Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மத்திய அரசு 2008ல் செயல்படுத்திய வேளாண் கடன் ரத்து திட்டத்தில் முறைகேடு . மத்திய அரசு 2008ல் செயல்படுத்திய வேளாண் கடன் ரத்து திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தலைமை கணக்காயர் அறிக்கை வெளியிட்டுள்ளார். வேளாண் கடன் ரத்து குறித்து சிஐஜி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13130:loan-delhi&catid=37:india&Itemid=103

    • 0 replies
    • 399 views
  2. மதம் சார்ந்து சமூகம் சார்ந்து.. தம்மை புனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள்.. உண்மையில் இறை நம்பிக்கைக்காகவாவது பாத்திரமாக இருந்து.. தம்மை தம்மளவில் புனிதர்களாக வைத்திருப்பது அவர்களின் மனச்சாட்சிக்கு அழகு..! முடியாதவர்கள் அதில் இருந்தும் விலகி குடும்ப வாழ்வில் இணைந்து கொள்வதும் அழகு. இவ்வளவு காலமும் மக்கள் முன்னால் தன்னை மதப் புனிதராகக் காட்டிக் கொண்ட.. பிரிட்டனின் (ஸ்காட்லாந்துக்குரிய) மதிப்புக்குரிய கிறிஸ்தவ மதத் தலைவரான Cardinal Keith O'Brien தனது சக பாதிரிமாரோடு தவறான பாலினத்தொடர்பு.. வைத்திருந்த குற்றச்சாட்டினை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு தன்னை அதில் இருந்தும் மன்னிக்கக் கேட்டுள்ளார். இவர் வெளிப்படையாக தன்னை ஒரு மதப் புனிதராகக் காட்டிக்கொண்டாலும் உள்…

  3. விளக்குகளை அணைக்க வழியில்லாத புதிய விமான நிலையம் - கேலிக்குள்ளாகும் ஜேர்மனியின் தொழில்நுட்பம்! [Monday, 2013-03-04 09:41:28] பலகோடி ரூபாய் செலவில், ஜெர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின், மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என, கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில், டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற, இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க, அதி நவீன வசதிகளுடன், "பெர்' என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி, நடக்கிறது. இந்த ஆண்டில், இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், 2017ல் தான் புது விமான நிலையம் தயாராகும்.இவ்விமான நிலையத்தை உருவாக…

  4. கோவை அவினாசிசாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நடராஜன்(64). ஓய்வுபெற்ற தனியார் மில் மேலாளர். இவர் மனைவி சரோஜினி(54). இவர்களது எதிர்வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் யாசர்அராபத்(24). நெல்லை மாவட்டம் மேலபாளையத்தை சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி 13ம் தேதி சரோஜினி மாயமானார். 21ம் தேதி யாசர்அராபத் வீட்டில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டு சடலமாக சரோஜினியின் உடல்பாகங்களை போலீசார் கண்டெடுத்தனர். இதையடுத்து யாசர்அராபத் தலைமறைவானார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள லாட்ஜில் தலைமறைவாக இருந்த யாசர் அராபத்தை தனிப்படை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் யாசர்அராபத் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் மலேசியாவில் இருந்து …

  5. வயிற்று வலி காரணமாக பிரிட்டன் ராணி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்(87), இவருக்கு கடந்த வெள்ளியன்று திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.இதையடுத்து உடல்சோர்வடைந்தார். பின்னர் லண்டனில் உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்து வந்தனர்.இதில் வாயு கோளாறால் அவதியுற்றுவருவதாக தெரியவந்தது. தொடர்ந்துஅவருக்குசிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எலிசபெத் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மணை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AF%8D-%E0%A…

  6. சீனாவின் முக்கிய இரண்டு இணையத்தளங்கள் கடந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 144,000 தடவைகள் ஹெக்கிங் தாக்குதல்களுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. இவை இரண்டும் சீன இராணுவத்துடன் தொடர்புடைய இணையத்தளங்கள் எனவும் அவற்றில் ஒன்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சினையுடதென தெரிவிக்கப்படுகின்றது. தனது இணையத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மூன்றில் இரண்டு அமெரிக்காவிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க அரச ஸ்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் இணையக்கட்டமைப்பில் அடிக்கடி ஐ.பி. முகவரிகளின் கடந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 144,000 ஹெக்கிங் தாக்குதல்கள் தனது இணையத்தளங்களின் மீது மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில்…

  7. டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக வெளியான தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் டாக்காவில் உள்ள பிரணாப் முகர்ஜியின் செயலர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழவில்லை என மறுத்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக டாக்கா சென்றுள்ளார். தற்போது அங்கு பெரும் வன்முறை வெடித்து பலர் பலியாகி வருகின்றனர். டாக்கா சுதந்திரப் போராட்டத்தின் போது போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக ஜமாத்- இ இஸ்லாமி கட்சியின் டெல்வார் உட்பட மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜமாத் கட்சியின் போராட்டம் வெடித்தனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 50க்கும் மேற்பட்டோ…

  8. சீனாவில் நிலநடுக்கம் - 3200 வீடுகள் தரைமட்டம்! [Monday, 2013-03-04 09:29:58] சீனாவின் யுனான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இந்நிலநடுக்கத்தால் 3,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜிஸான் நகர் பகுதியில் 9 ஆடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. குறிப்பாக மியான்மரின் எல்லையில் உள்ள சீனப் பகுதியான எரியுவான் மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. இங்குள்ள 3,200 வீடுகள் சேதமடைந்தன. இதில் 700 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. இப்பகுதியை சேர்ந்த 55 ஆயிரம் பேர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த நிலநடுக்கத்துக்கு…

  9. பிரணாப் முகர்ஜிக்கு மூக்கறுப்பு ? வங்கதேசம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் நாளை நடைபெற இருந்த சந்திப்பை அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா திடீரென ரத்து செய்திருக்கிறார். வங்கதேசத்துக்கு பிரணாப் முகர்ஜி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவரை எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா சந்திப்பார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜியின் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் கலிதா ஜியாவுடனான சந்திப்பு இடம்பெறவில்லை. இந்த சந்திப்பு ரத்துக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இடையில் பிரணாப்பை சந்திக்க விருப்பம் இல்லை என்று கலிதா தெரிவித்ததனாலேயே பிரணாப் இந்த முடிவை எடுக்க நேரிட்டது …

    • 0 replies
    • 463 views
  10. பிரதமர் வேட்பாளர் என்ற முக்கிய அந்தஸ்து நோக்கி சென்று கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் மோடி மீது அனைத்து அரசியல் கட்சியினரும் மீடியாக்களும் பின் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் மோடியின் பெருமையை புகழ்ந்தனர். இன்றயை 3 ம் நாள் கூட்டத்தில் மோடி பேசினார். இவர் பேசுகையில் ; என்னை மிக பெருமைபடுத்திய ராஜ்நாத்சிங்கிற்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை. குஜராத்தில் பா.ஜ., பெற்ற வெற்றி மக்கள் வெற்றி. இந்த வெற்றியை நான் பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த தேசம் மத்தியில் ஒரு நிலையான அரசை எதிர்பார்க்கிறது. மத்தியில் ஆளும் காங்., அரசு சோனியா குடும்ப நலத்தை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்த…

    • 0 replies
    • 422 views
  11. மலேசியாவின் போர்னியோ தீவில் ஒரு நகரை ஆக்கிரமித்திருக்கும் ஆயுதந்தரித்த பிலிப்பைன்ஸ் நாட்டவரை உடனடியாகச் சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்த துப்பாக்கிச் சண்டையை அடுத்த சமரச நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். அந்த மோதல்களில் மூன்று மலேசிய கொமாண்டோக்களும், ஊடுருவியவர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர். மலேசிய மாநிலமான சபாவில் 100 -300 வரையிலான பிலிப்பைன்ஸ்காரர்கள் இரு வாரங்களுக்கு முன்னர் படகுகளில் வந்து தரையிறங்கினார்கள். இந்த போர்னியோவின் சில பகுதிகளை ஆட்சி செய்துவந்த முஸ்லிம் அரச வம்சமான சுலு சுல்தானேட்டின் ஆதரவாளர்கள் இவர்கள். இந்தக் குழு சரணடைய வேண்டும் என்று பிலிப்ப…

  12. 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த, பி.சி.சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டு குழுவும் விசாரித்து வருகிறது. இந்த குழுவில் காங்கிரஸ் உள்ளிட்ட, முக்கிய கட்சிகளைச் சேர்ந்த, உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் அறிக்கை பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், ராஜா, "இந்த விசாரணையில் என் தரப்பு வாதத்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, என்னையும் சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும்' என, லோக்சபா சபாநாயகர், மீரா குமாருக்கும், கூட்டு குழு தலைவர் சாக்கோவுக்கும் கட…

    • 1 reply
    • 441 views
  13. சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்ய அமெரிக்கா முடிவு: சிரியா, ஈரான் எதிர்ப்பு சிரியாவின் அதிபர் பஷீர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக கடும் போராட்டங்களை கிளர்ச்சிக் குழுக்கள் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் இதுவரை சுமார் 65 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.சிரியாவின் கிளர்ச்சி குழுக்களுக்கு 60 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை வழங்க இருப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. இந்த உதவிகளை உயிரைக்கொல்லும் ஆயுதங்களாக வழங்காமல், கிளர்ச்சிக் குழுக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் மருந்துகள், உணவு பொருட்கள் போன்றவை வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது.தெஹரானில் நேற்று சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாலித் அல் மௌ…

    • 0 replies
    • 356 views
  14. 1000 கி.மீ. பரப்பளவை தாக்கும் சீனாவின் நவீன போர் விமானம் 1000 கி.மீட்டர் பரப்பளவை தாக்கும் அதிநவீன போர் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஜெ.15 ரக அதி நவீன போர் விமானத்தை வடிவமைத்து ராணுவத்தில் சேர்த்துள்ளது. இந்த விமானம் 1000 கி.மீட்டர் சுற்றளவு பரப்பளவை குண்டு வீசி தாக்கும் திறன் கொண்டது. சமீபத்தில் இது விமானம் தாங்கி கப்பலில் நிலை நிறுத்தப்பட்டு வெற்றிகரமாக தாக்குதல் ஒத்திகை நடத்தி பரிசோதிக்கப்பட்டது. ஜெ.15 ரக போர் விமானம் சன்சாங் என்பவர் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. இது அமெரிக்காவின் எப்-18 ஹார்னெட் போர் விமானத்துக்கு இணையானது என ஜெ.15 ரக விமானத்தை வடிவமைத்த சன் காங் தெரிவித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணை…

    • 0 replies
    • 528 views
  15. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு இளைஞன் டீன் ஏஜ் இளம்பெண் ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டான். ஐந்து வருடங்களுக்கு தன்னுடைய குடும்பத்தில் உள்ள இளம்பெண், சமூக வலைத்தளங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வுக்கு பழிவாங்கியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ளான். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் Charles Andrew Capps, என்ற 21 வயது இளைஞர் 14 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ச்சியாக ஃபேஸ்புக மூலம் ஆபாச படங்களை அனுப்பியதோடு, தன்னோடு பாலியல் உறவு வைக்க கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இந்த விஷயத்தை அறிந்த இளம்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் டெக்சாஸ் காவல்துறையினர் ஐ.ப…

    • 1 reply
    • 513 views
  16. சமீபத்தில் ரஷ்யாவில் ஒரு எரிகல் விழுந்து சுமார் 1500 பேர் வரை காயமடைந்த செய்தியே இன்னும் நம் மனதை விட்டு அகலாத நிலையில் அதை விட பலமடங்கு பெரிய ஒரு எரிகல்லை அண்டார்டிகா பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிழக்கு அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்ற ஜப்பான் மற்றும் பெல்ஜிய விஞ்ஞானக் குழுவினர் சுமார் 40 பவுண்டு எடையுள்ள ஒரு எரிகல்லை கண்டுபிடித்துள்ளனர். இந்த எரிகல் எப்பொழுது விழுந்தது என தெரியவில்லை என்றாலும் இவ்வளவு பெரிய எரிகல் இதுவரை பூமியில் கிடைக்கவில்லை என்பதே விஞ்ஞானிகளின் ஆச்சர்யம். Vinciane Debaille, என்ற பெல்ஜிய புவியியல் ஆராய்ச்சி நிபுணர் இந்த எரிகல் பற்றி கூறும்போது "இந்த எரிகல் பூமியில் விழுந்திருந்த காலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏ…

    • 0 replies
    • 425 views
  17. பெரும் நெருக்கடிக்குள்ளும், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்திற்குள்ளும் சிக்குண்டு கிடக்கும் அமெரிக்காவை மீட்க புதிய மீதம் பிடிக்கும் பொருளாதார திட்டத்தை அதிபர் ஒபாமா இன்று அறிமுகம் செய்தார். அமெரிக்கக் காங்கிரஸ் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான அமெரிக்க பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சரியான இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 85 பில்லின் டாலர்கள் முதல் வெட்டு விழும். இதன் காரணமாக பாடசாலைகள், விமான நிலையக் கண்காணிப்புக்கள், படைத்துறை என்று பல தரப்பும் பாரிய சிக்கல்களுக்குள் மாட்டுப்பட இருக்கின்றன. பலருடைய வேலைகள் பறிபோகும், சம்பளம் குறையும் இன்று ஐரோப்பா சந்திக்கும் சிக்கல்கள் அமெரிக்காவிலும் தலைவிரித்தாடும். இந்த மீதம் பிடித்தல்…

    • 0 replies
    • 377 views
  18. வெனிசுலா நாட்டு அதிபர் ஹியுகோ சாவேஸ் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு துணை அதிபர் நிக்கோலஸ் மார்கோ கூறியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கியூபா சென்று சிகிச்சை பெற்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்களுக்காக போராடிய சாவேஸ்,தனது வாழ்வை நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்தார்.இதனால் அவர், தனது உடல் நிலையை கருத்தில் கொள்ளவில்லை எனதுணை அதிபர் கூறினார். http://tamil.yahoo.com/%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%85-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%B5-114500126.html As Chávez fights cancer, Venezuela prepares for life after the president While a gravely ill president undergoes a new, tougher cours…

  19. மாநில துணை முதல்வர் அஜீத் பவாருக்கு, மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராஜ் தாக்கரே கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டால், எனது ஆதரவாளர்கள் வீட்டுக்குள் நுழைந்து தாக்குவார்கள் என அஜீத் பவாருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13055:ajith-raj-thakararey&catid=37:india&Itemid=103

  20. மாலி நாட்டில் அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட மாலி அரசுக்கு ஆதரவாக பிரஞ்சு படைகள் களமிறங்கின. சுமார் 7 வாரகாலம் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் மாலி படைப்பிரிவு தலைவன் அபு சயீத் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட் அதிபர் இத்ரீஸ் டெபி இட்னோ நேற்று அறிவித்தார். கொல்லப்பட்ட அபு சயீத் (46) என்பவரின் இயற்பெயர் முகம்மது கெடிர். லிபியா நாட்டின் எல்லைப்பகுதியான அல்ஜீரியாவில் பிறந்த இவர், ஆரம்ப காலத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர், இஸ்லாமிய போராளி குழுவினருடன் ஏற்பட்ட தொடர்பினால் அல்-கொய்தா இயக்கத்தில் இணைந்து மாலியில் இயங்கி வந்த அவ்வியக்கத்தின் படைத் தளபதியானார். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுக…

  21. கொலைப்பட்டியலை வெளியிட்டது அல்கைதா‍! "இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக உயிருடனோ பிணமாகவோ தேவை" என்ற தலைப்பில், அல் கொய்தா இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பலரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட இந்த இணையதள இதழை வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள "மிடில் ஈஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியுட்" என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2001 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தில் குரானின் பிரதியை எரித்த பாஸ்டர் ஜான் டெர்ரி, அமெரிக்காவின் கேலி சித்திர ஓவியர் மொல்லி நோரிஸ், சோமாலிய நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதியான அயான் ஹிர்சி அலி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இதில் படங்களுடன் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றன. …

    • 0 replies
    • 434 views
  22. மலேசியாவின் போர்னியோ தீவில் ஒரு நகரை ஆக்கிரமித்திருக்கும் ஆயுதந்தரித்த பிலிப்பைன்ஸ் நாட்டவரை உடனடியாகச் சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்த துப்பாக்கிச் சண்டையை அடுத்த சமரச நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். அந்த மோதல்களில் இரு மலேசிய காமாண்டோக்களும், ஊடுருவியவர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர். மலேசிய மாநிலமான சபாவில் குறைந்தபட்சம் 100 பிலிப்பைன்ஸ்காரர்களாவது இரு வாரங்களுக்கு முன்னர் வந்து தரையிறங்கினார்கள். இந்த போர்னியோவின் சில பகுதிகளை ஆட்சி செய்துவந்த முஸ்லிம் அரச வம்சமான சுலு சுல்தானேட்டின் ஆதரவாளர்கள் இவர்கள். இந்தக் குழு சரணடைய வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் …

  23. இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலைக் குமுறல் இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது.இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மவுண்ட் எட்னா, உலகில் உயிர்ப்புடன் செயல்படும் எரிமலைகளில் ஒன்று. இந்த எரிமலையில் இருந்து திடீரென்று கரும்புகையும், சாம்பலும் வெளியேறத் தொடங்கியுள்ளது. எரிமலையின் உச்சியில் 2,900 மீட்டர் உயரத்தில் புதிதாகத் தோன்றியுள்ள உட்குழிவான பகுதியில் இருந்து சாம்பல் வெளியேறுகிறது.கரும்புகை வெளியேறினாலும் அருகில் உள்ள கடனியா (Cஅடனிஅ) விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், எரிமலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மூல…

    • 0 replies
    • 366 views
  24. கியூபா நாட்டிற்கு சுற்றுலா சென்ற கனடிய நபர் ஒருவர் கடல் அலை இழுத்து சென்றதால் மரணமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இறந்த சுற்றுலா பயணி கனடாவை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டாலும், அவருடைய பெயர் மற்றும் மற்ற விபரங்கள் தெரியவில்லை எனவும், அதுகுறித்து கியூபா போலீஸாருடன் கனடா தூதரகம் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கியூபா கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்ஷச அலை கனடிய நபரை இழுத்து சென்றதாகவும், கடலலை மீட்புக்குழுவினர் மூவர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் அவருடைய மரணத்தை தடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. http://www.thed…

    • 0 replies
    • 485 views
  25. சீனாவின் பொருளாதார டேட்டா மிகவும் ஏமாற்றத்தை கொடுத்த காரணத்தினால் டொரண்டோ பங்குச்சந்தையில் இன்று கமாடிட்டி பொருட்களின் விலையில் இறக்கம் காணப்பட்டது. மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவு நிலையில் இருப்பதால் அதன் தாக்கம் கனடாவில் எதிரொலித்தது. எனவே இன்றைய டொரண்டோ பங்குச்சந்தையில் இந்த வாரத்தின் மிகப்பெரிய இறக்கம் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான கனடிய டாலரின் மதிப்பு இன்று காலையில் 97.02 டாலராக இருந்தது. மேலும் தாமிரம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. டொரண்டோ பங்குச்சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1582 என்ற விலையில் கைமாறியது. சீனாவின் பொருளாதார டேட்டா வீழ்ச்சியால் ஆசிய பங்குச்சந்தைகளும் இன்று பெரும் சரிவ…

    • 0 replies
    • 379 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.