Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிறைச்சாலையின் நிலத்துக்கடியில் சுரங்கம் தோண்டி 476 ஆப்கான் சிறைக்கைதிகள் தப்பியோட்டம் _ வீரகேசரி இணையம் 4/25/2011 2:57:57 PM ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து 476 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலைக்கு அடியில் சுரங்கம் தோண்டி அதன் மூலமாகவே இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்றுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் தீவிரவாதிகள் என்பதுடன் 100 பேர் தலிபான் இயக்கத்தின் கட்டளை அதிகாரிகள் எனவும் சிறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த சிறை உடைப்பு சம்பவத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்

    • 8 replies
    • 850 views
  2. தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்குக் கொழும்பு இணங்கி வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாத நிலையை இலங்கையைக் கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக் குழு புதுடில்லி வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது. போர்க் காலத்தில் இந்திய இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப் பட்ட, அமைச்சர் பஸில், பாதுகாப்புச் செயலாளர…

  3. வடக்கு பிறிஸ்ரனில் இளைஞன் சுட்டுக்கொலை வடக்கு பிறிஸ்ரனில் வைத்து இளைஞன் ஒருவர் ஞாயிறு பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 'இந்தக் கொலை தொடர்பாக நாம் விசாரணை நடாத்தி வருகிறோம்'? என கோப்ரல் ஸ்கொட் மக்றே தெரிவித்தார். கொலை செய்யப்பட்டவருக்கு முகத்திலேயே சுடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. 22 வயது உடைய அவர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் போகும்வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறப்பட்டதாக மக்றே தெரிவித்தார். சேர்ச்சில் புல்வெளிப் பகுதியில் 6 முதல் 10 வரையான சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக 6.30 மணிக்கு முன்னரே செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஒருசேர்ச்சில் புல்வெளியில் ஒருவர் விழுந்து கிடப்பதாகவும் பெருமளவான மக்கள்…

    • 0 replies
    • 749 views
  4. காணாமல்போன சோல்ற் ஸ்ரி மேரி சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பு சோல்ற் ஸ்ரி மேரி பொலிசாரினால் அவளது தாயாரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு எச்சரிக்கை அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று வயதான லைலா லிசபெத் மே அவளது தாயான 21 வயதுடைய கிறிஜ்ரி ஆன் பர்சந்தியுடனேயே இருக்கவேண்டும் ன நம்பப்படுகிறது. ஞாயிறன்று மேயினைப் பார்ப்பதற்கான அழைத்துச் சென்ற பர்சந்தி அவளது பாதுகாவலரிடம் மீண்டும் அவளை ஒப்படைக்கவில்லை ன பொலிசார் தெரிவிக்கின்றனர். திங்களன்று அதிகாலையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 3 அடிஉயரமும் 40 பவுண்டு எடையும் கொண்ட மே நீண்ட கூந்தலையும் நீலநிறக் கண்களும் உடையவள். காணாமல்போன வேளையில் அவள்…

    • 0 replies
    • 511 views
  5. கனடாவில் தேர்தல் வன்முறைகள் பரவுகிறது முதன் முதலில் சென் போல் மற்றும் றினிற்றி-ஸ்பாடினா ஆகிய இடங்களில் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட தேர்தல் வன்முறைகள் தற்போது டேவின்போட் மற்றும் ரொறன்ரோ மத்தியிலும் இடம்பெற்றுள்ளது. ரொறன்ரோ மத்தியில் வசிக்கும் லிபறல் கட்சியின் முக்கியஸ்தர்களான பொப் றே மற்றும் ரிக் கொஸ்கின்ஸ் ஆகியோர் சனிக்கிழமையன்று காலையில் எழும்பி வந்து பார்த்தபோது அவர்களின் கார் ரயர்கள் சேதமாகியிருந்தன. 'இது வன்முறை மட்டுமன்றி வாக்காளர்களை அச்சுறுத்தும் செயலாகும். தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தாக்குதலாகும்', என ஞாயிறன்று கொஸ்கின்ஸ் தெரிவித்தார். கொஸ்கினுடைய உட்பட ஐந்து வீ…

    • 0 replies
    • 626 views
  6. திங்கட்கிழமை, 25, ஏப்ரல் 2011 (17:30 IST) இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; சுனாமி பீதி இந்தோனேஷியாவில் சுலாவேஷி தீவு உள்ளது. அப்பகுதியின் தலைநகரமாக ஜெகந்தாரி விளங்குகிறது. சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் இங்கு இன்று காலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஜெகந்தாரியின் தென் கிழக்கு பகுதியில் ஏராளமான வீடுகள் இடிந்தன. அதனால் மக்கள் கடும் பீதிக்குள்ளானார்கள். அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படுமோ? என மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால்…

  7. - இரண்டு அணு ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெப்பத்தை குறைக்கும் முயற்சி, அணுக்கசிவை தடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன - அடுத்த 24-48 மணி நேரங்கள் முக்கியமானவை - கடைசி முயற்சியாக இந்த ஆலைகள் கடல் நீர் மூலம் நிரந்தரமாக மூடப்படலாம் - உண்மைகள் மறைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கம், சுனாமி, அணுக்கசிவு இந்த மூன்று பேரவலங்களும் தனித்தனிய வந்தாலே ஒரு நாடு ஆடிப்போய்விடும். இன்று அதிகாலை வந்து கொண்டிருக்கும் ஜப்பானிய செய்திகள் இந்த மூன்று சம்பவங்களும் அங்கு ஒன்றாக நடைபெற்றிருப்பதை ஐயத்திற்கு இடமில்லாமல் உணர்த்தியுள்ளன. இன்று ஜப்பானில் நில நடுக்கத்தைவிட பெரு நடுக்கத்துடன் பேசப்படும் விடயம் அணுக்கசிவு. புக்குசீமாவில் உள்ள அணுக்குதத்தின் …

    • 104 replies
    • 10k views
  8. . கேரளாவில் இரண்டே நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு சிசேரியன்: விசாரணைக்கு உத்தரவு திருவனந்தபுரம்: விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு பிரவச தேதிகளுக்கு முன்பாகவே டாக்டர்கள் சிசேரியன் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரளாவில் ஆழப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மகளிர் பிரிவில் 5 பெண் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தினர் அதிகளவில் வருகின்றனர். இங்கு பிரவச அறுவை சிகி்ச்சை வசதியும் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளில் 30 பேருக்கு வரும் 24-ம் தேதி வரை பிரவச தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய், புதன…

  9. ரொறன்ரோ நெடுஞ்சாலையில் எரியும் பேருந்திலிருந்து பயணிகள் உயிர் தப்பினர் கனடாவில் எப்போதுமே சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் 401ஆவது நெடுஞ்சாலையில் மொன்றியலுக்கும் ரொறன்ரோவிற்கும் இடையில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் தீடிரெனத் தீப்பற்றிக்கொண்டதில் அதில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உயிர்தப்பியிருக்கிறார்கள். ஒன்ராரியோவின் புறூக்வில்லி என்ற குறு நகரத்திற்கு அருகியல் மாலை ஒரு மணியளவில் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் 61 பேர் பேருந்தில் இருந்திருக்கிறார்கள். தீவிபத்து தொடர்பாக முறையிடப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் அம்புலன்ஸ் வண்டியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. இந்த விபத்தினைத் தொடர்ந்து ரொறன்ரோ…

    • 1 reply
    • 997 views
  10. தவறான முடிவினால் கனடாவில் இருந்து நாடுகடத்தப்படுவதற்கு உத்திரவிடப்பட்ட இளம் பெண் தலைமறைவு ஜெஸ்ரில் இசாசி என்ற மெக்கிகோவினைச் சேர்ந்த 14 வயதுப் பெண் மெக்சிகோவில் தனது தயாரினால் சித்திரவதைக்கு உப்படுத்தப்படுவதாகக் கோரி கனடாவில் தஞ்சம் புகுந்திருந்தாள். இவளது இந்த வாதத்தினை ஏற்றுக்கொண்ட கனேடியக் குடிவரவு மற்றும் அகதிகள் அவை இவள் தொடர்ந்தும் கனடாவில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்திருந்தது. ஆனால் இந்தப் இளம் பெண்ணினது வாதம் உண்மைக்குப் புறம்பானது என்றும் சோடிக்கப்பட்டது என்றும் கூறும் கனேடிய அதிகாரிகள் இந்தப் பெண் மெக்சிக்கோவிற்கு நாடுகடத்தப்படவேண்டும் என வாதிடுகிறார்கள். இந்த நிலையில் தான் நாடுகடத்தப்படுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த இளம்ப…

    • 0 replies
    • 860 views
  11. காணாமற்போன 11 வயதுக் கனேடியச் சிறுவன் வீடு திரும்பினான் ரொறன்ரோவில் கடந்த வெள்ளியன்று காணாமற்போன 11 வயதுச் சிறுவன் ஒருவர் பாதுகாப்பாக வீடு திரும்பியிருக்கிறான். ரொறன்ரோவின் டவுன்ரவுன் பகுதியிலிருந்து காணாமற்போயிருந்த ஜேக்கப் டொங் என்ற இந்தச் சிறுவன் காணாமற்போய் ஐந்து மணி நேரங்களின் பின்னர் யாரோ ஒருவரின் துணையுடன் வீடு திரும்பியிருக்கிறான். சிறுவன் காணாமற்போனதையடுத்து பொலிசார் வெளியிட்ட இந்தச் சிறுவனின் புகைப்படத்தினை ஏற்கனவே அவதானித்த ரைம் கேட்டன் என்ற பெண்மணி இந்தச் சிறுவனை இனங்கண்டுகொண்டார். 'நீங்கள்தானே காணாமற்போன அந்தப் பையன்' எனத் தான் அந்தச் சிறுவனிடம் கூறியதாகவும் ஒரு தாய்க்குரிய பரிவுடன் செயற்பட்டதாகக் கூறுகிறாள். 'நான் ஒரு தாய் என்ற வகையில் …

    • 0 replies
    • 664 views
  12. அடுத்த வாரம் (29-ம் தேதி) திருமணம் செய்துகொள்ளவிருக்கும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் (28) தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் கேட் மிடில்டன் (29) உடன் வர நார்தாம்டன்ஷைரில் உள்ள ஸ்பென்சர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான தனித்தீவில் இருக்கும் தனது தாயார் இளவரசி டயானாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தனது மண வாழ்க்கை சிறப்பாக இருக்க தாயின் ஆசியையும் அவர் மானசீகமாகக் கோரினார். 14 ஆண்டுகளுக்கு முன் பாரீஸ் நகரில் விபத்தில் இறந்த தன்னுடைய தாய் டயானா மீது தான் வைத்திருக்கும் பாசத்தை அவர் இதன் மூலம் உணர்த்தினார். சமாதி இருந்த இடத்துக்கு வில்லியமும் கேட் மிடில்டனும் தனிப்படகு மூலம் சென்றனர். சிறுவர்களாக இருந்தபோது தானும் தம்பி ஹாரியும் மரக்கன்றுகளை நட்ட …

    • 0 replies
    • 580 views
  13. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் ஹெலீனா மைல்ஸ். இவர் தனது 16 மாத கைக்குழந்தை ஜா-நியா மைல்ஸ் சுடன் ஒர்லாண்டோவில் உள்ள ஒரு ஓட்டலில் 4-வது மாடியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், இரவு 11 மணி அளவில் குழந்தை ஜா-நியா அவர்கள் தங்கியிருந்த ஓட்டலின் 4-வது மாடி அறையில் தவழ்ந்து விளையாடி கொண்டிருந்தது. அதை ஹெலீனா மைல்ஸ் கவனிக்கவில்லை. அதே நேரத்தில் ஓட்டலின் தரை தளத்தில் உள்ள நீச்சல் குளத்தில் ஹெலன் பியர்டு (44) என்ற பெண் குளித்து கொண்டிருந்தார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் ஒர்லாண்டோ நகருக்கு சுற்றுலா வந்து இருந்தார். அப்போது 4-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜா-நியா திடீரென அங்கிருந்து தவறி விழுந்தது. அது தவறி விழுந்த வேகத்தில் 3-வது மாடியின் பால் கனியி…

    • 0 replies
    • 554 views
  14. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குவது தொடர்கதை ஆகிவிட்டது. இந்நிலையில் லக்விந்தர் சிங் (வயது 28) என்ற இந்திய வாலிபர் வியாழன் இரவன்று அவரது வீட்டில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பந்தமாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கம்போடியாவை சேர்ந்தவர் என்று ஆஸ்திரேலியா போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்ட இந்தியனின் படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/news/news.php?id=27331

    • 0 replies
    • 388 views
  15. சோமாலியக் கடற் கொள்ளையரால் இலங்கைக்குச் சாதகம் உண்டா? ஆராய்கிறது இந்தியா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-14 08:01:28| யாழ்ப்பாணம்] இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சோமாலியக் கடற்கொள்ளையர்களைச் செயற்பட அனுமதிப்பது எவ்வகையில் இலங்கை அரசாங்கத்திற்குச் சாதக மாக அமையும் என்பது குறித்து இந்திய ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாக truthdive.com என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியக் கடற்கொள்ளையர்க ளுக்கு இலங்கைக் கடற்படையினர் உதவி வருவதாக வெளியான செய்தி களை இலங்கை அரசாங்கம் மறுத் துள்ள போதிலும், இவ்விவகாரம் குறித்து இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையின் துறைமுகங்களில் தற்போது சீனர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்…

  16. பழ. நெடுமாறன் மீது கலைஞர் வழக்கு உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன். இவர் மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் முதல் அமைச்சர் கலைஞர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். கலைஞர் சார்பில் சென்னை நகர குற்றவியல் வக்கீல் ஷாஜகான் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது: பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்த செய்தி கடந்த 17 ந்தேதி காலை நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. அந்த செய்தியில், தேர்தல் ஆணையத்தை முதல்வர் தொடர்ந்து வசைபாடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணைய நடவடிக்கையை எல்லோரும் பாராட்டுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதால், தில்லுமுல்லு எதுவும் செய்ய முடியாத கோபத்தில் முதல்வர் வசை பாடுகிறார் என்று கூறி உள்ளார். பழ.நெடுமாறனின் இந்த குற்…

  17. எகிப்து நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஹோசினி முபாரக்கை கண்டித்து தலைநகர் கெய்ரோவில் பேரணி ஒன்று நøடெபற்றது. பேரணியில் ஏற்பட்டதிடீர் கலவரத்தை அடுத்து போலீசார் கண்ணீர் புகைகுண்டை வீசினர். இச்சம்பவத்தில் போலீஸ் தரப்பில் ஒருவரும் கலவரக்காரர்கள் பகுதியில் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர் பலியாகியுள்ளனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=174300 Cairo protesters in violent clashes with police Egyptian protesters call for end to Hosni Mubarak's rule and hail 'first day of revolution' http://www.guardian.co.uk/world/2011/jan/25/egypt-protests-mubarak

    • 146 replies
    • 9.5k views
  18. உலகில் சந்தோசமாக இருப்பவர்களில் இரண்டாமிடத்தில் கனேடியர்கள் என்கிறது ஆய்வு உலகில் திருப்திகரமாக வாழ்பவர்களில் கனடா வாழ் மக்கள் இரண்டாமிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கலப் இன் உலக நல்வாழ்வு ஆய்வு 69 வீதமான கனேடியர்கள் செழிப்பாக வாழ்வதாகத் தெரிவிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் மிகவும் திருப்தியுடன் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புக்களுடன் முன்னணியில் டென்மார்க் வாழ் மக்களும் அவர்களைவிட மூன்று சதவீதம் குறைவாக கனேடியர்களும் சுவீடன் வாழ் மக்களும் ஒரே நிலையில் உள்ளனர். இரண்டு வீதமான கனேடியர்கனே கஸ்ரப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது. இன்னொரு 30 வீதமான கனேடிய மக்கள் வாழ்வதற்காகப் போராடுகிறார்கள் என்று கருதப்படுகிறது. செழிப்பாக வாழும் பெர…

    • 1 reply
    • 896 views
  19. மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்திய லிபியா மீது நேட்டோ படை கடந்த மாதம் முதல் குண்டு வீசி வருகிறது. கடந்த 5 வாரங்களாக நடந்த வான் தாக்குதலில் கடாபி ராணுவத்தினரை முற்றிலுமாக முடக்க முடியவில்லை. மிஸ்ரட்டா, அஜ்தபியா போன்ற நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், கடாபி ராணுவத்தினருக்கும் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து போராட்டக்குழு தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலில், பிரான்ஸ் அதிபர் சர்கோசியை சந்தித்து பேசினார். இதையடுத்து பிரான்ஸ் விமானப்படை தாக்குதலை தீவிரப்படுத்தவும், போராட்டக்காரர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் சர்கோசி உறுதியளித்தார். போராட்டக்காரர்களை வழி நடத்தி செல்ல பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி ப…

  20. யோர்க் பல்கலைக்கழக கொலையுடன் தொடர்புடையவர் என ரொறன்ரோ நபர்மீது குற்றச்சாட்டு சீனாவைச் சேர்ந்த யோர்க் பல்கலைக்கழக மாணவி கொல்லப்பட்டமை தொடர்பில் 29 வயதுடைய ரொறன்ரோ நபர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்த மாணவி இறுதியாக வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபரொருவருடன் சண்டையிலீடுபட்டிருந்தமையை அப்போது அவருடன் இணைய அரட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் உறுதிப்படுத்துகிறார். கடந்த புதன்கிழமை பிற்பகல் பிறயன் டிக்சன் ரொறன்ரோ பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார். அவர் வியாழனன்று நீதிமன்றில் முன்னிறுத்தப்படுவார். கியான் லி என்ற 23 வயது மாணவி கடந்த வெள்ளியன்று தனது அடுக்குமாடி வீட்டில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனைமூலம் அவரது இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில…

    • 0 replies
    • 793 views
  21. ரெண்டு பக்கெற் உப்பு அம்பது ரூபாதான்ஞ் வாங்குங்கோ அக்கா'' என்று இறைஞ்சுகின்றன அவர்களின் கண்கள். எட்டு, பத்து வயது மதிக்கத் தக்க இரண்டு சிறுவர்கள். வெயிலில் அலைந்து கறுத்து வாடிய முகங்கள். பிஞ்சுக் கைகளை இழுக்கும் உப்புப் பொதிகளின் சுமை. 'அப்பா, அம்மா ரெண்டு பேரும் இல்லை. கடைசிச் சண்டையிலை செத்துப் போயிட்டினம்.' இதை அவன் எங்கோ பார்த்துக்கொண்டு, மரத்துப்போன முகத்தோடு சொல்கிறான். பெற்றோர் கோயிலுக்கோ, கடைக்கோ போய்இருப்பதைச் சொல்வதுபோன்ற தொரு தொனி. மேலும், முள்ளி வாய்க்கால் பேரனர்த்தத்தை அவர்கள் 'கடைசிச் சண்டை’ என்றுதான் சொல்கிறார் கள். அந்தச் சிறுவர்களிடம் துயரக் கதை ஒன்று இருக்கிறது. கேட்பதற்கு அஞ்சி அந்தக் கண்களில் இருந்து தப்பித்து ஓடுகிறோம். அவர்களைப் போலவ…

    • 0 replies
    • 765 views
  22. ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011, 15:54[iST] பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது. அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்க…

  23. அமெரிக்கர்கள் சிகிச்சைக்காக இந்தியா செல்ல வேண்டாம்: ஓபாமா கோரிக்கை! வர்ஜினியாவில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட ஒபாமா, குறைந்த செலவில் சிகிச்சை தரப்படுகிறது என்ற காரணத்திற்காக அமெரிக்கர்கள் இந்தியா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: அமெரிக்கர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நம்முடைய நாட்டில் மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்கும்நிலையில், குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா,மெக்சிகோ நாடுகளில் மருந்து பொருட்களுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் ச…

    • 1 reply
    • 543 views
  24. நாடுகடத்தப்படுவார்கள் என அச்சுறுத்தப்பட்ட பிரெஞ்சுக் குடும்பத்தினர் தொடர்ந்தும் கனடாவில் தங்குவதற்கு அனுமதி கடனாவில் வசித்துவரும் பிரெஞ்சுக் குடும்பம் ஒன்றின் மகளுக்கு உளநலக்குறைபாடு இருந்த நிலையில் குறிப்பிட்ட இந்தக் குடும்பத்தினர் கனடாவிற்குப் பாரமாக இருப்பார்கள் எனக் கருதி கனேடிய குடிவரவுத் திணைக்களம் இவர்களை நாடு கடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட இந்தப் பிரெஞ்சுக் குடும்பத்தினர் மேற்கொண்ட மேன்முறையீட்டினைத் தொடர்ந்து இந்தக் குடும்பத்தினர் தொடர்ந்தும் கனடாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்தக் குடும்பத்தின் வழக்கறிஞர் இந்தத் தகவலை செவ்வாயன்று வெளியிட்டிருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தக் குடும்பத்த…

    • 0 replies
    • 570 views
  25. CNN ibnல அன்னா ஹஜாரேயிடம் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது, "உங்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால் ஏற்றுகொள்வீர்களா?" என்று! பிரதமர் ஆவதற்கு இந்த எளிய வழி இருப்பது தெரிந்திருந்தால் நானும் மீனவர்களுக்காக நாலு நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பேன். ஆனால் இதில் என்ன பிரச்சினையென்றால் நானோ, நீங்களோ இந்தியாவில் பெயர் போன அகிம்சை வழியில் போராடினால் கூட செத்து, அழுகி, காய்ந்து, காக்கையால் தூக்கிச் செல்லப்படுவோமேயொழிய, இந்த ஊடகங்களால் கண்டுகொள்ளப்பட மாட்டோம்! ஏன்னா எதை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்றும், எதை மக்களிடம் இருந்து முழுதாய் மறைக்கவேண்டும் என்றும் ஊடகங்கள் தெளிவாய் முடிவு செய்கின்றன, மேலிட உத்தரவின் பேரில். ஒரு போராட்டத்தின் சாரமும், அந்தப் போராட்டத்தின் மூலம் போராளிகள்…

    • 0 replies
    • 535 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.