உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறைத்தண்டனை லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா. ஆதரவுடனான போர்க்குற்ற விசாரணை நீதிமன்ற,ம் 50 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. தற்போது 64 வயதான சார்ள்ஸ் டெய்லர், ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்பொன்றின் தலைவராக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர் 2003ஆம் ஆண்டு சர்வதேச நிர்ப்பந்தங்கள் காரணமாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், சியாரா லியோனில் பயங்கர வன்முறையில் ஈடுபட்ட குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகித்து அவற்றுக்குப் பதிலாக இரத்தினங்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். …
-
- 0 replies
- 301 views
-
-
மாவோயிஸ்ட்களிடம் 6 ஆயிரம் ரொக்கெட் லோஞ்சர்கள் இருப்பதாகவும், ஆயுதங்கள் கொள்முதலுக்காக அவர்கள் ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் தேசிய புலனாய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆயுதங்கள் நிர்வாக பிரிவு தலைவராக கருதப்படும் ராமகிருஷ்ணன் என்பவர், அண்மையில் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து மையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆந்திர மாநிலம் வாராங்கல்லை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் ஒரு பயிற்சி பெற்ற இன்ஜினி…
-
- 3 replies
- 719 views
-
-
சிரிய இராணுவத்தின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 92 பேர் பலி. சிரிய ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 32 குழந்தைகள் உட்பட 92 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்பதற்காக கடந்த 14 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹெளலாவில் நேற்று இராணுவம் நடத்திய தாக்குதலில் இளம் பிஞ்சுகள் அகோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சிலரது மண்டை ஓடுகள் பிளந்து இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிற காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சிரிய ராணுவத்தின் கோரத் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன…
-
- 2 replies
- 545 views
-
-
ரஷ்யா, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் பெயரிடப்படாத புதிய நீண்டதூர ஏவுகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. நேட்டோவின் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை ஊடுருவி செல்லும் வகையில் இந்த புதிய ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ஐரோப்பாவில் தமது புதிய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை நேட்டோ செயற்படுத்தி சில நாட்களில் ரஷ்யா இந்த பரீசோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுகணை ஆறாயிரம் கிலோமீற்றர் வரை சென்று இலக்கை தாக்கக் கூடிய திறன் கொண்டதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் தமது முதலாவது ஏவுகணை பரிசோதனை தோல்வியில் நிறைவடைந்த நிலையில், ரஷ்யா இந்த பரீசோதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நேட்டோ தமது அணு செயற்பாட்டை த…
-
- 6 replies
- 983 views
-
-
தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, "ராகுல் மக்கள் சேவகர் பேரவை' சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. அதில், கோஷ்டித் தலைவர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்ததால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையுண்டபோது, அவருடன் 16 பேர் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மூவருக்கு, சுப்ரீம் கோர்ட் விதித்த தூக்குத் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை விமர்சித்து, இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலை…
-
- 0 replies
- 380 views
-
-
பாரதத்தின் இளைய தலைவர், காங்கிரஸ் கட்சியில் எப்போது வேண்டுமானாலும், பிரதமர் பதவியை அடைய தகுதி பெற்றவர் என்று கூறப்படும் ராகுல், பார்லிமென்டில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 22 நாட்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. 35 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் 13 நாட்களே சபைக்கு வந்திருந்தார். மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என, சபையின் எந்த பெரிய விவாதங்களிலும் அவர் பங்கு பெறவில்லை.காங்கிரஸ் தலைவர் சோனியா, 16 நாட்கள் சபைக்கு வரவில்லை. எப்போதும் போல், அவர் சபையின் எந்த விவாதங்களிலும் பங்கு பெறவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மற்றும் பா.ஜ கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபாவின் அனைத்து நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று 100 சதவீத வருகையை பதிவு செய்த…
-
- 0 replies
- 427 views
-
-
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பில் கடந்த 6 நாட்களாக காணப்பட்ட சரிவு இன்றும் தொடர்கிறது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.39 ஆக சரிந்து அதிர்ச்சி அளித்த நிலையில் இன்று மேலும் 43 காசுகள் வரை சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.82 ஆக இருந்தது. மதியத்திற்கு மேல் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.56.21 ஆக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நிலவி வரும் நிதிச் சிக்கல் காரணமாகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பும் குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாகஇந்திய பங்குசந்தைகளில் …
-
- 8 replies
- 1.5k views
-
-
யுறோ வலயத்தில் கிறேக்கம் தொடர ஐரோப்பிய தலைவர்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. கிறேக்கம் யுறோ வலயத்தில் தொடர்ந்து இருக்கவேண்டுமெனவும், வழங்கிய உறுதிமொழிகளை அந்த நாடு கடைப்பிடிக்கவேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விரும்புவதாக ஐரோப்பிய சபையின் தலைவர் ஹேர்மன் வான் றொம்புயி தெரிவித்தார். உத்தியோகப்பற்றற்ற முறையில் பிறஸல்ஸில் இடம்பெறும் ஐரோப்பிய உச்சி மகாநாட்டில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் உரையாற்றியபோது, கிறேக்கம் மேற்கொண்டுள்ள மிக முக்கியமான சீர்திருத்தங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது, அந்நாடு பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு முக்கியமானதென கூறினார். 2010 ஆம் ஆண்டில் இருந்து, கிறேக்கத்திற்கு உதவியாக 150 பில்லியன் யுறோவை, ஐரோ…
-
- 4 replies
- 881 views
-
-
மத்திய அரசை நடத்துவது ஐ.மு. கூட்டணியா? எண்ணெய் நிறுவனங்களா? வைகோ கேள்வி பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, மத்திய அரசை நடத்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா? கொள்ளையடிக்கும் எண்ணெய் நிறுவனங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் காரணம் காட்டி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை ஆகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகள்தான், பணவீக்கத்துக்கும், ரூபாய் மதிப்பு சரிவதற்கும் காரணம் ஆகும். பெட்ரோல் விற்பனை மூலம் எண்ணெய்…
-
- 1 reply
- 463 views
-
-
உலகில் கடந்த நூறு வருடங்களாக நடைபெற்ற விடயங்களை 10 நிமிடம் கொண்ட வீடியோவாக உருவாக்கி உள்ளார்கள் உலகில் நடை பெற்ற சரித்திரத்தை மாற்றிய 100 விடயங்கள், முக்கிய தலைவர்களின் பேச்சுக்கள் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன 1911 முதல் 2011 வரை வீடியோவை கண்டு களியுங்கள் youtube இலும் இது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே.
-
- 0 replies
- 665 views
-
-
20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவும், சீனாவும் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தி, தம் நலன் சார்ந்த போட்டியிலீடுபடுகின்றன. இந்து சமுத்திரத்தில் உள்ள பல நாடுகளில், சீனா தன் துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. அதன் மூலம் அதன் கடற்படை இந்துப் பிராந்தியத்தில் படிப்படியாக விஸ்தரிக்…
-
- 0 replies
- 574 views
-
-
மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளன. இதனால், மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும் வாய்ப்பு உள்ளது என, பா.ஜ தெரிவித்துள்ளது.பா.ஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பா.ஜ., எம்.பிக்களுக்கு, மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்தார். நடப்பு கூட்டத் தொடரில், பல நேரங்களில், காங்கிரஸ் கட்சிக்கு, எங்கள் எம்.பிக்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது முறையாக பதவியேற்று, மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளதாக பெருமையுடன் கூறுகின்றனர். ஆனால், இந்த மூன்று ஆண்டுகள…
-
- 12 replies
- 967 views
-
-
ஆரம்ப பொது வழங்கல் (Initial public offering, அல்லது IPO) எனப்படுவது, ஒரு நிறுவனம் தனது பொதுப் பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதைக் குறிக்கின்றது இது நிறுவனங்கள் தமது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டு தேவையான நிதியினைத் திரட்டிக்கொள்வதற்கான ஒரு வழியாகும். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமன்றி பாரிய நிறுவனங்களும் இதனை நிதிதிரட்ட உபாயமாகக் கையாள்கின்றன. அவ்வகையில் தற்போது பரபரப்பாக அனைவரையும் பேசவைத்துள்ள ஒரு விடயம் பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமாகும். சமூகவலையமைப்பு மற்றும் இணைய உலகில் ஜாம்பவானான பேஸ்புக்கின் ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் ( IPO- Initial public offerings) கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. நஸ்டக் (Nasdaq stoc…
-
- 3 replies
- 861 views
-
-
புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம். சென்னை: புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல், செப்டெம்பர் மாதம் 5ம் தேதி வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை குடியரசுத்…
-
- 11 replies
- 1.7k views
-
-
தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை கைவிடுவதாக இந்தியா திடீரென்று அறிவித்துள்ளது. வியட்நாமுடன் கடந்த 2006-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை இந்தியா மேற்கொண்டு வந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.சீனாவின் எதிர்ப்புக்கு பணியாமல் இந்தியா தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆய்வை கைவிடுவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் திடீரென்று அறிவித்துள்ளது. வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலை கருதி இந்த ஆய்வை கைவிடுவதாக இதற்கு விளக்கம் கூறியுள்ளது. இந்த ஆய்விற்காக இந்திய அரசு ரூ.244 கோடி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வை கைவிடப்பட…
-
- 23 replies
- 2.5k views
-
-
பாகிஸ்தான் வழியாக நேட்டோ படைகளுக்கு கொண்டு செல்லப்படும் ஒரு டிரக் பொருட்களுக்கு 5000 டாலர் வரி கொடுக்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இவர்களுக்கு தேவையான பெட்ரோல் உள்பட அத்தியாவசிய பொருட்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்கு டிரக்குகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக அமெரிக்கா வரி செலுத்துகிறது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, நேட்டோ படைகளுக்கு பொருட்கள் எடுத்து செல்லும் டிரக்குகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்…
-
- 0 replies
- 717 views
-
-
டெல்லி: நாட்டின் அடுத்த பிரதமராக குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 13 சதவீதம் பேரும், சோனியா காந்தி பிரதமராக 9 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ABP நியூஸ் மற்றும் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏ.சி.நீல்சன் ஆகியவை இணைந்து ஒரு சர்வே நடத்தியுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, அடுத்த பிரதமராக 17 சதவீதம் பேர் குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 539 views
-
-
இந்திய மீனவர்களை இத்தாலி கப்பல் படை வீரர்கள் சுட்டுக் கொன்ற வழக்கு விவகாரத்தில் இந்திய அரசின் செயற்பாட்டினால் அதிருப்தி அடைந்துள்ள இத்தாலி, புதுடெல்லியில் உள்ள தமது தூதுவரை திருப்பி அழைக்கப் போவதாக எச்சரித்துள்ளது. இத்தாலிய கப்பல் படை வீரர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று கொல்லம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த கொல்லம் கோர்ட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இது குறித்து இத்தாலி நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, இரு வீரர்களையும் இத்தாலி அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை இந்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. இது குறித்து இத்தாலிய பிரதமர் மரியோ மோன்டி மூன்று முறை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங…
-
- 3 replies
- 1.1k views
-
-
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரிட்டிஷ் எம்பிக்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளனர்.அந்த கடிதத்தில், கூடங்குளம் சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சிறிய அளவில் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையாலும் கூடங்குளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அணுசக்தி கழகத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்த எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள எம்பிக்கள், கூடங்குளத்தில் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் க…
-
- 0 replies
- 565 views
-
-
இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் http://chinavsindia.org/index.html
-
- 0 replies
- 1.9k views
- 1 follower
-
-
காலஞ்சென்ற ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் 26 அடி உயரமான சிலையொன்று அமெரிக்காவின் சிகாகோ நகரின் பயோனியர் சதுக்கத்தில் நிறுவும் பணிகள் கடந்த வருடம் ஜூலை முதல் நடைபெற்றன. துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியத்தாலான இந்த சிலை 40,000 பவுண்டுகள் எடையுடையது. "சேவார்ட் ஜான்ஸன்" எனும் சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கினார். 1955 ஆம்ஆண்டு வெளியான 'தி செவன் இயர் இட்ச்' எனும் திரைப்படத்தில் வரும் மர்லின் மன்றோவின் வெகு பிரபல்யமான காட்சியொன்றை சித்தரிக்கும் விதத்தில் இச்சிலை வடிமைக்கப்பட்டது. இச்சிலை நிறுவப்பட்ட நாள்முதல் கடும் கண்டனங்களும், சர்ச்சைகளுக்கும் எழுந்தன. சிலை தற்பொழுது அகற்றப்பட்டு 'பாம் ஸ்பிரிங்க்' என்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ…
-
- 16 replies
- 3.7k views
-
-
கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதையை முன்வைத…
-
- 1 reply
- 673 views
-
-
நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்! தனித்தமிழ்நாடு என்ற ஒன்று தற்சமயம் அமைவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அந்தக் கொள்கையை, அந்த திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று, அதை புரியவைத்து, அதற்கான அத்தியாவசிய தேவையை உணர்த்தி பொதுமக்கள் ஆதரவுடன் அதற்கான போராட்டத்தில் இறங்குவதற்கான தலைமையோ, இயக்கமோ தற்சமயம் தமிழகத்தில் ஒன்றுகூட கிடையாது. ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம். ஓட்டரசியலில் இருக்கும் கட்சிகள் தமிழ்தேசியக்கொள்கையை சூடுபறக்கும் உரைகளுக்காக பயன்படுத்திக் கொள்வார்களேயொழிய அதற்கான செயல்களில் இறங்கமாட்டார்கள். ஏனெனில் இறங்கினால் எக்கச்சக்கமாக இழக்கத் தயாராக இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலேயே ஒரு வரலாற்று உதாரணம் உண்டு. அதன் பெயர் திமுக! திமுக என்ற கட்சி ஒரே இரவில் அம்பாரி ஏற…
-
- 4 replies
- 1.8k views
-
-
அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று இந்திய நாணயச் சந்தையில் டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு கட்டத்தில் ஒரு டாலருக்கு 54.46 என்ற அளவுக்கு வீழ்ந்தது. பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் சற்று மீண்டது. இந்த மாதிரியான வீழ்ச்சிக்கு, இந்தியாவின் ஏற்றுமதிகளில் ஏற்பட்டிருக்கும் சரிவும், இறக்குமதிகள் தொடர்பான செலவு அதிகரித்திருப்பதும் ஒரு காரணம் என்று பொருளாதாரப் பகுப்பாய்வாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கூறினார். ஏற்றுமதிகள் சரிவுக்கு ஐரோப்பிய பொது நாணய நாடுகளிடையே (யூரோ வலயம்) நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒரு பகுதிக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் ஏற…
-
- 0 replies
- 774 views
-
-
http://youtu.be/bnLd1rQHfSw 2009 மே, ஈழத்தில் வன்னி முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததோ அதை விட கொஞ்சம் குறைவாகவே நடத்திருயிந்த முன்னாள் யுகோசொலவாக்கியாவின் பொஸ்னிய - சேர்பிய யுத்த கால சேர்பிய இராணுவத் தளபதியான Ratko Mladic சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் யுத்த காலத்தில் சரணடைந்த.. பிடிபட்ட.. சுமார் 7000 பொஸ்னிய முஸ்லீம் இளைஞர்களை மற்றும் சிறுவர்களை பொதுமக்களை கையைக் கட்டி.. சுட்டுக் கொன்று புதைகுழிகளில் புதைத்தவர். இதனை இவர் பொஸ்னிய - சேர்பிய யுத்தத்தின் போது 1992- 1995 காலப் பகுதியில் மேற்கொண்டிருந்தார். குறிப்பாக 1995 யூலையில் Srebrenica என்ற பொஸ்னிய முஸ்லீம்களின் இடத்தை ஆக்கிரமித்து மேற்கொண்ட படுகொலை முக்கியமானது..! களத்தில் நின…
-
- 0 replies
- 745 views
-