உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப்படைகள் அடுத்த ஆண்டு விலகும்போது, தாங்கள் அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்ற முயலமாட்டோம் என்று ஆப்கன் தாலிபானின் தலைவர் முல்லா முகமது ஒமார் கூறியிருக்கிறார். முஸ்லீம் பண்டிகையான ஈத் பெருநாளுக்கு முன்னதாக விடுத்த அறிக்கை ஒன்றில், இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கும் அரசு ஒன்றை உருவாக்குவதற்கு ஆப்கானிய மக்களுடன் ஒரு புரிந்துணர்வை தாலிபான்கள் எட்ட முயல்வார்கள் என்றார் ஒமார். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல்களைப் பற்றி தனது வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்திய ஒமார், இது ஒரு காலத்தை வீணடிக்கும் செயல் என்றார். முல்லா ஒமார், 2001ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு…
-
- 0 replies
- 349 views
-
-
அமேசான் நிறுவனத்தின்... தலைமை செயல் அதிகாரி, ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகல்! அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், தனது பதவியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார். 27 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தை நிறுவிய அதே திகதியில், அதாவது நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை துறந்தார். இதன்பிறகு கனவு இலக்கான ப்ளூ ஆரிஜின் விண்ணூர்தி பயண நிறுவனத்தில் முழு நேரமும் கவனம் செலுத்தவுள்ளார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமேசான் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆண்டி ஜாஸே பொறுப்பேற்கிறார். உச்சம் தொட்ட ஒன்லைன் வர்த்தகம் ஆரம்ப காலத்தில் ஒன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அம…
-
- 0 replies
- 303 views
-
-
டெல்லி: இலங்கை சிறையில் வாடும் 106 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பினர். திமுக சார்பில் வசந்தி ஸ்டான்லியும் அதிமுக சார்பில் மைத்ரேயனும் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை சிறையில் தற்போது 106 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களை மீட்க பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போதும், இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மீனவர்களை விடுதலை …
-
- 0 replies
- 317 views
-
-
சீனாவில்... ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழப்பு ஐந்து பேர் காயம் கிழக்கு சீன நகரமான சுஜோவில் ஹோட்டல் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர். 36 மணிநேர மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள் 23 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் உயிருடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உரிமையாளர் கட்டிடத்தின் கட்டமைப்பை மாற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உயிருடன் காணப்பட்ட ஆறு பேரில், ஐந்து பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது இருப்பினும் ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. https://athavannews.com/2021/1228574
-
- 0 replies
- 306 views
-
-
மெக்சிக்கோ விமான கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது! MEXICO CITY (CNN) -- The hijacking of a commercial airliner carrying 104 passengers ended peacefully Wednesday when five to seven people were taken into custody at Mexico City's airport. TV news footage shows suspects being seated in front of the hijacked plane on the tarmac at Mexico City's airport. The hijackers -- possibly Bolivians or Colombians -- took control of the Boeing 737 Aeromexico jet as it flew from the resort town of Cancun. They said a cardboard box they were carrying contained a bomb, which they threatened to blow up if their demand to speak to President Felipe Calderon was not m…
-
- 0 replies
- 994 views
-
-
ஜப்பானில் கடைசி அணுமின் உலையும், மூடப்பட்டது. டோக்கியோ: ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால் பியூகுஷிமா அணுமின் உற்பத்தி நிலையத்தில் கடல் நீர் உள்ளே புகுந்து அணுகதிர் வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜப்பான் நாட்டு மக்கள் அணுஉலையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். மக்கள் போராட்டம் காரணமாக அணு உலைகளை மூட தேவையான நடவடிக்கைகளை ஜப்பான் தொடங்கியது. அங்கு 50க்கும் மேற்பட்ட அணுமின் ந…
-
- 2 replies
- 515 views
-
-
பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்?: 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கும் இத்தாலி பெத்தனி பெல்பிபிசி செய்தியாளர் டச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள். படத்தின் காப்புரிமைSOUTH TYROL MUSEUM OF ARCHAEOLOGY/OCHSENREITER Image captionடச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள் வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸி கண்டெடுக்கப்பட்டார். 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய …
-
- 0 replies
- 307 views
-
-
இந்திய அரசு, இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் , பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது. அமெரிக்கா உட்பட 40 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய விசா விதிகள் தளர்வ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே, இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் , விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்…
-
- 1 reply
- 723 views
-
-
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் வருமா? நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு அக்டோபர் 20,2009,00:00 IST புதுதில்லி : மரபணு மாற்றம் செய்யப்பட்ட, "பி.டி' கத்தரிக்காய்க்கு உயிர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு தரப்பில் இந்த கத்தரிக்காய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப் படுவதால் இந்த கத்தரிக்காய் சந்தைக்கு வருமா என்பது கேள்வி குறியாக உள்ளது. கோவை வேளாண் பல்கலைக் கழகமும், அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டாவின் இந்தியப் பங்குதாரரான மஹிகோ நிறுவனமும் சேர்ந்து, காய்புழு தாக்குதலை எதிர்க்கும் வகையில், மரபணு மாற்றம் செய்யப் பட்ட கத்தரிக்காய்களை உற்பத்தி செய்துள்ளன. இந்த கத்தரிக்காய் செடி, வறட்சியை தாங்க வல்லது; பூச்சிக்கொல்ல…
-
- 19 replies
- 2.9k views
-
-
தெலுங்கானாவை எதிர்த்து ராஜினாமா செய்வதாக 13 சீமாந்திரா எம்.பி.க்கள் கொடுத்த கடிதத்தை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்த நிலையில் மீண்டும் ராஜினாமா செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் எஸ்.பி.ஒய். ரெட்டி, ஹர்சகுமார், சாய் பிரதாப், ராஜகோபால், அனந்தவெங்கடராமி ரெட்டி, அருண்குமார், மாகுண்ட சீனிவாசலு ரெட்டி, சாம்பசிவ ராவ், சப்பம்ஹரி, பாப்பிராஜு கனுமுரு ஆகிய 10 பேரும் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஜெகன்மோகன் ரெட்டி, ராஜ்மோகன் ரெட்டி இருவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்தவர்கள். கொகைல்ல நாராயணா என்பவர் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவர்…
-
- 0 replies
- 455 views
-
-
கொரோனா வைரஸ்: மீண்டும் ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கோவிட் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை, நான்காவது அலையா இது? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஊசி செலுத்திக் கொள்ளும் பெண் ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பா கண்டம், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக். கொரோனா தொ…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் குடியேறிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையால் குடும்பங்கள் சிதறுண்டு போகும் நிலை குறித்த சிறப்பு பார்வை, கிழக்கு யுக்ரைனில் தொடரும் மோதல் ஐரோப்பாவின் மறக்கப்பட்ட யுத்தமாகப் பார்க்கப்படும் நிலையில், மூன்றாண்டுகளாக மோதல் நடைபெறும் பகுதியிலிருந்து நேரடிச் செய்திகள் மற்றும் கானாவில் நூறு பிள்ளைகளுக்கும் அதிகமாக பெற்ற தந்தையின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 262 views
-
-
ஸ்காட்லாந்து நகரான கிளாஸ்கோவில் போலிஸ் ஹெலிகாப்டர் ஒன்று மதுக்கடை ஒன்றின் மீது விழுந்ததில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டனர் என்று போலிசார் கூறுகின்றனர். 32 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். கிளாஸ்கோ நகரில் க்ளைட் நதியருகே அமைந்திருக்கும் இந்த மதுக்கடை மீது வெள்ளிக்கிழமை இரவு இரண்டு போலிசார் மற்றும் ஒரு சிவிலியன் விமானியைக் கொண்ட இந்த போலிஸ் ஹெலிகாப்டர் விழுந்தது என்று செய்திகள் கூறுகின்றன. இந்த ஹெலிகாப்டர் விழுந்தபோது, மதுக்கடையில், சுமார் 120 வாடிக்கையாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் இந்தக் கட்டிடத்துக்குள் சிக்கியிருப்பவர்களை அணுக முயன்று வருகிறார்கள். மத்திய கிளாஸ்கோ பகுதி மீது பறந்துகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் ,…
-
- 2 replies
- 473 views
-
-
டேகிஸ்தானை சேர்ந்த ரஷ்யர்கள் சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்காக போராடுகிறார்கள் – இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு, ஒரே நாளில் வங்கதேசத்துக்கு முப்பத்தையாயிரம் ரொஹிஞ்சா அகதிகள் வந்து சேர்ந்துள்ளது குறித்த செய்திகள் மற்றும் அங்கோலாவில் எஃகு தட்டுப்பாட்டை நீக்க ஒருவர் இராணுவ ட்ரக்குகள், யுத்த தாங்கிகள் மற்றும் கார்களை பயன்படுத்துவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 265 views
-
-
உக்ரைனில்... இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு, ரஷ்யா திட்டமிடுகிறது? அமெரிக்கா எச்சரிக்கை! உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆகையால், நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி கூறுகையில், ‘அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் மற்றும் உக்ரைனில் ரசாயன ஆயுத மேம்பாடு பற்றிய ரஷ்யாவின் கூற்றுகள் அபத்தமானவை. இந்த பொய்யான கூற்றுகள், மேற்கொண்டு அவர்கள் நடத்தவிருக்கும் காரணமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்த கூறும் வெளிப்படையான தந்திரம்’ என கூறினார். உயிரியல…
-
- 0 replies
- 249 views
-
-
உலகத்தைப் பற்றிக் கவலைப்படாத ஜெர்மனி! பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய மக்கள் தொகை மிகுந்த மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கும் இது தேர்தல் ஆண்டு. இந்தத் தேர்தல்கள் அந்த நாடுகளுக்கு மட்டுமில்லாமல் ஐரோப்பாவுக்கும் உலக அரசியல் போக்குகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைத்தது, அல்லது எவ்வளவு சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர் என்பதைவிட, இந்தத் தேர்தல் பிரச்சாரங்களில் என்ன பேசப்பட்டது என்பதுதான் முக்கியம். பிரெஞ்சுக் குடிமகளான நான் இப்போது லண்டனில் வசிக்கிறேன். பிரிட்டனில் ஜூன் மாதம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘பிரெக்சிட்’ குறித்து…
-
- 1 reply
- 915 views
-
-
கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைEPA Image captionகென்னடியின் (வலத…
-
- 1 reply
- 349 views
-
-
துப்பாக்கி வாங்குவதற்கான... வயதை, 21ஆக அதிகரிக்க... ஜோ பைடன் யோசனை! துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21ஆக அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெள்ளை மாளிகையில் வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜோ பைடன் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். முடியவில்லை என்றால் நாம் அதற்கான வயதை உயர்த்த வேண்டும். ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அ…
-
- 1 reply
- 418 views
- 1 follower
-
-
மும்பை: மும்பை துறைமுகம் அருகே விபத்தில் சிக்கிய எண்ணெய் கப்பல், கடலில் மூழ்குகிறது. அதில் உள்ள 2662 டன் பெட்ரோலிய எரிபொருள் கடலில் கலக்கும் அபாயம் இருப்பதால் துறைமுகம் மூடப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எம்.எஸ்.சி.சித்ரா, கலிஜியா என்ற இரண்டு சரக்கு கப்பல்கள் நேற்று முன்தினம், மும்பை துறைமுகம் அருகே எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் சித்ரா கப்பல் உடைந்து மூழ்கத் தொடங்கியது. அதில் இருந்த 1219 கன்டெய்னர்களும் கடலில் மிதக்கின்றன. அவற்றில் 2662 டன் டீசல் மற்றும் லூப்ரிகன்ட் ஆயில் உள்ளது. கன்டெய்னர்களில் உள்ள எண்ணெய் முழுவதும் கடலில் கலப்பதால் அலிபாக், உரன் மற்றும் எலபென்டா குகை கடற்கரை பகுதிகளில் பெரும் பாதிப்பு …
-
- 0 replies
- 558 views
-
-
ஈரான்- அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: உடன்பாடு இல்லாமல் நிறைவுக்கு வந்தது! வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக ஈரான், அமெரிக்காவுடன் முன்னெடுத்துவந்த மறைமுகப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கல் குறித்த எந்த உத்தரவாதத்தையும் அமெரிக்க பிரதிநிதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஆகையால், நீண்ட இழுபறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது. எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா மற்று…
-
- 0 replies
- 232 views
-
-
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா நேற்று தேசிய கொடி ஏற்றிய போது அவர் மீது ஷீ வீசப்பட்டது.விழாவில் கலந்து கொண்ட முன்னாள் போலீஸ் ஏட்டு அப்துல் ஆசாத் ஜான் ஷீவை வீசினார். அவரை உடனடியாக கைது செய்தனர். இவர் பணியில் இருந்த போது தவறு செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அவர் எதற்காக ஷீவை வீசினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது அரசியல் தலைவர் ஒருவர் சொன்னதால் தான் ஷீவை கழற்றி வீசியதாக கூறி இருக்கிறார். அவர் யார் என கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். உமர் அப்துல்லா கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தும், அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்ப…
-
- 4 replies
- 849 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்டின் முதல் இந்திய பெண் மருத்துவர் Image captionஐக்கிய அரபு எமிரேட்டில் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாதபோது தனது மருத்துவ பயிற்சியை ஜுலேக்கா தாவூத் பெற்றார் இந்தியாவை சேர்ந்த ஜுலேக்கா தாவூத் ஐக்கிய அரபு எமிரேட்டின் முதல் பெண் மருத்துவராகவும், அதன் சுகாதாரத்துறையை மாற்றியதில் பெரும்பங்கு ஆற்றிவராக பரவலாக அறியப்படுகிறார்.இவர் பிபிசி ஹிந்தியின் ஜுபைர் அகமதுவை சந்தித்தார். தற்போது 80 வயதாகும் மருத்துவர் ஜுலேக்கா, கடந்த 1963ம் ஆண்டில் தான் துபாய்க்கு சென்ற நாளை தெளிவாக நினைவு கூர்கிறார். "நான் இங்கே தரையிறங்கியபோதுதான் எந்த விமான நிலையமும் இல்லை என்பதை கண்டறிந்தேன். வெறும் ஓடுதளம் ம…
-
- 0 replies
- 520 views
-
-
புதிய தடைகள் விதித்த அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: இரான் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நாட்டின் நீதித்துறை தலைவர் ஆயதுல்லா சாதிக் அமொலி லாரிஜானீ மீது தடைகள் விதித்து, அமெரிக்கா தனது "எல்லையை மீறிவிட்டதாக" இரான் கூறியுள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என சூளுரைத்துள்ள இரான், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது க…
-
- 0 replies
- 158 views
-
-
ஐரோப்பாவில் கடும் புயல் தாக்கம்: 9 பேர் பலி.......! ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, நெதா்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் வீசிய கடும் புயல் தாக்கத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன் வீடுகள் வாகனங்கள் சேதடைந்துள்ளன. வடக்கு ஐரோப்பாவின் நேற்று வியாழக்கிழமை(18) வீசிய இந்த கடும் புயலில் சிக்கி பலியானவர்களில் இருவர் தீயணைப்பு வீரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புயல், ஜெர்மனியில் மணிக்கு 203 கிலோமீட்டர் வேகத்தில் வீசியமையால் அங்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் போக்குவரத்துக்கான வீதிகள் சில மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், வடக்கு ஐரோப்பாவை தாக்கிய புயலால் ஜேர்ம…
-
- 0 replies
- 466 views
-
-
நாளிதழ்களில் இன்று: பத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா: ‘பத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா’ பத்மாவத் திரைப்படத்தை மலேசிய தணிக்கைத் துறை தடை செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். "இஸ்லாமிய உணர்வுகளை இத்திரைப்படம் புண்படுத்துவதால், இத்திரைப்படத்தை மலேசிய தணிக்கை அமைப்பு தடை விதித்துள்ளது." என்கிறது அந்தச் செய்தி. படத்தின் விநியோகஸ்தர் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், திரைப்பட முறையீட்டுக் குழு முன் இன்று அது விசாரணைக்கு வருவதாகவும் விவரிக்கிறது அந்தச் செய…
-
- 0 replies
- 295 views
-