய பெரும் பரபரப்பூட்டிய விக்கீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். பிறப்பால் ஆஸ்திரேலியரான இவர், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் செனட் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கியுள்ளார். இத்தேர்தலில் 2 இந்திய வம்சவாளியினருக்கும் அவர் தேர்தலில் சீட் கொடுத்துள்ளார். மொத்தம் 7 வேட்பாளர்களை அசாஞ்சே இதுவரை அறிவித்துள்ளார். அதில் 2 பேர் இந்திய வம்சவாளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.லண்டனிலிருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்தார் அசாஞ்சே.மேலும் விக்டோரியா தொகுதியிலிருந்து தானே போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.மலேசியாவில் பிறந்தவரான பினோய் கம்ப்மார்க் விக்டோரியா மேல் சபைக்குப்…
-
- 2 replies
- 318 views
-
-
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தமது பதவிக் காலத்தில் சர்ச்சைக்குரிய பாரபட்சமான தீர்ப்புகளை வழங்கியிருப்பதை மாற்றி தற்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அல்டமாஸ் கபீர் அண்மையில் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சதாசிவம் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் தொடர்ந்தும் நீதித்துறை நேர்மை பற்றி விரிவாக பேசி வரும் நிலையில் அல்டமாஸ் கபீர் தமது பதவி காலத்தில் பாரபட்சமாக நடந்து கொண்ட வழக்குகளில் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொழிலதிபர்களுக்கு ஆதரவு ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளை உச்சநீ…
-
- 0 replies
- 385 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு (வயது 69) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்…
-
- 0 replies
- 171 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு (வயது 69) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்…
-
- 0 replies
- 223 views
-
-
ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நகரில் நேற்று நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். அதுபோன்று யாத்ரீகர்கள் வந்த ஒரு ரயில்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. 8 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 5 ரயில்வே பணியாளர்களும், 218 பயணிகளும் இருந்துள்ளனர் . ரயில் வளைவு ஒன்றில் அதிவேகத்தில் திரும்பும்போதுதான் தடம்புரண்டு பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அந்த வளைவில் அதிகபட்ச…
-
- 0 replies
- 415 views
-
-
வினவின் பக்கம் சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி ! ஆன்மீக ‘மணம்’ பரப்பும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையேயான சண்டை சமீபத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. சாய்பாபாவின் உறவினரும் சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ராஜுவுக்கும் இன்னொரு உறவினரும் அந்த அறக்கட்டளையில் தனது தனது செல்வாக்கு இருக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கணபதி ராஜூ என்பவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது. கணபதி ராஜு, ரத்னாகரின் சட்ட விரோத செயல்களைப் பற்றி பிரதமர், ஜனாதிபதி முதல் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதனால் ரத்னாகர் அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார். பிறகு rajuug1958@yahoo.com என்ற மின்னஞ்சலிலிருந்து அற…
-
- 4 replies
- 970 views
-
-
உலகிலேயே சிறந்த கிரிக்கெட் அணி உள்ள நாட்டுக்கு சென்று வந்துள்ளேன் என்று அமெரிக்கா சென்றதும் டெலாவேர் கிரிக்கெட் கிளப்பில் கூறுவேன் என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று மும்பைக்கு வந்தார். மும்பை பங்குச் சந்தைக்கு சென்ற அவர் அங்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், 1972ம் ஆண்டில் எனது 29வது வயதில் அமெரிக்க செனட்டுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஒரு கடிதம் வந்தது. அதை கண்டுகொள்ளாமல் விட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். என் பெயர் பிடென், நான் மும்பையில் இருந்து எழுதுகிறேன். நாம் உறவினர்கள் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. எங்களுடைய வம்சத்தினர் 1700களில் கிழக்கு…
-
- 0 replies
- 565 views
-
-
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா தரக் கூடாது என்று கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட மனுவில் தொல்.திருமாவளவன் கையெழுத்திட்டுள்ளார். குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன. மேலும் இந்திய எம்.பி.க்கள் 65 பேர் கையெழுத்திட்ட கடிதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் கையெழுத்து போட்டுள்ளார். இது குறித்து கூறிய திருமாவளவன், ’’குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்…
-
- 1 reply
- 531 views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்ல விசா அளிக்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு அமெரிக்கக் குடியரசு தலைவருக்குக் கடிதம் எழுதியதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அந்தக் கையெழுத்தினை தாங்கள் போடவில்லை என்றும், இந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டு தங்களிடம் யாரும் கையெழுத்து பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தி.மு. கழக நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது தாங்கள் அவ்வாறு கையெழுத்திடவில்லை என்று மறுத்துள்ளார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச…
-
- 0 replies
- 306 views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த 22ம் தேதி லண்டனில் உள்ள புனித மேரி ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இங்கிலாந்து அரச வம்சத்தின் புதிய வாரிசை வரவேற்று நாடெங்கிலும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் இங்கிலாந்து அரண்மனை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்டி இளவரசன் பிறந்த 22ம் தேதி இங்கிலாந்து நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் அரச முத்திரை பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை அன்பளிப்பாக வழங்குவதாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அறிவித்தது. இதற்காக 2013 வெள்ளி நாணயங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்புக்கு சுமார் ரூ 2 ஆயிரத்து 500 பெறுமானமுள்ள இந்த நாணயங்களை பெற விரும்புவோர் த…
-
- 11 replies
- 901 views
-
-
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இனி F.I.R கேட்க கூடாது! இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு… சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும்மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…. முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்… தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்…. அது அனை…
-
- 2 replies
- 515 views
-