உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26681 topics in this forum
-
நைஜீரியாவில் பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி நைஜீரியாவின் வட-கிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரியில் இருக்கும் மசூதியில் இன்று அதிகாலை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களே தற்கொலைப்படைதாரிகளாக செயல்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். முதலாவது பெண் மசூதிக்குள் புகுந்து வெடித்தவுடன், பலரும் தப்பி வெளியில் ஓடிவரும்போது இரண்டாவது குண்டுதாரி வெடித்ததாக இந்தச் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 17க்கும் மேற்பட்டோர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். அதிகாலையில் தொழுகை துவங்கியவுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உமராரி மசூதியின் தலைமை இமாம் பிபிசியிடம் தெரிவித…
-
- 0 replies
- 295 views
-
-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் - அதிர்ச்சியில் ஸ்பெயின் நகரம் Published By: Rajeeban 25 Sep, 2023 | 11:12 AM செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மாணவிகளின் நிர்வாணப்படங்கள் ஸ்பெயின் நகரமொன்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. ஸ்பெயினின் நகரமொன்றில் வசிக்கும் இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன என்ற செய்தி அந்த நகரமக்களிற்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முன்வைத்து இந்த படங்கள் உருவாக்கப்பட…
-
- 1 reply
- 295 views
-
-
டோக்கியோ கடந்த மாதம் கலைக்கப்பட்ட ஜப்பான் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் திடீர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் சின்சோ அபேவின் விடுதலை ஜனநாயக கட்சி கொமித்தோ கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எதிர்த்தரப்பில் ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணி கடும் போட்டியை ஏற்படுத்தியது. திடீர் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. மொத்தம் 53.3 சதவீத ஓட்டுகளே பதிவானது. 2012–ம் ஆண்டு நடந்த தேர்தலில் 59.3 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 475 தொகுதிகளில் சின்சோ அபேவின் கூட்டணிக்கு 328 தொகுதிகள் (3–ல் 2 மடங்கு) கிடைத்தன. இது அந்நாட்டில் ஆட்சியை எந்த வித சிக்கலும் இன்றி நடத்துவதற்கு கிடைத்த ‘‘சிறப்பு பெரும்பான்மை’’ என்பது குறிப்பிடத்த…
-
- 0 replies
- 295 views
-
-
மருந்து நிறுவனங்களின் தரவுகளைத் திருட முயற்சிப்பதாக ரஷ்யா மற்றும் வடகொரியா மீது மைக்ரோசொப்ட் குற்றச்சாட்டு! November 14, 2020 ரஷ்யா மற்றும் வடகொரியாவைச் சேர்ந்த அரசு ஆதரவுடைய ஹக்கர்கள், உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட முயன்றதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த ஹக்கிங் முயற்சியில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளது. ஆனால் எத்தனை முயற்சிகள் வெற்றி பெற்றது அல்லது அத்துமீறல்களின் தீவிரத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. பெரும்பாலான அத்துமீறல்கள் கொரோனாத் தொற்றுத் தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும், இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் நடந்துள்ள…
-
- 0 replies
- 295 views
-
-
ரஷ்யாவிற்கு எதிரான... பொருளாதாரத் தடைகளால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு... 400 பில்லியன் டொலர்கள் இழப்பு: புடின் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளால் ஐரோப்பிய ஒன்றியம் 400 பில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். வருடாந்திர செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய போதே புடின் இதனைத் தெரிவித்தார். மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ‘முட்டாள்தனம் மற்றும் சிந்தனையற்றவை’ என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார். அத்துடன், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தாக்குதல் ஆரம்பத்திலிருந்தே வெற்றிபெற வாய்ப்பில்லை எனவும் கட்ட…
-
- 2 replies
- 295 views
-
-
திங்கட்கிழமை அதிகாலை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது பலரை விழித்தெழச் செய்தது, மேலும் 22,000 க்கும் மேற்பட்டோர் அதை உணர்ந்ததாகக் கூறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பெர்க்லியை மையமாகக் கொண்டு அதிகாலை 2:56 மணிக்கு சுமார் 4.8 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. முதலில் இது 4.6 ரிக்டர் அளவிலானதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது குறைக்கப்பட்டது. கால் மெமோரியல் ஸ்டேடியத்திற்கு சற்று தெற்கே உள்ள பெர்க்லியில் உள்ள டுவைட் வே மற்றும் பீட்மாண்ட் அவென்யூ சந்திப்பில் மையப்பகுதி உள்ளது. ABC7 San Francisco4.3 earthquake centered in Berkeley shakes Bay Area: USGSDid you feel it? A magnitude 4.3 earthq…
-
- 4 replies
- 295 views
- 2 followers
-
-
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூதின் 6 முகவரிகள் உண்மை: இந்தியா அளித்த பட்டியலை ஏற்றது ஐ.நா. சபை பாகிஸ்தானின் கராச்சி நகரில் கிளிப்டன் பகுதியில் தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் புகைப்படத்தை புலனாய்வு ஊடகங்கள் அண்மையில் வெளியிட்டன. (உள்படம்) தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமின் 6 முகவரிகள் உண்மையானவை என்று ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 1993 மார்ச் 12-ம் தேதி மும்பையில் 13 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் பலியாகினர். 700 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மும்பை நிழல் உலக தாதா தாவூ…
-
- 0 replies
- 295 views
-
-
பெர்லின் தாக்குதல் எதிரொலி: உலகெங்கும் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பெர்லின் நகர தாக்குதலை தொடர்ந்து உலக அளவில் பல நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நியூ யார்க்கில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லண்டன் நகர பாதுகாப்பு ஏற்பாடுகளும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில், கனடாவில் உள்ள டொராண்டோ மற்றும் மான்டிரியால் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் சந்தைகளில் பாதுகாப்பு ஏற்பாடாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிகாகோ கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பாதுகாப்பு சோதனை முன்னதாக, கடந்த திங்கள்கிழமை…
-
- 0 replies
- 295 views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு... வடகொரியா பகிரங்க எச்சரிக்கை தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் ஏவுகணை பரிசோதனை சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் விமர்சனத்திற்கு எதிராக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஏவுகணை சோதனையைத் தொடங்கியுள்ள வடகொரியா, ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளைப் பரிசோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தச் சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசர கூட…
-
- 0 replies
- 294 views
-
-
வடகொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் வடகொரியா முன்னிலையில் உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மத்தியிலும் தேர்தல் முழுப் பிரயாசையுடன் இடம்பெற்றுள்ளது ஐரோப்பியசெய்தியாளர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் ஈராக்கில் பல உயிர்களைப் பலியெடுக்கும் சூழலிலும், பாராளுமன்றத் தேர்தல் முழுப் பிரயாசையுடன் இடம் பெற்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும், அதற்கு முன்னான தேர்தல் பிரச்சாரங்களின் போதும் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவும் பயனளிக்காது போனதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் தற்போதைய பிரதமர் அல் மாலிக் மூன்றாம் முறையாகப் போட்டியிடுவதும், இவர் பதவிக்கு வந்த காலத்திலிருந்து ஈராக்கில்…
-
- 0 replies
- 294 views
-
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழங்காவிட்டால் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு ரூ.30 கோடி நிதி வழங்குவேன்: நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் உறுதி YouTube மைக்கேல் புளூம்பெர்க் - AFP ‘‘பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அரசு நிதி ஒதுக்காவிட்டால், நான் ரூ.30 கோடியை வழங்குவேன்’’ என்று நியூயார்க் முன்னாள் மேயரும் கோடீஸ்வரருமான மைக்கேல் புளூம்பெர்க் கூறியுள்ளார். பூமி வெப்பமயமாதலைத் தடுக்க பாரிஸில் 2015-ம் ஆண்டு மாநாடு நடந்தது. அப்போது சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா ஆகிய நாடுகள்தான் அதிகபட்சமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன என்று புகார் எழுந்தது. ந…
-
- 1 reply
- 294 views
-
-
கருகும் பயிர்களை காப்பாற்ற காவிரி நீருக்காக, தமிழகம் சுப்ரீம் கோர்ட், காவிரி கண்காணிப்புக்குழு மற்றும் காவிரி நதிநீர் ஆணையம் என பந்தாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், இப்பிரச்னையில் தமிழக அரசுக்கும் மிகவும் சோதனையான ஆண்டு என்றே கூறலாம். அந்த அளவிற்கு காவிரி பிரச்னையில் தமிழகமும், தமிழக அரசும் பந்தாடப்பட்டுள்ளன. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரைகுறுவை மற்றும் சம்பா பயிர்களுக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால், தமிழகத்தில் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பா பயிரையாவது, பிழைக்க வைக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் …
-
- 1 reply
- 294 views
-
-
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சீக்கியப்பெண் போலீஸ் அதிகாரியாக நியமனம் அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer நியூயார்க்: அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வா…
-
- 0 replies
- 294 views
-
-
ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் வசித்து வருபவர் மனோரஞ்சன் ஜேனா. மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படும் இவர், தன் வீட்டில் மண்டை ஓடுகளை வைத்து மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதன் அடிப்படையில் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஜேனாவை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டின் அலமாரிகளில் அடுக்கி வைத்திருந்த 27 மண்டை ஓடுகளை கைப்பற்றினர். ஆனால், அவர் மந்திர தந்திர வேலைகள் செய்ததற்கான எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இதுகுறித்து ஜேனாவிடம் விசாரித்தபோது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தான் நடத்தி வந்தது ஊக்கம் அளிக்கும் மையம் என்றும் தெரிவித்தார். “கடந்த 9 ஆண்டுகளாக இந்த மண்ட…
-
- 0 replies
- 294 views
-
-
பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றுமொரு கனேடிய பணயக்கைதி படுகொலை பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றுமொரு கனேடிய பணயக்கைதி படுகொலை தென் பிலிப்பைன்ஸில் அபு சேயப் தீவிரவாதிகளால் பிறிதொரு கனேடிய பணயக்கைதியை தலையைத் துண்டித்து நேற்று திங்கட்கிழமை கொன்றுள்ளதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் தெரிவித்தது. ரொபேர்ட் ஹோல் என்ற மேற்படி பணயக்கைதியை விடதலை செய்வதற்கு தீவிரவாதிகளால் கோரப்பட்ட கப்பப்பணம் உரிய காலக்கெடுவுக்குள் வழங்கப்படாததையடுத்தே அவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அபு சேயப் தீவிரவாத குழுவின் பேச்சாளர்கள் உள்ளூர் ஊடகத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கப்பப்பணம் செலுத்த வேண்டிய இறுதிக் காலக்கெடு திங்கட்கிழமை பிற்பகல்…
-
- 0 replies
- 294 views
-
-
10 நாட்கள் இடைவெளியில் 8 பேருக்கு மரண தண்டனை; அமெரிக்க மாநிலம் அதிரடி! அமெரிக்காவின் ஆர்கென்ஸா மானிலத்தில் பத்து நாட்களுக்குள் மரண தண்டனைக் கைதிகள் எண்மருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படவுள்ளன. ஆர்கென்ஸாவில் மொத்தமாக 34 மரண தண்டனைக் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதில், நான்கு கறுப்பினத்தவரும் நான்கு வெள்ளையர்களுமே பத்து நாட்கள் இடைவெளியில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளனர். இவர்கள் எண்மரும் 1989 முதல் 1999ஆம் ஆண்டு காலப் பகுதியில் தண்டனை பெற்றவர்களாவர். இவர்களின் தண்டனை சுமார் இரண்டு தசாப்தங்களாக நிலுவையிலேயே நீண்டு வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஆர்கென்ஸா ஆளுனராகப் பதவியேற்ற ஆஸா ஹட்சின்சன் உடனடியாக தண்டனைகளை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார்.…
-
- 0 replies
- 294 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - குற்றச்சாட்டோ, வழக்கு விசாரணையோ இல்லாமல் குவாண்டனாமோவில் பதினான்கு ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவித்த ஷகிர் ஆமிர் பிபிசிக்கு வழங்கிய செவ்வி. - முதற்தடவையாக பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட சவுதி அரேபியாவில் 13 பெண்கள் நகர சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். - புவியை வெப்படையச் செய்யும் வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான தீர்வாக பூச்சி, புழுக்களை உண்ண முடியுமா என்பது குறித்த ஒரு ஆய்வு.
-
- 0 replies
- 294 views
-
-
சென்னை, ஜூலை 31 (டி.என்.எஸ்) பசுமை வீடுகள் கட்டுவதற்காக ரூ.1260 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வீட்டு வசதி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். மேலும், ஒரு வீட்டின் உரிமையாளர் என்ற நிலை ஒருவருக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிப்பதோடு சமுதாயத்தில் கவுரவமாகவும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்துகிறது. முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றவுடன், கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கென வீடுகள் கட்டுவதற்காக “முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்” என்ற ஒரு புதுமையான திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி சூ…
-
- 0 replies
- 294 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ரஷ்ய அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியதற்கு பதிலடியாக அமெரிக்க அதிகாரிகளை அகற்ற மாட்டோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று அறிவிப்பு. * சிறு மோதல்களுக்கு மத்தியில் சிரிய போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இந்த சமாதானம் நிலைக்குமா? நீடிக்குமா? ஆராய்கிறது பிபிசி. * மனிதர்களின் மூட்டுவலிக்கு பரிணாம வளர்ச்சியே காரணம். இது இன்னும் மோசமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 294 views
-
-
ஆஃப்கானிஸ்தான் அரசு படைகள் மற்றும் தாலிபன் அமைப்பினர் இடையே ஏற்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது. ரமலான் விழா முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, அடுத்த 10 நாட்களுக்கு இந்த சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதாக தெரிவித்த ஆஃப்கன் அரசு, ஆனால், தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. …
-
- 0 replies
- 294 views
-
-
ஜப்பான் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்படுகிறது. மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரமாகும். 1899ஆம் ஆண்டு முதலான கணக்கெடுப்பில் இதுவே குறைந்தபட்சமாகும். கடந்த ஆண்டை விட 54 ஆயிரம் குழந்தைகள் இந்த ஆண்டில் குறைந்துள்ளனர். இதே போல் கடந்த ஓராண்டில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் மக்கள் தொகையில் கணிசமான அளவுக்கு சரிவு காணப்படுகிறது. https://www.polimernews.com/dnews/94517/ஜப்பானில்-பிறப்பு-விகிதம்குறைவு--மரண-விகிதம்அதிகரிப்பு
-
- 0 replies
- 294 views
-
-
லட்சகணக்கான முஸ்லிம்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்களா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். சீனாவில் முஸ்லிம்கள் சீனாவில் உள்ள சின்ஜியாங் பகுதியில் லட்சகணக்கான முஸ்லிம்களை தடுத்து வைத்து இருப்பதாக உலாவும் செய்தி அப்பட்டமான பொய் என…
-
- 0 replies
- 294 views
-
-
Published By: SETHU 11 MAY, 2023 | 01:00 PM பின்லாந்தின் பிரதமர் சனா மரீனும் அவரின் கணவரும் விவாகரத்து பெறுவதற்கு கூட்டாக விண்ணப்பித்துள்ளனர். 2019 ஆம் ஆணடு தனது 34 ஆவது வயதில் பின்லாந்தின் பிரதமராக சனா மரீன் பதவியேற்றார். அப்போது உலகின் மிக இளமையான பிரதமராக அவர் விளங்கினார். பின்லாந்து வரலாற்றில் மிக இளமையான பிரதமர் அவரே. தனது காதலாரான மார்க்ஸ் ரெய்கோனெனை 2020 ஆம் ஆண்டு சனா மரீன் திருமணம் செய்தார். பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இத்திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்னரே இவர்கள் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்தனர். இத்தம்பதியினருக்கு 5 வயதான ஒரு மகள் உள்ளார். 'நாம் இருவரும் 19 வருடங்களாக இணைந்து வா…
-
- 2 replies
- 294 views
- 1 follower
-
-
சீனக் கட்டுப்பாடுகளுக்கமைய, சில செய்திகளைத் தவிர்க்கும் கருவியை ஃ பேஸ்புக் உருவாக்கியுள்ளதா? சில குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் வாழும் மக்களின் செய்தியோடைகளில் ( நியூஸ் ஃ பீட்) தோன்றும் பதிவுகளை தடுக்க ஒரு சிறப்பு மென்பொருளை சமூக வலைதளமான ஃ பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் சீன ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ஃ பேஸ்புக் மீண்டும் நுழைய இந்த சிறப்பம்சம் கொண்ட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஃ பேஸ்புக் நிறுவனத்தின் மூன்று முன்னாள் மற்றும் இந்நாள் பணியாளர்களிடம் தான் தகவல்கள் பெற்றதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை மே…
-
- 0 replies
- 294 views
-