உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
. இந்தியா அக்னி 5 என்னும் நீண்ட தூர ஏவுகணையை இன்று இரவு 7 மணிக்கு பரிசோதனை செய்ய உள்ளது. இது 5000 கிலோமிட்டர் வீச்சுக் கொண்டது. இப்பரிசோதனை வெற்றி அளிக்கும் பட்சத்தில் ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உரிமைகொண்ட நாடுகளிற்கு இராணுவத்தொழில்நுட்பத்தில் சமமான நிலையை இந்தியா அடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஒன்றிற்கு மேற்பட்ட அணுவாயுதங்களைக் காவிச்செல்லக் கூடிய பல்லிலக்கு ஏவுகணையாகும். விண்வெளியில் 800 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து செல்லும். இந்த ஏவுகணை செய்மதியைக் கொண்டுசெல்லக்கூடியவாறும் மாற்றப்படக்கூடியது. ஒரிஸ்ஸாவின் சிறிய தீவொன்றில் இருந்து ஏவப்படவுள்ளது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைமூலம் இந்தியா ஆசியாமுழுவதையும், ஐரோப…
-
- 12 replies
- 2.4k views
-
-
கருநாடகத்தில் நடைபெறவுள்ள ‘பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு’ தமிழ் மக்களின் உரிமைக்கான உன்னத நிகழ்வாக அமைய வேண்டுமென்று ஈழத் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்வின் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்குரல் உலக நாடுகளின் காதுகளில் ஒங்கி ஒலிக்கட்டும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில், எதிரியின் இரும்புக் கரங்களுக்குள் பிரசவமாகிய பொங்கு தமிழ் உலகின் மூலை முடுக்கெங்கும் தவழ்ந்து சென்று இன்று கருநாடகத்தில் வளர்ந்து நிற்கிறது. புலம்பெயர் தமிழர்களால் வளர்க்கப்பட்டுள்ள இந்தப் பொங்கு தமிழ் நிகழ்விற்கு, ஈழத் தமிழ் மக்கள் தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். காற்றாடியை முறித்தால் காற்றே வீசாதென்று சிங்களம் கனவு காண்கிறது. ஈழத் தமிழரின…
-
- 0 replies
- 525 views
-
-
சூடானின் திபர் ஒமர் அல் பஷீர் வியாழக்கிழமை தென் சூடானுக்கு எதிராகத் தனது யுத்தப் பிரகடனத்தை விடுவித்துள்ளார். தென் சூடான் அரச தலைவர்களை பூச்சிகள் என வர்ணித்துள்ள அவர் விரைவில் அவர்களுக்கு எதிராக பாடம் கற்பிக்க போவதாகவும் கூறியுள்ளார். தென் சூடான் அரசாங்கத்தைக் களைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த யுத்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். மிக நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் தென் சூடான் மிகச் சமீபத்திலேயே அதாவது ஜூலை 9 2011 இல் விடுதலை பெற்று தனி நாடானாது. தற்போது எண்ணெய் வளம் மிக்க தென் சூடானின் எல்லைப் பகுதிகளை கைப் பற்றுவதற்காக சூடான் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது. சூடானின் பாராளுமன்றத்தில் தென் சூடானின் ஆள…
-
- 0 replies
- 440 views
-
-
அமெரிக்காவுடன் மீண்டும் சுமுக உறவைத் தொடர முடிவு மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது குறித்து தெஹ்ரிக்-இ-தலிபான் தலைவர் ஹகீமுல்லா மெஹ்சூத் தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான்கள் மற்றும் அல்கொய்தா அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும், இதற்காக 21 பேரை கொண்ட தற்கொலைப்படையை தயார்படுத்தி இருப்பதாகவும் உளவுத்துறையை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் பத்திரிகை கூறியுள்ளது. தினம் ஒரு குண்டு வெடிப்பும், தற்கொலைப் படைத் தாக்குதலையும் சந்தித்து வரும் பாகிஸ்தானிற்கு தலிபான்களின் இந்த ரகசிய திட்டம்…
-
- 0 replies
- 449 views
-
-
உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது. இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அணை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து அடிக்கடி அணை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 96 தடவை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இனியும் 5386 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்து உள்ளனர். நிலச்சரிவை தடுக்க 355 இடங்களில் தடுப்பு நடவ…
-
- 0 replies
- 774 views
-
-
ஐ.நா. அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதுவராக பிரபல ஹொலிவூட் நடிகை அஞ்ஜெலினா ஜோலி நியமிக்கப்பட்டுள்ளார். இதே அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகக் கடந்த 10 வருடங்களாகப் பதவி வகித்த ஜோலி தற்போது பதவி உயர்வு பெற்று சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். நல்லெண்ணத் தூதுவராகப் பதவி வகித்தபோது உலகிலுள்ள 40 இடங்களுக்குச் சென்று அகதிகள் மறுவாழ்வுக்காக ஜோலி அரும்பணியாற்றியுள்ளார். கடந்தாண்டு ஒஸ்கார் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் ஆப்கானில் அகதிகள் மறுவாழ்வுக்காக ஜோலி செயலாற்றினார். அவரது சிறப்பான பணிக்காக பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா. அகதிகள் அமைப்பு முதல் முறையாக சிறப்பு தூதர் பதவியை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற பதவிகள் பொதுவாக ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக…
-
- 1 reply
- 578 views
-
-
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 22 ஆண்டுகள் போராடிய ஆங் சாங் சூகி இராணுவத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பின் தற்போது முதன் முறையாக ஆங் சாங் சூகி எதிர் வரும் ஜூன் மாதத்தில் ஓஸ்லோவிற்கு வருகை தருவதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்பயணம் குறித்து கடந்த ஞாயிறன்று நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன்ஸ் கர் ஸ்டோயிர், ஆங் சாங் சூகி உடன் தொலைபேசியில் பேசியதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஸ்வீன் மிச்செல்சன் தெரிவித்தார். மேலும் 1989ம் ஆண்டிற்கு பிறகு மியான்மரில் இருந்து நோர்வே வரும் முதலாவது எதிர்க்கட்சி தலைவர் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக இவருக்கு ந…
-
- 0 replies
- 406 views
-
-
மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த புல் ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. லண்டனை சேர்ந்த முல்லாக் ஏல நிறுவனம் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை நேற்று ஏலம் விட்டது. காந்தியின் ரத்த துளி படிந்த புல் மற்றும் சிறிது மண், ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. இவை 1948,ம் ஆண்டு ஜனவரி 30,ம் தேதி காந்தி கொல்லப்பட்டபோது, அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பி.பி.நம்பியார் என்பவரால் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நம்பியார் எழுதிய கடிதமும் வைக்கப்பட்டிருந்தது. இதுபோல காந்தியின் கண்ணாடி, அவர் பயன்படுத்திய ராட்டை, எழுதிய கடிதங்கள், அரிய புகைப்படங்கள், படித்த புத்தகம் போன்றவையும் ஏலம் விடப்பட்டன. கண்ணாடி ரூ.27 லட்சம், ராட்டை ரூ.22 லட்சம், அவர் படித்த…
-
- 5 replies
- 587 views
-
-
பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அட்டூழியங்களைக் கூறும் ஆவணங்கள் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் இறுதி ஆண்டுகளில் சித்ரவதைகளும் கொலைகளும் நடந்தமை குறித்து பிரித்தானிய அமைச்சர்களுக்கு தெரிந்திருந்தது என்பதைக் கூறும் அரசாங்க ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு புதனன்று திறந்துவிடப்படும். பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் சுதந்திரமடைந்த போது, இது குறித்த கோப்புகள் ரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கென்யாவின் மவு மவு கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் 1950 இல் மலாயாவின் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ஆகியோருக்கு எதிரான பிரிட்டனின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இதில் அடங்குகின்றன. டியோகோ கார்சியாவில் அமெரிக்க தளத்தை நிறுவ, வழி செய்வதற்காக சாகோஸ் தீவுகளில் நீண…
-
- 0 replies
- 421 views
-
-
மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகை அறிவித்து இருப்பதால் நானும் இந்த ரூ.80 கோடி பரிசை அறிவிக்கிறேன் என்று கூறினார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் கோடீசுவரர் ஆவார். முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த பர…
-
- 6 replies
- 1k views
-
-
மும்பை: கர்நாடகத்துக்கு தண்ணீர் தருவது பாம்புக்கு உணவு தருவது மாதிரி, அது சாப்பாடு போட்டவரையே கடிக்கும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார். இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களுக்கு நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மகாராஷ்டிரம் தனது தூத் கங்கா மற்றும் வர்ணா ஆறுகளில் இருந்து கர்நாடகத்தின் வறட்சி பாதித்த வட மாவட்டங்களுக்கு 2 டிஎம்சி நீரைத் தர ஒப்புக் கொண்டுள்ளது. இதற்குப் பதிலாக கர்நாடகம் தனது அல்மத்தி அணையிலிருந்து மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்துக்கு தண்ணீர் தரவுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் பால் தாக்கரே எழுதியுள்ள கட்…
-
- 1 reply
- 594 views
-
-
டெல்லி: பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹினா ரப்பானி கர் தனது பதவியை இழக்கக்கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராஸா கிலானி கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த புதிய குழு அமைக்கப்படும் என்றார். புதிய குழு பற்றி அவர் எந்த விவரமும் கொடுக்கவில்லை. அவரது பேச்சை வைத்து தான் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹினா ரப்பானி கரின் பதவி பறிபோகலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்த ஹினா வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவ…
-
- 0 replies
- 486 views
-
-
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு நேரில் வந்த சுஷ்மா சுவராஜ் அவர்களைத் தமிழர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். அரசியலுக்காக அனுதாபம் காட்டாமல் மனிதத்திற்காக இரக்கம் காட்டியவருக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் நிறைவேறிய பிறகு இந்தியாவுக்கும் இலங்கைக்கும்; இடையில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரி செய்வதற்காக காங்கிரசு அரசு பல முயற்சிகளை எடுக்கிறது. அதில் ஒன்றாகக் கொழும்புக்கு இந்திய மத்திய அரசு ஒரு தூதுக் குழுவை அனுப்புகிறது. இதில் சுஷ்மா தலைமைப் பதவியுடன் பயணம் செய்கிறார். செட்டிக்குளம் தடுப்பு முகாமைப் பார்வையிட திமுகவின் பிரமுகர்களும் விடுதலைச் சிறுத்தைத் தலைவரும் முன்ப…
-
- 0 replies
- 721 views
-
-
நோர்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 77 பொதுமக்களை கொன்ற சம்பவத்தில் குற்றஞ்சாட்ட நபர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள 'பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கூட்டுக் கொலைகளுக்கான' குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். ஆனால் ஆந்தூஸ் பேரிங் பிரேய்விக் குண்டுத்தாக்குதல் மற்றும் அதன்பின்னர் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பல கலாச்சாரங்களிலிருந்தும் இஸ்லாத்திலிருந்தும் நோர்வேயை பாதுகாப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் நேற்று நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது எல்லோரும் எப்படி கொல்லப்பட்டார்கள், மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தபோத…
-
- 1 reply
- 422 views
-
-
உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவால் மிக்க ஒன்றாக உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்விகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர்கள் சிலரின் கோரிக்கையின் பிரகாரம் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக அடுத்த மாதம் 05ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதலமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இம்மாநாட்டில் ஆரம்ப உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.…
-
- 2 replies
- 506 views
-
-
உலக வங்கியின் புதிய தலைவராக ஜிம் யோங் தெரிவு உலக வங்கியின் தலைவராக அமெரிக்க வாழ் தென்கொரியரான ஜிம் யோங் கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக வங்கியின் தலைவராக உள்ள ரூபர்ட் ஜிலோயிக்கின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் புதிய தலைவரை உலக வங்கி தலைமை நிர்வாகம் அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்கவாழ் தென்கொரியாவைச் சேர்ந்த ஜிம் யோங் கிம்மை பரிந்துரை செய்தார். அதன்படி உலக வங்கி இவரை புதிய தலைவராக அறிவித்துள்ளது. தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த ஜிம் யோங் கிம்(52) இதற்கு முன்பு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் எச்.ஐ.வி. எய்ட்ஸ் ஒழிப்புத் துறையின் இயக்குனராக இருந்தார். முன்னதாக அமெ…
-
- 0 replies
- 523 views
-
-
புதுடெல்லி:டெல்லி மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 272 இடங்களில் 142 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில்,காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி பா.ஜனதா 142 இடங்களிலும், காங்கிரஸ் 85,பகுஜன் சமாஜ் 12 மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 33 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்,மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு என, மூன்றாகப் பிரிக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 15-ம் தேதி நடந்தது.மூன்று மாநகராட்சிகளி…
-
- 1 reply
- 784 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 10 இடங்களில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அருகில் உயர் அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தபட்டதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தூதரகத்தின் மீது எவ்வித தாக்குதலும் நடக்கவில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒரே நேரத்தில் 10 இடங்களில் புகுந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து சில நிமிடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தனர். துப்பாக்கியால் சுட்டனர். ஆப்கன் பார்லி., மீதும் ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. நேட்டோ படைகள் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து ஆப்கனில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இந்த …
-
- 2 replies
- 738 views
-
-
சீனா தனது இந்து சமுத்திரப் பிராந்திய நடவடிக்கைகளுக்காக மிக நீண்டகாலத் திட்டமிடலுடன் மேற்கொண்ட குறிப்பாக இந்தியாவைச் சுற்றி போட்டுவைத்த முத்துமாலைத் திட்டத்தைப் சிதறடிக்கும் வகையில், அந்த முத்துமாலையைச் சுற்றி அமெரிக்கா பாரிய வளையம் ஒன்றை அமைத்துவருவது தற்போது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. மலாக்கா ஜலசந்தி ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நுழையும் தமது கப்பல்களுக்கு பாதுகாப்பாக சீனா சில நாடுகளில் துறை முகங்ளை அமைத்துவந்தது. இது String of pearls (முத்துமாலை) திட்டம் என பரவலாக அறியப்பட்டது. உலக அளிவில் 75 வீதமான எரிபொருள் வளைகுடாவின் ஊடாகவே வெளியேறுகின்றது. இந்த எரிபொருளைப் பாதுகாப்பாக சீனா கொண்டுசெல்வதற்காக, வளைகுடாவில் இருந்து தென் சீனா வரையான கடற்பிராந்திய…
-
- 0 replies
- 1.3k views
-
-
காரைக்கால்: நாடாளுமன்றத்தில் கட்சிகளின் எம்பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவனோ இக் குழுவில் இடம் பெறமுடியவில்லை என்றும் பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார், திருமாவளவன் இந்தக் குழுவில் இடம் பெறுவதை இலங்கை அரசு விரும்பவில்லை. இதனால் தான் அவரை இதில் சேர்க்காமல் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந் நிலையில் காரைக்காலில் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி, இலங்கைக்கு இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது. இவர்கள் அங்கு செல்வதன் மூலம் அங்குள்ள தமிழர்கள் போருக்குப் பிறகு உள்ள நிலையை தெரிந்து கொள்ள முடியும். இந்தக் குழு அங்கு செல்வதால்…
-
- 0 replies
- 724 views
-
-
பிரபல மலையாள நடிகர் கிஷோர் வீரப்பனாகவும், அவரைச் அதிரடிப் படை மூலம் சுட்டுக்கொண்ட விஜயகுமார் ஐபிஸாக அர்ஜூனும் நடித்துள்ள படம் 'வனயுத்தம்.’ இந்தபடத்தை குப்பி, காவலர் குடியிருப்பு படங்களின் மூலம் உண்மைச் சம்பவங்களை படமாக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷ் இயக்கியிருகிறார். உண்மையில் இந்தப் படத்துக்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிதான் தடை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் தடைவாங்கியிருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வனயுத்தம் படத்தின் கன்னடப் பதிப்பான ‘அட்டகாசத்துக்கும்’ தடைகோரிப்பெற்றிருகிறார் கோபால்! முன்னதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனுவில், "பல ஆண்டுகளாக வீரப…
-
- 0 replies
- 553 views
-
-
யாஹூ (Yahoo) இணைய நிறுவனம் மீண்டும் வேலைக் குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் மீண்டும் 2000 பணியாளர்களை நீக்கப் போவதாக யாஹூ அறிவித்துள்ளது. நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஸ்கொட் தொம்ஸன் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் பல மில்லியன் டொலர் நட்டத்தை யாஹூ சந்தித்து வருகிறது. எனவே ஆட்குறைப்பு மூலம் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் ஸ்கொட். 2011ல் யாஹூவில் 14,000 பணியாளர்கள் இருந்தனர். இப்போது இவர்களில் 2000 பேரை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு 375 மில்லியன் டொலர்களை சேமிக்கவும், வரிகள் …
-
- 0 replies
- 706 views
-
-
குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று (சனிக்கிழமை -ஏப்ரல் 14) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 5 அலகாகவும், குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு 4.1 அலகாகவும் பதிவாகியிருந்தது. இரு மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் பிந்தைய அதிர்வு ஏற்பட்டது. அதன் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகாகப் பதிவானது. குஜராத்தில் காலை 8.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கட்ச் பகுதியில் உள்ள வம்கா தாலுகாவில் மையம் கொண்டிருந்தது.நிலநடுக்கத்தின் அதிர்வை கட்ச் மாவட்டம் முழுவதும் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். தவிர, செளராஷ்டிர பகுதியில் வசிக்கும் மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததா…
-
- 1 reply
- 450 views
-
-
இரான்-உலக வல்லரசுகள் இடையிலான பேச்சுவார்த்தை இரானின் அணுத்திட்டம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இரானுக்கும் ஆறு முக்கிய வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெறுகின்றது. பிராந்தியத்தில் அதிகரித்துவரும் குழப்பநிலைமையை கட்டுப்படுத்த இந்த சந்திப்பு உதவும் என்று அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ்,ரஷ்யா மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் நம்புகின்றனர். தனது அணுத்திட்டம் சிவில் தேவைக்கானது என்று இரான் வாதிட்டு வருகின்றது; ஆனால் அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதாக மற்றபல நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. இரானின் நடவடிக்கையை தடுப்பதற்காக அந்நாட்டின் மீ…
-
- 5 replies
- 713 views
-
-
சூடான் : பிராந்திய மோதல் தீவிரமடைகிறது சுடானுக்கும், தென் சுடானுக்கும் இடையே எலைப்பகுதியில் தொடரும் மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன. தமது பகுதியில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் சுடானிய வான்படை குண்டு வீசி குறைந்தபட்சம் 5 பேரைக் கொன்றதாக தென் சுடான் குற்றஞ்சாட்டியுள்ளது. தெற்கு சுடானிய நகரான பெட்டியுவில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. தென்சுடானிய படைகளால் செவ்வாயன்று கைப்பற்றப்பட்ட பெட்ரோலிய வளம் மிக்க பிராந்தியமான ஹெக்லிக்கு அருகில் சுடானிய இராணுவம் நடத்திய தாக்குதலை தாம் முறியடித்த்தாக தென்சுடான் முன்னதாகக் கூறியிருந்தது. சுடானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்து கருத்து எதுவும் வரவில்லை. http://www.bbc.co.uk...nfighting.shtml
-
- 1 reply
- 585 views
-