உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
வெளிநாட்டு குற்றவாளிகளையும், பயங்கரவாத சந்தேக நபர்களையும் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தும் ஏறத்தாழ 900 சந்தர்ப்பங்களை பிரான்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்ற நீதிபதிகள் தடுத்துள்ளதாக பிரிட்டிஷ் ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் மத தீவிரவாதியான அபு கட்டாடா பிரிட்டனிலிருந்து ஜோர்டானுக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் “சர்ச்சைக்குரிய 39ஆவது சட்டத்தைப் பாவித்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்ற நீதிபதிகள் இத்திட்டத்தை இடைநிறுத்தினர். இச்சட்டத்தை பாவித்து சோமாலிய குற்றவாளிகளும் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழரும் பிரிட்டனில் தொடர்ந்து தங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற …
-
- 0 replies
- 418 views
-
-
ஜப்பானில் இயங்கிவந்த கடைசி அணு உலையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அணு சக்தி இல்லாத ஜப்பானை வரவேற்கும் பேரணியில் 5000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர் 2011 மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்த அணு உலைகள் உருகிப்போன சம்பவத்தை அடுத்து ஜப்பான் மேற்கொண்டுவரும் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹொக்கொய்டோ நிர்வாக எல்லையில் அமைந்துள்ள டோமாரி அணுமின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலைதான் பழுதுபார்க்கும் பணிக்காக இப்போது மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜப்பான் கடந்த 40 ஆண்டுகளில் முதல்தடவையாக அணு மின்சாரமின்றி இயங்குகின்றது. கடந்த ஆண்டுவரை, ஜப்பான் அதன் மின்…
-
- 11 replies
- 1.1k views
-
-
அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒசாமா பின் லாடனின் உடல் இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக, பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பில் வாரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி, அமெரிக்காவின் சீல் கடற்படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் ஒசாமா பின்லாடன் பலியானார். பாகிஸ்தானின் அபோதாபாத்தில் நடந்த இந்த தாக்குதலுக்குப்பின், ஒசாமாவின் உடலை கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரபல தொல்பொருள் ஆய்வாளரான பில் வாரன் என்பவர் அமெரிக்கா கடலில் வீசிய ஒசாமாவின் உடல் அடங்கிய பை எங்குள்ளது என தான் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கும் கப்பல்களின் இருப்பிடத்தை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியில் நிப…
-
- 3 replies
- 998 views
-
-
திருவண்ணாமலை ஆரணி கைலாசநாதர் கோவில் தேர்த்திருவிழாவின் போது, திடீரெனெ தேர் நிலைசாய்ந்து சரிந்ததில் 5 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 அடி உயரம் கொண்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த குறித்த தேர், சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு வீதியில் வலம்வந்து கொண்டிருந்தது. அப்போது ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது தேரின் முன்பக்க அச்சு முறிந்து தேரின் முன் சக்கரம் தனியாக பிரிந்து கொண்டதால் தேர் நிலை சாய்ந்துள்ளது. இவ்விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 6 பேர் கவலைக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவற்த…
-
- 8 replies
- 1.5k views
-
-
மாஸ்கோ: ரசிய புரட்சியாளர் விளாடிமிர் லெனினை அவரது தோழரான ஜோசப் ஸ்டாலின்தான் விஷம் கொடுத்து கொலை செய்ததாக புதுகதை ஒன்று கிளம்பி உள்ளது. கம்யூனிச சித்தாந்தத்தின் மூலம் புரட்சியை உருவாக்கியவர் விளாடிமிர் லெனின். ரசியாவில் வீரஞ்செறிந்த புரட்சியை நடத்தியவர். ரசிய அதிபராக லெனின் இருந்த காலத்தில் அவருக்குப் பின் அதிபர் பொறுப்பேற்கக் கூடிய வகையில் செல்வாக்குமிக்க மனிதர்களாக இருந்தவர்கள் ஸ்டாலின் மற்றும் டிராட்ஸ்கி. தொடக்க காலத்தில் லெனின், ஸ்டாலினை ஆதரித்ததாகவும் பின்னர் டிராட்ஸ்கிதான் தமக்குப் பின்னர் சரியான நபர் என முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் ஸ்டாலினின் சர்வாதிகாரத்தனத்தை அவர் விமர்சித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்ச…
-
- 0 replies
- 703 views
-
-
ஐரோப்பிய தொழிற்சாலைகளில் அரைப்பங்கு றோபோக்கள் பணிக்கு வரப்போகின்றன.. வரும் பத்து வருடங்களில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் உதவியாளனும் நண்பனாகவும் மாறப்போவது ரோபோக்களே.. குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவோருடைய இடங்களை இனி இந்த றோபோக்களே நிரப்பப் போகின்றன. இதற்காக எஸ்.எம்.ஈ இரக றோபோக்களை கொள்வனவு செய்யும் முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன. எஸ்.எம்.ஈ றோபோக்கள் மனிதனுடன் சேர்ந்து வேலை செய்வதற்காக புரோகிராம் செய்யப்பட்ட சிறிய ரோபோக்கள். 2005 – 2009 காலப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த ரோபோக்கள் சிறியவை ஆனால் ஓர் உதவியாளரின் பணியை செப்பமாக செய்யக்கூடியவை. விலை ஓர் இலட்சம் அமெரிக்க டாலர்கள், இரண்டு சாதாரண பற்றரியில் இயங்கும், வேலைத்தல ம…
-
- 0 replies
- 424 views
-
-
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த முத்துக்குமரன் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி பலியானார்.இதனையடுத்து வரும் ஜூன் 12 ம் தேதி நடக்கவிருக்கும் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தரப்பில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இத்தேர்தலில் தி.மு.க.,போட்டியிடாது என அதன் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்த தேர்தலில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.இங்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமும்,தமிழக அரசும் இணைந்து முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீ…
-
- 2 replies
- 605 views
-
-
மாஸ்கோ: கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்துவதை நேட்டோ உடனடியாக நிறுத்தாவிட்டால் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது. போலந்து, செக், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, போஸ்னியா, பல்கேரியா, சரயேவோ, லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ், துருக்கி, கிரீஸ் உள்ளிட்டவை கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள சில நாடுகளாகும். இதில் லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்டவை முன்னாள் சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த நாடுகளாகும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் சில சேர்ந்து விட்டன. இதனால் ரஷ்யா ஏற்கனவே 'காண்டாகி…
-
- 4 replies
- 1.2k views
-
-
:சத்தீஸ்கர் மாநிலத்தில்,மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால்,சிறையில் உள்ள 17 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும்;மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும்; பழங்குடியினர் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு தரப்புக்கும்,மாவோயிஸ்டுகள் தரப்புக்கும் இடையே நடைபெற்ற நான்கு சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து மேனன் மே 3ம் தேதியன்று, அதாவது இன்று விடுவிப்பதாக ஊடகங்களுக்கு அனுப்பிய…
-
- 1 reply
- 537 views
-
-
ஆப்பிரிக்க நாடான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் கடந்த ஆண்டு உதயமானது. அதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இரு நாட்டின் எல்லையில் ஹெக்லிக் என்ற பகுதி உள்ளது. இங்கு ஏராளமான எண்ணைக் கிணறுகள் உள்ளன. இவற்றுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால்மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹெக்லிக் பகுதியை தெற்கு சூடான் ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. அங்கிருந்து வெளியேறுமாறு சூடான் எச்சரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக் கொள்ளாததால் தெற்கு சூடான் மீது சூடான் விமானம் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது இரு தரப்பு ராணுவமும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன. சண்டையில் இருந்து விலகி இரு ராணுவமும் தங்கள் நாட்டு உள்பகுதி…
-
- 0 replies
- 559 views
-
-
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது லட்சமாக அதிகரித்துள்ளது. இது அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதமாகும். இந்த நாடுகள் அனைத்திலும் ஒற்றை நாணயமாக யூரோவின் பயன்பாடு தொடங்கிய பிறகு, இப்போது தான் இந்த அளவுக்கு அந்த நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.இந்த நாடுகளில் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்று தொழில்துறை வல்லுநர்கள் வெளியிட்டுள்ள, தாக்கத்தை செலுத்தக் கூடிய ஒரு முக்கிய ஆய்வறிக்கை வந்துள்ள நிலையில், வேலையின்மை தொடர்பிலான இந்தத் தகவலும் வந்துள்ளது. யூரோ நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறும் பிபிசியின் பொருளாதாரச் செய்தியாளர், இது ச…
-
- 0 replies
- 515 views
-
-
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த கலவரத்தில், 20 பேர் பலியாகியுள்ளனர். எகிப்தில் ஹொஸ்னி முபாரக் ஆட்சி, மக்கள் புரட்சி மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இராணுவ உயர்மட்டக் குழு தலைமையில் இடைக்கால ஆட்சி நடக்கின்றது. இம்மாதம், 23 மற்றும் 24ம் திகதிகளில் அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற உள்ளது. ஏழு பிரதான கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தல் ஆணையகமும், இடைக்கால இராணுவ உயர்மட்ட குழுவும் தேர்தலை முறைப்படி நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சில கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன. இதற்கிடையே தலைநகர் கெய்ரோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை கண்டித்து, சில கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஒர…
-
- 0 replies
- 426 views
-
-
அமெரிக்காவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் சீன அரசுடன் உயர் மட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று (புதன்) புறப்பட்டு பீஜிங்கை வந்தடைந்தார். இவ்விஜயத்தின் போது சீன அரசுடன் மிகச் சிக்கலான இராஜதந்திர நகர்வுகள் குறித்தும் பொருளாதாரம் குறித்தும் கிளின்டன் பேசவுள்ளார். இவற்றில் சீனாவின் கண் பார்வையற்ற மனித உரிமை ஆர்வலரான சென் குவாங் செங் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு நிமித்தம் தஞ்சம் கோரியிருக்கும் விடயம் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் கிராமங்களில் மேற்கொள்ளப் படும் மனித உரிமை மீறல்களினைத் தட்டிக் கேட்பவரான கண் பார்வையற்ற சென் குவாங் செங் ஷான்டொங் மாகாணத்திலுள்ள இவரது கிராமத்தில் மனித உரிமைகள் அமைப்பின் உறுப…
-
- 0 replies
- 464 views
-
-
அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று ஆப்கானில் தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது ஒருநாள் பயணத்தை முடித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இத்தாக்குதல்கள் ஒபாமாவை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன. இச்சம்பவத்திற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லாடனின் நினைவு தினத்தை முன்னிட்டு தீவரவாதிகள் திடீர் தாக்குதலி்ல் ஈடுபடக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை ஆப்கான் பொலிஸாருக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆப்கானி்ன் கிழக்கு மாகாணத் தலைநகரில் அமெரிக…
-
- 0 replies
- 572 views
-
-
ஒசாமா பின்லேடனால் 10 ஆண்டுகளுக்கு முன் தரைமட்டமாக்கப்பட்ட நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடம் மீண்டும் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய்க்கு அடுத்ததாக உலக உயர்ந்த கட்டிடமான இதன் உயரம் 541 மீட்டர். செப்டம்பர் 11, 2001ல் வெடிகுண்டுகளை நிரப்பிய விமானங்கள் மூலம் நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கட்டிடங்களை பின்லேடனின் தீவிரவாதிகள் மோதி தகர்த்தனர். நூற்றுக்கணக்கானோர் பலியான அந்த பயங்கரம் நடந்து 10 ஆண்டு தேடலுக்கு பிறகு கடந்த ஆண்டு மே 2ம் தேதி பாகிஸ்தானில் பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். தரைமட்டமான உலக வர்த்தக மைய கட்டிட இடத்தில் மீண்டும் பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. அதன் உச்சியில் 124 மீட்டர் உயர தூண் அமைக்கும் பணி …
-
- 0 replies
- 557 views
-
-
திங்கட் கிழமை அதிகாலை 4.50 மணிக்கு சீனா அதன் தென் மேற்கு மாநிலமான சிச்சுவானிலிலுள்ள க்சிச்சாங் ஏவுகணைத் தளத்திலிருந்து பெயிடோவு-2 எனப்படும் இரு செய்மதிகளை Long March - 3B எனும் ராக்கெட்டின் மூலம் பூமியைச் சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதைக்கு செலுத்தியுள்ளது. இதற்கு முன்னரும் சீனா பெயிடோவு ரக செய்மதிகள் 11 ஐ விண்ணில் செலுத்தியிருந்தது. இச் செய்மதிகள் புவியியற் கண்காணிப்புக்காகவும் தகவல் தொடர்பு வலைப் பின்னல்களின் குறித்த இலக்குகளை நிர்ணயிப்பதற்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இரு செய்மதிகளை ஒரேயொரு ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்துவது சீனாவுக்கு இதுவே முதன் முறையாகும். இம்முறை செலுத்தப்பட்ட இச் செய்மதிகள் பெயிடோவு நெட்வேர்க்கின் துல்லியத்தை அதிகரிக்க அல்லது அத…
-
- 0 replies
- 703 views
-
-
வரும் மே 7ம் திகதி சுமார் 40 வருடங்கள் கழித்து சிரியாவில் உள்ள பல கட்சிகளும் ஆசனங்களைப் பெற வழிவகுக்கும் பாராளுமன்றத் தேர்தல் சிரியாவில் இடம்பெறவுள்ளது. சிரியாவில் ஏற்கனவே பல தடவை இந்த தேர்தல் பிற்போடப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. இதற்கு முன்னர் சிரியாவின் பிரதான கட்சியான தேசிய முற்போக்கு முண்ணனிக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் நிற்பதற்கு அனுமதி இருந்தது. எனினும் அங்கு ஆளும் தரப்புக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் புரட்சி வெடித்து பல்லாயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஐ.நா இன் தலையீட்டை அடுத்தே சிரிய அரசு இந்த தேர்தலை மும்மொழிந்துள்ளது. இதற்காக எட்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த சுமார் 7000 வேட்பாளர்கள் பாராளுமன்றத்தி…
-
- 0 replies
- 445 views
-
-
வாஷிங்டன் : பாகிஸ்தானுக்குள் ஆளில்லா விமான குண்டு வீச்சை உடனே நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவை பாகிஸ்தான் எச்சரித்தது. ஆனால், தாக்குதல் தொடரும் என்று அமெரிக்கா நேற்று பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையோர மலைப் பகுதிகள் அல்கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது. எனவே, தீவிரவாதிகளை கொல்ல ஆப்கன் படை தளத்தில் இருந்து ஆளில்லா விமானங்களை அமெரிக்கா அனுப்பி குண்டு வீசி வருகிறது. சமீபத்தில் அப்படி நடந்த குண்டு வீச்சில் தீவிரவாதிகளுக்கு பதிலாக பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியாகினர். அதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இனி அனுமதியின்றி பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த கூடாது என்று எச்சரித்தது. இதுபற்றி நேற்று முன்தினம்…
-
- 0 replies
- 467 views
-
-
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் ஆகின்றது. எனினும் இதற்குப் பிறகும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இன்னும் சோமாலியா, யேமன் போன்ற மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் அல்கொய்தா மற்றும் தலிபான் இயக்க போராளிகளின் தாக்குதல் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. அல் கைதாவின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு தினம் நெருங்கும் நிலையில் பாகிஸ்தான் அல் கைதாவிற்கு புதிய தலைவர் நியமிக்கபப்ட்டுள்ளார். பார்மன் அலி ஷின்வாரி எனப்படும் 30 வயதுடைய இந்நபர் பாகிஸ்தானின் கைபர் கணவாயைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர் என்பதுடன் ஆங்கில அறிவும் கணனி தகவற் தொழில் நுட்ப அறிவும் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 374 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன்,முருகன்,பேரறிவாளன்,நளினி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரும் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர்.இந்த மனுக்களை நிராகரித்து ஜனாதிபதி, கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.இதையடுத்து,வேலூர் சிறையில் அவர்களை செப்டம்பர் 9-ம் தேதி தூக்கிலிடுவ…
-
- 4 replies
- 611 views
-
-
சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச (Pornographic) திரைப்படக்காட்சிகள் அடங்கிய மெமரி டிஸ்க் ஒன்றில் அல் கைதாவினரின் நூற்றுக்கு மேற்பட்ட இரகசிய உள்ளக தகவல்கள் உள்ளடங்கியிருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மனிய புலனாய்வு பகுறியீட்டாளர்கள் (Cryptologists) தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் - புடாபெஸ்ட், ஹங்கேரி நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு ஜேர்மனுக்கு திரும்பிய 22 வயதுடைய ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர், பேர்லினில் கடந்த வருடம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார். அவர் தனது உள்காற்சட்டையினுள் மறைத்து வைத்திருந்த, குறித்த ஆபாச காட்சிகள் அடங்கிய மெமரி ஸ்டிக்கை மீட்டெடுத்த ஜேர்மனிய புலனாய்வு காவற்துறையினர் அதனை ஆராய்ந்த போதே அதில் அல்கைதாவின் இரகசிய தகவல்கள் இருந…
-
- 0 replies
- 722 views
-
-
CANBERRA, Australia (AP) — An Australian billionaire said Monday he'll build a high-tech replica of the Titanic at a Chinese shipyard and its maiden voyage in late 2016 will be from England to New York, just like its namesake planned. Weeks after the 100th anniversary of the sinking of the original Titanic, Clive Palmer announced Monday he has signed a memorandum of understanding with state-owned Chinese company CSC Jinling Shipyard to build the Titanic II. "It will be every bit as luxurious as the original Titanic, but ... will have state-of-the-art 21st-century technology and the latest navigation and safety systems," Palmer said in a statement. He called the pro…
-
- 0 replies
- 408 views
-
-
தமிழகத்தில் ஜூன் 12ஆம் திகதியன்று மீண்டும் ஓர் இடைத் தேர்தல் மோதல் உருவாகப் போகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், எதிரணியில் இருக்கும் தி.மு.க.வும் களத்தில் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எளிமை மிக்கவராக திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இறந்ததையொட்டி புதுக்கோட்டை இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதே சங்கரன்கோவில் இடைத் தேர்தலை விட அதிக எண்ணிக்கையில், அதாவது 52 சிறப்பு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து களமிறங்கியுள்ளது அ.தி.மு.க. அதுமட்டுமல்ல, கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுக்காமல் தானே களமிறங்குகிறது. புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவித்த அ…
-
- 0 replies
- 375 views
-
-
அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா நதியில் தனியாருக்கு சொந்தமான பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை மாலை இவ்விபத்து நடைபெற்றுள்ளது. இப்படகில் சுமார் 350 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். கடும் காற்று மற்றும் மழை போன்ற மோசமான காலநிலையில் சிக்கி இப்படகு விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துப்ரி மாவட்ட படகு துறை முகத்திலிருந்து நதியின் எதிர்ப்புறமுள்ள மெடார்டாரி எனும் இடத்துக்கு புறப்பட்டுச்சென்ற குறித்த இரண்டு அடுக்கு படகு, நதியின் மத்தியில் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. …
-
- 0 replies
- 546 views
-
-
லண்டனில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் போது, பாதுகாப்புக்காக மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது ஏவுகணைகளை நிறுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வரும் ஜூலையில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால், போட்டி நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிழக்கு லண்டன் பகுதியில் 700 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் ஏவுகணை நிறுத்த இங்கிலாந்து ராணுவம் முடிவு செய்துள்ளது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகள், லெக்சிங்டன் பில்டிங் வாட்டர் டவர் மீது நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த டவரில் மக்கள் வசிக்கு…
-
- 1 reply
- 398 views
-