உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் : தங்கபாலு அறிவிப்பு இலங்கை அரசை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை காலை 10 மணிக் கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=51971
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
அல்பேட்டா பூர்விகக் குடிமக்களின் தலைவர்மீது குற்றச்சாட்டு மாகாணத்தின் மிகப்பெரிய தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் கையகப்படுத்தப்பட்டதுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் அல்பேட்டா பூர்விகக் குடிமக்களின் தலைவரும் ஒருவர். ஆனால் இந்த கையகப்படுத்தலானது அல்பேட்டா, ஒன்ராறியோ மற்றும் கியுபெக் பூர்விகக் குடிமக்களின் நலன்களுக்கும் அல்பேட்டாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபைக்குமிடையே பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. அல்ராவின் கொபிமாவிலுள்ள மொன்ரானா, கான்வேக்கிலுள்ள பூர்விகக் குடிமக்களின் புகையிலைத் தொழிற்சாலை, மொண்றியலுக்கு வெளியேயுள்ள மொவாக் சமூகம் ஆகியன புகையிலை வரிச் சட்டத்தின்கீழ் இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். அல்பேட்டாவின் போதைப்பொர…
-
- 0 replies
- 658 views
-
-
தனது நண்பனைக் காப்பாற்ற முயன்ற நபர் சுட்டுக்கொலை பிறம்ரன் பாங்குவெற்றில் சனிக்கிழமையன்று சுட்டுக் காயமடைந்த நபர் இன்று இறந்துள்ளார். 28 வயதுடைய இந்த நபர் காயமடைந்தவுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோதும் அன்று பிற்பகலே அவர் இறந்துவிட்டார் என பீல் பிராந்தியப் பொலிசார் தெரிவிக்கின்றனர். சூதாட்டப்போட்டி இடம்பெற்ற றொஸ் விடுதியில் இந்த நபர் இருந்தபோது அடையாளங்காணப்படாத இருவர் நடாத்தி துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த நபர் கொல்லப்பட்டார். சண்டையை நிறுத்துவதற்கு முயன்றபோதே பிரஸ்தாப நபர் நெஞ்சில் காயமடைந்தார். கொல்லப்பட்டவரின் பெயர் கீகி எனவும் அவர் தனது நண்பனுக்கு உதவுவதற்கே முயன்றாரெனவும் சாட்சியம் ஒருவர் தெரிவித்தார். இந்த சூதாட்டப் போட்டியில் துப…
-
- 0 replies
- 664 views
-
-
காப்பரின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கும் முன்னாள் பிரதமர்கள் லிபறல் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை மேம்படுத்திய இரு முன்னாள் பிரதமர்கள் தற்போது ஸ்ரீபன் காப்பரின்பொருளாதாரக் கொள்கையை விமர்சித்துள்ளனர். கொன்சவேட்டிவ் தலைவர்தான் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதற்கு சிறந்த தலைவர் என்ற கருத்தை முறியடிப்பதற்காக போல் மாட்டின் மற்றும் ஜீன் செறற்றின் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கொன்சவேட்டிவ் தலைவர்தான் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதற்கு சிறந்த தலைவர் என்ற கருத்து கருத்துக்கணிப்புக்களில் தெரியவந்ததுடன் காப்பரும் அந்தத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு கூட்டங்களில் பேசும்போது ஜி எட்டு நாடுகளில் ஒப்பீட்டு ரீதியில் கனமாவின் சிறந்த பொ…
-
- 0 replies
- 776 views
-
-
நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் பலி Bomb kills three NATO soldiers in Afghanistan (AFP) – 4 hours ago KABUL — A bomb killed three NATO soldiers in southern Afghanistan, the joint force said Sunday, bringing to eight the number of foreign soldiers killed in the country in the most deadly weekend this year. On Saturday, NATO's International Security Assistance Force (ISAF) said five of its troops had been killed in a suicide attack at an Afghan army base in the eastern province of Nangarhar, in which four Afghan soldiers were also killed. On Sunday ISAF said three more of its troops had died on the same day in the south of the country in an impro…
-
- 0 replies
- 725 views
-
-
சிரியாவில் பாஷார் அல் ஆசாத் கடந்த 11 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக அந் நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவமும் போலீசும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தும் போராட்டம் குறையவில்லை. மாறாக தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையேபோராட்டத்தில் ஈடுபட்ட ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது வாலிபரின் இறுதி ஊர்வலம் பனியாஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்ற பொது மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து போராட்டம் …
-
- 0 replies
- 620 views
-
-
கியூபாவில் ராகுல் காஸ்ரோவின்(raul castro) புதிய தலைமை
-
- 0 replies
- 741 views
-
-
ஹொஸ்னி முபாரக்கிற்கு மரண தண்டனை வீரகேசரி இணையம் 4/17/2011 9:59:46 AM எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. முபாரக் சுமார் 40 ஆண்டுகளாக எகிப்தின் ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்து வந்தார். எனினும் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் அவர் பதவி விலகினார். எனினும் அவர் மீது தனது எதிர்ப்பாளர்களை படு கொலைசெய்தமை, ஊழலில் ஈடுபட்டமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இக்குற்றச்சாட்டுக்களை அந்நாட்டின் தற்போதைய இராணுவ அரசு விசாரித்து வருகின்றது. இதன்போது விசாரணைக…
-
- 0 replies
- 715 views
-
-
இலங்கை வவுனியா நகர் பேருந்தில் நெடுந்தீவு முகிலனின் புத்தக வெளியீடு இச்செய்தியை மேலும் விவரமாக அறியவும், அறிய புகைப்படங்கள் பார்க்கவும், http://www.thedipaar.com/news/news.php?id=27015
-
- 0 replies
- 898 views
-
-
காணாமல் போன இலங்கை கடற்படை சிப்பாய்கள்! - அவிழும் மர்ம முடிச்சு இலங்கைக் கடற்படையின் நான்கு சிப்பாய்கள் முல்லைத்தீவுக் கடலில் திடீரென மாயமாக மறைந்தமை, அதன் பின்னர் சில தினங்கள் கழித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே காணாமற் போனமை போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகுந்த பரபரப்பான செய்திகளாக அடிபட்ட போதிலும், தமிழகத் தேர்தல் சூட்டுக்கு மத்தியில் அந்த விவகாரங்கள் அப்படியே அமுங்கித்தான் போயின. ஆனாலும், இந்த மர்ம மறைவுக்குப் பின்னால் கட்டவிழும் மிகப்பெரும் ராஜதந்திர நெருக்கடி அப்படி ஒன்றும் குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். ஒருபுறம், இலங்கை- & இந்திய கடற்படைகள் திருகோணம…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈராக்கின் மேற்கு என்பார் மாகாணத்தில் சதாம் ஹூசைனின் ஆட்சிக் காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என நம்பப்படும் சுமார் 800இற்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகளுடன் கூடிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை 1980 முதல் 1988 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஈரான் - ஈராக்கிற்கிடையிலான யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவற்றில் சில எலும்புக்கூடுகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. எலும்புக்கூடுகளின் மண்டை ஓட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டமைக்கான அடையாளங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது சதாம் ஆட்சியின் மிக மோசமான குற்றத்தினையும் மனித உரிமை மீறலையும் க…
-
- 0 replies
- 767 views
-
-
விறகு தேடிக் காட்டுக்குச் சென்ற வேளையில் இராணுவச் சிப்பாயொருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பதின்ம வயது யுவதியொருத்தி மூன்றுமாத கர்ப்பிணியாக இருக்கும் நிகழ்வு வாகரையில் இடம்பெற்றுள்ளது.கடந்த ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் வாகரைப் பிரதேசத்தின் பதினாறு வயது யுவதியொருத்தி விறகு தேடிக்காட்டுக்குச் சென்ற வேளை இராணுவச் சிப்பாயொருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். ஆயினும் சம்பவம் பற்றி வெளியில் சொன்னால் இராணுவத்தினர் தன்னைக் கொன்று விடுவர் என்ற பயம் காரணமாக அவர் விடயத்தை மறைத்து வைக்க முயன்றுள்ளார். ஆயினும் இன்று அவரது கர்ப்பம் குறித்து வெளியில் தெரிய வந்த பின்பே அவர் விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை வல்லுறவுக்குட்படுத்திய சிப்பாயை மீண்டும் ஒரு…
-
- 0 replies
- 775 views
-
-
உலகம் முழுவதும் உள்ள அரசுகளின் திரைமறைவுச் சதிகளையும், இரகசியங்களையும் அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் என்னும் இணையதளம், ஈராக் மற்றும் ஆப்கான் போர்களில் அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களை அமெரிக்கச் சிப்பாய்கள், தமது இராணுவத் தலைமைக்கு அனுப்பிய குறிப்புகளிலிருந்தே அம்பலப்படுத்தியது. அது மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கும் இடையிலான கள்ள உறவுகள் மற்றும் சதிகளையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இணையத்தின் மூலம் அமெரிக்க அரசுக்கு அனுப்பும் இரகசியக் கடிதங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தத் தொடங்கியவுடன், அமெரிக்காவின் முகவிலாசம் கிழிந்துவிடும் என்று அஞ்சிய அந்நாட்டின் வெ…
-
- 0 replies
- 757 views
-
-
க்லெஸ்டர் குண்டுகள் லிபியா ஏவியதாம் – அலறும் மேற்கத்தேய ஊடகங்கள் லிபியா புரட்சிக்காரர்கள் மீது க்லெஸ்டர் குண்டுகளை வீசியதாகவும் மனித உரிமை கண்கானிப்பகத்தைச் சோர்ந்த புகைப்படக்காரர் மூன்று குண்டுகள் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் விழுந்து வெடித்தாக கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தடைசெய்யப்பட குண்டையே லிபியா பாவித்தாக அலறும் ஊடகங்கள் தமிழர்கள் மீது அதே குண்டுகள் பாவிக்கப்பட்டதாக ஆதாரத்துடன் அனுப்பிய போதும் அதை கண்டுகொள்ளவில்லை. இதே வேளை க்லெஸ்டர் குண்டுகளை தாம் பாவிக்கவில்லையென லிபியா அறிவுத்துள்ளவேளை கடாபி பதவி விலகும் வரை மக்களுக்கு பாதுகாப்பில்லையென நேட்டே அமைப்பு நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இது…
-
- 0 replies
- 862 views
-
-
லிபியா தொடர்பான கனடாவின் படைத்துறைசார் தீர்மானங்கள் தேர்தல் வரைக்கும் இடைநிறுத்தப்பட்டிருக்குமாம் கடாபியின் தலைமையிலான படையினரை இலக்குவைத்து அமெரிக்காவின் தலைமையிலான கூட்டுப்படைகள் தங்களது தாக்குதல்களை அதிகரிக்கவேண்டுமென லிபியக் கிளர்ச்சியாளர்கள் அழைப்புவிடுத்திருக்கும் நிலையில், லிபியா தொடர்பான படைத்துறைசார் புதிய தீர்மானங்கள் எதுவும் தேர்தல்கள் நிறைவுறும் வரைக்கும் எடுக்கப்படாது என இன்று காலையில் கொண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் காப்பர் அறிவித்திருக்கிறார். இருப்பினும் 'கூட்டு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்தும் பேசிவருகிறோம். லிபாயாவில் தரைவழிப் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கனேடியப் படையினரை ஒருபோதும் அனுப்பப்போவதில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். லிபி…
-
- 0 replies
- 690 views
-
-
லிபியாவில் கடாபி ஆட்சி தொடர்வதை நினைத்துக் கூட பாரக்க முடியாது என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்க தேசமான லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக மோமர் கடாபியின் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து கடந்த பெப்பிரவரி மாதம் 15ம் திகதி முதல் புரட்சிப் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியதில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க லிபிய வான் எல்லையில் விமானம் பறக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தடை விதித்தது. இந்த தடையை செயல்படுத்த அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் படைகள் லிபியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் த…
-
- 0 replies
- 738 views
-
-
முதியோர் துஸ்பிரயோகத்திற்கு முடிவு கட்டுவோம்: காப்பர் சூழுரை தாங்கள் மீண்டும் ஆட்சிக்குவந்தால் முதியோர் துஸ்பிரயோகத்திற்கு முடிவுகட்டும் வகையில் நாட்டினது சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமென்றும் இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெள்ளியன்று காப்பர் அறிவித்திருக்கிறார். நாட்டிலுள்ள முதியவர்களைத் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவர்கள் யாரோ அவர்கள் கடுமையான தண்டனை வழங்கப்படுமாம். நாட்டினது மூத்த குடிமக்களான இவர்கள்தான் இந்தத் தேசத்தினைக் கட்டியெழுப்பியவர்கள். இதுபோல இந்த மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் எங்களது திட்டத்தினை முன்னெடுக்கும் போது மனதில் புதிய உறுதியும் உத்வேகமும் பிறக்கும்' என்றார் காப்பர். …
-
- 0 replies
- 681 views
-
-
ரொறன்ரோவில் எரிபொருளின் விலை தீடீரென அதிகரித்தது: புறக்கணிப்புப் போராட்டம் தொடர்கிறது. கடந்த வெள்ளியன்று காலைமுதல் ரொறன்ரோவின் பல பாகங்களிலும் எரிபொருளின் விலை லீற்றருக்கு 1.32 டொலராக அதிகரித்த நிலையில் கனடாவின் பல பாகங்களிலும் எரிபொருள் புறக்கணிப்பு பரவலாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. வெள்ளியன்று அதிகாலை எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என அறிவித்த நிலையில் குறைந்த விலையில் எரிபொருளைப் பெறுவதற்கான வியாழனன்று பின்னிரவு வரை மக்கள் எரிபொருளைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் இருந்தார்கள். இருப்பினும் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்னமும் லீற்றரொன்றுக்கு 1.20 டொலர்கள் வசூலிக்கப்படுவது மக்களைப் பொறுத்தவரையில் நல்லதொரு செய்தியே. நகரின் சில பக…
-
- 0 replies
- 785 views
-
-
அர்ஜென்டினாவில் கடந்த 1976 முதல் 1983-ம் ஆண்டு வரை அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி நடந்தது. அப்போது ஜெனரல் பிக்னான் (83) சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வந்தார். அவரது ஆட்சியில், வன்முறைகள், படுகொலை சம்பவங்கள் பெருமளவில் நடந்தன. இவர் தன்னை எதிர்த்த மக்களை கொன்று குவித்தார். அவரது ஆட்சியின் போது 30 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 1983-ம் ஆண்டு பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கேம்யோ டி மயோ என்ற இடத்தில் உள்ள ராணுவதளத்தில் வைத்து 56 பேரை சித்ரவதை செய்து கொன்றார். இக்குற்றத்துக்காக அவருக்கு ஏற்கனவே 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தன்னை எதிர்த்த அரசியல் தலைவர்களையும் கொன்று குவித்ததாக மற்றொரு வழக்…
-
- 0 replies
- 543 views
-
-
இங்கிலாந்தில் மேற்கு லண்டனில் உள்ள டாஜென்காம் பகுதியைச் சேர்ந்தவர் லீ பிராட்லி பிரவுன். இவர் விடுமுறையை கழிக்க துபாய் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்குள்ள புர்ஜ் அல் அராப் ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவர் அங்கு தங்கியிருந்த மற்றொருவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டு துபாய் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை போலீஸ் அதிகாரிகள் அடித்து உதைத்ததாக தெரிகிறது. குடிக்க தண்ணீரும், உணவும் தர மறுத்தனர். இதற்கிடையே, போலீசார் கடுமையாக அடித்து உதைத்தால் லீ பிராட்லீ பிரவுன் பரிதாபமாக இறந்தார். இத்தகவலை அவருடன் சிறையில் இருந்த நபர் சகோதரிக்கு…
-
- 0 replies
- 486 views
-
-
கொலம்பியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிசால் நகரில் இருந்து ஒரு பயணிகள் பஸ் புறப்பட்டு சென்றது. அது மலைப் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளதாக்கில் கவிழ்ந்தது. இதையடுத்து, அந்த பஸ் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் பலியானார்கள். அது போன்று பல இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்செய்தி குறித்த படங்கள் மற்றும் வீடியோ பார்க்க.... http://www.thedipaar.com/news/news.php?id=26965
-
- 0 replies
- 444 views
-
-
கலாச்சார உடைகளை அணியவேண்டும் என்ற கொண்சவேட்டிவ்களின் மின்னஞ்சலால் சர்ச்சை ரொறன்ரோவில் கொண்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளுபவர்கள் தங்களது கலாசாரத்தினை வெளிப்படுத்தும் ஆடைகளையே அணியவேண்டும் என கொண்சவேட்டிவ் கட்சியின் உள்ளூர் ஒழுங்கமைப்பாளர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தியிருக்கிறார். ரொறன்ரோவிலுள்ள பல்லின சமூகத்தவர்களும் கொண்சவேட்டிவ் கட்சியின் பின்னால் அணிதிரண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் தத்தமது கலாச்சார உடைகளில் ஆதரவாளர்கள் வீதிகளில் இருக்கவேண்டும் என்றும் இது சிறந்த பிரசாரப் புகைப்படத்தினை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் இந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பல்லி…
-
- 0 replies
- 647 views
-
-
பாரிய தீ விபத்து - ஐவர் கொல்லப்பட்டனர் April 14, 2011, 10:38 am[views: 693] பரிசின் 10வது வட்டாரத்தில் மாபெரும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. Ménilmontant இலுள்ள Cité du Labyrinthe எனும் அடுக்குமாடிக் கட்டிடம் தீப்பற்றிக் கொண்டது. இதில் ஐவர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்துள்ளனர். இதில் அறுவர் நிலை ஆபத்தான கட்டத்திலுள்ளது. தீக்குரிய காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இன்று அதிகாலை 2h30 அளவில் கட்டிடத்தின் நிலமட்டப் பகுதியில் (RDC) இருந்த அறையிலேயே தீப்பற்றிக் கொண்டது. இவ்வறையில் யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிப்தில் இறந்த ஐவரில் நால்வர் தீப்பற்றிக் கொண்டதையடுத்து யன்னலில் இருந்து குதித்ததனாலேயே இறந்துள்ளனர். இவர்கள் மெத்தைகளைக் கட்டிக்…
-
- 0 replies
- 994 views
-
-
ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுக் கதிர்வீச்சின் அளவை உலகில் உச்சபட்ச அளவான “7 ” என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது செர்னோபிளில் நடந்த அணு உலை விபத்தோடு சமமான அளவாகும். இந்நிலையில் புகுஷிமா அணு உலைகளில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் 11ம் திகதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பின் உலைகளில் தொடர்ந்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படத் துவங்கியது. கடந்த ஒரு மாத காலமாக அந்த உலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஜப்பான் அரசு போராடியும் பயன் எதுவும் கிட்டவில்லை. உலைகளில் ஏற்ப…
-
- 0 replies
- 538 views
-
-
பெலரோஸ் நாட்டின் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தில்11 பேர் பலியாயினர்.90 பேர்படுகாயமடைந்தனர். பெலரோஸ் நாட்டின் மனி்சிக் நகரில் உள்ள ஒகாயாபிரஸ்காய மெட்ரோ ரயில்நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.அப்போது பணிமுடித்து விட்டு ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு ரயில்கள் சேதமடைந்தனர். மேலும் பயணிகள் உபயோகப்படுத்தும் எஸ்கலேட்டர் சேதமடைந்தது. 90 பேர் படுகாயமடைந்ததாகவும், இதில் 50 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து அதிபர் அலெக்ஸாண்டர்லுகோஸ்வகி, அவரசமாக மந்திரிசபையினை கூட்டி விவாதித்தார். குண்டுவெடிப்பு சம்பவத்த…
-
- 0 replies
- 513 views
-