Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன. 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானத் தளத்தைப் பற்றிப் பேசினார். அமெரிக்கா அதை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அவர் கூறினார். மேலும், அவ்வாறு நடக்கவில்லை என்றால், அதன் விளைவுகளைத் தாலிபன் அரசு சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு பதிவில், "ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத் தளத்தை அதை உருவாக்கியவர்களான அமெரிக்காவுக்குத் திருப்பித் தராவிட்டால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!!!" என்று எழுதினார். இருப்பினும், சில நாட்க…

  2. பிரெக்சிற்றுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் – ஸ்கொட்லாந்து அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உடன்படிக்கை எதுவும் ஏற்படாத நிலையிலேயே பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் என தெரிவித்துள்ள ஸ்கொட்லாந்தின் அமைச்சர் பிரித்தானியா வெளியேறுவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் , பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்திற்கான அமைச்சர் மைக்கல் ரசல் இதனை தெரிவித்துள்ளார். உடன்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவிற்கு காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார் அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் …

  3. பணயக்கைதி விடுவிப்பில் இஸ்ரேலின் கோபத்தை மீண்டும் தூண்டிய ஹமாஸ்! காசாவில் இருந்து வியாழக்கிழமை (20) இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு சடலங்களில் ஒன்று ஹமாஸ் முன்னதாக கூறியது போல் பெண் பணயக்கைதியான ஷிரி பிபாஸ் (Shiri Bibas) அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 33 வயதான ஷிரி பிபாஸ் மற்றும் கைக்குழந்தை உட்பட அவரது மகன்களான ஏரியல் மற்றும் கஃபிர் காசாவில் பணயக்கைதிகளான சிறைபிடிக்கப்பட்டிருந்த போது இறந்து விட்டனர் என்று செய்தி இஸ்ரேலில் சோகத்தில் ஆழ்த்தியது. தடயவியல் சான்றுகள், உளவுத்துறை தகவலின்படி, இரண்டு குழந்தைகளும் நவம்பர் 2023 இல் பயங்கரவாதிகளால் “கொடூரமாக கொல்லப்பட்டனர்” இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளது. அவர்கள் கொல்லப்படும் போது ஏரியலு 4 வயது, கஃபி…

  4. முகக் கவச, கட்டுப் பாடுகளை... நீக்கியது இத்தாலி! எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடமேற்கு இத்தாலியில் ஒரு சிறிய பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் பாதுகாப்பான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் க…

  5. சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்! எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைமுறைக்கு வரவிருந்த மிகவும் சர்ச்சைக்குரிய “ஹிஜாப் மற்றும் கற்பு சட்டம்” அமலாக்கத்தை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) இடைநிறுத்தியுள்ளது. சட்டத்திற்கு எதிராக உள்நாட்டு, சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த திடீர் இடைநிறுத்தம் வந்துள்ளது. சட்டம் தெளிவற்ற நிலையில் உள்ளதாக கூறியுள்ள ஈரானிய ஜனாதிபதி சூத் பெசெஸ்கியன் (Masoud Pezeshkian), அதை நடைமுறைப்படுத்துவதற்கு சீர்திருத்தம் அவசியம் என்றும் விவரித்தார். இதன் விளைவாக குறித்த சட்டமூலம் மறுபரிசீலனைக்கு உட்படவுள்ளது. பொது வெளியில் தலைமுடி, முன்கைகள் அல்லது க…

  6. மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் மார்க் ஜுக்கர்பெர்க் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 09:52 AM பேஸ்புக்கின் இணை நிறுவனரும், மெட்டாவின் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் தங்களது மூன்றாவது குழந்தையை வரவேற்றனர். இந்த குழந்தைக்கு ஆரேலியா (Aurelia) சான் ஜுக்கர்பெர்க் என பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கனவே மாக்சிமா (2015), ஆகஸ்ட் (2017) என இரண்டு பெண் குழந்தைகள் இந்த தம்பதியருக்கு உள்ளனர். கடந்த 2003 முதல் டேட் செய்து வந்த மார்க் ஸூகர்பெர்க் மற்றும் சான் இணையர் 2012-ல் மண வாழ்க்கையில் இணைந்தனர். பிரிசில்லா சான், மார்க் ஸூ…

  7. சீனாவில் நிகழ்ந்த சுரங்க விபத்து: 36 நாட்களுக்குப் பின் 4 பேர் உயிருடன் மீட்பு சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பூமிக்கடியில் 660 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 4 சுரங்க தொழிலாளர்கள் அதிசயமாக வகையில் 36 நாட்களுக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பின்ஙி மாகாணத்தில் இயங்கி வந்த சுண்ணாம்பு சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிய 29 தொழிலாளர்களில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் மீட்கப்பட் டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, நான்கு பேர் பூமிக்கு அடியில் 660 அடி ஆழத்தில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் விளக்கு…

  8. உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்வு உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக பதிவு: ஜூலை 08, 2020 06:24 AM ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடே திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதய நிலவரப்படி உலக அளவில் கொரோனா …

  9. துருக்கியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம் கடந்தாண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய களையெடுப்பில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளது காவல்துறையை சேர்ந்த உறுப்பினர்கள், சட்டத்துறை, சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் என இந்த களையெடுப்பு பட்டியலில் அடங்குவார்கள். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இ…

  10. 25 JUL, 2024 | 05:04 PM மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஏழு இஸ்ரேலியர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதாரம் மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும், மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கு அது தடையாக இருக்கும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே தான் பாலஸ்தீனர்களுக்கு எதிராக குடியேற்ற வன்முறை, தாக்குதல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மேற்படி நபர்களுக்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தரப்புகளுக்கு …

  11. தங்களுடைய இருதரப்பு உறவுகளை இயல்பாக்கி கொண்ட விபரங்களை துருக்கியும் இஸ்ரேலும் வெளியிட்டுள்ளன.ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் காசாவுக்கு சென்று கொண்டிருந்த துருக்கிய உதவி கப்பலில் இருந்த 10 செயல்பாட்டாளர்களை இஸ்ரேலிய அதிரடி படையினர் கொன்றபோது இந்த இருதரப்புக்கும் இடையே உறவு முறிந்தது.தற்போதைய இணைக்க உடன்பாட்டின்படி, இஸ்ரேயல் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்கும். காசாவில் மனிதநேய நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கிலான துருக்கியின் முக்கிய பணித்திட்டங்களும் தொடர்ந்து நடைபெறும். இஸ்ரேல் எல்லையில் மேற்கொண்டிருக்கும் முற்றுகை முடிவுக்கு வர வேண்டும் என்று முதலில் துருக்கி கோரியது. ஆனால் முற்றுகை அப்படியே இருக்கும்.உறவை இயல்பாக்கியிருக்கும் இந்த உட…

  12. ஆட்சியமைத்ததும் இலங்கை தமிழர்,தமிழக மீனவர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை! – ராஜ்நாத்சிங் உறுதி. [Thursday, 2014-03-20 19:42:31] நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இலங்கை தமிழர் பிரச்சினைக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சென்னையில் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: தென்னிந்தியாவில் பல கட்சிகள் தேசிய ஜனநாயக முன்னணியில் சேர ஆர்வம் காட்டின. தமிழகத்தை பொறுத்த வரையில், கூட்டணி உருவாவதில் தமிழருவி மணியன் முக்கிய பங்காற்றினார். தற்போது பல்வேறு கட்சிகள் பா.ஜ.,வுடன் இணைந்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி…

  13. சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை தற்போது விடுதலை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்படும் 86 இந்திய மீனவர்களும் நாளை வாகா எல்லைக்குள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இது குறித்து கராச்சி போலீஸ் அதிகாரி ராஜா மும்தாஜ் கூறுகையில், 86 இந்திய மீனவர்களை இன்று விடுதலை செய்துள்ளோம். மேற்கொண்டு 363 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார்.முன்னதாக இம்மாதம் 6-ம் தேதி 86 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு கை…

  14. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிலிப்பைன்ஸ் அதிபர் டுதர்தேவின் அடியாளாக இருந்து, தற்போது நாட்டைவிட்டு வெளியேறிய ஒருவர் கூறும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள். * பெரும் நஷ்டத்தை சந்தித்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள டோஷிபா நிறுவனத்தால் அதிலிருந்து மீள முடியுமா? * சூரியமின்சார உற்பத்தியை அதிகரிக்க ஆழ்கடல் கனிமங்களை அகழ்வது அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்; இதில் எது சரி? ஆராய்கிறது பிபிசி.

  15. உக்ரைனில்... விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 26 ஆக உயர்வு ரிவ்னே பகுதியில் நெடுஞ்சாலை விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சு உறுதி செய்துள்ளது. இரண்டு சாரதிகள் உட்பட மொத்தம், 26 பேர் விபத்தில் உயிரிழந்ததோடு 12 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து போலந்து நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அதில் 34 பயணிகளும் இருந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1280104

  16. Published By: SETHU 29 FEB, 2024 | 03:43 PM இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐக கடந்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல்களையடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இத்தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர் காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,000 ஐ கடந்துள்ளது என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 30,035 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 70457 பேர் காயமடைந்துள்ளனர் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கா…

  17. அமெரிக்காவின் பிரபல பாடகர் காலமானார்.! அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி (வயது 66) மாரடைப்பு காரணமாக காலமானார். அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி. பாடகர், பாடலாசிரியர், பல வாத்திய இசைக்கலைஞர் என பன்முகத்திறமை கொண்ட டாம் பெட்டி, ஹார்ட்பிரேக்கர்ஸ் இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பாடல்களை வழங்கி உள்ளார். தனியாகவும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய இசை, ராக் அண்ட் ரோல், ஹார்ட்லேண்ட் ராக், ஸ்டோனர் ராக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இசை இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலம். அவரது பாடல் பதிவுகள் 8 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகி சாதனை படைத்திருக்கிறது. கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெ…

  18. காலநிலை மாற்ற கொள்கையின் எதிர்ப்பாளர் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு தேர்வு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளுக்கு பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஒருவரை, நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க ஓக்லஹோமா மாநிலத்தின் முதன்மை அரச வழக்கறிஞரும், புதைபடிவ எரிபொருள் துறையின் நெருங்கிய கூட்டாளியாக பார்க்கப்படும் ஸ்காட் ப்ரூயிட், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கையில் நம்பிக்கையற்றவர் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் நியமனத்தை ப…

  19. டிரம்ப் அதிபராவதற்கு எதிராக அமெரிக்காவில் இரண்டாவது நாளும் போராட்டம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிறகு இரண்டாவது இரவிலும் பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. ஆனால், மக்கள் கூட்டம் குறைவாக இருந்துள்ளது. ஒபாமா உருவாக்கி இருக்கும் பலவற்றை மாற்றுவதற்கு டிரம்ப் எண்ணம் லாஸ் ஏஞ்சலஸில் போக்குவரத்தை பாதிக்க செய்து, உடமைகளை சேதப்படுத்திய சிறிய அளவிலான மக்கள் கூட்டத்தை மேயர் எரிக் கிராசியேத்தி கண்டித்திருக்கிறார். ஆனால், ஜனநாயகத்தின் அழகான வெளிப்பாடு என்று அவர் கூறியிருப்பதற்கு பல போராட்டக்காரர்களை அவர் புகழ்திருக்கிறார், முன்னதாக, டிரம்ப் அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தி…

  20. அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதனையடுத்து புதிய சர்ச்சை : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் பார்னபி ஜொய்ஸ் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது நியுசிலாந்தின் உள்துறை அமைச்சரின் அலுவலகம் நியுசிலாந்து பிரஜையொருவரிற்கு பிறந்த குழந்தைக்கு நியுசிலாந்து பிரஜாவுரிமை வழங்கப்படுவது வழமை என தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. இதனை உறுதிசெய்துள்ள நியுசிலாந்து பிரதமரும் அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஓரு நியுசிலாந்து பிரஜை …

  21. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், இராக்கில் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள மோசூல் நகரின் மேற்கு பகுதியை நோக்கி இராக்கிய படைகள் முன்னேற்றம். அங்கு படைகளுடன் களத்தில் பிபிசி செய்தியாளர். வடகொரிய தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரரின் கொலையை அடுத்து மலேசிய - வடகொரிய உறவில் உரசல். வடகொரியாவுக்கான தனது தூதரை மலேசியா திரும்ப அழைத்துள்ளது. நீங்கள் இறக்கும்போது உங்கள் மூளையை மருத்துவ பரிசோதனைக்கு தானமாக வழங்வீர்களா? எதிர்கால சிகிச்சைகளுக்காக அதிகமான மூளைகள் மருத்துவர்களுக்கு தேவைப்படுகின்றது.

  22. கல்மேகி சூறாவளி : பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 58 பேர் பலி 05 Nov, 2025 | 09:43 AM மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் கல்மேகி சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என சர…

  23. புதுடெல்லி, ஜனவரி மாதம் 26 ந்தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் மோடியும் ஒபாமா வுடன் போனில் பேசியும், நேரில் சந்தித்தபோதும் அழைப்பு விடுத்தார். இதை அதிபர் ஒபாமா ஏற்றுக் கொண்டார். அவரது இந்தியப் பயணத்தை அமெரிக்க அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நடைபெறும் குடியரசு தின விழாக்களில் அமெரிக்க நாட்டு அதிபர் ஒருவர் பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கவுரவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒபாமா வருகையை யொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிபர் ஒபாமா தீவிர வாதி…

  24. ஜேர்மனியில் பரபரப்பு: வைத்தியசாலையில் வைத்தியரை சுட்டுக் கொன்ற நோயாளி ஜேர்மனியில் பெர்லினில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் வைத்தியரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார். ஜேர்மனியின் பெர்லினில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் பிரான்க்லின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் இன்று காலை 11 மணிக்கு நோயாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வைத்தியரை ஒருவரை சுட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வைத்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2 மணிநேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்கிடையே வைத்தியரை சுட்ட அந்த நோயாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை …

  25. நாளிதழ்களில் இன்று: இனி கடல் வழியாக ஹஜ் புனிய யாத்திரை செல்லலாம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: இணையவழி குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு காவல் துறையினர் அதிமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில போலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோதி அறிவுறுத்தியுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஹஜ் புனிய யாத்திரை மேற்கொள்பவர்களில் ஒரு பகுதியினரை கடல் வழியாக மெக்காவுக்கு அனுப்பும் இந்திய அரசின் திட்டத்திற்கு செளதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனால் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.