உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
பீகார் மாநிலத்தில் ஒரு குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், ஒரு தாய் மற்றும் அவரது மகளை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூரம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி ஊரைவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியேறியது. இச்சம்பவத்தால் பெரும் அவமானத்திற்குள்ளான பெண்ணின் குடும்பத்தார், அவர் இருக்கும் இடத்தை கூறும்படி அந்த ஆணின் தாயாரிடம் தொடர்ந்து விசாரித்து வந்தனர். தன் மகன் எங்கு இருக்கிறான் என தெரியாது என அந்த தாய் பல முறை கூறியதை நம்பாத பெண் வீட்டார், அவர்களது பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்ற ஆணின் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தில், அந்த ஆணின் தாய் மற்றும் தங்கையை கடத்தி சென்று பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்…
-
- 1 reply
- 507 views
-
-
பாட்னா: பீகார் மாநிலத்தில் பிறந்து 3 மாதமே ஆன கைக் குழந்தை மீது கொள்ளை வழக்குப் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது பீகார் காவல்துறை. பீகார் மாநிலம் ¬சாபர்பூர் மாவட்டம் மினாபூர் காவல் நிலையத்தில்தான் இந்த கூத்தோ கூத்து நடந்துள்ளது. சமீபத்தில் இந்த மாவட்டத்தில் பேருந்தை வழிமறித்து கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நெகர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகாந்த் ராய், பப்பு குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக மினாபூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சசி காந்த் ராயின் 3 மாத கைக்குழந்தையான பிரவீன் குமாரின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் அங்கு சர்ச்சை எழுந்த…
-
- 0 replies
- 849 views
-
-
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் – சீனா மிரட்டல் Posted on December 11, 2021 by தென்னவள் 18 0 பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முடிவை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதைக் காரணம் காட்டி பீஜிங் குளிர்கா…
-
- 2 replies
- 443 views
-
-
பீஜிங், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட நகரங்கள் ‘அதிக ஆபத்து’ பட்டியலில் - புதிய ஆய்வு எச்சரிக்கை Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 01:18 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பீஜிங், டெல்லி, நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்கள் “அதிக ஆபத்து” பட்டியலில் காணப்படுவதாகவும், உலகின் 100 மிகப் பெரிய நகரங்களில் பல கடுமையான நீர் நெருக்கடி (Water Stress) கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் 39 நகரங்கள் மிகவும் அதிக நீர் நெருக்கடி நிலவும் பகுதிகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் நெருக்கடி என்பது, குடிநீர் விநியோகம் மற்றும் தொழில்துறைகளுக்காக பயன்படுத்தப்படும் நீரின் அளவு மற்றும் அங்கு கிடைக்கக்கூடிய நீர் வளங்களை மீறிச் …
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
பீஜிங்கின் ஆக்கிரமிப்பால் தாய்வானுடன் உறவுகளைப் பேணுவதற்கு தள்ளப்படும் ஐரோப்பா! பீஜிங்கின் ஆக்கிரமிப்பு காரணமாக ஐரோப்பா தாய்வானை நெருங்கச் செய்துள்ளது என்று ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்புக் குழுவின் தலைவரான ரஃபேல் க்ளக்ஸ்மேன், பிரெஞ்சு செய்தித்தாளான லிபரேஷன்க்கு அளித்த செவ்வியின்போது, தாய்வானுக்கு வலுவான ஐரோப்பிய ஆதரவைக் கோரியதாக தாய்வான் செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானுடன் ஈடுபாட்டுடனான ஒத்துழைப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தை ஐரோப்பாவிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஏற்றுக்கொண்டுள்ளன என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும் நோக்கம் கொண்டதாக உள்ளது என ரஃபேல் க்ளக்ஸ்மேன க…
-
- 0 replies
- 255 views
-
-
பீஜிங்: பீஜிங்கில் முறையற்ற வகையில் செயல்பட்டு வரும் இண்டெர்நெட் சைட்டுகளை தடைசெய்ய முடிவு செய்துள்ளது. தற்போது சீனாவில் கணக்கில்லாத அளவில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிறுவ னங்கள் உள்ளன. இவைகள் அந்தந்த மாகாண அரசுகளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதிகளவில் இவைகள் காணப்படுகின்றன. இதன்மூலம் நாட்டு மக்களிடையே எழுச்சியை தூண்டி விடும்வகையில் செய்திகள் பரப்பப்படுகின்றனவோ என்ற அச்சம் சீன அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தற்போது உள்ள சட்டதிட்டத்தின் மூலம் இவற்றை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை இருப்பதால் கையை பிசைந்து கொண்டுள்ளது. குவாங்÷ஷாஹூ டெய்லி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைட்டுகள் மூலம் அதிக வருமானம் அரசுக்கு க…
-
- 0 replies
- 836 views
-
-
சீன தலைநகர் பீஜிங்கில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் நேற்று கடும் மூடுபனி நிலவியது. இதனால் காற்றில் மாசுதன்மை அதிகரித்தது. நேற்று காலை மூடுபனியால் இலட்சக்கணக்கான மக்கள் தாங்க முடியாத தலை வலிக்கு ஆளாகினர். மேலும், பீஜிங் நகரில் வாழும் சுமார் 2 கோடி பேர் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளேயே முடங்கி கிடந்தனர். சிலர் முகமூடிகளை அணிந்தபடியே தமது அன்றாட செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். வீதியை முழுமையான மூடுபனியால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பீஜிங் நகரில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பீஜிங் ஷங்காய், பாகுயிங்– குயாங்ஷு, பெய்ஜிங்– ஹார்பின்…
-
- 0 replies
- 354 views
-
-
பீஜித்தீவின் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது பசுபிக் சமுத்திரத்தில் உள்ள நாடான பீஜித் தீவின் ஆட்சி அதிகாரத்தை அந்த நாட்டு இராணுவம் நேற்று கைப்பற்றியது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதிகாரபூர்வமாக ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த அரச மெய்ப்பாது காவலர்கள் மற்றும் பொலிஸாரிடமிருந்து அவற்றைக் களைந்துள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்னர் அரசைக் கவிழ்த்த தேசியவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திட்டமிட்டிருந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் இராணுவத் தளபதி அரசைக் கவிழ்க்கப்போவதாக தொடர்ந்து எச்சரித்து வந்தார். இந்நிலையில் நேற்று பொலிஸா…
-
- 3 replies
- 1.2k views
-
-
டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி தமிழ்நாட்டு இட்லியை பீட்சாவோடு ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி இந்திராகாந்தி மைதானத்தில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் உரையாடியானர். அப்போது PMO app என்னும் ஸ்மார்ட் போன்களுக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலியின் மூலம் நரேந்திர மோடியின் அரசு சார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். மேலும் பசு மாட்டினை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு சிலர் தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் பசுக்கள் கொல்லப்படுவதை விட சாலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை உண்பதால் தான் அதிக பசுக்கள் உயிரிழப்பதாகவும் மோடி கூறினார். உணவு குறித்தும் அதன் பா…
-
- 2 replies
- 455 views
-
-
பீபீசீ வானோலி சேவையாளர் குறைப்பு : சொந்த நாடுகளில் இருந்து ஒலிபரப்பு Saturday, 17 May 2008 பீபீசீ வானோலி சேவையின் செலவுகளை குறைப்பதற்காக பீபீசீ வானோலி சேவைகளில் பணிபுரியும் தமிழ் , கிந்தி , சிங்களம், உர்து மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ஒலிபரப்பாகும் சேவையாளர்களை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பவும், அங்கிருந்தே அந்தந்த ஒலிபரப்புகளை செய்யவும் புதிய திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. தவிரவும் தற்போது பணிபுரியும் மேற் கூறுப்பட்ட மொழி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை லண்டனில் இருந்து அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் பீபீசீ முடிவு எடுத்துள்ளது. இந் நடைமுறை மூன்று ஆண்டுகளுக்கு முன் கிந்தி ஒலிபரப்பு தில்லிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஆரம்பமா…
-
- 1 reply
- 967 views
-
-
பீய்ஜிங் டக்ஸிங்: சீனாவின் மிகப்பெரிய புதிய ‘ஸ்டார்ஃபிஷ்’ விமான நிலையம் திறப்பு! சீனாவின் புதிய மற்றும் மிகப் பாரிய விமான நிலையம் அதன் கதவுகளை வாடிக்கையாளர்களுக்காக திறந்துள்ளது. சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த பிரம்மாண்ட கட்டிடம் சீனா மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 வது ஆண்டு நிறைவு விழாவின் போது இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீய்ஜிங்கில் நட்சத்திர மீன் வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டக்ஸிங் விமான நிலைய கட்டிடம் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதாக சீனா டெய்லி என்ற தேசிய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. குறித்த விமான நிலையம் சுமார் 7 லட்சம் சதுர மீட்டர்கள் அல்ல…
-
- 0 replies
- 481 views
-
-
பீய்ஜிங் விமான நிலையத்தில் 'உலகின் மிகப் பெரிய' புதிய பயணிகள் தளம் பீய்ஜிங்கின் புதிய விமான பயணிகள் தளம் சீனத் தலைநகர் பீய்ஜிங்கின் விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அதாவது பயணிகள் தளம் ஒன்று இன்று உத்தியோகப்பூர்வமாகத் திறக்கப்பட்டு, முதன்முதலாக பயணிகளை வரவேற்றுள்ளது. இவ்வாண்டில் பின்னர் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் இத்தளத்தைப் பயன்படுத்துவார்கள். உலகின் மிகப் பெரிய விமான பயணிகள் தளம் இதுதான் என்று சீனா கூறுகிறது. 170 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவு கொண்டது அது. பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர் நோர்மன் ஃபாஸ்டர் இதனை வடிவமைத்துள்ளார். நான்கே ஆண்டுகளில் ஐம்பதாயி…
-
- 0 replies
- 615 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் கோடை விடுமுறையின் போது பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ரோட்டோரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு களித்து வருகின்றனர். அது போன்ற சாகச நிகழ்ச்சி இங்கிலாந்தில் உள்ள “கென்ட்” நகரில் நேற்று மாலை நடந்தது. அதன்படி, ராட்சத பீரங்கியில் குண்டுக்கு பதிலாக ஒரு வாலிபரை உட்கார வைத்து சுடும் நிகழ்ச்சி நடந்தது. அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பங்கேற்றார். அவர் ஏணியில் ஏறி 7.5 டன் எடையுள்ள பீரங்கியில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் பீரங்கியின் பின்புறம் தீ வைக்கப்பட்டது. அப்போது பீரங்கி “டமார்” என்ற சத்தத்துடன் வெடித்தது. இதை தொடர்ந்து குண்டுக்கு பதிலாக பீரங்கியின் வாய் பகுதியில் உட்கார்ந் திருந்த அந்த வாலிபர் மின்னல…
-
- 0 replies
- 826 views
-
-
பீர் குடிப்பதில் ஆர்வம் குறைந்து வரும் யேர்மனி மக்கள். 1995 10.7 பில்லியன் லிற்றர் 2000 9.95 பில்லியன் லிற்றர் 2004 9.24 பில்லியன் லிற்றர் 2008 8.79 பில்லியன் லிற்றர் 2014 8.02 பில்லியன் லிற்றர்
-
- 4 replies
- 515 views
-
-
[size=4]நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கன்னியாஸ்திரி ஒருவர் பீர் டின் ஒன்றை திருடியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கடந்த ஒருவார காலமாக இந்த வீடியோ பதிவு யுடியூப்வில் உலாவருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஒரு கடைக்கு பொருட்களை வாங்க வந்த கன்னியாஸ்திரி ஒருவர் குளிர்பானங்கள் இருக்கும் பிரிவுக்கு சென்று ரெப்ரிஜிரேட்டரை திறந்து ஒரு பீர் டின்னை திருடி தனது பையில் மறைத்து வைத்து கொண்டார். பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்று மற்றொரு ரெப்ரிஜிரேட்டரை திறந்து தண்ணீர் பாட்டில் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு மட்டும் அவர் பணம் கொடுத்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல வெளியே சென்று விட்டார் ஆனால் அவர் பீர் பாட்டில் எடுத்து ஒளி…
-
- 0 replies
- 562 views
-
-
பீஹாரில் மதுவிலக்கை ஆதரித்து 3,000 கிலோ மீற்றர் நீள மனிதச் சங்கிலிப் போராட்டம் பீஹாரில், முழுமையான மது விலக்கை வலியுறுத்தி சுமார் மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டம் முழுமையடையும் பட்சத்தில், இதுவே உலகின் மிக நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பீஹார் தலைநகர் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடிப் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது. உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி என்ற சாதனையைப் படைக்கும் என்று நம்பப்படும் இந்தப் போராட்டம், பீஹாரில் பூரண மத…
-
- 0 replies
- 385 views
-
-
இந்திய மாநிலமான பீஹாரில், தொலைதூர ரயில் நிலயம் ஒன்றில் விரைவு ரயில் ஒன்று மோதியதில், ரயில் கடவையைக் கடக்க முயன்ற 37 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமரா ஹட் ரயில் நிலையத்தில் ஒரு ரயிலில் இருந்து இறங்கி, சஹர்சா மாவட்ட ஆலயம் ஒன்றுக்கு செலவிருந்த பெரும்பாலும் இந்து யாத்திரிகர்களே இதில் கொல்லப்பட்டவர்களாவர். இந்திய ரயில் ஒன்று இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கூடம் ஒன்று ரயில் ஓட்டுனரைத் தாக்கியதுடன் இரு ரயில் பெட்டிகளையும் எரித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் நடப்பதுடன், பொலிஸாரும் அங்கு விரைந்துள்ளனர். பல உடல்கள் சேதமடைந்திருக்கும் நிலையில் மொத்தமாக எத்தனை பேர் இறந்தார்கள் என்று தற்போதைக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை என்று மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்த்…
-
- 1 reply
- 383 views
-
-
புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள டொனி அபோட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியை ஒப்புக்கொள்வதாக அக்கட்சியின் தலைவரான பிரதமர் கெவின் ரூட் அறிவித்துள்ளதையடுத்து புதிய பிரதமராக டொனி அபோட் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், தனது தலையாய கடமைகள் இரண்டு எனவும், ஒன்று முந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கார்பன் வரியை நீக்குவதா, இல்லையா என்று முடிவெடுக்கவேண்டும். மற்றது ஆசியாவின் மற்ற பகுதிகளிலிருந்து புகலிடம் தேடி படகில் வருவோரின் பிரச்சினை. படகுகளில் வருவோரை கடல் என்லையிலேயே மறித்து திருப்பி அனுப்புவதுதான் சிறந்த முறையென்றும் கிறிஸ்மஸ் தீவு போன்ற மற…
-
- 0 replies
- 392 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்! பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியாவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க 395 ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகின்றது. அதே நேரத்தில், ஹோட்டல்கள், வரிக்கு முந்தைய லாபத்தை 2.1 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 6.3 மில்லியன் பவுண்டுளாக உயர்த்தியுள்ளது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. புகலிட அமைப்பு நம்பமுடியாத அழுத்தத்தில் இருப்பதாக உள்…
-
- 0 replies
- 373 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனி இங்கு இடமில்லை: வெளியான அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனிமேல் நியூயோர்க்கில் இடமில்லை என அந்நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “நியூயோர்க் நகரம் நிரம்பிவிட்டது. புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் நியூயோர்க்கிற்கு வந்துள்ளனர். இனியும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. இதனை நான் முன்னரே பதிவு செய்திருந்தேன். ஆனால்,இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நேரடி சாட்சியாக பார்க்கிறோம். நியூயோர்க்கில் வீட்டுக…
-
- 0 replies
- 637 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான வழிகளில் அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வெளியிட்ட கருத்து மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 12 புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைத்ததாக ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இதில் நான்கு படகுகள் ஒரேஞ் லைப் போட்ஸ் எனப்படும் ஆபத்தான படகுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான நிலைமைகளில் உயிர் காப்பதற்காக பயன்படுத்தப்படும் அவசர படகுகளைப் பயன்படுத்தி புகலிடக் கோரிக்கையாளர் கடல் வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படகுகள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை, …
-
- 0 replies
- 258 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த நேட்டோ இணக்கம் [ Friday,12 February 2016, 06:09:54 ] ஏஜியன் கடற்பரப்பின் ஊடாக துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு அகதிகளை கடத்திச் செல்பவர்களை தடுக்க தாம் தயாராகவுள்ளதாக நேட்டோ அறிவித்துள்ளது. பிரஸல்ஸில் நடைபெற்ற துருக்கி, ஜேர்மன், மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக நேட்டோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் ஆராயப்படவுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள…
-
- 0 replies
- 413 views
-
-
Published By: SETHU 10 AUG, 2023 | 10:30 AM (ஆர்.சேதுராமன்) பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களை சர்ச்சைக்குரிய கப்பலில் தங்கவைக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 'பிபி ஸ்டொக்ஹோம்' எனும் இக்கப்பலுக்கு முதல் கட்டமாக 15 பேர் கடந்த திங்கட்கிழமை அனுப்பப்பட்டனர். பிபி ஸ்டோக்ஹோம் ஆனது ஒரு பாரிய தெப்பம் (barge) ஆகும். 222 அறைகள் இதில் உள்ளன. 500 ஆண்களை இதில் தங்க வைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சியினரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவான குழுக்களும் சட்டத்தரணிகளும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் இதை மிதக்கும் சிறைச்சாலை என வர்ணிக்கின்றனர். …
-
- 6 replies
- 428 views
- 1 follower
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பரிஸ் விரையும் சுயெல்லா பிரேவர்மேன்! சிறிய படகுகளில் மக்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் விரிவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உட்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் பாரிஸுக்குச் செல்லவுள்ளார். திருத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, பிரித்தானியா, பிரான்சுக்கு அவர்களின் முடிவில் அதிகரித்த ரோந்துச் செலவை ஈடுகட்டச் செலுத்தும் தொகை ஆண்டுக்கு 55 பவுண்டுகளிலிருந்து 63 மில்லியன் பவுண்டுகளாக உயரும். மக்கள் செல்வதைத் தடுக்க பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கை 200ல் இருந்து 300ஆக உயரும். மேற்குறித்த பணம், கூடுதல் அதிகாரி…
-
- 0 replies
- 151 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிக்க அமெரிக்காவும் கனடாவும் ஒப்பந்தம்! அமெரிக்காவும் கனடாவும் அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கடவுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒட்டாவா விஜயத்தின் போது, இருநாட்டு தலைவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பார்கள். இந்த ஒப்பந்தம் எல்லையின் இருபுறமும் உள்ள அதிகாரிகளை இரு திசைகளிலும் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திரும்பப் பெற அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அமெரிக்கத் தரப்பில் உயர்ந்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்…
-
- 0 replies
- 578 views
-