உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
பாகிஸ்தான் சிறையில் இருந்த சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள். பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 662 இந்தியர்கள் அடைபட்டுள்ளதாக 2011-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ப்ரீனித் கவுர் தெரிவித்தார். இவர்களில் 369 பேர் மீனவர்கள் எனவும், 219 பேர் பொதுமக்கள் எனவும் அவர் கூறினார். மீதமுள்ள 74 பேர் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 54 பேர் 1971-ஆம் ஆண்டு நடந்த போரில் பிடிபட்டவர்கள் எனவும் அமைச்சர் அப்போது தெரிவித்தார். இதேபோல், வெளிநாட்டுச் சிறைகளில் 6569 இந்தியர்கள் அடைபட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் 25-ம் தேதி இந்திய வெளியுறவு இணையமைச்சர் இ. அகமது மாநிலங்களவையில் …
-
- 1 reply
- 368 views
-
-
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு அடி உயரத்திற்கு பனிக் கட்டிகள் உருவாகியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டென்வர், கொலின்ஸ் உள்ளிட்ட சில பகுதிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராக்கி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கொலராடோவில் பனிப்பொழிவு ஏற்படுவது வாடிக்கைதான் என்றாலும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு தற்போது ஏற்பட்டுள்ளது. http://puthiyathalaimurai.tv/heavy-snowfall-in-colarado
-
- 0 replies
- 319 views
-
-
ஜூன் மாதம் நடைபெறும் ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவது தொடர்பான ஆலோசனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இத்தலிப் பிரதமர் என்ரிகோ லெட்டா தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய கவுன்சில் மாநாடு தொடர்பாக இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இறுதியாக பெல்ஜியம் சென்றடைந்தார். அங்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோஸோவைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெட்டா, வேலைவாய்ப்பின்மைப் பிரச்சனை ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருவதாகக் கூறினார். ஜூன்மாதம் நடைபெற உள்ள மாநாட…
-
- 0 replies
- 333 views
-
-
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 10 ரூபாய் தர மறுத்த தாயை அவரது மகனே தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துர்காபாய் (50), இவருக்கு அம்பேத்கர் (25) என்ற மகன் உள்ளான். எப்போதும் தாயிடம் செலவுக்கு பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த அம்பேத்கர், நேற்று செலவுக்காக அவரது தாயிடம் 10 ரூபாய் கேட்டுள்ளார். மகன் கேட்ட 10 ரூபாயை கொடுக்க துர்காபாய் மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அம்பேத்கர், துர்காபாயின் மீது கேரோசினை ஊற்றி தீயிட்டு எரித்தார். துர்காபாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டிற்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் …
-
- 0 replies
- 420 views
-
-
தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி 2 மே, 2013 தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி என்னும் கிராமத்தில் ஒரு ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 3 வயது சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமக் கடை ஒன்றின் முன்பாக எழுந்தமானமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த அந்த துப்பாக்கிதாரி, பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி ஓடியதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பௌத்தர்களாவர். தாய்லாந்து அரசாங்கத்துக்கும், முஸ்லிம் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடக்க நிலையை எட்டியதை அடுத்து இரு நாட்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தாய்லாந்தின் தெற்கு மாகா…
-
- 0 replies
- 284 views
-
-
சிங்கப்பூரில் மக்கட் தொகையை உயர்த்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு 1 மே, 2013 சிங்கப்பூரில் மக்கட் தொகையை உயர்த்த அரசு வகுத்துள்ள திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு அசாதாரணமான எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்குபெற்றுள்ளனர். வெளிநாட்டினரைக் கொண்டு சிங்கப்பூரின் மக்கட் தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஒரு நகரத்தை மட்டுமே நாடாகக் கொண்டுள்ள சிங்கப்பூர் ஏற்கெனவே ஜனநெருக்கடி மிகுந்த இடமாக உள்ளது என்று இந்தத் திட்டத்துக்கு எதிரானவர்கள் கூறுகிறார்கள். தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டவர்களாலேயே அங்கு ஊதியங்கள் உயராமல் நிலையாக உள்ளது என்றும், வீட்டின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார…
-
- 0 replies
- 477 views
-
-
வங்கதேச தொழிலாளர் நலன்களில் ஐரோப்பிய ஒன்றியம் அக்கறை 1 மே, 2013 வங்கதேசத்தில் தொழிலாளர்களின் வேலைத்தள வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. தலைநகர் டாக்காவுக்கு அருகே ஒருவாரத்துக்கு முன்னர் தொழிற்சாலைக் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பிய சந்தைக்கு பொருட்களை வரிகளின்றியும் கோட்டா முறை இன்றியும் ஏற்றுமதி செய்வதற்கான வணிக முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் தொழிலாளர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் வேலைகளை முன்னெடுக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்று கூறுகிறது. இதன்மூலம் அ…
-
- 0 replies
- 322 views
-
-
வங்கதேசம் : ஆடைத் தொழிலாளர் வேலைக்கு திரும்பினர் 2 மே, 2013 - 06:58 வங்கதேசத்தில் 8 நாட்களுக்கு முன்னதாக கட்டிடம் இடிந்ததில் 400க்கும் அதிகமானோர் இறந்துபோன சம்பவத்தை அடுத்து, அங்கு மீண்டும் துணி ஆலைகள் முதல் தடவையாக தமது பணிகளை தொடங்கியிருக்கின்றன. இடிந்துபோன கட்டிடத்தின் உரிமையாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், துணி ஆலைகளில் பாதுகாப்பு தரங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் கசீனா கோரிக்கை விடுத்திருந்தார். பணியாளர் பணிக்கு திரும்பாவிட்டால், வணிக நஸ்டம் காரணமாக ஆலை உரிமையாளர்கள் ஆலைகளை மூட நேர்ந்தால், பணியாளர்கள் தமது …
-
- 0 replies
- 293 views
-
-
மாலைத்தீவுகளில் இராணுவத்தளம் அமைக்க அமெரிக்கா முயற்சி..! மாலைத்தீவுகளில் இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய அமெரிக்கா திட்டமிடுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கான ஒப்பந்த வரைவு ஒன்று வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வரைவில் உள்ளதன்படி, அமெரிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தடையற்ற போக்குவரத்து வசதிகளை மாலைத்தீவு அரசு வழங்கவேண்டும். அமெரிக்க ஊழியர்களுக்கு அவர்களது நீதிமுறைமைகளைச் செலுத்தும் அதிகாரத்தை மாலைத்தீவுகள் வழங்கவேண்டும். அமெரிக்க ஊழியர்களுக்கு வரிகள் விதிக்கப்படக் கூடாது. அவர்ர்கள் எதையும் ஏற்றுமதி, இறக்குமதி செய்து கொள்ளலாம். மாலைத்தீவுகள் அரசு அவற்றைப் பரிசோதனை செய்யக்கூடாது. அவர்களது வாகனங்கள், விமானங்கள், கப்பல்களுக்கு தங்குதடையற்ற…
-
- 8 replies
- 742 views
-
-
புதுடெல்லி: 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கிலிருந்து சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சோனியா காந்தி வீட்டு முன்பு சீக்கியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்ட 3 வழக்குகளில், ஒன்றிலிருந்து அவரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் நேற்றுமுன் தினம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டு முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்களை போலீ…
-
- 1 reply
- 349 views
-
-
லடாக்: லடாக் பகுதியில் ஊடுருவியுள்ள சீன படையினர், ’இது சீனாவிற்கு சொந்தமான இடம்’ என்ற அறிவிப்பு பலகையுடன் 5வது கூடாரத்தை அமைத்து இந்திய ராணுவத்திற்கு சவால் விடுத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன படையினர், முதலில் 10 கி.மீ. தூரத்தில் முகாம் அமைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 19 கி.மீ. தூரம் வரை ஊடுருவி இருப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சீன படையினர் தற்போது லடாக் பகுதியில் 5வது கூடாரத்தை அமைத்துள்ளதாகவும், கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் சீனாவிற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. …
-
- 17 replies
- 1.4k views
-
-
டெல்லியில் அடுத்தடுத்து நடைபெறும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஓடும் காரில் 23 வயது பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி அருகே உள்ள குர்கானில் ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து அந்த பெண் தனது நண்பர்களான 2 நில விற்பனையாளர்களுடன் காரில் சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான மகிபால்பூர்-பால்வால் ரோட்டில் காரை நிறுத்தி அந்த பெண்ணை அவர்கள் கற்பழித்ததாக தெரிகிறது. இதுபற்றி அந்த பெண் குர்கான் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கற்பழித்ததாக நிலவிற்பனையாளர் ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரை…
-
- 0 replies
- 285 views
-
-
புதுடில்லி: "பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை, சி.பி.ஐ., மீண்டும் விசாரிக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதி மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், கடந்தாண்டு ஜூலையில், மாயாவதிக்கு எதிரான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உ.பி.,யைச் சேர்ந்த, கமலேஷ் மேத்தா என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள், பி.சதாசிவம், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தாஜ் வணிக வளாகம் தொடர்பான வழக்கை மனதில் வைத்த…
-
- 0 replies
- 224 views
-
-
லடாக்: எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், லடாக்கை விட்டு வெளியேற வேண்டுமானால் ராணுவ நடவடிக்கையை இந்தியா கைவிட வேண்டும் என சீனா நிபந்தனை விதித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடந்த 15ஆம் தேதி சீன ராணுவம் திடீரென ஊடுருவி, 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமித்து 5 கூடாரம் அமைத்தனர். அவர்கள் லடாக் நோக்கி மேலும் முன்னேறாமல் இருக்க இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வெளியேற சீனாவுக்கு இந்தியா வைத்த கோரிக்கையை அந்நாடு கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து இந்தியா- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. 2 தடவை பேச்சு தோல்வி அடைந்த நிலையில் நேற்று இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ல…
-
- 7 replies
- 890 views
-
-
ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி வேதமூர்த்தி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடிவு செய்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக கூலிமில் முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று அவருடைய கொடும்பாவிக்கு எரியூட்டினர். “வேதமூர்த்தி ‘தமது சொந்த நலனுக்காக இந்தியர்களுடைய சுயமரியாதையையும் கௌரவத்தையும் அம்னோவிடம் அடகு வைத்து விட்டதாக அந்தக் குழுவின் பேச்சாளரான எம் அசோகன் கூறினார். பிஎன், அம்னோ வழி நடத்தும் அரசாங்கம் ஆகியவை மீதான தங்களது மகிழ்ச்சியின்மையையும் வெறுப்பையும் காட்டுவதற்காக 2007ம் ஆண்டும் 2008ம் ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்ததாக அவர் சொன்னார். “ஆனால் அந்த வரலாற்று நிகழ்வுக…
-
- 0 replies
- 304 views
-
-
துடெல்லி: 12 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த எம்.என்.தாஸ் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவர் 1991, 1994 ஆம் ஆண்டுகளில் தலா ஒரு கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாஸுக்கு கவுகாத்தி சிறப்பு நீதிமன்றம் 1997ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து தாஸ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விதி்த்த தூக்குத் தண்டனையை உறுதி செய்த…
-
- 2 replies
- 340 views
-
-
டெல்லி: 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளில் ஒன்றில் இருந்து காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சீக்கிய அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள் முடங்கின. டெல்லி மற்றும் ஜம்மு பகுதிகளில் சீக்கியர்கள் இன்று கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ஜம்மு- பதான்கோட் பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த விவகாரத்தில் கோபமுற்ற சீக்கியர்கள் பலர் டெல்லியில் சில இடங்களில் போக்குவரத்தை தடை செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1984 கலவர கயவர்களைத் தூக்கிலிடு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளைத் தாங்கியபடி, எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.…
-
- 0 replies
- 350 views
-
-
சீனாவில் தயாரிப்புத் தொழிற்துறை எதிர்பாராதவிதமாக மந்தமடைந்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகப் பார்க்கப்படும் சீனாவின் பலம் தொடர்பில் இதனால் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன. ஏப்ரல் மாதத்தின் வளர்ச்சி வீதம் அதற்கு முந்தைய மாதத்தைவிட வீழ்ச்சியடைந்துள்ளதை சீனாவின் தேசிய புள்ளிவிபரத் துறையின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஐரோப்பாவில் நிலவும் பொருளாதாரச் சரிவும் அமெரிக்காவின் மீட்சியில் ஏற்பட்டுள்ள தாமதப் போக்குமே சீனாவை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு சந்தைகளையும் மையப்படுத்திய ஏற்றுமதிப் பொருளதாரத்திலேயே சீனா பெரும்பாலும் தங்கியுள்ளது. இதனால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதைக் குறைத்து,…
-
- 1 reply
- 461 views
-
-
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்போக்கு அதிகரித்துவருவதாக அமெரிக்க அறிக்கையொன்று எச்சரித்துள்ளது. வெளிப்படையான மத அடையாளங்களை அணிவது, மிருகபலிச் சடங்குகளை நடத்துவது, மத ரீதியான ஆடைகளை அணிவது, விருத்த சேதனம் செய்துகொள்வது போன்ற நடைமுறைகள் தடுக்கப்படுவதன்மூலம் மேற்கு ஐரோப்பாவில் மதச் சுதந்திரம் மறுக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறான கட்டுப்பாடுகள் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை அச்சுறுத்தும்படியான ஒரு சூழலை வளர்த்துக் கொண்டிருப்பதாக சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கூறுகிறது. பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் முகத்தை முழுமையாக மூடும் புர்கா அங்கிகளை பெண்கள் அணிவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகளையும் ஆணையத்தின…
-
- 0 replies
- 352 views
-
-
முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.முன்னதாக தேர்தலில் போட்டியிட சில இடங்களில் அவர் மனு செய்து, அவை எல்லாம் தள்ளுபடி ஆயின. இந்நிலையில் முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 1 reply
- 310 views
-
-
ஜம்மு: 200 பயங்கரவாதிகள், ஜம்மு வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டு தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் பகீர் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சீன ராணுவத்தினர் அத்துமீறி முகாமிட்டுள்ள நிலையில் தற்போது பயங்கரவாதிகள் ஊடுருவல் திட்டம் ராணுவத்தை உஷார்படுத்த வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஜம்மு-காஷ்மீர் பகுதியின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் படைப்பிரிவின் , லெப்டினட் ஜெனரல் பி.எஸ். ஹுடா கூறுகையில், பக்கத்து நாடான பாகிஸ்தானின் இம்மாதம் 11-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்நாட்டு தங்களது எல்லைப்பகுதியினை சீல் வைத்து பாதுகாத்துள்ளது. ஏற்கனவே இந்தியா- பாகிஸ்தான் எல்லையை யொட்டியுள்ள, ஜம்மு-காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், 20 முதல் 30 பயங்கரவாதிகள…
-
- 5 replies
- 423 views
-
-
ரஷ்ய பயணிகள் விமானம் சுமார் 200 பயணிகளுடன் நேற்று எகிப்தில் இருந்து ரஷ்யா திரும்பிக் கொண்டிருந்தது. சிரியா நாட்டின் வான் எல்லைக்குள் அந்த விமானம் நுழைந்த போது, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த 2 ஏவுகணைகள் விமானத்தை தாக்க முற்பட்டன. ஏவுகணைகள் விரட்டுவதை அறிந்துக் கொண்ட விமானி, லாவகமாக விமானத்தை பக்கவாட்டில் ஒதுக்கி செலுத்தினார். குறி தவறிய 2 ஏவுகணைகளும் விமானத்தின் மீது மோதாமல் கடந்து சென்றன. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=81625&category=WorldNews&language=tamil
-
- 2 replies
- 495 views
-
-
சியோல்: அமெரிக்க நிலைகளை இலக்காகக்கொண்டு அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்தப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளத தொடர்ந்து, அமெரிக்கா, தனது பசிபிக் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா நிறுத்தி வருகிறது. தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது போர் தொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்து வரும் வடகொரியா, இரு நாடுகள் மீதும் அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான கடைசி உத்தரவை ராணுவத்துக்கு பிறப்பித்து விட்டோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. எனவே வடகொரியா ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சநிலை அங்கு உருவாகியுள்ளது. எனவே இதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்காவும், தென்கொரியாவும் எடுத்துள்ளன. வடகொரியா அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் எ…
-
- 58 replies
- 3.4k views
-
-
ஏப்ரல் 30, 2013 காஸா மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஹமாஸ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கடந்த நவம்பர் மாதம் தொடர்ச்சியாக 8 நாட்கள் நடைபெற்ற சண்டைக்குப் பின்னர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இஸ்ரேல் நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும். கடந்த 17-ஆம் தேதி, காஸாவில் இருந்து இஸ்லாமியர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. http://puthiyathalaimurai.tv/palestinian-killed-in-gaza-due-to-newly-commenced-airstrike-by-israel
-
- 0 replies
- 337 views
-
-
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் 'தக்க நடவடிக்கை' எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்தோனி கூறினார். ஹிமாலயா மலைப் பிராந்தியத்தில் உள்ள கிழக்கு லடாக் பிரதேசத்துக்குள் கடந்த வாரம் நுழைந்துள்ள சீனப்படையினர் அங்கு கூடாரங்களை அமைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப் பிராந்தியம் எப்போதுமே இராணுவ கொதிநிலையை உண்டாக்கக் கூடியதாக இருந்துவருகின்றது. இந்த எல்லை சர்ச்சைகள…
-
- 33 replies
- 1.8k views
-