Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. முடக்கப்பட்டுள்ள டூனிசியாவின் 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திருப்பிக் கொடுப்பது முரண்பாடான நிலையைத் தோற்றுவிக்கும் என்று சுவிஸ் நாட்டின் சொத்து மீள்எடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸ் வெளியுறவு அமைச்சர் மிச்செலின் கால்மி-றே டூனிசியாவில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன்-டூனிசியா செயல் அணியின் கூட்டத்தில் பேசும்போது இதனைத் தெரிவித்ததுடன் ஐநாவின் பாதுகாப்புச்சபை இது தொடர்பாக தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பென்-அலி அரசாங்கத்துடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட நிதியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஜனவரி மாதம் பென் அலி அரசு தூக்கி எறியப்பட்ட பின்னர் முன்னாள் அதிபர் பென் அலி மற்றும் அவரின் குழுக்களுக்கும்…

  2. வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்ப…

  3. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது. இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது. கடந்த 17-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தின்படி, உணவுப் பணவீக்கம் 9.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது இன்றைய தகவல். பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடப்போவது தவிர்க்க முடியாததாகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது. - இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நிதியமைச்சர், "நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன," என்று சொன்னால் எப்படி இருக்கும்? அண்மையில்…

  4. ஸ்பானியாவில் எருமை மாட்டு போர் முடிவடைகிறது ஸ்பானியாவில் நடைபெறும் மாடுகளை நோக்கி சிவப்புச் சீலையை காண்பித்து கூரிய ஈட்டியால் குத்தி வதைத்துக் கொல்லும் முறை இன்றுடன் முடிவடைவதாக ஸ்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று ஸ்பானியாவின் பார்சிலோனாவில் நடைபெற்ற இறுதி எருமைமாட்டு போர் விளையாட்டில் ஆறு எருமைகள் கொல்லப்பட்டன. எருமைக் கொலைக்கு பெயர்போன வடகிழக்கு ஸ்பானியாவின் கற்றலோவில் மேற்கொண்டு இந்தப் போட்டி நடாத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 180.000 பேர் இந்த மிருகவதை செயலை நிறுத்துங்கள் என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நிறுத்தப்படுகிறது. அதேவேளை மற்றய பகுதிகளில் இந்த எருமை அடக்கும் விளையாட்டு தொடர்ந்து நடைபெறும் என்ற…

  5. சீனாவுடன் படைஒப்பந்தங்களை செய்துகொள்ள இரகசியமாக முயற்சிமேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான உறவினை முறித்துக்கொள்ள பாக்கிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு நடந்தால் பாக்கிஸ்தான் மீது அமெரிக்கா போர்தொடுத்தால் அதனை எதிர்கொள்ளும் விதமாக சீனாவின் உதவியினை நாடுவதை தவிர வேறு வளியில்லை என பன்னாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்கிஸ்தான் மீது இன்னொரு நாடுதாக்குதல் தொடுத்தால் அதனை முறியடிப்பதற்காக சீனா முன்வரவேண்டும்என்று ஒப்பந்தம் செய்துகொள்ள பாக்கிஸ்தான இரகசிய முயற்சிகளை மேற்கொண்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.c.../18610/57/.aspx

  6. அடுத்த மாதம் உலக ஜனத்தொகை 7.000.000.000 ஆகிறது உலக ஜனத்தொகை இந்த இலையுதிர் காலத்துடன் ஏழு பில்லியனாக உயர்ந்துவிடும் என்று ஐ.நா அறிவித்துள்ளது. இன்று உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும் சராசரி 2.6 பிள்ளைகள் பிறக்கின்றன. இந்த வேகம் இந்த மாத முடிவில் உலக ஜனத்தொகையை 7 பில்லியனாக உயர்த்துகிறது. தற்போது 1.3 பில்லியன் ஜனத்தொகை கொண்ட சீனாவை விரைவில் இந்தியா முந்திச் சென்று உலகில் ஜனத்தொகை கூடிய முதலாவது நாடு என்ற பட்டத்தை பெற்றுவிடும் என்றும் கணிப்புக்கள் கூறுகின்றன. வரும் 2050ம் ஆண்டு உலக மொத்த ஜனத்தொகை 9 பில்லியனாக உயர்ந்துவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இந்த நூற்றாண்டு புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் அரை முதல் ஒரு மீட்டர் உயரப்போகிறது. இதனால் …

  7. வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா ஆதிக்கம் வளைகுடாவில் வாழும் பணக்கார இந்தியார்கள் பத்து நபார்களை பிரபல அமீரக நாளிதழ் வெளியிட்டுள்ளது. வளைகுடாவின் பணக்கார இந்தியர்களின் பட்டியலை துபாயிலிருந்து வெளியாகும் பிரபல வர்த்தக ஏடு ஒன்று வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் உள்ள பத்து நபர்களில் எட்டு நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்பவர்களாகவும் நான்கு நபர்கள் மலையாளிகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 1.மிக்கி ஜகதியானி – 3.2 பில்லியன் டாலர் மும்பையை பூர்விமாக கொண்ட மிக்கி ஸ்பால்ஷ், உள்ளிட்ட பல பேஷன் பிராண்டுகளை கொண்ட லேண்ட் மார்க் ரீடெய்ல் ஸ்டோர்களை நடத்தி வருகிறார். துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவரின் சாம்ராஜ்யம் வளைகுடா, ஐரோப்பா, ஆசியா என பல இட…

  8. மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களாக உள்ள பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், ப.சிதம்பரத்தின் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடி முற்றியது. . ப.சிதம்பரத்தின் மதிப்பை குறைக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அரங்கேறி உள்ளன. 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டு தற்போது ப.சிதம்பரத்தின் பெயர் பலமாக அடிபடுகிறது. நிதி அமைச்சராக இருந்தபோது அவர் நினைத்திருந்தால் 2ஜி அலைக்கற்றை முறைகேட்டை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பிய கடிதம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய நிதி அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய ரகசிய அறிக்கையை பிரதமர் அலுவலகம் ந…

    • 6 replies
    • 1.4k views
  9. பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க நேரம் வந்துவிட்டது – ஒபாமா இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரசை நேற்று செவ்வாய் வெள்ளை மாளிகையில் வைத்து பேச்சுக்களை நடாத்தினார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அதன் பின் பத்திரிகையாளருக்கு கருத்துரைத்த அவர் பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென அவரிடம் தெரிவித்தார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்புக்களும் முதலில் கை கொடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்ற நியாயமான புரிதலோடு கதைக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தற்போது வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் ஆரம்பித்துள்ள ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் சிறந்ததோர் இலக்கை அடைய வேண்டுமானால் பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதே முத…

    • 26 replies
    • 2.4k views
  10. ஸ்பெக்ட்ரம் ஊழல் : ஆ.ராசா, கனிமொழி மீது புதிய வழக்கு : ஆயுள் தண்டனை பிரிவில் பதிவு! [ Monday, 26-09-2011 16:27 ] 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக ரூ. 1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதையடுத்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த விசாரணை தகவல்களை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. அவ்வப்போது தெரிவித்து வருகிற…

  11. ரகுராம், ஒரு ஊடகவியலாளரின் ஓய்வு ! அவுஸ்த்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரபல தமிழ்ச் செய்தியாளர் ரகுராம் பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு செவ்வாயிரவு தோறும் வலம்வரும் செய்தியலைகள் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதைப் பிடித்தவர். பல தரமான செய்தி ஆய்வுகள், பேட்டிகள் என மக்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கி வருபவர். அந்த ரகுராம், தனது குடும்ப நலனுக்காக தான் வானொலியிலிருந்து விலகியிருக்கப்போவதாகபாறிவித்திருக்கிறார். ஆனால், அண்மையில் சிங்கள அரசின் விருந்தினராகவும், அரசின் போர்க்குற்றங்களை மறைக்கும் ஒரு கருவியாகவும் பயன்பட்டு வரும் புலிகளின் முன்னால் ஆயுத முகவரான கே.பீ என்பவரைப் பேட்டி கண்டதன் மூலம் ரகுராம் அவர்கள் மேலான நெருக்குதல்கள் ஆரம்பித்தன என்ற…

  12. சவுதி மன்னர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவுள்ளார் சவுதி மன்னர்கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பெண்களை ஒடுக்குமுறைக்குள்ளேயே இதுவரை காலமும் வைத்திருந்த சவுதி மன்னர் எதிர்காலத்தில் நடக்கவுள்ள சவுதி நகரசபை தேர்தலில் பெண்கள் போட்டியிடலாம் என்று தெரிவித்தார். மன்னரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. சவுதியில் கடந்த வியாழன் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் 285 நகர சபைகளுக்கு 5000 ஆண்கள் போட்டி போட்டனர். இவர்கள் அரைப்பங்கு பதவிகளை பூர்த்தி செய்வார்கள், ஏனைய அரைப்பங்கு உறுப்பினர்கள் சவுதி மன்னரால் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலில் பெண்கள் பின்தள்ளப்பட்ட காரணத்தால் 60 கல்வியியலாளர் தேர்தலில் இருந்து விலத…

  13. நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பலியான 8 தமிழர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்திரம் எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல இன்னொரு முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஒருவரும் இதில் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நேபாளத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வாகன வசதிகள் உள்ளன. அதில் ஒன்று விமான பயணம். சிறிய ரக விமானம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிக் காட்டுவார்கள். சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது இது. எவரெஸ்ட் சுற்றுலா புத்தா ஏர் என்ற தனியார் விமானம் இதுபோல சுற்றுலாப் பயணிகளுக்கு எவரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிக் காட்டுவதற்காகக் கிளம்பியது. அந்த சிற…

  14. சென்னை: மக்களுக்கு அச்சம் தரும் எந்த ஆபத்தான திட்டத்தையும் எனது அரசு ஊக்குவிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்புதான், கூடங்குளம் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாலும், அந்தப் பகுதி மக்களின் வாக்குகளுக்கு தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குறி வைக்க ஆரம்பித்துள்ள நிலையில், கூடங்குளம் திட்டத்துக்கு இன்று திடீரென ஜெயலலி…

  15. Published By பெரியார்தளம் On Saturday, September 24th 2011. Under சென்னை, பெரியார் திராவிடர் கழகம், முதன்மைச்செய்திகள் தோழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை தொடர்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பார்ப்பன எஸ்.வீ.சேகர் வீட்டை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்று விடுதலையானார்கள். Federation of Brahmin Associations Southern region என்ற பெயரில் பார்ப்பனர் சங்கம் நடத்திவரும் எஸ்.வி.சேகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேந்த தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று (24.09.11) விடுதலையாகி வந்த அவர்களுக்கு ராயப்பேட்டையில் ப​றை முழக்கத்துடன் வரவேற்பு…

  16. இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள், நாளை (23) பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி இந்திய ரூபா செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ்., 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளிமண்டலத்தி…

  17. பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம் பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது. முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும். விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஸ்ட்ராஸ…

  18. தமிழக உள்ளாட்சித் தேர்தல் - உடைந்தது அதிமுக கூட்டணி 18 செப்டம்பர் 2011 உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் களை தன்னிச்சையாக அறிவித் துள்ளார் அதிமுக தலைவர் ஜெயலலிதா. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே இந்தக் கூட்டணி நீடிக்குமா? உடைந்து போகுமா? என்ற குழப்பம் நீடித்த நிலையில் இப்போது கூட்டணி கட்சிகளை மதிக்காமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளார் அதிமுக தலைவர் ஜெயலலிதா. இதனால் கூட்டணி கட்சிகள் ஒட்டு மொத்தமாக திகைத்துப் போய் விட்டன, தமிழகத்தில் உள்ள பெரும் 10 மாநாகராட்சிகளுக்குமான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த ஜெயலலிதாவின் போக்கு கண்டு அதிருப்தியடைந்துள்ள அரசியல் கட்சிகள் தாங்கள் என்ன முடிவெடுப்ப…

  19. 'உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’ எனத் தி.மு.க-வும் காங்கிரஸும் போட்டி போட்டு அறிவித்துவிட்டன. ஈழத்தில் போர் நடந்தபோதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஃபெவிக்கால் பிணைப்பாக வலம் வந்த விடுதலைச் சிறுத்தைகளின் நிலைதான் இப்போது புதிர்! தனித்துவிடப்பட்டிருக்கும் திருமாவளவனை சந்தித்தோம். ''தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்த்தீர்களா?'' ''இது எங்களை அதிரவைத்திருக்கும் அறிவிப்பு! கூட்டணி அமைக்க பா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். 'தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கட்சி யின் ஆலோசனைக் குழுவில் ஆராய்ந்துதான் எந்த முடிவும் எடுப்போம்’ என நாங்கள் அறிவித்திருந்த நிலையில், தி.மு.க. திடீரென இப்படி அறிவித்து இரு…

  20. அன்னா ஹசாரே இன்று இந்தியா வின் ஹீரோ என்பதில் சந்தேகம் இல்லை. அன்னாவைப் போலவே இரோம் ஷர்மிளா என்கிற 38 வயது மணிப்பூர் மாநிலப் பெண்ணின் உண்ணாவிரதப் போராட்டமும். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அவர் உண்ணாவிரதம் இருந்து, கோமா நிலைக்குச் சென்று, படுத்த படுக்கையாக இருக்கிறார். அன்னாவுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கும் இரோம் ” டெல்லியில் இருந்து போராடுவதால் அன்னாவுக்கு தேசிய ஆதரவு கிடைத்திருக்கிறது. இதையே அவர் ஒதுக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து செய்திருந்தால் யாரும் கண்டு கொண்டி ருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லியிருக்கிறார். இரோம் ஷர்மிளா ஒரு சிவில் உரிமைப் போராளி, அரசியல் சூறாவளி மற்றும் உணர்ச்சிகரமான கவிஞர். …

  21. சென்னை: சட்டசபைத் தேர்தலைப் போலவே தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்து வருவதால் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக தேமுதிகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுடன் ஒப்பந்தம் செய்து போட்டியிடலாமா என்ற ரீதியில் அவர்கள் யோசித்து வருகிறார்களாம். சட்டசபைத் தேர்தலின்போதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளைப் புறம் தள்ளி விட்டு தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனால் கூட்டணிக் கட்சிகள் கொந்தளித்தன. பின்னர் இறங்கி வந்த ஜெயலலிதா, தொகுதி உடன்பாட்டை மேற்கொண்டார். தற்போதும் அதே கதையாகியுள்ளது. அடுத்தடுத்து அவர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இதனால் கூட்டணிக் கட்சிகள் க…

  22. மெல்போர்ன் நகரில் அவமதிக்கப்படுகிறார் விநாயகர். கலாசார விழாவில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி. [Tuesday, 2011-09-20 13:37:42] ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்க உள்ள கலாசார விழாவில், இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில், ஒரு நாடகம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல்கள், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத் தலைநகர் மெல்போர்ன் நகரில், அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, உலக கலை மற்றும் கலாசார மாநாட்டின் ஐந்தாவது ஆண்டு விழா நடக்க உள்ளது. இதில், பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக, ஆஸ்திரேலியாவின் "பேக் டு பேக் தியேட்டர்' என்ற நாடக அமைப்பு, "தி கணேஷ் …

  23. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை தென் சீன எல்லை கடலோரப்பகுதிகளில் இந்தியா, ‌பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்வதுகுறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் இறையாண்மை தன்மையை மீறுவதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடவில்லை எனவும் வியட்நாம் தான் இத்தகைய நடவடிக்கைகள‌ை மேற்கொள்கிறது என மறுப்பு தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=313934

  24. சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- வடக்கு, கிழக்கு இந்தியாவும் அதிர்ந்தது! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 18, 2011, 19:13 [iST] கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.