Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்ய விமானியின் உடலை ஒப்படைக்கிறது துருக்கி சிரியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த வாரம் துருக்கி சுட்டு வீழ்த்திய ரஷ்ய போர் விமானத்தில் இருந்த விமானியின் உடலை தாங்கள் மீட்டுள்ளதாக துருக்கி கூறுகிறது. துருக்கிய ஏவுகணை ஒன்று ரஷ்ய போர் விமானத்தை கடந்த வாரம் வீழ்த்தியது அவரது உடலை ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி வீசிய ஏவுகணை ஒன்றால் அந்த விமானம் தாக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து அவர் பாராச்சூட் மூலம் குதித்தபோது, சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த விமானத்தில் இருந்த இரண்டாவது விமானி மீட்டக்கப்பட்டார். இச்சம்பவம் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மேலோங்கிய …

  2. ரஷ்ய விளையாட்டுத்துறை ஊக்க மருந்து மோசடி: அமைச்சர் மன்னிப்பு கோரினார் மன்னிப்பு கோரியுள்ள ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சர் விட்டாலி முக்டோ ரஷ்யாவில் விளையாட்டுத்துறையில் இடம்பெற்ற ஊக்க மருந்து மோசடிகளுக்காக அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார். ஊக்க மருந்து பயன்பாடு மோசடி காரணமாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தடைவிதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள விட்டாலி முக்டோ, மிக மோசமான தவறுகள் நடைபெற்றுள்ளன என்றும் இந்த மோசடிகள் ரஷ்யாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் இதில் ரஷ்…

  3. ரஷ்ய வீரர்களின் விந்தணுக்களை பாதுகாக்க கோரிக்கை - யுக்ரேன் போருக்கு சென்றவர்களுக்காக கேட்கப்படும் சலுகை கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி பதவி,பிபிசி செய்தியாளர் 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் போருக்கு அழைக்கப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ், படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்…

  4. ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் இருந்து விலக்கிக் கொள்ளவும், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், ஏராளமான நாடுகளின் கண்டிப்பு மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற அழைப்புக்கு மத்தியில் இந்த தகவல் வந்துள்ளது. இந்த பிரேரணையை 141 நாடுகள் ஆதரித்தன, 32 வாக்களிக்கவில்லை மற்றும் ரஷ்யா உட்பட ஏழு நாடுகள் எதிராக வாக்களித்தன. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதை வரவ…

  5. ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு Published By: Vishnu 16 Aug, 2025 | 03:24 AM ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலாஸ்கா வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அன்புடன் வரவேற்றார். மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பேச்சுவார்த்தை நடைபெறும் எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டனர் என்பது குற…

  6. ரஷ்ய, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தல் -சி.எல்.சிசில்- பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்ய – உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும் எ…

  7. ரஷ்ய, எண்ணெய் இறக்குமதிக்கான தடை: சமரச ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்! ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தடுக்கும் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர். தடையானது ஹங்கேரியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடல் வழியாக வரும் எண்ணெயை மட்டுமே பாதிக்கும். ஆனால் குழாய் எண்ணெய் அல்ல. ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல், இந்த ஒப்பந்தம் ரஷ்ய போர் இயந்திரத்திற்கான பெரும் நிதி ஆதாரத்தை துண்டித்துவிட்டது என கூறினார். இது பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாகும், இதில் அனைத்து 27 உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். ரஷ்யா தற்போது ஐரோப்பிய …

  8. ரஷ்ய... எரிவாயு குழாய் கசிவு குறித்து, ஐரோப்பிய நாடுகள் விசாரணை! ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 க்கு ஏற்பட்ட சேதத்திற்கான காரணம் தெளிவாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கசிவுக்கு நீர்மூழ்கிக் கப்பல் பயணமே காரணம் என நோர்ட் ஸ்ட்ரீம் 1இன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். சேதத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது உடனடியாக ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை பாதிக்காது, ஏனெனில் இரண்டு குழாய்களும் செயற்படவில்லை. ஐரோப்பாவை அச்சுறுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா பயன்படுத்துவத…

  9. ரஷ்யத் தயாரிப்பு ஏவுகணையை பரிசோதித்தது துருக்கி: அமெரிக்காவுடன் முறுகல் நிலைக்கு வாய்ப்பு துருக்கியின் கருங்கடல் கடற்கரைப் பகுதியில் ரஷ்யத் தயாரிப்பான எஸ்-400 ஏவுகணை அமைப்பை துருக்கிய இராணுவம் பரிசோதித்துள்ளது. கடலோர நகரமான சினோப்பில் இந்த ஏவுகணை அமைப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) துருக்கி பரிசோதித்துள்ளது. கருங்கடல் பகுதியில் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு கப்பல்கள் மற்றும் விமான சேவைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்தப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது. இதேவேளை, துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணை சோதனைகளை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி 2017இல் ரஷ்யாவுடன் எஸ்-400 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2.5 பில்லியன் டொலர் மதிப்பு…

  10. ரஷ்யத் தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட நகரம்… புகைப்படத்தை வெளியிட்ட உக்ரைன்! உக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ஒரு நகரத்தை ட்ரோன் காட்சியாக உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு வருடத்துக்கும் மேலாகிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் படுபயங்கரமாகச் சேதப்படுத்தப்பட்டன. ஆனாலும், இன்னும் உக்ரைன் – ரஷ்யா இடையே எந்தச் சமாதான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உக்ரைன் வெளியிட்டிருக்கிற அதிர்ச்சியூட்டும் படங்கள் தற்போது …

  11. ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களை மீட்ட யுக்ரேன் ஹ்யூகோ பச்சேகா (கீயவ் நகரில் இருந்து) & மேட் மர்ஃபி (லண்டனில் இருந்து) பிபிசி நியூஸ் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் மீட்டெடுத்த ஒரு பகுயில் அந்நாட்டுப் படை வீரர். யுக்ரேனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின. இது குறித்துக் கூறிய யுக்ரேன் அதிகாரிகள், குபியான்ஸ்க் நகருக்குள் தங்கள் படையினர் சனிக்கிழமை நுழைந்…

  12. ரஷ்யப் படையெடுப்பு... இந்த தலைமுறையில் நிகழ்ந்த, பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல்: நேட்டோ! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல் என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுக்கூடிய நேட்டோ நாடுகளின் தலைவர்களின், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தங்களின் சுதந்திரம் மற்றும் வருங்காலத்திற்காக உக்ரைன் மக்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் சண்டையிட்டு வருகின்றனர். நாங்கள் உக்ரைன் மக்களுடன் துணைநிற்கி…

  13. ரஷ்யப் புரட்சி 100: '99 சதத்தின் வெற்றியும் ஒரு சதத்தின் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது' (ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை ஒட்டி, இந்தக் கட்டுரை வெளியாகிறது) படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை நினைவு கூர்வதென்பது சடங்கல்ல; மாறாக சரித்திரத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவும் நாளை புதிய சரித்திரம் படைக்கவுமான நிகழ்வின் தொடக்கமாகவே பார்க்க வேண்டும் . நான்கு வகையில் இதனை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒன்று, நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு. இரண்டு, ரஷ்யப் புரட்சிக்கும் அதாவது சோவியத் புரட்சிக்கும் முந்தைய புரட்சிகளுக்குமான தொடர்பும் வேறுபாடுகளும் , மூன்று, ரஷ்யப் புரட்சியின் வீச்சும் வீழச்சியும் , நான்கு ,…

  14. ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை 26 Sep, 2025 | 11:02 AM ரஷ்யா ஆரம்பித்த போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உடனடியாக உதவ வேண்டும் என்றும், இல்லையெனில் உலகம் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரை நிறுத்த உலக நாடுகள் தயங்கினால், அது இந்தப் போர் ஒரு கட்டுப்பாடற்ற ஆயுதப் போட்டியைத் தூண்ட வழிவகுக்கும் என்று எச்சரித்தார். உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ர…

  15. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ரஷ்யா சென்றுள்ள இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார். 19 ஜனவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ரஷ்யாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் சில முக்கியமான ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இரு நாட்டு பொருளாதார மற்றும் ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும். இரு நாடுகள் மீதும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை விதித்திருக்கும் சூழலில், இந்த தலைவர்களின் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தலாம் என்று எதிர்ப…

  16. 18 APR, 2025 | 04:52 PM ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில் இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்குள் இது சாத்தியமாகுமா இல்லையா என்பது குறித்து சில நாட்களில் நான் பேசுகிறேன். ட்ரம்ப் இவ்விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளார். ஏனெனில் இதற்காக அவர் நிறைய நேர…

  17. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரில் இலங்கை படையினர் பங்களிப்பை வழங்கி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது இலங்கையின் ஆயுதப்படையினர் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய படையினரின் சார்பாகவும் உக்கரையின் படையினரின் சார்பாகவும் பொருளாதார நலன்களினால் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை படையினர் பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் படை வீரர்கள் இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்கிரேன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை இராணுவத்திலிருந்து …

    • 2 replies
    • 437 views
  18. Published By: DIGITAL DESK 3 20 AUG, 2025 | 04:59 PM உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்த மிகப் பெரிய அழுத்தத்தை டிரம்ப் அளித்துள்ளார். இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்து உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடன் இ…

  19. ரஷ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல்கள் ஆரம்பம் - உக்ரைன் ஜனாதிபதி Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:15 AM உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படையினருக்கு எதிரான உக்ரைனின் பதில் தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பதில்தாக்குதல்கள் தற்பாதுகாப்பு சமர்கள் இடம்பெறுகின்றன என வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் தெற்கிலும் கிழக்கிலும் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. உக்ரைன் பதில் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கலாம்…

  20. பட மூலாதாரம்,UKRAINIAN PRESIDENCY/HANDOUT படக்குறிப்பு, ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் குளிரூட்டும் கோபுரம் ஒன்றில் இருந்து கரும்புகை வெளிவரும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் அந்தப் படைகளே தீ வைத்து கொளுத்தியதாக யுக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறினார். ஆனால…

  21. ரஷ்யா - யுக்ரேன் போர்: 2023-ல் நடக்க வாய்ப்புள்ள 5 சாத்தியங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி பத்து மாதங்கள் கடந்துவிட்டன. போரில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டு நாடுகளிலும் 2023இல் களநிகழ்வுகள் எவ்வாறு அமையும் என்பதை ராணுவ ஆய்வாளர்கள் சிலரிடம் கேட்டோம். வரும் ஆண்டிலாவது இந்த போர் நிறைவடையுமா? அப்படி நடந்தால் அம்முடிவு போர்க்களத்தில் அமையுமா அல்லது பேச்சுவார்த்தை மேசையில் அமையுமா? இல்லையென்றால் 2024ஆம் ஆண்டும் இப்போர் தொடருமா? "முக்கியத்துவம் பெறும் வசந்தகாலம்" மைக்கேல் கிளார்க், பிரிட்டன், எக்ஸிடெர் உத்தியியல் ஆய்வுகள் நி…

  22. பட மூலாதாரம்,SPUTNIKKREMLIN POOLEPA-EFEREXSHUTTERSTOCK 19 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என்கிறது இந்த ஒப்பந்தம். புதினின் வடகொரிய சுற்றுப்பயணம் குறித்து தென் கொரியா அதிருப்தி தெரிவித்துள்ளது. ரஷ்யா - வடகொரியா இடையிலான ராணுவ ஒப்பந்தம் எத்தகையது? கிம் ஜாங் உன்னுக்கு புதின் பரிசு சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வட கொரியாவில் …

  23. ரஷ்யா – உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு. அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் ரஷ்யா- உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். “அமெரிக்க ஜனாதிபதியாக , ஐரோப்பியர்களுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் அமைதியைக் கொண்டுவர தான் உறுதியாக இருப்பதாகவும், அது ஒரு நீடித்த அமைதியாக இருக்கும் என்றும் ட்ரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரேன் இந்த நிமிடமே தயாராக இருப்பதாகத் ட்ரம்ப்பிடம் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமையன்று (மே 8) அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த…

    • 2 replies
    • 376 views
  24. ரஷ்யா – உக்ரைன் போரில் அமைதிக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் : மோடியிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான பேச்சுக்கு இந்திய பிரதமர் மோடியின் உதவியை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார். திங்களன்று ஜெலென்ஸ்கிக்கும் மோடிக்கும் இடையே நடந்த தொலைபேசி அழைப்பின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். உக்ரைனுடன் இணைந்திருக்கும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றது. சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. …

    • 18 replies
    • 1.1k views
  25. ரஷ்யா – உக்ரைன் போர் : இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம், உக்ரைன் – பெலரஸ் எல்லையில் இடம்பெற்றன. இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில், முதற்கட்ட பேச்சவார்த்தை நிறைவடைந்திருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. எவ்வாறிருப்பினும், கிவ் இல் உள்ள தொழில்நுட்ப மையங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஆகவே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறும், ரஷ்யா தெரிவித்திருந்தது. இதனை அடுத்து தலைநகரில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு கோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.