Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கானில் முகாமிட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு! தலிபான்களுடனான அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600ஆக குறைக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜோனத்தான் ஹோப்மேன் கூறுகையில், “தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜூலை மாதத்தில் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600ஆக குறைக்க உள்ளோம். மேலும் ஒப்பந்தத்தின் முக்கிய சரத்து ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகளை மீளப்பெறுவது தான். ஆப்க…

  2. மீண்டும் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா வான்வழித்தாக்குதல்! உக்ரைன் தலைநகர் கீவ்வில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கள்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி சுமார் 07:00 மணிக்கு வெடிப்புகள் நடந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒன்று நகர மையத்திற்கு அருகில் வெடித்தது. எனினும், இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. தலைநகரில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 19பேர் உயிரிழந்தனர். ரஷ்ய …

  3. DeepSeek க்குப் போட்டியாக Qwen2.5 Max ஐ களமிறக்கிய அலிபாபா! DeepSeek, ChatGPT, Llama ஆகிய மனிதர்களைப் போன்று பதிலளிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்குப் போட்டியாக சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தனது செயலியான Qwen2.5 Max ஐ அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அலிபாபா கிளவுட் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “Qwen 2.5-Max செயற்கை நுண்ணறிவு செயலியானது DeepSeek, ChatGPT, Llama ஆகியவற்றை விட சிறப்பாக செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச AI தளத்தில் டீப்சீக் நிறுவனத்தின் ஏ.ஐ. மொடல் மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிவேக வளர்ச்சியை பதிவுசெய்து பிரபலமடைந்து வரும் நிலையில், அதற்கு நேரடி போட்டியை ஏற்பட…

  4. யுக்ரேன் போர்: தந்திரோபாய அணு ஆயுதம் என்றால் என்ன? அதை ரஷ்யா பயன்படுத்துமா? 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்ய நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக, தந்திரோபாய அணுக்கரு ஆயுதத்தைப் பயன்படுத்த தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறியுள்ளார். இது, யுக்ரேன் மீது சிறியவகை அல்லது "தந்திரோபாய" அணு ஆயுதத்தை அவர் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி செய்வது, இரண்டாம் உலக போருக்குப் பிறகு நடக்கும் மிக ஆபத்தான போர்ப்பதற்ற அதிகரிப்பாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். தந்திரோபாய அணுக்கரு ஆயுதங்கள் என்றால் என்ன? தந…

  5. கடைசி உக்ரைனியர், நிற்கும் வரை... போர் நீடிக்கப்படலாம்: புடின் கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் இழுக்கப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஸ்டேட் டுமா கட்சி பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, மாநில ஊடக தொலைக்காட்சி ரஷ்யா-24 செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இன்று அவர்கள் எங்களை போர்க்களத்தில் தோற்கடிக்க விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். சரி, நான் என்ன சொல்ல முடியும்? அவர்கள் முயற்சி செய்யட்டும். கடைசி உக்ரைனியனும் நிற்கும் வரை மேற்குலகம் எங்களுடன் சண்டையிடத் தயாராக இருப்பதாக நாங்கள் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இது உக்ரைனிய மக்களுக்கு ஒரு…

  6. புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபத்தான வழிகளில் அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வெளியிட்ட கருத்து மூலம் இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த ஒராண்டு காலப்பகுதியில் 12 புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைத்ததாக ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இதில் நான்கு படகுகள் ஒரேஞ் லைப் போட்ஸ் எனப்படும் ஆபத்தான படகுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான நிலைமைகளில் உயிர் காப்பதற்காக பயன்படுத்தப்படும் அவசர படகுகளைப் பயன்படுத்தி புகலிடக் கோரிக்கையாளர் கடல் வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படகுகள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை, …

  7. மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிலிருந்து மீண்டும் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா? நவீன்சிங் கட்கா சுற்றுச்சூழல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூங்காக்களில் இருக்கும் கொரில்லாக்களிடம் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணிக்கடை தொழிலாளி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வெள்ளை எலிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வெள்ளை எலியிடமிருந்து கடையில் வேலை பார்த்த நபருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என ஹாங்காங் அதிகாரிக…

  8. ஒன்றரை வயதில் கொலை செய்ததாகக் கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை - எகிப்­திய இரா­ணுவ நீதி­மன்ற தீர்ப்­பினால் சர்ச்சை எகிப்தைச் சேர்ந்த நான்கு வய­தான சிறு­வ­னொ­ரு­வ­னுக்கு கொலைக் ­குற்றச்­சாட்­டு­களின் பேரில் அந்­ நாட்டு நீதி­மன்­ற­மொன்று ஆயுள் தண்­டனை விதித்­துள்­ளது. அதுவும் இச் ­சி­றுவன் 1 வய­தா­ன­வ­னாக இருந்­த­போது இக் ­குற்­றங்­களைப் புரிந்­த­தாக கூறப்­ப­டு­வது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 2014 ஆம் ஆண்டு இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்­பான வழக்கில் மேலும் பல­ருடன் அஹ்மட் மன்சூர் கார்னி எனும் இச்­ சி­று­வனின் பெயரும் சேர்க்­கப்­பட்­டது. 4 கொலைகள், 8 கொலை முயற்­சிகள், அரச சொத்­து…

  9. One suspect is dead, and two others may be at large in the Baton Rouge shooting, the East Baton Rouge sheriff's office said. -- Six law enforcement officers were shot -- three are dead and three others are injured, Baton Rouge Police Department spokesman Sgt. Don Coppola told CNN. -- No motive has been identified at this time. FULL STORY Three officers were killed and three others wounded in a shooting in Baton Rouge that officials think were carried out by multiple gunmen. …

  10. வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின் படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பு என தென் கொரிய நீதிமன்றம் தீர்ப்பு! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவு By SETHU 07 FEB, 2023 | 05:56 PM வியட்நாம் யுத்தத்தின்போது, வியட்நாமில் தென் தென்கொரிய படையினரால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு தென் கொரிய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் தென் கொரிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. 1960கள் மற்றும் 1970களில் கம்யூனிஸ வடக்கு வியட்நாமுக்கு எதிரான யுத்தத்தின்போது, அமெரிக்கப் படையினருக்கு உதவுவதற்காக தென் கொரியா தனது படையினரை வியட்நாமுக்கு அனுப்ப…

  11. நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு- 119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இந்த தேர்தலில், கலாநிதி பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று, நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்தியர் கன்வல்ஜீத் சிங் பாக்சி ஆ…

  12. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியா முஜாகிதீன் இயக்க தலைவர் யாசின் பட்கல் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த யாசின் பட்கல் மற்றும் அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகிய இருவரும் இந்திய நேபாள எல்லையில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தற்போது அல்கொய்தா இயக்கத்தை வழிநடத்த வரும் ஜவாகிரியுடன் யாசின் பட்கல் தொடர்பில் இருந்தது வந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அமைதியை குலைக்க அல்கொய்தாவின் உதவியை யாசின் பட்கல் நாடியதை…

  13. சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஹூவாவி நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்திற்கு அனுமதியளிப்பதற்கு பிரித்தானிய பிரதமர் தீர்மானித்திருந்தார். எனினும், கொரோனா வைரஸ் குறித்த விபரங்களை மூடி மறைத்ததாகவும் ஹொங் கொங் மீது தனது அதிகாரத்தை வரம்பு மீறி செலுத்தியதாகவும் சீன அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையிலேயே தற்போது 5ஜி தொழிநுட்பத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை, பிரித்தானிய பாதுகாப்பு சபை கூட்டம் இன்று நடைபெ…

  14. ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்! ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா? அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா? என்பதை அந்நாடே முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது. அத்துடன் அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தொடர்ந்தும் ஈரானை எச்சரித்து வருகின்றது. இந்நிலையில் கட்டாரின் தலைநகரான தோஹாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவ…

  15. அமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட சியட்டலில் உள்ள முகில்டியோ நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/07/160730_us_shooting

  16. Published By: DIGITAL DESK 3 22 AUG, 2024 | 10:21 AM போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாளர் ஒருவர் புதன்கிழமை (21) துப்பாக்கி சூடு நடத்தியதில் பாடசாலை அதிபர், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளார். நெஞ்சில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாடசாலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் யாரும் பாடசாலைக்கு வரவில்லை. எனினும், பரீட்சை எழுதுவதற்காக சில மாணவர்கள் வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் திணைக்கள ப…

  17. உக்ரேனில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை உக்ரேனின் கீவ் நகரின் ரஷ்ய படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அமெரிக்க ஊடகவியலாளர் என கீவ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறித்த ஊடகவியலாளர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/124093

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்மர் கடாஃபி சிறந்த கல்வியைப் பெற ராணுவத்தில் சேர முடிவு செய்தார் கட்டுரை தகவல் எழுதியவர், வலீத் பத்ரன் பதவி, பிபிசி அரபு ஜனவரி 16-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டில் லிபியாவின் அதிபராகப் பதவியேற்ற மும்மர் கடாஃபி தனது ஆட்சி 42 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கப் போகின்றன என்பது குறித்தும் கற்பனை செய்திருக்க மாட்டார். கடாஃபி, ஆட்சியில் இருந்த காலத்தில், தனக்கு எதிரான அனைத்து வகையான எதிர்ப்புகளையும் கொடூரமான முறைகளில் தகர்த்தெறிந்தார். லிபியாவில் வேறு எந்த தலைமையும் உருவாக முடியாமல் போனதற்கு அவரது இந்த அணுகுமுறையே காரணமாக இருந்திருக்கலாம். ஆன…

  19. 13 APR, 2025 | 12:14 PM அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் பரஸ்பரம் வரி விதிப்பு மேற்கொண்டது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது. இந்நிலைய…

  20. குவைத் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருட சிறை By DIGITAL DESK 5 28 OCT, 2022 | 05:14 PM குவைத்தின் நீதிபதிகள் 7 பேருக்கு 7 வருடங்களுக்கு அதிகமான சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. லஞ்சம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் குவைத் மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிபதிகளுக்கு இத்தண்டனைகளை விதித்துள்ளது. நீதிபதிகள் 7 பேருக்கு 7 முதல் 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டதாக குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீதிபதிகள் இருவரை பணியிலிருந்து நீக்குவதற்கும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. மற்றொரு நீதிபதி நிராபராதி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபத…

  21. ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை - சர்வதேச ஊடகங்கள் 10 Dec, 2024 | 12:16 PM ஹெய்ட்டில் ஆயுத குழுக்கள் வார இறுதியில் 110 பேரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெய்;ட்டியின் தலைநகரில் வறியமக்கள் வசிக்கும் பகுதியில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. உள்ளுர் கும்பலொன்றி;ன்தலைவரின் தனி;ப்பட்ட பழிவாங்கும் செயல் இதுவென தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. வார்வ் ஜெரெமி குழுவின் தலைவர் மொனெல் மிக்கானோ பெலிக்ஸ் தனது பிள்ளை உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த படுகொலைக்கு உத்தரவ…

    • 3 replies
    • 257 views
  22. துருக்கியில் அவசரகாலநிலைமை அறிவிப்பு துருக்கியில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ சதிப் புரட்சியைத் தொடர்ந்து துருக்கியின் ஜனாதிபதி Recep Tayyip Erdogan அந்நாட்டு அவசரகால நிலையை அறிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அவசரகால நிலைமை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இராணுவ சதிப்புரட்சியில் இணைந்துகொண்ட 10000 பேர் வரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தடுப்புக் காவல் காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 600 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக் கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவ…

  23. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை உயிரிழப்பு By T. SARANYA 04 NOV, 2022 | 03:42 PM ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானையை உயிரிழந்துள்ளது. நைரோபி, உலகில் சுமார் 50 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆப்பிரிக்காவில் உள்ளன. யானைகளை அழிவில் இருந்து காக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானை கொண்டிருந்தது. 60 முதல் 65 வயது கொண்ட இந்த யானை கென்யாவின் டிசவோ கிழக்கு தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்தது. இந்நிலையில், வயது ம…

  24. ஆஸ்திரேலியாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரை தீர்மானிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடக்கவுள்ளது. வாக்குரிமை பெற்றுள்ள 1.5 கோடி பேர் வாக்களிக்க மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அரசியலில் ஏற்பட்ட தள்ளாட்டம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 4 பிரத மர்கள் பதவி வகித்து விட்டனர். ஆளும் சுதந்திர தேசிய கூட்ட ணியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கடந்த ஆண்டு டோனி அப்பாட் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்றுக் கொண்டார். அரசியல் குழப்பங்கள் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு சபை களையும் கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தும்படி பிரதமர் மால்கம் டர்ன்…

  25. ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் துருக்கியில் சந்திப்பு ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கியில் சந்திப்பார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய பின்னர் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாக அமையவுள்ளது. இந்த சந்திப்பு மார்ச் 10 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இராஜதந்திர மட்ட தகவல்கள் மார்ச் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் இதுவரை சாதகமாக முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.